41 உடைந்த கட்டில்

Start from the beginning
                                    

"முடிஞ்சு தான் ஆகணும்"

"சரி நம்மளோட பெட் என்ன?"

"நான் என்ன கேட்டாலும், அதை செய்யனும்"

"மறுபடியும் தெளிவா சொல்லுங்க"

"என்னோட சேர்ந்து குளிக்கனும்"

ஒரு நோட்டை எடுத்து அதில் அவன் கூறியதை எழுதினாள்.

"என்ன இது?"

"அக்ரிமெண்ட். இதுல கையெழுத்துப் போடுங்க"

"ஓகே" அதில் கையொப்பம் இட்டான் சித்தார்த்.

"நல்ல வேலை"

"ஏன்?"

"அதுல எழுதி இருக்கிறதைப் படிங்க"

"நீ என் கூட சேர்ந்து குளிக்கனும்"

"அப்படி தானே?"

"அப்படித் தான்... அதனால?"

"எப்போன்னு நீங்க சொல்லல. அதனால எப்போ எனக்கு தோணுதோ அப்போ வச்சுக்கலாம்"

"இது சுத்த ஏமாத்து வேலை"

"அப்படித் தான் வச்சுக்கோங்களேன்"

"நான் இன்னொரு பெட்லயும் ஜெயிச்சு இருக்கேன் அதை மறந்துடாத"

அங்கிருந்து அவள் குளியலறையை நோக்கி ஓட முயன்றாள். ஆனால், சித்தார்த் என்னும் மிகப் பெரிய தடையை தாண்டி, அதை அவளால் செய்ய முடியவில்லை. சித்தார்த் அவளைத் துரத்த, கட்டிலின் மீது ஏறி ஓடினாள் ஹரிணி. அவளை பிடிக்க கட்டிலின் மீது பாய்ந்தான் சித்தார்த். அவர்கள் எதிர்பாராத விதமாய் அந்த கட்டிலின் கால் உடைந்து போனது. இருவரும் கட்டிலின் மீது விழுந்தார்கள். ஹரிணி திகைப்புக்கு  உள்ளானாள். சித்தார்த்தோ விழுந்து விழுந்து சிரித்தான்.

"இது எல்லாம் உங்களால தான்"

 சிரிப்பை தொடர்ந்தான் சித்தார்த்.

"எதுக்காக இப்படி சிரிக்கிறீங்க?"

"உன்கூட சேர்ந்து நான் இப்படி கட்டிலை உடைப்பேன்னு கனவுல கூட நினைச்சதில்ல"

"அய்யோ, அம்மா நம்மளை பத்தி என்ன நினைக்க போறாங்களோ?" பதற்றத்துடன் நகம் கடித்தாள் ஹரிணி.

சில்லென்ற தீயே...! ( முடிந்தது)Where stories live. Discover now