36 வஞ்சக உலகம்...

Start from the beginning
                                    

அவனது காலரை மேலும் இறுக்கினான் ஆதித்யா.

"யாருடா அவ?"

"எனக்கு தெரியாது சார். அதை செய்ய  அம்பதாயிரம் கொடுத்தாங்க. பணம் கிடைக்குதேன்னு செஞ்சேன் சார். தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்க சார்"

"அந்த போட்டோவில் இருக்கிறவன் யாரு?"

"அவன் என்னோட ஃப்ரெண்டு சார். சவுதி அரேபியாவில் செட்டில் ஆயிட்டான். இங்க இருக்கிறவங்களுடைய போட்டோவை யூஸ் பண்ணா, ஏதாவது பிரச்சனை வந்துடும்ன்னு, நான் தான் சார் அவனுடைய போட்டோவை யூஸ் பண்ணேன். அவனுக்கே இது தெரியாது"

"அந்த பொம்பளையோட போன் நம்பர் எனக்கு வேணும்"

"அவங்க ஃபோன் நம்பர் என்கிட்ட இல்ல சார். அடுத்த நாள் அவங்களே நேர்ல வந்து வாங்கிட்டு போயிட்டாங்க."

"அவளைப் பார்த்தா அடையாளம் காட்டுவியா?"

"நிச்சயமா காட்றேன் சார்"

அவனை போலீசாரை நோக்கி பிடித்து  தள்ளினான் ஆதித்யா.

"இதுக்கு அப்புறம், இந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன், ஆதி" என்றான் பிரபாகரன்.

சரி என்று தலையசைத்த ஆதித்யா, அமைதியகம் வந்த மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தின் *அசல்* புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ராகுலுடன் கிளம்பினான்.

அமைதியகம்

தான் வீடு வந்து சேருவதற்கு முன்பே, கமலியையும் ஷாலினியையும் தவிர மற்ற அனைவரையும்  வரவேற்பறையில் கூட செய்தான் ஆதித்யா. அவர்களுக்கு முன் அந்த அசல் புகைப்படத்தை தூக்கி வீசினான்.

"இதை பாருங்க"

அந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் பேச்சிழுந்து நின்றார்கள். அதே நேரம் அவர்களது மனம் நிம்மதி அடைந்தது.

"நான் தான் அப்பவே சொன்னேனே, கமலி தப்பு செஞ்சிருக்க மாட்டான்னு" என்றார் இந்திராணி.

"அதுக்காகத் தான் இந்த மாதிரி கேவலமான விஷயத்தை எல்லாம் அவ தலையில ஏத்த வேண்டாம்னு நான் நினைச்சேன்" என்றான் ஆதித்யா.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now