மறுமுறை ஏற்பாயா 20❣️

Start from the beginning
                                    

பவிக்கு உண்மையில் சந்தோஷமாக தான் இருந்தது...வீரா வாழ்வில் ஒரு குழந்தை ....அவன் நன்றாக இருக்கிறான்..மனதின் ஓரம் வலி எழுந்தாலும்...இனி இது போன்ற நினைவே தவறு என முடிவு எடுத்தாள்...சரி நீ ரெஸ்ட் எடு..என வீரா கிளம்பினான்....

அவள் கண்களை மூட....sleeping Beauty... என்ற சத்தம்...சட்டென கண்களை திறந்து சுற்றும் முற்றும் பார்க்க...யாரும் இல்லை...அந்த குரல்....எப்போதும் அவள் காதில் கேட்கும் குரல்...

எனக்கும் யாரும் இல்ல sleeping Beauty... அதான் நம்ம ரெண்டு பேரும் மீட் பண்ணி இருக்கோம் போல...சீக்கிரம் கண்ணு முழி..நாம எங்கயாவது போய்டலாம்...

எப்போதும் கேட்கும் குரல்...அவள் பதில் கூற வில்லை என்றாலும்...பேசுவான்...பேசி கொண்டே இருப்பான்...

எனக்கு ஒரு அம்மா இருக்காங்க...அவுங்களை மட்டும் எப்படியாவது காப்பாற்றனும்...அது மட்டும் தான் எனக்கு ஆசை...

இதெல்லாம் நினைவு வர பவியாள் தூங்க முடியவில்லை....யார் அவன்??அவன் குரல்???அவன் நினைவுகள்???

ஜனணிக்கி ஆபரேஷன் நடந்து கொண்டு இருந்தது....சற்று நேரத்தில் டாக்டர் வந்தார்...

நல்லபடியா முடிஞ்சது...அவுங்க கண் முழிச்சதும் போய் பாருங்க....

வீராவுக்கு அப்பாடா என இருந்தது.......

சாதாரண வார்டுக்கு மாற்றினர்....உள்ளே சென்றான் ....

மயக்கம் தெளிந்து இந்த இருந்தது....அவனை பார்த்ததும் கண்களில் கலக்கம்...உயிருக்கு ஆபத்து எனும்போது பேசினான்...இப்போ??என்னை சேர்ப்பானா??இல்லை விட்டு விடுவானா???குழந்தையை என்னிடம் விடுவானா??? கேள்விகளை கண்களில் தாங்கி அவனை நோக்க...அவனுக்கு புரியாதா அவளை பற்றி....

வாசலிலேயே தேஜாவை இறக்கி விட்டவன்...அம்மா கிட்ட போ...என சொல்ல...குழந்தை சமத்தாக...ஓடி வந்து...அம்மா என கட்டி கொண்டாள்...

ஜாலி..எனக்கும் அம்மா இருக்காங்க...இனிமே டெய்லி அம்மா சமைப்பாங்க...என் பிரென்ட் எல்லாருக்கும் ஊட்டி விட்ட மாதிரி ஊட்டி விடுவாங்க....அம்மா நம்ம ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்🤩🤩🤩🤩..அவள் பேசி கொண்டே இருந்தால்.... நொடிக்கொரு அம்மா போட்டு பேசினாள்....

மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்புWhere stories live. Discover now