44 என்ன நடக்கிறது?

Start from the beginning
                                    

"ஆதிஜி, எதுக்காக என்னை கூப்பிட்டீங்க? எனக்கு அந்த ஃபைலை பத்தி எதுவும் தெரியாது" என்றாள்.

"உனக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும். உண்மையில அப்படி ஒரு ஃபைலே இல்ல..."

அதை கேட்டு வாயை பிளந்தாள் கமலி.

"ஆங்... அப்புறம் எதுக்கு என்னை கூப்பிட்டீங்க? அந்த படம் எவ்வளவு இன்டர்ஸ்ட்டா இருந்தது தெரியுமா? ஹிந்தி படத்தில் தமிழ் பேசினாங்க" என்றாள் சிணுங்கலுடன்.

"தெரியும்... அதோட, வேற ஒரு விஷயமும் எனக்கு தெரியும்..."

"என்ன விஷயம்?"

"அந்த படத்தோட கிளைமாக்ஸை பார்த்து நீ அழுவ. மூஞ்சிய சோகமா வச்சுக்கிட்டு, அதைப் பத்தியே நினைச்சுகிட்டு, இந்த நாளை பாழாக்குவ... அதனால தான் உன்னை கூப்பிட்டேன்"

"ஆனா, ஏன் ஆதிஜி?"

"ஏன்னா, ஹீரோவும், ஹீரோயினும்
கிளைமாக்ஸில் செத்துடுவாங்க"

"அய்யய்யோ நெஜமாவா?" என்றாள் அதிர்ச்சியாக.

ஆமாம் என்று தலையசைத்தான் ஆதித்யா.

"நல்ல காலம், என்னை நீங்க கூப்பிட்டீங்க" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் கமலி.

அவள் அவனிடம் ஏதோ கேட்க நினைக்க, அதற்கு முன், சிரித்தபடி குளியல் அறையை நோக்கி சென்றான் ஆதித்யா. அவன் திரும்பி வந்த பொழுது, அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள் கமலி. அவளிடமிருந்து காபி குவளையை பெற்றுக்கொண்டு சோபாவில் அமர்ந்தான் ஆதித்யா. அவனுக்கு முன்னாள், கமலி முழங்காலிட்டு அமர, முகத்தை சுருக்கினான் ஆதித்யா.

"நீங்க அந்த படத்துல இருக்கிற எல்லா பாட்டையும் பாத்திருக்கீங்களா?" என்றாள் ஆர்வமாக கமலி.

"ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன்..." என்று அவன் இழுக்க... கமலியின் முகத்தில் ஏமாற்றத்தை கண்டான்.

"இதுல அப்செட் ஆகுறதுக்கு என்ன இருக்கு?" என்றான்.

"நீங்க சொன்னப்போ நான் நம்பவேயில்லை..."

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now