அத்தியாயம் - 4

3.3K 164 19
                                    

சம்பந்தமே இல்லாத அடுத்த வீட்டில் அனைவருக்கும் இடையில் சண்டையை மூட்டிவிட்டுவிட்டு இங்கே ஒருத்தி ரொம்பவே ஜாலியாக மழையில் ஆட்டம் போட்டு, அதனால் தலையில் நீர் சேர்ந்துவிடாதப்படிக்கு  வைத்தியம் பார்த்துக்கொண்டு இருந்தாள்.  

"இந்த பேய் மழையில் உனக்கு இந்த ஆட்டம் தேவையா? ஒரு அடக்கம் ஒடுக்கம் கிடையாது.  உன்னை யார் இன்னைக்கு அங்கே போக சொன்னது.  ஒருநாள்தான் லீவு கிடைக்கும். அன்னைக்கும் வீட்டில் இருக்காமல் நாலு பேரை சேர்த்துக்கொண்டு ஒரு மால் விடாமல் ஏறி இறங்கவேண்டியது." என்று மலர்விழி திட்டிக்கொண்டே அவளுக்கு மிளகும், மஞ்சள் தூளும் போட்டு சூடாக பால் காச்சிக்கொண்டு வந்து கொடுக்க, அவள் தலையில் ஒரு சொட்டு ஈரம் தங்கிவிடாதபடிக்கு கனமான டர்கி டவளைகொண்டு அவள் கேசத்தை துடைத்துக்கொண்டு இருந்தான் இசைவளவன்.

"என் மகளை திட்டுற வேலை வச்சுக்காத.  அவ என்ன ஜெயில் கைதியா? வீட்டிலேயே அடைஞ்சி கிடக்க.  இஞ்சினீயரிங் படிச்சு முடிச்சு கொஞ்சம் ஜாலியா இருக்க விடாமல் உடனே வேலை கிடைச்சு, என் பொண்ணு இந்த சின்ன வயசிலேயே என்னைவிட அதிகமா சம்மாதிக்குறா.  மாசம் அறுபது ஆயிரம். வாரத்துல ஆறு நாளு வேலை வேலைன்னு அதிலே ஊறி போய் மிஷின்மாதிரி ஆயிடுறா.  ஒரு  நாளாவது நிம்மதியா ஊரை சுற்றி பார்க்கலாம் என்று நினைத்தால் இந்த மழை வந்து அதையும் கெடுத்துவிட்டது.  உனக்கு திட்டனும் என்றால் மழையை திட்டு.  இல்ல நீ பெத்துவச்சிருக்கியே ஒரு தடியனை அவனை திட்டு.  போன் வைத்திருக்கிறான் போன்.  எப்போ அடிச்சாலும் நாட் ரீச்சபிள்.  வேலைக்கு போற இடத்தை பாரேன்.  எங்கெல்லாம் டவர் கிடைக்காதோ அங்கேதான் துரைக்கு வேலை!!

கூட பிறந்தவ வெளியே போனாளே!!மழைவேற இப்படி கொட்டுதே!! போனவ சரியா வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டாளா? இல்லையான்னு ஒரு போன் பண்ணி கேட்போம் என்று கொஞ்சமாவது அவனுக்கு மூளை வேலை செஞ்சிருக்கா." என்று மகளுக்கு ஏன்று பேசி மகனுக்கு ஒரு கொட்டு வைத்தார் இன்பசேகரன்.

விழியோரம் காதல் கசியுதேWhere stories live. Discover now