🧡 கன்னல் 65

586 35 7
                                    

"அபய் ஸாருக்கு என்னவாம்டா?" என்று கேட்ட ராமுத்தாயிடம்,

"ம்ம்ம்! தேஜு மேரேஜ்க்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்க! உங்க மேரேஜ்க்கு ஏன் இன்னும் யாரும் ஒரு ஏற்பாடும் பண்ணாம இருக்காங்கன்னு கேக்குறான்? நமக்குள்ள கெமிஸ்ட்ரி இல்லையாம். ஃபீல் பண்ணிட்டு போறான். உனக்குத் தான் ரொமான்ஸ்ங்குற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கே தெரியலயே மிமோ?

"கொஞ்சம் வெயிட் பண்ணு ட்யூட்; என் குக்கர்வெயிட் மூளைக்குள்ள சீக்கிரத்துல ஏதாவது ஒரு கெமிக்கல் ரியாக்ஷன் நடக்கும்னு நம்புவோம்னு அவங்கிட்ட சொல்லி அனுப்புனேன். ஏன்டீ நான் இங்க நம்ம லைஃப்ல வரப்போற ஒரு டர்னிங் பாயிண்ட பத்தி பேசிட்டு இருக்கேன். நீ என் பேச்ச கேக்காம இப்ப யாருக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்க?" என்று ராமுவிடம் கேட்ட படி அவளது மொபைலின் திரையின் புறம் கண்களை ஓட்டியவனின் முன்னால் தன் அலைபேசியை நீட்டினாள் ராமு.

"அந்தப் பனங்கொட்ட மண்டையன் சாப்ட்டுட்டு வயிறுவலி, நெஞ்சு எரியுதுன்னுட்டு இருந்தான்; அதே இப்ப பரவாயில்லயான்னு கேக்கலாம்னு கூப்டா போனயும் எடுக்கல. மெசேஜும் பாக்காமதேன் கிடக்கான்!" என்று வருத்தமான சொன்னவளிடம் குறுஞ்சிரிப்புடன்,

"ஆனாலும் நீ ரொம்ப இன்னொசென்ட் பேபி! ஒங்க கூட ஒக்காந்து அரட்ட அடிக்கறதுக்கு எல்லாம் எனக்கு நேரமில்ல; நான் போறேன் என் ரூமுக்குன்னு சொல்லிட்டு அவன் போனான். அவன் போன கொஞ்ச நேரத்துல பின்னாலயே தேஜுவும் போனா.
அவனோட ஸிக்னெஸே ஒரு ட்ராமாவோ என்னவோ? அவங்கள
மாதிரி நம்ம கூட ஜாலியா இருப்போம்னு நினைக்காம நீ அவன நலம் விசாரிக்க இந்நேரத்துல அவனுக்கு கால் பண்ணிட்டு இருக்க? தே ஆர் கெட்டிங் க்ளோஸர்! டோண்ட் யூ நோ தட்?" என்று கேட்டு புருவம் உயர்த்தியவனிடம் வேறு ஏதும் சொல்லத் தோன்றாமல் "ஓஹோ" என்று மட்டும் கதை கேட்டாள் ராமுத்தாயி.

"ஆமா..... ஓஹோ தான்! ஏன் மிமோ நீ இப்டி இருக்க? என்னை கேர் பண்ணிக்குறதுக்கும், மதர்'ஸ் லவ் குடுக்கறதுக்கும் புல்புல்லும், மாமும் இருக்காங்க. I need your love, desire & intense passion towards me..... இப்ப வரைக்கும் நீ எங்கிட்ட காமிக்குற லவ்வும், புல்புல் காமிக்குற லவ்வும் எனக்கு ஒரே மாதிரியா தான் தெரியுது...... உங்க ரெண்டு பேரோட லவ்வுக்கும் ஒரு ஷேடாவது டிஃபரென்ஸ் வேணும் இல்லையா?" என்று கேட்டவனின் கண்களில் தெரிந்த கோபம் ராமுத்தாயிக்கு தெளிவாக புரிந்தது.

தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔Where stories live. Discover now