பாலா  , " இல்ல கணேஷ் ,  ஜீவி லைஃப் நினைச்சுத்தான் கொஞ்சம் குழப்பமா இருக்கு  , திருவிழாவிற்கு எல்லோரும் கோவிலுக்குப் போனோம் , செந்துவும் , ஜீவியும் புதிதாய்த் திருமணமானதால் தேர் பார்க்கக்கூடாதேன்னு இருவரை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டோம் , இரண்டுபேருக்குள்ளும் என்ன பிரச்சனைன்னு தெரியலை , நான் வீட்டுக்கு வரும்போது  ஜீவி அழுதிருந்தாள் , திருமணம் முடிந்த இரண்டாம் நாளும்  இப்படித்தான் அழுதிருந்தாள் , அதுதான் என்னால் நிம்மதியா இருக்க முடியலை , ஜீவியின் திருமணத்திற்கு நான் சம்மதித்திருக்ககூடாதோன்னு தோனுது , ஏதோ தவறு செய்து விட்டேனோன்னு  மனதுக்குள் ஒரு போராட்டமே நடக்குது , எனக் கூற ..

செந்தில் , " இதுக்குத்தான் நான் அன்றைக்கே சொன்னேன் நீதான் கேட்கலை , என கோபத்தில் பேச

ओह! यह छवि हमारे सामग्री दिशानिर्देशों का पालन नहीं करती है। प्रकाशन जारी रखने के लिए, कृपया इसे हटा दें या कोई भिन्न छवि अपलोड करें।

செந்தில் , " இதுக்குத்தான் நான் அன்றைக்கே சொன்னேன் நீதான் கேட்கலை , என கோபத்தில் பேச

கணேஷோ , விடு செந்தில் , முடிஞ்சுபோன விஷயத்தை பற்றிப் பேசி என்ன ஆகப் போகுது ? இப்ப என்ன பாலா ,  ஜீவிக்கும் செந்துவுக்கும் நடுவுல ஏதோ பிரச்சனைன்னு நீ நினைக்கிற , சரி அப்படியே பிரச்சனை இருந்தாலும் அதிலென்ன தவறு ?... இருவருக்கும் சந்தர்ப்ப வசத்தால் மேரேஜ் நடந்திருச்சு ,  அவங்க உடனே சேர்ந்து வாழனும்னு எதிர்பார்க்க முடியாது , அதேசமயம் , நான் உண்டு என் வேலை உண்டு , இரண்டுபேரும் ஒட்டாம வாழ்ந்தா பிரச்சனைக்கு வேலையே இல்லையே , நல்ல வேளையாக அப்படி இல்லாமல் , குறைந்த பட்சம் இரண்டுபேருக்கும் நடுவில் ஜீவி அழக்கூடிய அளவுக்கு ஏதோ இமோஷ்னலான , பர்ஸ்னலான விஷயம் இருக்கு என்பதே  நல்ல விஷயம் தானே ? சின்ன பசங்கதானே இன்றைக்குச் சண்டை போட்டா நளைக்குச் சேர்ந்துக்க போறாங்க , எனக்கென்னவோ இதுல கவலைப்பட எதுவும் இருக்கறதா தெரியலை , எனக்கூற செந்திலும் அதை ஆமோதித்து  ஹிம்ம் ... விடு  பாலா ,  கணேஷ் சொல்றதும் ஒருவகைல சரிதான் எனக்கூற ..

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें