💕 என்னவள் நீயே - 37 💕

Start from the beginning
                                    

" அருண், I am so happy. நா எவ்வளவு சந்தோசமா இருக்கேன்னு எனக்கு வார்த்தையால சொல்ல முடியல. Today I will be the happiest girl. உன்னோடு வாழனும்னு கனவு கண்டேன். நீ என்ன எப்போதாவது என் காதல accept பண்வாய்னு தெரியும். ஆனா accept பண்ணா இப்படி தான் feel ஆகும்னு தெரியலடா. I love this feeling. சந்தோசத்துல என்ன செய்றன்னு புரிது இல்லடா" என்று பேசிக் கொண்டு போக,
தீடீரென வைஷ்ணவியை தன்னோடு இழுத்து அவளது இதழை சிறைப்பிடித்தான் அருண்.

சிறு கணத்தில் அருண் இதழை விடுவிக்க,
வெட்கத்தில் வைஷ்ணவியின் கன்னங்கள் சிவப்பாக மாறியது. கீழே குனிந்து தரையை பார்த்துக் கொண்டிருக்க,
" என் papa க்கு வெட்கம் வந்து விட்டதோ?? "
என்று சொல்ல, பதிலும் இல்லை.
" வைஷு, நா நினைச்சு சரி தான். இந்த ரேடியோவ ஆஃப் பண்ண ஒரே ஒரு வழி kissing தான்"
ஈஈஈ என்று இளித்தாள் வைஷ்ணவி.

இருவரும் சேர்ந்து memories காக selfie எடுத்தனர். அருண் பக்கமாக வைஷ்ணவியை அணைத்தபடி ஓர் selfie. அப்போது தான் வைஷ்ணவி அவதானித்தாள். இருவரும் சிவப்பு நிற tshirt. அருணின் tshirt ஒருபக்கத்தில் LO என்றும் தன்னுடைய tshirt இல் VE என்றும் இருந்தது. இருவரும் சேர்ந்திருக்கும்போது,
ஒரு முழு இதய வடிவில் LOVE என்று முழு சொல்லோடு அர்த்தத்தையும் உணர்த்திக் கொண்டு இருந்தது.
"நம்ம tshirt போல தான் நாமும் நம்ம love உம், My life incomplete without you" என்றான் அருண்.

"சரி, வா சாப்பிடலாம்" என்று அவளை அழைக்க,
இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தொடங்கினர்.
கரண்டியால் அப்போதும் கஷ்டப்பட்டு சாப்பிடவே, அருணோ ஊட்டிவிட்டான்.
அன்றைய உணவோ அவளுக்கு மென்மேலும் சுவையாக இருந்தது. கடைசி கவளத்தில், வேண்டுமென்றே அருணின் விரலை கடித்துவிட்டாள்.
" paaaaapaaa " என்று கத்த,
"ஏன்டா?"
" இனி உனக்கு ஊட்டிவிடமாட்டேன். வேணும்னு தானே கடித்த?" என்று கேட்க,
" இல்ல தங்கமே, pasta ரொம்ப taste டா இருந்ததா, pasta ன்னு நினைச்சு உங்க கையென்று தெரியமா கடித்துட்டேன்.
Sorry டா" என்று சொன்னாள் வைஷ்ணவி. அவனோ விளையாட்டுத்தனத்துக்கும் சேர்த்து, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான். இவள் தன்னை எவ்வாறு சமாளிப்பாள் என்ற ஆவலுக்கும் சேர்த்து.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now