26 என்னோட ஆதிஜி

Start from the beginning
                                    

"நான் பொண்டாட்டியோட கடமையைப் பத்தி கேக்குறேன் கமலி..."

"அதைத் தானே நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்..."

பெருமூச்சு விட்டார் செல்வி. தன் மகளுடன் ஆதித்யா எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது அவருக்கு புரிந்து போனது. கமலிக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்பது அவருக்குப் புரியவில்லை. ஆனால், இதை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று நினைத்தார் அவர். அதைப் பற்றி கமலியிடம் பேச சரியான ஆளையும் தேர்ந்தெடுத்தார்.

இன்ட்காம் அலுவலகம்

சுமித்ராவின் கணவன் சுரேஷ் குழம்பிப் போனான், ஆதித்யா அவனைப் பார்க்க வேண்டும் என்று அழைத்தவுடன். இன்ட்காம்மின் பைனான்ஸ் பிரிவில் பணிபுரியும் சாதாரண ஊழியன் அவன். இதுவரை அவனால் ஆதித்யாவின் அருகில் நெருங்கக்கூட முடிந்ததில்லை. அப்படியிருக்கும் போது, இப்பொழுது ஆதித்யா அவனை எதற்காக பார்க்க நினைக்கிறார்? என்று யோசித்தபடி ஆதித்யாவின் அறையை நோக்கி தலைதெறிக்க ஓடினான் சுரேஷ். மூச்சிரைக்க அவன் அறையின் கதவை தட்டினான். ஆதித்யாவிடமிருந்து,

"கம் இன்..." என்ற வார்த்தைகள் கம்பீரமாய் வந்தது.

ஆதித்யாவின் முன் சென்று, அடக்க ஒடுக்கமாக நின்றான் சுரேஷ், ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல்.

"நீங்க என்னைக் கூப்பிட்டிங்கன்னு சொன்னாங்க சார்..." என்றான் பணிவுடன்.

தனது மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த ஒரு உறையை எடுத்துக் கொள்ளும்படி அவனுக்கு சைகை செய்தான் ஆதித்யா. அதை எடுத்து பிரித்து பார்த்தான் சுரேஷ். தான் படித்துக்கொண்டு இருப்பது உண்மை தான் என்பதை நம்பவே முடியவில்லை அவனால். அது அவனது பதவி உயர்வுக்கான ஆணை. நம்ப முடியாமல் ஆதித்யாவை பார்த்தான் அவன்.

"உங்க வைஃப் ரொம்ப நல்ல பாக்ஸ்ஸர்னு கேள்விப்பட்டேன். அவங்களுக்கு நம்ம கம்பெனில இருந்து ஸ்பான்சர் பண்ணலாம்னு நினைக்கிறேன். அவங்களுடைய செலவுகளை எல்லாம் சமாளிக்க நீங்க கஷ்டப்பட வேண்டாம். அதனால தான் உங்களையும் பிரமோட் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். உங்க வைஃபோட ட்ரைனிங்குக்கு ஒரு நல்ல கோச்சையும் நம்ம கம்பெனி அப்பாயிண்ட் பண்ணும்."

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now