3 ரகசிய திட்டம்

Start from the beginning
                                    

"அக்கா சொல்றது உண்மை, கமலி. ஏதாவது ஏடாகூடமா செஞ்சி, இந்த சம்பந்தத்தை கெடுத்துடாத... அப்புறம் நீ என்னை உயிரோடவே பார்க்க முடியாது" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் செல்வி.

"உங்க அம்மா என்ன சொன்னான்னு கேட்டல்ல? ஜாக்கிரதை" என்றார் சுந்தரி.

கமலியின் அருகில் சென்று, அவள் கட்டிக்கொண்டிருந்த அவளது கால்களை, தானும் கட்டிக்கொண்டாள் ஜானகி.

"என்ன பிரச்சினை உனக்கு? மனுஷன் பார்க்க எவ்வளவு அசத்தலலா இருக்காரு..."

"அப்போ, நீயே போய் அவரை கல்யாணம் பண்ணிக்கோ"

அதைக் கேட்டு சிரித்தாள் ஜானகி.

"அவருக்கு என்னைப் பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்குவேனே. அவருடைய கெட்ட நேரம், அவருக்கு உன்னை தானே பிடிச்சிருக்கு" என்றாள் கிண்டலாக.

"ஆனா, எனக்கு என்ன பிடிக்கும்னு யாருமே கேட்கலையே..."

"நீ ஏதாவது ஏடாகூடமா செய்ய சொல்லுவன்னு அவங்களுக்கு தெரியும். அதனால தான், யாரும் உன்னை ஒன்னும் கேட்கல"

அமைதியாய் இருந்தாள் கமலி.

"ஆனா, இப்போ உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு"

"ஏன்?"

"அவரு உன்னை என்ன செய்ய போறாரோ தெரியல... நீ அவர்கிட்ட நல்லா மாட்டிக்கிட்ட" என்றாள் தன் சிரிப்பை அடக்கியபடி.

ஆதித்யாவை சந்தித்த பிறகு, அவன் கமலியைப் பற்றி கூறிய வார்த்தையும், அதை கூறும் போது அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகையும், அவன் கமலியை  சங்கடப்படுத்த மாட்டான் என்று தோன்ற செய்தது ஜானகிக்கு. இப்பொழுது அவள், கமலியிடம், ஆதித்யா அவளை *ஏதாவது செய்வான்* என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்ட பிறகு, அவன் ஏதும் செய்யாமல் இருந்தால், அது ஆதித்யாவின் மீது கமலிக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் என்று அவள் நம்பினாள்.

"அவர் என்ன செய்வாரு?" என்றாள் விழிகளை விரித்தவாறு கமலி.

"நீ கத்தி, ஊரைக் கூட்டி, கலாட்டா பண்ணிட்ட... அப்படி எல்லாம் நீ செஞ்சா, அவர் சும்மா இருப்பாரா?"

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now