அத்தியாயம் 14

Start from the beginning
                                    

லேட் ஆ இன்னிக்கு ?

ஆமா கௌசிக்,. தூங்கிட்டேன்... என்று உதட்டை பிதுக்க...

அதை பார்த்தவுடன் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது... அதுவும் மனதார...

சரி சரி... பை... சாயந்திரம் பார்க்கலாம் ,லேட் ஆகிடுச்சு என்றவாறே அவள் நகர ...

If you don't mind , come with me , I will drop you Meera...

அதை கேட்டவுடன் அப்பாடா கடவுள் நல்ல ஒரு வழியை காமிசிட்டார் .. போய் கார்ல ஏறு என்று மூளை சந்தோஷப்பட. ,, ஏய் அவன் கூப்டுன்ன அவன் கூட போலாம்னு சொல்ற இது எல்லாம் நல்லாவா இருக்கு? அவன் ஏதோ பேச்சுக்காக கேட்டுருப்பான்.. நீ பஸ்லையே போ... என்று மனம் அதட்டியது...

இங்க பாரு டீ , பஸ் கண்டிப்பா இந்நேரம் போஇருக்கும் ...இன்னிக்கு மீட்டிங் வேற இருக்கு , லேட் ஆ போன அவ்ளோ தான் நீ காலி... நீ வேண்டாம்னு சொல்லி அவன் சரின்னு போய்விட போகிறான் பார்த்துக்கோ.. என்று மூளை மறுபடியும் சொல்ல ...

What happened Meera... ?

உங்களுக்கு ஏன் சிரமம் கௌசிக்... நானே போய்ப்பேன்

அதெல்லாம் ஒன்னும் இல்லை... உங்க ஆபீஸ் தாண்டி தானே நான் போகனும், என்ன உனக்காக ஒரு ஸ்ட்ரீட் சுத்தி போகனும்... தட்ஸ் not a problem ... Come... It's already late for you ... என்று அவன் கூற சரி என்றபடி வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

பயணத்தில் இருவருக்கும் இடையில் மவுனம் நிலவ அதை வெறுத்தவள் எப்பையும் போல ஏதேதோ பேச ஆரம்பித்தாள், பாணுவிடம் தொடங்கி இன்று நடக்கும் மீட்டிங் வரை ... அவள் பேசுவதை கேட்டுகொண்டே காரை ஓட்டிக்கொண்டிருந்தவன் ...

மீரா உன்னால எப்படி இப்படி பேசிட்டே இருக்க முடியுது ?

சாரி கௌசிக் , வண்டி ஓட்ட டிஸ்டர்ப்பென்ஸ் ஆ இருக்கா?

இல்ல இல்ல.. அதுக்காக கேக்கவில்லை... உண்மையாவே தெரிஞ்சிக்க கேக்கறேன்...சின்ன வயசுல இருந்தே இப்படி தானா ?

ஹி ஹி .. ஆமா கௌசிக்... manufacturing defect என்று அவள் அசடு வழிய...

ஹா ஹா ... சரி தான் என்று சிரித்துவிட்டான்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now