இமை

By sweetgirl2110

18.8K 892 169

❤️ More

1🎊
2🎊
3🎊
4🎊
5🎊
நன்றி!!!!
6🎊
7🎊
8🎊
9🎊
10🎊
11🎊
12🎊
13🎊
14🎊
15🎊
16🎊
17🎊
18🎊
19🎊
20🎊
21🎊
22🎊
23🎊
24🎊
25🎊
26🎊
27🎊
29🎊
30🎊
31🎊
32🎊
33🎊
34🎊
35🎉
36🎉
37🎉
38🎉
39🎉
40🎉

28🎊

391 20 4
By sweetgirl2110

இரவு 11 மணி இருக்கும், தருண் வீடு வந்து சேரும் போது. வந்த அலுப்பில், தன் பஞ்சு மெத்தையில் வந்து மோதினான். வலது புறமாக தலையை திருப்பி, ஜன்னல் வழியாக வெளியில் இருந்த தெரு விளக்கைப்பார்த்தான்.

ஆள் அரவமற்ற அந்த இடத்தை பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது.‌ தானும் அப்படித்தான் இருக்கின்றோமோ என்ற எண்ணம் தருணிற்கு தோன்றியது.

கலையின் மேல் தான் கொண்டுள்ள காதல்..‌

அன்றிரவு அவள் சொன்ன வார்த்தைகளில் இருந்து அறிவின் மேல் அவள் எவ்வளவு மரியாதை, காதல் வைத்துள்ளாள் என்பதை புரிந்து கொண்டான்,கலையின் மேல் பித்து புடித்து திரியும் தருண்..

"ம்ஹும்.. "என்று புன்முறுவலிட்டவாறு, காத்தாடியை நோக்கியவாறு திரும்பினான்.

"எல்லா இடத்துலையும் அவர் தான் இருந்தார். சந்தோஷம், துக்கம்.. அவர் கூடத்தான்.. " என்று கூறியவாறு அழுத கலையை வெறித்துப்பார்த்தான் தருண்.

"நானும் , என் குடும்பமே அவருக்கு முட்டுக்கட்டையா இருப்போம்னு நினைக்கல.. எனக்காக நிறைய நிறைய செஞ்சிருக்கார். "

அறிவு.... அவளது அத்துனை காதலையும் அள்ளிச்சென்ற வல்லலன்...

நீண்ட பெருமூச்சு ஒன்று விட்டபடி உறங்க தயாரானான். !!

"உன் தங்கச்சி இனிமை சின்ன பொண்ணு கிடையாது கலை. உனக்கு அது புரியனும். 19 வயசு ஆகுது. எந்த அளவுக்கு குடும்ப கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருக்கனுமோ அந்த அளவுக்கு அவளுக்கு சுதந்திரமும் கொடுக்கனும். அப்பத்தான் அவளுக்கு வெளி உலகம் புரியும். எத்தன நாள் உன் கண் முன்னாடியே வச்சிருப்ப அவள.. ??? அவள இனிமை கைட் மட்டும் தான் பண்ணனும் கலை" என்று கிளிப்பிள்ளைக்கு சொல்லித்தருவது போல் விவரித்தான் தருண்.

காரை விட்டு விடுதி அருகில் வந்து இறங்கும்போது , தருண் சொன்ன வார்த்தைகள் இவை. அவன் வார்த்தகைளில் உண்மை இருப்பதை கலை உணர்ந்தாள். " எத்தனை நாளைக்கு நான் அவ கூட இருக்க முடியும்??? " என்ற உண்மை அவளுக்கு புரிந்தது.

அடுத்த நாளே அவளை சென்று பார்க்க வேண்டும் என்று கலைக்கு உறுத்த ஆரம்பித்தது.
மணியை பார்த்தாள். 10.25 என இருந்தது. இப்ப கிளம்பினா கூட நாளைக்கு அவள பார்க்கலாம்னு வேகமாக கிளம்பினாள்.

கலையின் விடுதி இருகே வந்தவள்.. "தமிழ்.. எங்க இருக்க??"

"நான் ரூம்ல படம் பார்த்திட்டு இருக்கேன் கா.. நீ.." என்று அவள் ஆரம்பிக்கும்‌முன்பே, கலை,

"கீழ வாடீ.. வெயிட் பண்றேன்"

தங்கைக்கு தாங்க முடியாத சந்தோஷம். அக்காவை பார்த்து எத்துனை நாட்கள் ஆயிற்று..

பத்து நிமிடத்தில் வெளியே வந்தாள்.

"கா.. சொல்லாம வந்திருக்க.. "

"சரி போயிரவா.‌ " என்றாள் கலை விளையாட்டாக.

"கா.‌ " என்று சினுங்கிக்கொண்டே அவளை கட்டியணைத்தாள் கலை‌. கையில் இருந்த பைகளில் ஒன்றை அவளிடம் கொடுத்தவள்.." இந்தா ஸ்நேக்ஸ்.. ரூம்ல வச்சிட்டு வா.‌ வெளில போலாம்" என்றாள்‌

அடுத்த 10 நிமிடத்தில் அவளது கல்லூரிக்கு வெளியில் இருந்த பூங்கா போன்ற ஒரு இடத்தில் தமிழ் கொண்டு வந்த போர்வையை விரித்து அமர்ந்தனர்..

அக்காவின் மடியில் சவுகர்யமாக படுத்தவள்,
"சென்னைலாம் சுத்தி பார்த்தியா கா??" என்றாள்.

அவளது ஆயிரம் கேள்விக்கும் சலிக்காமல் பதில் கூறி கொண்டிருந்தவள், ஒரு அழைப்பை ஏற்றாள்.

"அந்த ஊஞ்சல் பக்கதுல இருக்கோம் பாரு " என்று யாருக்கோ வழி சொல்லிக்கொண்டிருந்தாள் கலை.

தங்கையும் திரும்பி பார்க்க.. அங்கு தாமரையும் சீலனும் வந்திருந்தனர்..

"அக்கா.. மாமா.. " என்று தமிழ் கத்த.. இருவரும் புன்னகை சிந்தியவாறு வந்தனர்.

"அண்ணி.‌. என் மேல கோவத்துல தான் வர்றத முன்னாடியே சொல்லலையா??" என்றான் சீலன்.

"கோவம் இருக்கு.. ஆனா அதுக்கா இல்லடா.. நைட் 11 மணிக்குத்தான் எனக்கே திடீர்னு தோனுச்சு.. உட்காரு..‌உட்காரு தாமர.. " தாமரையும் முகத்தில் ஒரு புது பொலிவு தெரிந்தது கலைக்கு. தாமரை சந்தோஷமாக இருக்கின்றாள் என்பதைப்பார்த்து கலைக்கு நிம்மதியாக இருந்தது.

"ஹனிமூன்லாம் எப்படி மாமா‌‌.. ஜாலியா.. " என்று கண்ணடித்தவளை, கொட்டினாள் கலை.. " வாய்.. வாய மூடுடீ.."

மாமா அத்தை பற்றிலாம் விசாரித்தாள். வீடு விவகாரம்.. தங்கள் பெயருக்கு வீட்டை மாற்ற எழுத போவதாகவும், அதை வாடகைக்கு விடப்போவதுமாகவும் சீலன் கூறினான். கலைக்கு மனசு ஒப்பவில்லை என்றாலும், அவர்கள் இல்லாத பொழுது வீட்டை சும்மா விடுவது நல்லா இருக்காது என்று எண்ணினாள்.

"எதுக்கு மாமா?? அப்புறம் நீங்க எங்க‌ இருப்பீங்க??" என்றாள் தமிழ்.

"தமிழு‌ . சீலனுக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்கு. அதனால தாமரையும் அவன் கூட போறா.. " என்றதுமே தமிழின் முகம் வாடியது.

"கா..‌என்ட்ட சொல்லவே இல்ல.. " தமிழிற்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி யாக விழுந்தது.

"திடீர்னு வந்த ஆர்டர் டீ. அதான்.. மாமா உன்ன அங்க கூட்டிட்டு போலாம்னு சொல்றாங்க.. வர்றியா??" என்றான் தாமரை..‌அக்காகாரியின் கண்களை தவிர்த்தாள்

"நான்.." என்ற தமிழை இடைமறித்து..

"தாமர.." என்று அதட்டினாள் கலை‌ " அந்த பேச்ச ரெண்டு பேரும் விடலையா??"

"தமிழ். நீ எங்கேயும் போக வேண்டாம். அக்கா உன்ன வாரா வாரம் வந்து பார்த்திட்டு போறேன் . சரியா.. "கலை

"நீங்களும் அதே மாறி .. உங்களுக்கு எப்ப முடியுதோ அப்ப வந்து அவள‌‌ பார்த்துக்கலாம் சரியா.. அவ சின்ன பொண்ணு ன்னே நினைச்சிட்டு இருந்தேன். " என்று தமிழை பார்த்தாள்.

" நாங்க தூரமா இருக்கனால உன் மேல பாசம் இல்லன்னு நினைக்காத தமிழ். ஒரு ரெண்டு மூனு வாரம் இருந்து பாரு. அப்படி இருக்க முடிலன்னா சொல்லு, அக்கா உடனை இங்க வந்தர்றேன். சரியா??" என்று தங்கைக்கை தைரியத்தை ஏற்றிக்கொண்டிருந்தாள்.

"போய் டிரெஸ் மாத்திட்டு வா தமிழ் சாப்பிட போலாம்" என்று, அவளை அனுப்பி வைத்துவிட்டு,

தாமரையை நோக்கி.. " அவன் தான் அறிவில்லாம சொல்றான்னா.. தமிழ கூட்டிட்டு போறீங்கன்னு தெரிஞ்சா மாமா என்ன ஆட்டம் ஆடுவாரு??" என்றாள்.

" அவருக்காக லாம் பயப்படாதீங்க அண்ணி"

"நீ தயவு செஞ்சு வாய திறக்காத சீலா..‌கடி ஆகுது. அவரு எங்களுக்கு தாய்மாமா. எங்களால முடிஞ்ச அளவுக்கு அவர கோபப்படுத்தாம தான் நாங்க எதும் செய்யனும். "
என்றாள் சற்று கோபமாகவே..

பின்பு தமிழ் வரும் வரை, கலையின் வேலை பற்றி இருவரும் கேட்டறிந்தனர். தருணைப்பற்றி சிறு சிறு இடங்களில் கூறினாள். நல்ல விதமாகவே!

உணவகத்தில் அமர்ந்து சாப்பிடும் வழி எல்லாம், சீலன் எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தான்.
தமிழை தவற மற்ற இருவரும் அதை கவனியாமல் இல்லை..

ஒரு கட்டத்தில் கலை, " சீலா.. உன் ஆசை நிறைவேறாது கவலை படாத " என்றாள்.‌
சென்ற முறை அறிவை இங்கு தானை பார்த்ததாக தாமரை கூறினாள்.

" இன்னொன்னு.. அறிவு சென்னை வந்தார்" என்றதும் உடனிருந்தவர்கள் அவளை நோக்கினர். தாமரையும் சீலனும் ஏதோ எதிர் பார்ப்புடன் பார்த்தனர்.

"நீங்க நினைக்கிற மாதிரிலாம் ஒன்னும் இல்லை. அவருக்கு கல்யாணம் முடிவு ஆகிருக்கு. அதான் அந்த பொண்ணையும் கூட்டிட்டு வந்தார்." என்று கலை முடிக்கவும்.

" யுவ்வா!! எப்படி அவரால.." என்று தாமரை தொடங்கும் முன்னே.. " நான் அவர பத்தி கவலை இல்லாம என் வாழ்க்கை நடத்தனும்ங்குற நல்ல எண்ணத்துல தான்டீ. அவர தப்பா நினைக்காத" என்றாள் கலை.

" எனக்கு உன்ன பத்தி மட்டும் தான் கவலை கா.‌எதுனாலும் என் கிட்ட ஷேர் பண்ணு.. நீயா வச்சிக்காத" என்று அவள் கூறியதை கேட்டவுடன்..

தருண்..

அவனின் உருவம் அவள் மனதில் வந்தது. அவனிடம் தானை எல்லாத்தையும் பகிர்ந்துள்ளாள்.
ஏன்??
அவன்கிட்ட ஏன்..???

அவள் வாழ்க்கையில் தருண் ஒரு அங்கமாக மாறவது கலைக்கு புரிந்தது.

https://youtu.be/AFl4UZc3LEA

Continue Reading

You'll Also Like

70 4 20
Oru penin all manadhu aasai... Solavum mudiyal kattavum mudiyal...... Yen??? Kelviku padil narpaasai Dan sola mudiyum... Nadakadun terinchum ada pa...
18.8K 892 41
❤️
4 1 1
A story of 4 kids living in a middle class life , With their atrocities
1.9K 220 7
Don't look at me like that archu,I meant archana....karthik said in a complaining tone Like what??? Archana asked innocently Don't act smart ok....i...