மறுமுறை ஏற்பாயா 17💘

734 30 1
                                    

மெல்ல அவள் அருகே வந்தவன் அவளை தூக்கி நிறுத்த துடித்த கைகளை கஷ்டபட்டு அடக்கியவன்....

நம்ம கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி கொஞ்ச நாள் நீ எப்படி இருந்தனு நினைவு இருக்கா??இதே போல் தான் நல்லவளா இருந்த??என் அம்மா உன்னை நம்புனாங்க...கல்யாணம் நடந்தது ....அப்புறம் உன் குணம் வெளிய வந்து ராட்சஸி ஆகி என் அம்மாவை பிரிச்ச....இப்போ இதே மாதிரி நடிக்குற...நான் உன்னை ஏத்துகிட்டா நாளைக்கு என் பொண்ணை பிரிப்ப.. அதானே உன் திட்டம்???

இதயம் வெடிப்பது போல் இருந்தது அவனின் ஒவ்வொரு வார்த்தையும்....எதிர்பார்த்தது தான் என்றாலும் அது நடக்கும் போது எவ்வளவு மனதை பக்குவ படுத்தி இருந்தாலும் மனம் தாங்குவதில்லையே😖😖😖...

அவனால் முடியவில்லை..மனதை அழுத்திய கேள்வி இது...கேட்டு விட்டான்...இனி ஒரு முறை இழக்க மகளை தவிர எதுவும் இல்லை அவனிடம்😖...

பழைய ஜனாவாக மாறி..என் குழந்தையை கொடு என அவளால் சண்டை போட முடியும்...திமிராக குழந்தையை தூக்கி சென்றாலும் தவறில்லை தான்...ஆனால் இந்த ஜனாவுக்கு அது வேண்டாம்....அவன் வேண்டும்..அவளின் ராகவன்...அவன் சொல்லி தன்னை அம்மா என்று அழைக்கும் தேஜஸ்....

கண்ணீரோடு எழுந்தாள்....சொல்ல வந்த விஷயம் பவி உயிருடன் இருப்பது..அதை மறந்து வண்டியில் ஏறினாள்...எப்போது வீடு வந்து சேர்ந்தாள் என தெரியாது...எப்போது படுக்கைக்கு போனாள் என தெரியாது...வேலைக்காரி வந்து சாப்பிட அழைக்க...வேண்டாம் என மறுத்தாள்..அவளும் ஒன்றும் பேசாமல் வெளியே சென்று விட்டாள்...

நினைவு பின்னோக்கி சென்றது....அவள் கர்ப்பமாக இருக்கும் போது அவன் தடுத்தும் கேளாமல் பப்பிற்கு சென்றாள்..நன்றாக ஆட்டம் போட்டு வீடு வர நள்ளிரவு....ரேவதி தூங்காமல் காத்திருக்க....
வந்ததும்..என்ன உங்க மகனை விட்டு வேற எவனையும் கூட்டி வந்துருவெனோனு பயந்து முழிச்சு இருக்கிங்கலா???இல்ல உங்க மகன் வந்ததும் அவ night கூத்தடிச்சுட்டு வந்தானு போட்டு குடுக்க முழிச்சு இருக்கிங்கலா??

மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்புWhere stories live. Discover now