அத்தியாயம் 9

Start from the beginning
                                    

   அப்போது தேவராஜ் "சரிப்பா இப்ப என்ன பன்றது..ஆதி கல்யாணத்தை மட்டும் பண்ணலாமா " எனக் கேட்க ஜெகநாதன் பேசும் முன்னர் ஆதிரனோ " தாத்தா இது எல்லாம் கேள்விப் பட்டா நம்ம குடும்ப மானமே போயிடும். நாளைக்கு குறிச்ச முகூர்தத்துலயே ரிஷிக்கு கல்யாணம் பண்ணலாம். அண்ணன் இருக்க தம்பி நான் மட்டும் எப்டி கல்யாணம் பன்றது.?"
என கவலை போல் கேட்க அதனை உண்மை என்று நம்பிய வெள்ளிப் பாட்டியோ "ஆமாங்க சொந்த பந்தங்க எல்லாம் தப்பா பேசுவாங்க.ஆதி சொல்றது சரிதான்" என்க தேவராஜோ "அம்மா நீங்க சொல்றது சரிதான்.... ஆனா பொண்ணுக்கு எங்க போறது? நாளைக்கு விடிஞ்சா கல்யாணம்.." என்று கூற.....

  இதற்கும் ஆதியே " பெரியப்பா எதுக்காக பொண்ண தேடி அலையனும் ..இதோ கண்ணு முன்னாடியே இருக்காங்களே ஆராதனா..உங்க எல்லோருக்கும் அவங்கள புடிக்கும் தானே..." என மெதுவாக நூல் விட்டான்.

   இதனை கேட்ட கலையரசியோ " எனக்கு ரொம்ப சந்தோஷம்... ஆராதனா மருமகளா வர நாங்க குடுத்து வச்சிருக்கனும்." என்று தன் சம்மதத்தை தெரிவிக்க தாத்தாவோ திரும்பி ரிஷியை பார்க்க அவனோ "எனக்கு ஓகே...ஆரா கிட்டயும் கேளுங்க" என்றான்.

பாட்டி ஆராதனாவிடம்  சென்று " உன் தங்கச்சியும் இந்த வீட்டு மருமகளா வரா.. அதேபோல நீயும் வந்தா ரொம்ப சந்தோஷம்டா. மாட்டேன்னு மட்டும் சொல்லிறாதேமா" எனக் கூற இவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க பெண்கள் அணைவருமே அவளிடம் சரியென்று சொல்லுமாறு வேண்டிக் கேட்க சரியென்று தலையசைத்தாள்.

அகல்யாவிற்கு அப்படி ஒரு மகிழ்ச்சி,
தன் அக்காவிற்கும் அழகான ஒரு வாழ்க்கை அமைவதை நினைத்து.அதுவும் அவள் காதலித்தவனுடனேயே என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
அணைவரும் கல்யாண வேலை இருப்பதால் தூங்கச் செல்ல ஆராதனாவும் ரிஷியை பார்த்தவாறே உடன் சென்றாள்.

அவர்கள் அனைவரும் சென்றதும் சாவகாசமாக சோஃபாவில் அமர்ந்த ரிஷியோ ஆதிரனை பார்த்து வெற்றி சிரிப்பு சிரிக்க ஆதிரனோ  "எப்படியோ நீ நினைச்ச மாதிரியே நாளைக்கு உனக்கு கல்யாணம். நீ எனக்கு தான் நன்றி சொல்லனும்.
நான் தான் கரக்டா ஆக்ட் பண்ணேன்."
என்க ரிஷியோ சிரித்து கொண்டே
"உன்னோட கல்யாணம் நடக்கவும் நான் தான் காரணம். ரெண்டும் சரியா போச்சு" என்று கூறியவாறு தூங்கச் சென்றான்.

ஆதிரனோ நேற்றைய நிகழ்வை  மனதில் அசை போட்டான்.
திருமண நாள் நெருங்க நெருங்க அவன் மனதில் ஏதோ ஒரு நெருடல்.
"ரிஷி ஏன் இவ்வாறு செய்தான்" என
.

"என்னடா திங்க் பண்ற புது மாப்பிள்ளை"   என்றவாறு உள் நுழைந்தான் ரிஷி. இதனை கேட்ட ஆதிரன் "வேற என்ன... எல்லாம் உன்ன பத்தி தான்" என்க
"அதைப் பத்தி பேச தான் உன்கிட்ட வந்தேன்."என்று ஐஸ்வர்யா மற்றும் ரஞ்சித் பற்றி அணைத்தையும் கூறி மேலும் "நீ ஒரு ஹெல்ப் பண்ணணும்.. கல்யாணம் நின்ன அப்பறம் ஆராதனாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி நீ எல்லார்கிட்டயும் சொல்லனும்." என்று இருவரும் திட்டம் தீட்டினர்.

தொடரும்......

கதை எப்படி போகுதுன்னு ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க friends..❤️❤️❤️

எனக்கென பிறந்தவன் நீWhere stories live. Discover now