அத்தியாயம் 14

564 22 0
                                    

மறுநாள் காலை ரிஷியும் ,ஆராதனாவும் சென்னை நோக்கி கிளம்பினர். எல்லோரிடமும் விடைபெற்று காரில் ஏறியவளின் கண்ணில் மெல்லிய நீர் படலம்.
"எல்லாம் இந்த ரிஷியால்  தான் வந்தது " என அவனை மனதில் வறுத்து எடுத்தாள்.
அவளுக்கு இங்கிருந்து செல்ல மனமே இல்லை.
என்னதான் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் தாய் தந்தை அற்றவர்களுக்கு தாத்தா பாட்டி என குடும்பத்துடன் வாழ மிகுந்த ஆசை.
அவள் , தான் இங்கே இருப்பதாகவும் ரிஷிக்கு முடியுமான நாட்களில் இங்கே வந்து போகச் சொல்லியும் .....அவன் கேட்பதாக இல்லை.
வேறு வழியில்லாமல் அவனுடன் சென்னை நோக்கி பயணம்.....

     "இப்ப இதுக்காக உம்முன்னு வரே...?என் கூட இருக்க பிடிக்கலையா என்ன?" என்று ரிஷி கேட்க.... அவளோ அவனை முறைத்துவிட்டு
தலையைத்தலையைத் திருப்பிக் கொண்டாள்.
மீண்டும் இவன் எதுவும் பேசாமல் சென்னை நோக்கி காரை செலுத்தினான்.
இவ்வாறு இருவரும் சென்னை வீட்டை வந்தடைய அங்கே வேலை செய்யும் தேவகி அம்மா ஆர்த்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்துச்சென்றார்‌.

  உள்ளே சென்றவள் அவனது அறையை கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்று களைப்பின் மிகுதியால் தூங்கிவிட்டாள். இவனும் அவளை எழுப்பாது தானும் சிறிது ஓய்வு எடுத்து விட்டு அலுவலக வேலை பார்க்க ஆரம்பித்தான்.

இவ்வாறே நாட்கள் வேகமாக செல்ல அகல்யா தம்பதியினரும் சென்னைக்கே வந்து சேர்ந்தனர்‌...ஆதிரன் இருக்கும் வீட்டிற்கும் ரிஷியின் வீட்டிற்கும் 15 நிமிட இடைவேளை என்பதால் ஒரு நாளில் ஒரு தடவையாவது அக்கா-தங்கை இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்வர்.

அன்று இரவுஆராதனா எப்போதும் போல் கணவனிடம் லவ் யூ சொல்லியவள் ... எப்போதும் இல்லாமல் அவனிடம்
"ஏன் வர்மா நான் மட்டும் எப்போதுமே ஐ லவ் யூ சொல்றேன். நீங்க ஏன் இதுவரைக்கும் ஒரு வாட்டியாவது சொல்லல???"
என்று முகத்தை சோகமாக வைத்துக் கேட்டாள்.

"ஏன் சொல்லலனா... என்ன கேள்வி இது? சொல்லத் தோனல்லை"
என்று அவன் முடிக்க அவனருகில் நெருங்கி படுத்தவள்
" என்னது தோணலையா?"
என்று கோவமாக கேட்பது போல் அவனது மூக்கை திருகினாள்.
அவளது கையை தட்டி விட்டவன்
"ஏன் உனக்கு சொன்னா புரிஞ்சிக்க முடியாதா? ஏன் தோனலன்னு  கேட்கிற? ஏன்னா ...ஏன்னா..
நான் உன்ன லவ் பண்ணல.. லவ் பண்ணா தானே லவ் யூ சொல்ல முடியும் ..."
என்று அவளை திட்டி விட்டு எழுந்து பால்கனி சென்றான்..

"என்ன லவ் பண்ணவே இல்லையா?"
என்று விக்கித்துப்போய் நின்றவள் தன்னை சமாளித்துக் கொண்டு அவன் பின்னால் சென்று
" நீ... நீங்..... நீங்க என்ன சொல்றீங்க ?என்னை லவ் பண்ணலைனா.. எப்படி கல்யாணம் பண்ணுனிங்க? "
என்று அவன் சொல்ல போகும் பதிலுக்காக பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்க்கும் மாணவி போல அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் கேல்வியில் ஏதோ நகைச்சுவையை கேட்டதுபோல் விழுந்து விழுந்து சிரித்தான் .
இவளோ அவனை மிரட்சியாக பார்த்தவாரே இருந்தாள்.
  " நான் உன்னை பேபின்னு சொல்றதில் தப்பே இல்லடி மை பொண்டாட்டி.....
எல்லோரும் கல்யாணம் பண்ணிக்கிறாங்களே.... காதலிச்சா பண்ணிக்கிறாங்க ?இல்லல்ல...
எங்க அம்மா அப்பா எல்லோரும் அரேஞ் மேரேஜ் தானே... அப்படித்தான் நம்மோட கல்யாணமும் ..."
என்று ரிஷி   கூற அவளோ
" அது அவங்க காலம் வர்மா.... இப்போ அப்படி இல்ல... லவ் இல்லாத லைஃப் என்ன பொறுத்த வரைக்கும் வேஸ்ட் ""
என்க அவளை கூர்மையாக பார்த்தவன்
"  இங்க பாரு உனக்கு இப்போ என்ன பிராப்ளம் ?நானும் நீயும் நல்லாத்தானே இருக்கோம்.. எங்களுக்குள்ள எந்த ப்ராப்ளமும் வரலையே... இந்த லவ் எல்லாம் வேஸ்ட் பேபி "என்று அவன் கூற....

"வர்மா அப்படினா என் மேல உங்களுக்கு எதுவுமே இல்லையா ?"
என்று சிறு பிள்ளையின் எதிர்பார்ப்போடு கேட்க இல்லை எனும் விதமாக தலையசைத்தான்.

"ச்சீ...நீங்க இவ்ளோ கேவலமா ?
அப்படின்னா என் கூட குடும்பம் நடத்துனீங்களே  அப்ப கூட என் மேல காதல் வரலன்னா,  நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தப்ப உங்களுக்கு ஒண்ணுமே தோணலணா நீங்க இன்னொரு பொண்ணு கூடவும் என் கூட குடும்பம் நடத்தின மாதிரியே இருப்பீங்களா ?"

என்று அவள் அழுகையுடன் கேட்க்க
"ஏய்... என்ற சத்தத்தோடு கையை ஓங்கியவாறு  அவளை நெருங்கினான் ரிஷி வர்மன்.

இவள் பயத்தில் நடுங்கியவளாக அவனைப் பார்க்க
"இன்னொரு வார்தை பேசுன கொன்னுடுவேன் ..போடி இங்கிருந்து.." என்று உறுரமலாக கூறினான் .

அவள் அங்கே அப்படியே நிற்க அவளை பார்க்க பிடிக்காமல் அவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

தொடரும்.....

எனக்கென பிறந்தவன் நீWhere stories live. Discover now