அத்தியாயம் 10

606 22 0
                                    


"என்னடா ‌ஆராதனாவை லவ் பன்றியா என்ன ? " எனக் கேட்க்க ரிஷியோ " லவ் எல்லாம் இல்லை ....எப்டியும் கல்யாணம் பண்ணி தானே ஆகனும்.. அதுக்கு அவள பண்ணிக்கலாம். கிடைச்ச சான்ஸ்ஸ மிஸ் பண்ணிக்க கூடாது இல்லியா." என்றான்.
"சரி‌ விடு ஏதோ ஒன்னு ....நீ நல்லா இருந்தா அதுவே போதும்.."
என்று முன் தினம் பேசியதை நினைத்து கொண்டு இருவரும் கண்ணயர்ந்தனர்.

அடுத்த நாள் அதிகாலை வேளையில் ஆராதனா மற்றும் அகல்யா இருவரையும் எழுப்பி தயார் செய்தனர்.
மணக் கோலத்தில் இருவரும் தேவதைகளாக தெரிந்தனர்.
இருவரையும் கண்ட பாட்டிக்கு ஏனோ அவரது மகள் சுமதியின் நினைவு வந்தது.
உடனே தன்னை சமாளித்து கொண்டார்.

ரிஷி மற்றும் ஆதிரன் இருவரும் மணவறையில் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக ஐயர் கூறிய மந்திரங்களை கூறிக் கொண்டு இருந்தனர்.
"பொண்ண அழைச்சிண்டு வாங்கோ.." என்ற ஐயரின் குரலில் ஆதிரன் தலை நிமிர்ந்து பார்க்க அன்ன நடையிட்டு வந்த அகல்யாவிடம் இருந்து அவனால் கண்ணை அகற்ற முடியவில்லை.
அகல்யாவோ தலையை கூட நிமிர்த்தாமல் நடந்து வந்தாள்.

ஆதிரன் இவ்வாறு இருக்க ரிஷியோ கர்மமே கண்ணாக மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தான்.
ஆராதனாவும் யாருக்கோ கல்யாணம் என்ற ரீதியில் நடந்து வந்தாள்.
அவளுக்கு தான் காதலித்தவன் தான் தன் மணாளன் ஆகப் போகிறான் என்றாலும் அவனுடைய திருமணம் நின்ற பிறகே தன்னை தேர்ந்தெடுத்தான் ... அதுவும் அவனுடைய குடும்பமே தன்னை கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினர் என்பதால் மனதில் எந்த வித மகிழ்ச்சியும் இல்லை.

இருவரும் வந்து ரிஷி மற்றும் ஆதிரனின் அருகில் அமர்ந்ததும் "கட்டிமேளம் ...கட்டிமேளம்" என்று ஐயர் சொல்ல முதலாவதாக ரிஷி ஆராதனாவின் சங்கு கழுத்தில் தாலியைக் கட்டினான்.
இரண்டாவதாக ஆதிரன் அகல்யாவின் கழுத்தில் பொண்தாலியை கட்டினான்.

இவ்வாறு இனிதே திருமணம் முடிந்ததும் மற்றைய சடங்குகளையும் பெரியவர்கள் நடத்தி வைத்தனர்.

எனக்கென பிறந்தவன் நீWhere stories live. Discover now