அத்தியாயம் 15

Start from the beginning
                                    

Oh... அப்டியா?? I think Meera you should Google it for the meaning of அலங்கோலம்!!!

உண்மை தான் அவளுக்கு அதற்கான பொருள் தெரியவில்லை என்பது வீட்டை சுற்றி கண்களை அலைய விட்ட நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது...

முதலில் அவள் வீடு  எப்படி அழகாக  இருந்தது என்று பார்த்திருப்போம் ... ஆனால் இன்று அதற்கு எதிர்மாறாக இருந்தது ..

கிட்சேனில் பார்திரங்கள் கழுவி அடுக்கப்பட்டிருந்தது... ஹாலில் சிதறிய பொருட்கள் எல்லாம் அது அது இடத்தில் இருந்தன... துணிகள் மடிக்கப்பட்டு பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன ... அழுக்கு துணிகள் அதனுடைய கூடையில் இருந்தது... தரை கூட்டப்பட்டு சுத்தமாக இருந்தது...

இது தான் அவளுக்கு அலங்கோலமாக தெரிகின்றது...

அவன் அப்படி சொன்னவுடன் அவள் பளிப்பு காட்ட...

அவளை நோக்கி திரும்பி சம்மணம் போட்டு அமர்ந்தவன் ...

மீரா .. எப்பையுமே நம்மள சுத்தி இருக்க இடங்களை சுத்தமா வைச்சுக்கணும். அப்போ தான் எப்பையுமா நம்மள சுத்தி பாஸிட்டிவ் எனர்ஜி இருக்கும்... You are not a child... You also know that... But you are bit lazy... That's why I am insisting you to do the work without leave ... இப்போ தான் நீ இத ஆரம்பிச்சிருக்க... கொஞ்ச நாள் போக போக இது உனக்கு பழகிடும் and also உனக்கே கச கசன்னு இருந்தா பிடிக்காம போகிடும், ஆன இப்போ ஒரு நாள் தளர்த்துனா கூட உனக்கு நாளைக்கு  நாளைக்கு என்று தாள்ளிப்போடும் எண்ணம் வந்திடும்  என்று கூறி முடிக்க...

அவன் சொல்வது தனது நலனுக்கு தான் என்று புரிந்து புன்னகைத்தாள், இருந்தாலும் வேண்டுமென்றே
அவன் கால்லை தொட்டு கும்பிடுவதை போல செய்கை செய்தவள் கௌசிக் தெய்வமே நீ என்ன சொன்னாலும் செய்யறேன் ... போதும் உன் உபதேசம், விட்டுட்டேன் என்னை என்று கும்பிட...

அவள் தலையில் நங் கென்று கொட்டியவன்  எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு .. சாயங்காலம் இங்கிலீஷ் கிளாஸ் இருக்கு மறந்தடாத என்பதாய் சொல்லிவிட்டு அகன்றான்...

இங்கிலீஷ் ஷா.... விநாயகா ... இவனிடம் இருந்து என்னைய காப்பாதேன் என்று பொய்யாய் கதறினாள் அவள்.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now