38 தொலைந்த மகள்

Start from the beginning
                                    

"நான் என்ன செஞ்சேன், ஆதிஜி?"

"எனக்கு டான்ஸ் ஆட சொல்லி கொடுத்த"

"அப்புறம்? "

"அதையெல்லாம் விடு. சொன்னா, நீ ரொம்ப சங்கடபடுவ"

"சங்கடபடுவேனா? ஏன் அப்படி?" என்றாள் பதட்டமாக.

"உனக்கு தெரியுமா, குடிகாரங்க உண்மையை மட்டும் தான் பேசுவாங்க"

ஆமாம் என்று கவலையுடன் தலையசைத்தாள் கமலி.

"அப்படின்னா நிச்சயமா உனக்கு சங்கடமா தான் இருக்கும்"

குளியலறைக்கு செல்ல, சோபாவை விட்டு எழுந்து நின்றான் ஆதித்யா. அவன் வழியை மறித்தாள் கமலி.

"நான் என்ன செஞ்சேன்? என்ன சொன்னேன்னு சொல்லுங்க"

"நிஜமாவே உனக்கு அதெல்லாம் தெரிஞ்சுக்கணுமா?"

கண்களை அகலமாக்கி ஆமாம் என்று தலையசைத்தாள் கமலி.

"என்னை, *பிரின்ஸ் சார்மிங்*ன்னு கூப்பிட்ட"

முதலில் இருந்ததைவிட, அவளது கண்கள் மேலும் அகலமானது.

"அப்பறம் என்னை *செல்லக்குட்டி* ன்னு சொன்ன."

மூடியிருந்த தன் வாயை, தன் கையால் அழுத்தமாய் மூடினாள்.

"என்னோட ஓய்ஃப் மனசுல, நான் இப்படி எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பேன்னு எனக்கு தெரியாது" என்று அவன் கூற,

கீழே குனிந்த படி, வெட்க புன்னகை பூத்தாள் கமலி. அது ஆதித்யாவை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. அவள் அங்கிருந்து ஓடி விடுவாள் என்று அவன் நினைத்திருந்தான். புன்னகையுடன், அவள் தன் கண் இமைகளை அவனை நோக்கி உயர்த்திய போது, அவன் மேலும் ஆச்சர்யம் அடைந்தான். ஆதித்யா சிறிதும் எதிர்பார்க்காத வண்ணம், ஆதித்யாவின் கன்னங்களைக் கிள்ளி,

"என் செல்லக்குட்டி..." என்று கூறிவிட்டு, கலகலவென சிரித்தபடியே குளியலறை நோக்கி ஓடினாள் கமலி.

என்ன நடந்தது என்பது சிறிது நேரத்திற்கு புரியவே இல்லை ஆதித்யாவுக்கு. நம்ப முடியாமல் புன்னகைத்தான் அவன். இந்தப் பெண் என்ன ரகம் என்பது தான் அவனுக்கு புரியாத புதிராக இருக்கிறது. இப்பொழுதெல்லாம் அவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை அவனால்.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now