பாகம் 32

Start from the beginning
                                    

அமரன் - ஆங்.....அது.....அது ஒண்ணுமில்ல

சித்ரா - சரி சரி பாப்பா அழுவுறா பாரு என்கிட்ட குடு...

அமரன் -  ம் இந்தா

சித்ரா - தா

அமரன் சித்ராவின் கரங்களில் பிள்ளையை தந்தவன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு...

அமரன் - நான் யாருக்கும் உன்னை தரவே மாட்டேன்

என்று சொன்னதும் சித்ரா அமரனின் தலையில் குட்டு வைத்தவள் அவனை பார்த்து....

என்ன தர மாட்ட..டேய் நீ என்ன லூசா நீ தரமாட்டினா என்ன... நீயே பால் தர போறியா

என்று சித்ரா கேட்டதும் அமரன் சட்டென்று சூழநியையை புரிந்து கொண்டவன் கண்ணாடியை கழட்டியபடி அந்த அறையில் இருந்து வெளியே செல்ல பார்க்க

சித்ரா - அமரா கொஞ்சம் நில்லு

அமரன்- ம்

சித்ரா - யாரு போன்ல

அமரன் - என்ன.....என்ன போன்

சித்ரா -- இல்ல உனக்கு எதோ போன் வந்த மாதிரி இருந்துச்சு....யாரு போன்ல

அமரன் - அது ....ஆங் அது என் வேலையில இருந்து பண்ணாங்க

சித்ரா - ஓ

அமரன் - சரி நீ பிள்ளைக்கு பசியாத்து

சித்ரா -  அமரா

அமரன்  - ம்

சித்ரா - வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே

அமரன் - ஆங்.... இல்ல இல்ல அதெல்லாம் இல்ல.... நீ அழகியை பாரு

என்று சொன்ன அமரன் அவன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொள்ள.. சித்ராவிற்கு அமரனின் நடத்தையில் மாற்றம் தெரிந்தாலும் அவள் எதையும் பெரிது படுத்தாமல் இருக்க.... மறுநாள் காலை பொழுது புலரும் முன்பு அமரன் குளித்து முடித்து  வெளியே கிளம்பியவனை பார்த்த சித்ரா...

என்ன அமரா காலையிலேயே கிளம்பிட்ட எதாவது முக்கியமான வேலையா..??

என்று சித்ரா அவள் பிள்ளையை மார்பில் சுமந்து கொண்டு அமரனை கேள்வி கேட்க....அமரன் விழித்தவன் சற்று இயல்பான முகபாவனையில்

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Where stories live. Discover now