மறுமுறை ஏற்பாயா 6💘

Start from the beginning
                                    

இருவரும் அறைக்கு சென்று குளித்து விட்டு உணவருந்த வந்தனர்.....

டேபிளில் பாட்டி அமர்ந்து இருந்தார்...அனைவரும் வந்து அமர்ந்ததும் விமல் அம்மா(செல்வி) பரிமாற ஆரம்பித்தார்....

ரோஜா சரியாக சாப்பிட போகும்போது ....

என்ன?? இந்த முறையாது எதாவது விசேஷம் இருக்கா??

அவளால் அடுத்த வாய் சாப்பிட முடிய வில்லை..... தொண்டை அடைத்தது....

எதுவும் இல்லை பாட்டி...

ஹ்ம்ம்....வருஷம் 7 ,8 ஆச்சு.... இன்னும் இந்த வீட்டுக்கு வாரிசு வரல.... கடவுளே இந்த வீட்டு வாரிச பாக்காமலேயே என் உசுரு போய்டும் போலயே பாட்டி புலம்ப ஆரம்பித்தார்....

ரோஜா கண்ணீரோடு கணவனை பார்த்தாள்... எப்பவும் இது மாதிரி அவர்கள் அவளை காயப்படுத்தும் போது அவன் அவர்களை உண்டு இல்லை என செய்து விடுவான்.😔ஆனால் இம்முறை......

விமல் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு கொண்டே இருந்தான்....
ரோஜாவுக்கு சாப்பிட முடிய வில்லை.......செல்விக்கும் என்ன செய்வதென்று தெரிய வில்லை...அவர் இது வரை மாமியாரை எதிர்த்து பேசியதில்லை
மகனின் முகத்தை பார்த்தார்....அவன் நிமிரவும் இல்லை....

ரோஜா சாப்பிடாமல் கை கழுவி எழுந்து சென்று விட்டாள்....

அவள் போனதும் தான் பாட்டி புலம்பலை நிறுத்தினார்....அவருக்கும் பேரனின் நடவடிக்கை ஆச்சர்யமே

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

தேதியை கிழித்த ஜனனிக்கு அன்றைய தேதியை பார்த்ததும் கண்ணீர் வழிந்தது....ஆம்...அன்று அவளின் திருமண நாள்....
அதே நேரம் வீராவும் தேதியை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான்....

இருவரின் நினைவுகளும் 6 வருடத்துக்கு முன் சென்றது.... இதே நாளில்....

சரட்டு வண்டில சிரட்டொளியில     
ஓரம் தெரிஞ்சது உன் முகம்    
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல     
மெல்லச்சிவந்தது என் முகம் (2)   
    
அடி வெத்தலபோட்ட ஒதட்ட எனக்கு    
பத்திரம் பண்ணிக்கொடு    
நான் கொடுத்த கடனத்திருப்பிக் கொடுக்க    
சத்தியம் பண்ணிக்கொடு   
என் இரத்தம் சூடு கொள்ள     
பத்து நிமிசம் தான் ராசாத்தி    
    
ஆணுக்கோ பத்து நிமிசம் ஹ    
பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹ    
பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய    
பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா    
    
சேலைக்கே சாயம் போகும் மட்டும்    
ஒன்ன நான் வெளுக்க வேணுமடி    
பாடுபட்டு விடியும் பொழுது    
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி    
புது பொண்ணே……………     
அது தான்டி தமிழ் நாட்டு பாணி…………………      (சரட்டு-2)
    
வெக்கத்தையே கொழச்சி கொழச்சி    
குங்குமம் பூசிக்கோடி……    
ஆசையுள்ள வேர்வையப்போல் வாசம் ஏதடி     ....

மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்புWhere stories live. Discover now