அத்தியாயம் 11

595 22 0
                                    

       அடுத்தஅடுத்த நாள் காலை மிகவும் அழகாக புலர்ந்தது. . எப்போதும் போல அதிகாலையிலேயே விழிப்பு வந்தது ரிஷிக்கு ‌... தன்னை ஏதோ அழுத்துவது போன்ற உணர்வில் குனிந்து கீழே பார்க்க அவனது மனைவி தான் சிறு குழந்தை போல அவனை அணைத்து  கால்கள் இரண்டையும் அவன்  மேலேயே போட்டுக்கொண்டு அவன் நெஞ்சின்   மீது தலைவைத்து சுகமாகத் தூங்கிக் கொண்டு இருந்தாள்.

   ஒரு சில நிமிடங்கள் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தவன் மெதுவாக அவளைத் தட்டி எழுப்பினான்.அவள் ஏதும் கனவு கண்டிருப்பாள்  போல ,லேசாக உதட்டை சுளித்து சிரித்தவள்
""" லவ் யூ வர்மா எத்தனை வாட்டி தான் உங்ககிட்ட சொல்லறது  """ என்று உளறி விட்டு மீண்டும் அவனுள் புதைந்து கொண்டாள்.

அவள் கூறியதை கேட்டு அதிர்ந்தவன் "என்ன இது சைட் மட்டும் தான் அடிக்கிறான்னு  பார்த்தா லவ்வே பண்றா போல இருக்கே.....ம்.... சூப்பர்"
என்று தனக்குள் முனகியவாறு அவளை தலையணையில் தூங்க வைத்தவன் எழுந்து குளியலறை சென்றான்.
அவன் சென்ற சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்தாள் ஆராதனா .அவனும் குளித்து முடித்து விட்டு வெளியே வர ஆராதனா தானும் எழுந்து குளியலறை சென்றாள்.

   " முன்னாடி எல்லாம் நம்மளையே வெரிச்சு வெரிச்சு பார்ப்பா..
இந்த கொஞ்ச நாளா கண்டுக்கவே மாட்டேன்றா.." என்று புலம்பியவாறே உடை மாற்றி விட்டு வெளியே சென்றான் .
ஆராதனாவும் பச்சை நிறத்தில் ஷிபான் சேலை கட்டி வெளியே வந்தாள்.
படிகளில் காலடி சத்தம் கேட்க காபி குடித்துக் கொண்டிருந்த ரிஷி நிமிர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் .
"இவ இவ்வளவு அழகா....
இல்ல சாரி  கட்டின பொண்ணுங்க எல்லாருமே அழகுதானா?...."
என்று அவளையே பார்த்தபடி யோசிக்க பக்கத்திலிருந்த ஆதிரன் தொண்டையைக் கணைக்கும் சத்தத்தில் நிமிர்ந்து அவனைப் பார்த்து அசடு வழிந்தான்...

  இவ்வாறு அன்றைய நாள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி செல்ல ,
அன்று மாலை தோட்டத்தில் ஏதோ சிந்தனையில் இருந்த ஆராதனாவை நோக்கிச் சென்ற ஆதிரன்
"...ஆராதனா... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். ப்ளீஸ் நான் சொல்றத கேளுங்க "
என்றவாரே தனக்கும் அகல்யாவிற்கும் எப்படி பழக்கம் என்பதை சொல்லத் தொடங்கினான்.

******************

    ஆதிரன் தனது கல்லூரிப் படிப்பை சென்னையிலேயே படித்தான் .
அந்தக் காலகட்டத்தில் ஆதிரனின் காலேஜ் செல்லும் வழியில் உள்ள பாடசாலையினை கடந்து தான் அவனது காலேஜ்க்கு செல்ல வேண்டும் .

அப்படி ஒருநாள் அவன் தனது பைக்கில் செல்லும்போது திடீரென ஒரு பெண் அவனது வண்டியின் முன் வர சடன் பிரேக் அடித்து வண்டியை நிப்பாட்டி விட்டு
அப்பெண்ணை  திட்டினான்.
இவன் திட்டியதாலும் வண்டி இடிடக்கப் பார்த்ததாலும் பயத்தில் தன் கையால் காதை மூடிக்கொண்டு இவனை பயத்துடன் பார்த்தாள்...

அவளின் பயம் அவனுக்கு சுவாரசியமாக இருக்க அவளையே பார்த்து இருந்தான்.
அப்போது அங்கு வந்த இன்னொரு பெண் "என்னாச்சுடி ஹரிணி...
இவரு இடிடக்க பார்த்ததும் இல்லாம என்ன உன்னை திட்றாரு..."
எனக் கேட்க அவளோ "அகல்  அகல்...."என்று அகல்யாவை  அணைத்தவாறு தேடம்பினாள்‌ . அகல்யாவோ ஆதிரனை  சரமாரியாக திட்டி விட்டு ஹரிணியை கூட்டி சென்றாள்.
அதை கண்டுகொள்ளாதவன் ஹரிணியையே பார்த்திருந்தான்.

அதனை அடுத்து வந்த நாட்களில் அவ்வழியே செல்லும்போது ஹரிணியை தேடிக் கொண்டே செல்வான்.
அவள் எப்போதும் அகல்யா உடனேயே சுற்றுவாள் .
சில சமயம் இவன் அகல்யாவுடன் பேசுவதும் உண்டு.
அப்போது ஹரினியும் பக்கத்திலிருந்து அவனைப் பார்ப்பாளே  தவிர பேசமாட்டாள்.

     ஆதிரன் அகல்யா இருவரும் இன்னும் நெருக்கமானார்கள்.
அகல்யா ஆதிரனை
ஆது என்று அழைக்கும் அளவிற்கு ..ஹரிணியும் அவனும் கண்களாலேயே காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த வருடம் இருவரும் பிளஸ் டூ எக்ஸாம் எழுத இருப்பதால் மாலை நேர வகுப்புக்களுக்கும் செல்வார்கள்.
இப்படியாக நாட்கள் செல்ல அகல்யாவிற்கு தெரியாமல் ஹரிணி மற்றும்  ஆதிரன் இருவரும் தனிமையில் சந்தித்து பேசுவதும் ,பரிசுகள் பரிமாற்றிக் கொள்வதுமாக இருந்தார்கள்.
இவன் அகல்யாவிற்கு தெரியுமா என்று ஹரினியிடம் கேட்க அவளும் ஆமாம் என்ற சொல்லோடு முடித்து விடுவாள்..

இங்கு இவர்கள் இப்படி இருக்க ஆராதனாவிடம்   சொன்னால் திட்டுவாள்.
படிக்கும் வயதில் படி என்று கூறுவாள் என்ற பயத்தில் அவரளிடம் கூட சொல்லாமல் ஆதிரன் மீது காதலை வளர்த்தாள் பாவையவள்......

தொடரும்....

எனக்கென பிறந்தவன் நீWhere stories live. Discover now