அத்தியாயம் -11

3.2K 170 26
                                    

காதல் வலிமையானதுதான் இரு பக்கமும் பலமாக இருந்தால்.  தங்கள் காதல் படகு மூழ்கிவிட்டாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஆண், பெண் இருவருக்குமே உண்டு.  இந்த காதலில் நியாயம் எது? அநியாயம் எது? என்று யாராலும் பிரித்து பதில் சொல்லிவிடமுடியாது.  ஆளுக்கு ஆள் அது மாறுபடும்.  பெற்றோருக்கு பெரிய சாத்தானாகவும், காதலிப்போருக்கு கடவுளாகவும் தெரியும் பச்சோந்திதான் இந்த காதல். இதை முடிவுவரை இட்டு செல்வது மிகவும் கடினம்.  சதன்யா மாதிரி ப்ராக்டிக்கலா யோசிக்கிறவங்களுக்கு இதெல்லாம் தேவை இல்லாத ஒன்று.  

விதுலன், சதன்யா காதல் விளையாட்டில் பழியானது இனியா என்னும் பலியாடுதான்.  ஊரை கூட்டி, உறவை முன் நிறுத்தி நிற்கும் போது மகன் கொடுத்த பெரிய சுமையை ஜெய்கணேஷ் தம்பதியர்களுக்கு இறக்க உதவினாள் இனியா. அது ஒன்றும் அத்தனை சுலபம் இல்லை என்பது அவளுக்கு எப்போது புரியும்? மனிதர்கள் எல்லோரும் எல்லா நேரத்திலும் கெட்டவர்கள் கிடையாது.  ஆனால் காதல் என்று வந்துவிட்டால் ஒரு சிலரை தவிர அத்தனைபேரும் சுயநலவாதிகள்.  அவர்களுக்கு அவர்கள் காதல் மட்டும்தான் கண் முன்னே தெரியும். அதனால் எத்தனை பேருக்கு துன்பம் வந்தாலும் அது அவர்கள் கருத்தில் படாது.  

இந்த களபரத்தில் ஏன் இனியா வந்து உள்ளே விழ வேண்டும்?  விதி தீர்மானித்ததா அவள் வாழ்க்கையை!! இல்லை அவள் மதி தீர்மானிக்குமா அவள் வாழ்க்கையை!!! தெரியாது... இப்போதைக்கு அவள் வாழ்க்கை காதல் மது குடித்து போதை வெறியில் இருக்கும் ஒரு ராட்சஸ்சனின் பிடியில்!!!

திருமணம் நல்லபடியாக முடிந்து மணமகனுடன் அவன் வீடு செல்ல தயாரானாள் இனியா.  அவள் குடும்பத்தார் அத்தனை பேர் கண்ணிலும் அப்படி ஒரு கண்ணீர்.  தங்கள் பெண் வாழ புகுந்தவீடு செல்கிறாள் என்று அவர்கள் யாருக்கும் தோன்றவில்லை.   மருண்ட மான் விழியுடன் அவள் ஒரு புலி வசிக்கும் குகைக்குள்ளே செல்கிறாள் என்றே மூவரும் நினைத்தார்கள்.  இசைவளவனுக்கு தங்கையை அங்கே அனுப்பவே மனமில்லை.  அவளை இறுக்கமாக அணைத்து தன் கைக்குள்வைத்திருந்தான் அந்த காதலியால் கைவிடப்பட்ட புலியிடமிருந்து தன் தங்கையை காப்பாற்ற வேண்டும் என்று.  

விழியோரம் காதல் கசியுதேWhere stories live. Discover now