4 சிங்கத்தின் குகையில்

2.5K 115 8
                                    

4 சிங்கத்தின் குகையில்

சென்னைக்கு செல்ல தயாரானான் ஆதித்யா. அவனை வழியனுப்பி வைத்தான் பிரபாகரன்.

"நீ திரும்பி வரும் போது எனக்கு கால் பண்ணு. நான் ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்புறேன்"

"ஓகே, பை"

"பை"

விமான நிலையம் நோக்கி புறப்பட்டான் ஆதித்யா.

.......

ஆதித்யாவின் குடும்பத்தினர் கமலியையும், சுந்தரியையும் வரவேற்றார்கள். கமலியை பார்த்தவுடன் பிடித்துப் போனது பிரபாகரனுக்கு. அவளது மருண்ட பார்வையே, அவள் எவ்வளவு வெகுளித்தனம் நிறைந்தவள் என்பதை கூறியது. பாட்டி மற்றும் சித்தி இந்திராணியிடம் ஆசிர்வாதம் பெற காலைத் தொட்டு வணங்கினாள்.

அவள் முன் வந்து நின்ற லாவண்யா,

"ஹாய், நான் லாவண்யா" என்றாள்.

அவளை குழப்பத்துடன் பார்த்தாள் கமலி.

"இவர் ஆதியோட ஃபிரண்ட் பிரபாகரன். அவருடைய தங்கச்சி இவங்க" என்று அறிமுகம் செய்து வைத்தாள் ரேணுகா.

"ஆதி யாரு?" என்றாள் கமலி.

"கமலி மாமி, மாமாவை, அம்மா அப்படித் தான்  ஷார்ட்டா கூப்பிடுவாங்க" என்று சிரித்தாள் ஷாலினி.

தன்னை *மாமி* என்று அவள் கூப்பிட்டதை கேட்டு, தன் கண்களை அகல விரித்தாள் கமலி. அவளுடைய முகத்தைப் பார்த்து புன்னகை புரிந்தான் பிரபாகரன். தனது கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு, டூபேவுக்கு ஃபோன் செய்தான். அவர்களுடைய திட்டப்படி டூபே ஆதியுடன் பேசினார்.

"எஸ், மிஸ்டர் டூபே, நான் கிளம்பிட்டேன்"

"சாரி ஆதித்யா. நான் அவசரமா சிங்கப்பூர் போக வேண்டிய வேலை வந்துடுச்சு. ஃபேமிலி பிராப்ளம். உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்கு சாரி"

"இட்ஸ் ஓகே. மிஸ்டர் டூபே. நம்ம சீக்கிரம் மீட் பண்ணலாம். டேக் கேர்"

"தேங்க்யூ ஆதித்யா"

அழைப்பை துண்டித்து விட்டு பிரபாகரனுக்கு ஃபோன் செய்தார் டூபே.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora