எனக்காக 9

Start from the beginning
                                    

ஆனால் இங்கு அப்படியில்லையே , வெளியே மீட்டிங் என்றாலும் விஷ்ணுவுடன் சேர்ந்து அவன் காரிலேயே செல்வதால் தன் இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தான்.

வீட்டை பூடடிவிட்டு கீழே பார்க்கிங் வந்தவன் கண்களில் தான் அந்த காட்சி தென்பட்டது .

இதுநாள் வரை தான் ஆசைப்பட்டு வாங்கிய தன் ரோயல் என்ஃபீல்டில் யாரையும் பின்னால் கூட அமர்த்தியதில்லை , ஆனால் இன்றோ எவளோ ஒருத்தி அதில் ஒய்யாரமாக ஏறி அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டு இருக்க , எரிச்சலுடன் அவளை நோக்கி சென்றான்.

யார் அவள்?

ஹா ஹா நமக்கு தான் தெரியுமே , இந்த மாதிரி குரங்கு சேட்டை எல்லாம் நம் மீராவை தவிர யாரால் செய்யமுடியும் .

கௌஸிற்கும் மீராவிற்க்குமான - முதல் சந்திப்பு🥳

இரண்டு நாட்களாய் தன் ஸ்கூட்டியில் அருகே நின்றிருந்த அந்த சிவப்பு நிற ரோயல் என்ஃபீல்டு மீராவின் பார்வையில் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது .இதற்கு முன்னர் இந்த வண்டியை கவர் போட்டு மூடியிருந்ததால் ரோயல் என்ஃபீல்டு என்பது அவள் அறியாமல் இருந்தாள்.

ஒருநாளேனும் ஒரு புல்லட்டில் அமர்ந்து அதோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவளது நெடுநாளைய அவா. இதோ தன் அருகில் இரண்டு நாட்களாய் இந்த புல்லட் இருந்தும் யாரேனும் நடக்க வண்டியெடுக்க என்றிருக்க அதில் அமர்ந்து செல்ஃபி எடுக்க முடியவில்லை, ஆனால் இன்று அவள் கீழே வந்தவுடன் சுத்தியும் யாரும் இல்லையென்பதை அறிந்தவள் மகிழ்வுடன் அந்த வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

ஆனால் அவளது கெட்ட(நல்ல😍)நேரம் வண்டியின் உரிமையாளனே வந்தது, மேலும் அவன் காலடி சத்தம் கேட்காதவாறு இவள் ஹெட்செட்டை காதில் மாட்டியிருந்தது.

அவளுக்கு அருகில் பின்னால் சென்றவன் அவள் காதில் ஹெட்செட்டை பார்த்தவன் , Excuse me என்று சத்தமாக அழைத்தும் அவள் தான் எடுத்த புகைப்படங்களை மும்மரமாக பார்த்துக்கொண்டிருந்தாள் .

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now