🧡 கன்னல் 39

Start from the beginning
                                    

"ஏன் நந்தினிமா! இந்தப் பையன் நான் நெனச்ச அளவுக்கு உத்தமபுத்திரன்லாம் இல்ல போலிருக்கே?" என்று கேட்டாள் ராமுத்தாயி.

"எக்ஸாட்லி ராமு! உத்தமபாளையம் போயிட்டு வந்ததுல இருந்து
நானும் இவனப் பத்தி
இதே மாதிரி தான் நினைச்சுட்டு இருக்கேன்! எங்கப்பா என்ன குடுத்தாலும், அத க்ராம்ஸ் கணக்கு குறையாம அவருக்கு திருப்பி தருவேன்னு எங்கிட்ட சொன்னவன் இவன்...... பாலாண்ணா கொஞ்சம் ரிசர்வ்டு பெர்ஸன் தான்; ஆனா மகனோட என்கேஜ்மெண்ட்டுக்காக எவ்ளோ சிம்பிளா ஊருக்கு வர முடியுமோ வந்து, இவனுக்காக கூட நின்னாருல்ல! ஊர்ல அவர் செஞ்ச மாவிளக்கு கரெக்டான ஷேப்ல வரலன்னு அவருக்கு எவ்ளோ வருத்தம் தெரியுமா ராமு? இதெல்லாம் இவன் கண்ணுக்கு பாசமா தெரியலயாமா? யாரோ ஒரு முத்தழகன் வீடு வரைக்கும் எங்கண்ணா வந்து பேசுனதும் மிஸ்டர் ஜேவிக்கு பத்தாதாமா? என்கேஜ்மெண்ட் முடிஞ்சதும் எங்கண்ணா, அண்ணிட்ட இவன் ஒரு ஆசிர்வாதம் வாங்கியிருக்கலாம்ல?
அவங்க ரொம்ப சந்தோஷப் பட்டுருப்பாங்களே? அத செஞ்சானா இவன்? இவன் நல்லவனெல்லாம் இல்ல ராமு பேபி! ரொம்ப திமிரு பிடிச்சவன், பொஸஸிவ் டைப், அடமெண்ட், ஷெல்ஃபிஷ்.......!" என்று சொன்ன நந்தினியின் கருத்தை ஆமோதித்த ராமுத்தாயி,

"நல்லா சொன்னீக நந்தினிமா! இவன் பன்னீர் சித்தப்பு கிட்ட கூட அப்டித்தான பேசுனான்? சரியான காரியவாதி! இவன் வேலைக்காக ஏதோ ப்ளான் போட்டு வச்சிருக்கானாம்; அத மட்டும் பாலன் மாமா பார்த்து இவனுக்கு வேணும்ங்குறத செஞ்சு குடுக்கணுமாம்! ஆனா இவரு அவுக அப்பாருட்ட வாயில இருக்குற முத்த உதுத்து வுட மாட்டாராம்! என்னையவே ஏங்கி ஏங்கி அழ வச்சவன்தான இவன்...... நீங்க சொன்னாப்ல இவன் சுயநலம் பிடிச்சவன் தான் நந்தினிமா!" என்று சொன்ன ராமுவிடமும், நந்தினியிடமும் ஒன்றும் எதிர்த்துப் பேசாமல் அவர்களிருவரையும் கூர்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் ஜேவிபி.

"என்ன மொறைக்கிற! நாங்க கரெக்டா தான பேசுறோம்?" என்று கேட்ட நந்தினியிடம்,

தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔Where stories live. Discover now