அத்தியாயம் -23

2.7K 149 7
                                    

விதுலனை சதன்யாவுடன் தியேட்டரில் பார்த்த நாள் மட்டும் அல்ல, தொடர்ந்து அவள் ஒருவாரமாக கீழே படுக்க இவன் கடுப்பாகி போனான்.

என்றும் போல அன்றும் அவள் கீழே படுக்கையை போட "அதான் என்னை பிடிக்காதுன்னு பெரிய இவளாட்டும் சொன்னியே! அப்புறம் ஏண்டி அவ என் கையை பிடிச்சதுக்கு இப்படி நீ கீழே போய் படுத்துக்குற? உனக்கு பிடிக்காதவன் எவ கூட சுத்தினா உனக்கு என்ன? ஒழுங்கு மரியாதையா மேலே வந்து படு. இல்ல அடிச்சு பல்லை உடைச்சிடுவேன்." என்றான் கோபத்துடன்.

"லூசு மாதிரி பேசாதே! நீ யாருடன் சுத்தினா எனக்கென்ன?" என்றாள் இவள்.

"அப்போ மேல வந்து படு." என்றான் அவன் அதட்டலாக. அவனை முறைத்தவள் எழுந்துவந்து மேலே படுத்தாள். அப்புறம் எல்லாம் நார்மலாக போனது போல அவனுக்கு தோன்றியது. ஒரு வேலை முடிய முடிய அவனுக்கு வேற வேலை வந்துக்கொண்டுதான் இருந்தது. ஆனாலும் வரவுக்கும், செலவுக்கும் பணம் சரியானது போல இருந்தது. சில மெட்டிரியலை மொத்தமாக வாங்கினால் விலை குறைவாக கிடைத்தது. அதை வாங்கினால் அதை வைக்க ஒரு இடம் தேவைப்பட்டது. அதற்கு ஒரு இடத்தை பார்த்து அட்வான்ஸ் வாடகை என்று ஒருபுறம் செலவு இழுத்தது. ஸ்டாக் ஏற ஏற கடனும் ஏறியது போல தோன்றியது இவனுக்கு. ஆனால் வீட்டு செலவுக்கு பிரச்சனை இருந்தது போல தெரியவில்லை.

சதன்யாவை முன்பு போல பெரிய ஹோட்டலுக்கு அழைத்து செல்ல முடியாவிட்டாலும் சில நேரம் காஃபி ஷாப் அழைத்து செல்வான். அவளிடம் இருந்து ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் வரும். முன்பு போல நீங்க இல்லை, இப்போல்லாம் ஒரு நல்ல ஹோட்டலுக்கு கூட கூட்டிட்டு போவதில்லை, ஒரு கிப்ட் கூட இல்லை என்று. அவள் கிப்ட் என்று சொல்லும் போது இவன் மனம் தானாக நினைக்கும். இவளுக்கு கொடுத்த கிப்டை சேர்த்துவைத்திருந்தால் லோன் போடாமல் இந்த தொழிலை பணம் கஷ்டம் இல்லாமல் நடத்தியிருக்கலாம் என்று. நினைத்தவுடன் தன்னையே கடிந்தும் கொள்வான் அவன்.

இருக்கும் வரை பணத்தில் மதிப்பு இவனுக்கு தெரியவில்லை. பூவும் வைரமும் இவனுக்கு ஒன்றுபோலவே இருந்தது. எப்போது கிப்ட் வாங்கினாலும் வைரத்தில்தான் வாங்குவான். அப்போது பணம் வெறும் காகிதமாக தெரிந்தது. இப்போது அது அவனின் இரத்தமாக தெரிகிறது. தெரியட்டும், தெரியட்டும். இதுமட்டும் தெரிந்தால் போதாது அங்கு ஒரு ஜீவன் இவனுக்காகவும், இவனின் தொழிலுக்காகவும் எதையெல்லாம் இழந்துக்கொண்டு இருக்கிறது என்று தெரியவேண்டும். தெரியாமல் எங்கே போகும்?

விழியோரம் காதல் கசியுதேWhere stories live. Discover now