தனது கல்லூரி, ஆங்கில வகுப்பு, மற்றும் ஆதித்யாவின் நட்புறவு அனைத்தையும் சந்தோஷமாய் அனுபவித்துக் கொண்டிருந்தாள் கமலி. கூடவே தனது மருமகளுக்கான கடமையையும் அவள் செய்ய தவறவில்லை.

கல்லூரி

தனது மதிய உணவுடன் கடைசி இருக்கையில் காத்திருந்தாள் கமலி. லாவண்யாவும், சுமித்ராவும் கேண்டீனுக்கு சென்றிருந்தார்கள். அப்பொழுது, அவளது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன்  அவளிடம் வந்தான். அவனை இதற்கு முன்  பார்த்திருந்தாலும், அவனது பெயர் அவளுக்கு தெரியாது.

"ஹாய்" என்றான்.

லாவண்யா கூறிய வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தது. யாரையும் அண்ணா என்றோ, அக்கா என்றோ அழைக்கக் கூடாது என்று அவள் கூறி இருந்தாள் அல்லவா...! அதனால் அவளும்,

"ஹாய்" என்றாள்.

"என் பேர் சமீர் கான்"

"என் பெயர் கமலி"

"எனக்கு தெரியும்"

"ஓ..."

"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?"

"கேளுங்க"

"நம்ம காலேஜ்க்கு வந்த முதல் நாள், நீங்க நம்ம ப்ரொஃபசர்கிட்ட, நீங்க தமிழ் மீடியத்தில் படிச்சதா சொன்னிங்க..."

"ஆமாம்..."

"நானும் தமிழ் மீடியத்தில் தான் படிச்சேன். நம்மளுடைய பாடத்தை புரிஞ்சிக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனா, நீங்க ரொம்ப ஈசியா பிக்கப் பண்ணிட்டீங்க. அது உங்களால எப்படி முடிஞ்சது?"

"எனக்கு ஸ்டடீஸ்ல ஆதிஜி தான் ஹெல்ப் பண்றாரு..." என்றாள் புன்னகையுடன்.

"ஆதிஜியா...? அவர் உங்க டியூஷன் மாஸ்டரா?"

"இல்ல, இல்ல, அவர் என்னோட ஹஸ்பண்ட்..."

"நெஜமாவா? பரவாயில்லையே..."

"ஆமாம்... நான் ஆரம்பத்துல ரொம்ப பயந்தேன். என்னை ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ்ல சேத்துவிட்டதோட மட்டும் இல்லாம, எனக்கு தினமும் பாடமும் சொல்லிக் கொடுப்பார்"

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now