27 நீங்கள் என்றுடையவர்

Start from the beginning
                                    

"கண்டிப்பா" என்றாள் தடுமாற்றத்துடன் கமலி.

அவர்கள் அழைப்பை துண்டித்து கொண்டார்கள். பேச்சிழந்து அமர்ந்திருந்தாள் கமலி. யாருக்குமே சாத்தியமில்லாத விஷயத்தைக்கூட, சாதித்துக் காட்ட ஆதித்யாவால் முடியும் என்று அவளுக்கு தெரியாது. அவளுக்கு நன்றாகத் தெரியும், சுமித்ராவின் கணவன், அவளை மறுபடியும் கல்லூரிக்கு அனுப்ப கூடாது என்று எவ்வளவு பிடிவாதமாய் இருந்தான் என்று. ஆம், ஒரு முறை அவள் ஆதித்யாவிடம் இதைப் பற்றி பேசி இருக்கிறாள். ஆனால், ஆதித்யா அவளை சார்ந்தவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்குவான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. ஆதித்யா தன்னை காதலிக்கிறான் என்று அவளுக்கு தெரியும். ஆனால், இதையெல்லாம் கூட, அவளை காதலிப்பதால் தான் அவன் செய்கிறானா?

ஆதித்யாவிடம் உடனே பேசவேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. அவன் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தான். தனது கைபேசி ஒளி பெற்றவுடன், அதில் தனது மனைவியின் பெயர் ஒளிர்ந்ததை பார்த்து, அவன் இதழ்கள் அனிச்சையாய் புன்னகை பூத்தன. தன்னை சுற்றி அமர்ந்திருந்தவர்களை பார்த்து,

"ஐ வாண்ட் எ ஷார்ட் பிரேக்" என்றான்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். காரணமின்றி ஆதித்யா மீட்டிங்கை நிறுத்த மாட்டான் என்பது அவர்களுக்கு தெரியும். எல்லோரும் அங்கிருந்து கலைந்து செல்ல தொடங்கினார்கள். சரவணனும், தீபக்கும் கூட காரணம் புரியாமல் விழித்தார்கள்... பிரபாகரனைத் தவிர. அவனும் புன்னகையுடன் அங்கிருந்து சென்றான். அழைப்பை ஏற்று பேசினான் ஆதித்யா.

"எப்படி இருக்க கமலி?"

"நம்ம காலையில தானே பேசினோம் ஆதிஜி?" என்றாள் மெல்லிய குரலில்.

அவளது குரலில் ஏதோ புதிதாய் உணர்ந்தான் ஆதித்யா.

"என்ன ஆச்சு, ஏன் என்னவோ மாதிரி பேசுற?"

"ஒன்னுமில்ல ஆதிஜி. சுமித்ரா என்னை நாளைக்கு அவங்க வீட்டுக்கு கூப்பிட்டிருக்கா"

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now