அத்தியாயம் 11

Start from the beginning
                                    

தன் தந்தைக்கும் தாயிக்கும் இடையில் எவ்வளவு சண்டை வந்தாலும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு🥰 பானுவுக்கு தெரியுமாதலால் , அவர்களது சண்டையை தூண்டியபடியே ரசித்துக் கொண்டிருக்க அம்மாவின் கோபம் அதிகமாகியவுடன் தனது தந்தை தாயிடம் சரண்டர் அகியதை நினைத்து சிரித்துகொண்டே

சரி அப்பா, இன்னும் உங்க மாற்றத்திற்கான காரணத்தை சொல்லவேயில்லையே?

அது ஒன்னுமில்லை டா , எல்லாம் அந்த கௌசிக் தம்பினால தான்...

யாரு அந்த மேல் வீட்டு பையனா🙄?

ஆமா லல்லு , அந்த பக்கத்து ground ல இருந்து வருவதைப் பார்த்தேன்... அப்படியே சும்மா பேசலாமேன்னு பேச்சு கொடுத்தேன்... நல்ல அறிவான பையன் தெரியுமா !! எல்லா விஷயங்களை பத்தியும் தெரிஞ்சு வெச்சிருக்கான். ஷேர் மார்ககெட் பத்தியெல்லாம் என்னம்மா பிச்சொதரான் தெரியுமா? அதான் தினமும் அவன் கூட பேசரதுக்காக கரெக்டா அந்த டைம்க்கு போயிடறேன்.

அந்த பையன் பேசுமா என்ன😱? நான் அவன் சிரிக்க கூட காசு கேக்கற ரகம்னு நினைச்சிட்டு இருந்தேன், ஏன்னா நம்ம சிரிச்சா தான் சிரிக்கும் , அதும் சிரிக்கனுமேன்னு சிரிக்கற மாதிரி இருக்கும்... அந்த பையன் இவ்ளோ நல்ல பேசுவான்னு நீங்க சொல்றது எனக்கு அதிசயமா இருக்கு.

மொதல்ல அவனோட குடும்பத்தை பத்தி பேச எனக்கு அப்படி யாரும் இல்லை என்று முடுச்சுட்டான். அவன் முகத்தை பார்த்தப்ப ஒன்னும் தெரியலை, ஆனா அவன் குரல் கடினமானது போல இருந்துச்சு... அதான் அத பத்தி பேசாம பொதுவா பேச ஆரம்பிச்சேன் அதுக்கப்பறம் தான் நல்லாவே பேசினான்...
எல்லா விஷயங்களை பத்தியும் ஆழ்ந்த அறிவு இருக்கு அவனுக்கு, அதே மாதிரி தெரியலைனா தயங்காம கேட்டு தெரிஞ்சுகிறான்... நான் கூட கேட்டேன் உன் அறிவுக்கு பெரிய பெரிய நிறுவனங்களிலும் ஏன் வெளிநாட்டிலும் கூட வேலை கிடச்சிருக்குமே லட்ச கணக்குல சம்பதிச்சிருக்கலாமே , ஏன் இப்படி சின்ன கம்பெனில வேலை பார்க்கிரேன்னு... அதுக்கு அவன் ஒண்ணுமே சொல்லல ஒரு சிரிப்பு மட்டும் தான் கொடுத்தான்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now