நீயே என் ஜீவனடி

By salmakatherbatcha

368K 12.2K 4.5K

யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமை... More

💖1💖
💖2💖
💖3💖
💖4💖
💖5💖
💖6💖
💖7💖
💖8💖
💖9💖
💖10💖
💖11💖
💖12💖
💖13💖
💖14💖
💖15💖
💖16💖
💖17💖
💖18💖
💖19💖
💖20💖
💖21💖
💖22💖
💖23💖
💖24💖
💖25💖
💖26💖
💖27💖
💖28💖
💖29💖
cahracter clarification
💖30💖
💖31💖
💖32💖
💖33💖
💖34💖
💖35💖
💖36💖
💖37💖
💖38💖
💖39💖
💖40💖
💖41💖
💖42💖
💖43💖
💖44💖
💖45💖
💖46💖
💖47💖
💖49💖
💖50💖
💖51💖
💖52💖
💖53💖

💖48💖

6K 216 45
By salmakatherbatcha

தன் அருகே கேட்ட அந்த குயிலின் குரலில் புன்னகை முகத்துடன் கண்களை திறந்த அரவிந்த்  தன் கண்களை நம்ப முடியாமல் கசக்கி கொண்டு இருந்தான்.

மீண்டும் அந்த குயிலின் கீதம் அவன் காதில் ஒலித்தது.

"ஆரு மாமா,  கீஸர் போட்டுருக்கேன் சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. நான் உங்களுக்கு டீ போட்டு வரேன்."

  ஆனந்தியின் குரல் கேட்க தன் அருகே இருந்த படுக்கையை பார்த்தான்.

மெத்தையில் அவன் மட்டுமே இருக்க அப்போதுதான் இது கனவில்லை நிஜம் என்பதை உணர்ந்தான்.

இன்னும் அதை நம்ப முடியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான்.

"மாமா, என்ன ஆச்சு? ஏன் இப்படி பாக்கறீங்க? சீக்கிரம் எழுந்திருங்க." என அவன் கையை பிடித்து இழுத்தாள்.

"ஆனந்தி நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்ச?. அதுவும் மணி நாலு தான் ஆகுது."

"அதெல்லாம் அப்படித்தான்.  முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க." என குளியலறைக்குள் தள்ளிவிட்டாள், ஆனந்தி.

ஏதோ ஒன்று ஆனந்தியின் மூளையில் ஓடுகின்றது என்பதை புரிந்து கொண்டாலும் அது என்னவென்றுதான் யோசிக்க முடியவில்லை.

டவலுடன் குளியலறையிலிருந்து வெளியே வர அவன் அணிந்து கொள்ள சட்டையும் வேட்டியும் ரெடியாக இருந்தது.

யோசனையுடனே ஆனந்தி எடுத்து வைத்த உடைகளை அணிந்துகொண்டு திரும்ப ஆனந்தி அவன்முன் டீயுடன் நின்றிருந்தாள்.

அவள்  கண்களை ஊடுருவி எதற்காக என யோசித்துக்கொண்டே டீயை குடிக்க அப்பொழுதும் எதுவும் பிடிபடவில்லை.

ஒருவேளை அதுவாக இருக்குமோ அவ்வாறு இருந்தால் நிச்சயம் மறுத்து விட வேண்டும் என எண்ணிக்கொண்டே ஆனந்தியை தாண்டி கூடத்திற்கு சென்றான்.

அவன் செல்வதை பார்த்து அவன் பின்னே ஆனந்தியும் ஓடி வந்தாள்.

அவள் ஓடி வருவதைப் பார்த்து நின்ற அரவிந்த் அவளிடம் திரும்பி, "ஆனந்திமா, உனக்கு என்ன ஆச்சு? நீ எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க.

ஏதாவது சொல்லனுமா? இல்ல என்கிட்ட ஏதாவது கேட்கணுமா?" என சந்தேகமாக அவளைப் பார்த்து கேட்டான்.

"அதெல்லாம் இல்லை. எனக்கு கல்யாணம் ஆய்ருச்சுல இன்னுமும் சின்ன இல்லேல. அதான் அம்மா என்கிட்ட ஆனந்தி இன்னும் விளையாட்டு பிள்ளயாவே இல்லாம குடும்ப பொண்ணா இரு.

இனிமே உன் குடும்பத்தை நீ தான் பார்த்துக்கனும். நெனச்ச நேரத்துக்கு எழுந்திருக்கக் கூடாது.

உன் புருசனுக்கு என்ன தேவையோ  நீ தான் பார்த்து பார்த்து எல்லாத்தையும் பண்ணி தரணும் அப்படின்னு அம்மா சொன்னாங்க.

அதான் நானும் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். என கூற அவளை நெருங்கியவன், அவள் கண்களைப் பார்த்தான்.

மெதுவாக தன் கைகளால் அவளுடைய கன்னத்தை பற்றி,

" எனக்காக நீ எதுவும் பண்ண வேணாம், ஆனந்தி. நீ போய் தூங்கு. நீ எப்பவும் போல இரு. அதுவே எனக்கு போதும். போ ரெஸ்ட் எடு. "

என வெளியே கூறிக் கொண்டாலும் மனதிற்குள்ளோ, 'ஆனந்திமா, நீ என்கிட்ட பொய் சொல்றேன்னு புரியுது. ஆனா நீ நினைப்பது மட்டும் என்னால முடியாது ஆனந்தமா.' என மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஆனந்தியிடம்,

"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் வெளிய போயிட்டு வரேன். நீ போ." என அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான்.

அரவிந்த் வெளியேறியதும் சமையல் அறைக்குள் நுழைந்த ஆனந்தி அரவிந்திற்கு பூரி உருளைக்கிழங்கு மசாலா செய்து முடித்து அரவிந்த் வருகைக்காக காத்திருந்தாள்.

நேரம் சென்று கொண்டிருக்க அரவிந்த் வருவதற்கான எந்த தடயமும் இல்லாமல் இருக்க, அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

அதை எடுத்த அரவிந்த் ஆனந்தியை பேசவிடாது,

" நான் ஒரு முக்கியமான வேலையில இருக்கேன். என்ன டிஸ்டர்ப் பண்ணாத ஆனந்திமா. என்னால இப்போ வர முடியாது. நான் மதியம் வர்றேன்." என கூறியவன் ஆனந்தி பதில் கூறும்  அழைப்பை அணைத்து இருந்தான்.

அரவிந்த் வரமாட்டான் என தெரிந்தவள் சாப்பிட பிடிக்காமல் சரி  மதிய சாப்பாட தயார் செய்யலாம் என மீண்டும் சமையலறைக்குள் புகுந்தாள்.

யாருடைய உதவியும் இல்லாமல் அவள் தனியாக அரவிந்திற்காக பிரியாணி தயார் செய்து டேபிளில் அவன் வருகைக்காக மீண்டும் காத்திருந்தாள்.

பசி அவளை வா வாவென கூப்பிட்டாலும் அரவிந்த் வர எண்ணி வாசலை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.

ஆனந்தியின் பசி உணர்வு அரவிந்த் உணர்ந்தானோ என்னவோ ஆனந்தியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் எழ வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஆனந்தியை காண வீடு நோக்கி சென்றான்.

அரவிந்த் வீட்டிற்குள் நுழைந்து கண்களால் ஆனந்தியை அலச அவளோ அவனுக்காகக் காத்திருந்து டைனிங் டேபிளிலேயே கண்களை மூடி படுத்திருந்தாள்.

ஆனந்தியின் அருகில் வந்த அரவிந்த் அவள் தோளை தொட்டு "ஆனந்திமா..." என அழைக்க அரவிந்தின் குரலில் விழித்தவள் உற்சாகமானாள்.

" சாரி மாமா எப்டி தூங்குனேன்னே தெரியல. முதல வாங்க. சாப்பிடலாம்." என அவனை டைனிங் நாற்காலியில் அமர வைத்தாள்.

" எப்ப வந்தீங்க?" என கேட்டவாறே அரவிந்த்திற்கு தட்டை எடுத்து வைத்தாள்.

"நீ சாப்டியா ஆனந்திமா?" அவள் முகத்தை பார்த்தேன் அவள் காலையிலும் சாப்பிடவில்லை என உணர்ந்த அரவிந்த் கேட்டான்.

"முதல்ல நீங்க சாப்பிடுங்க மாமா. நான் அப்புறம் சாப்பிடுகிறேன்." என கூற அதை காதில் வாங்காத வன்அவளை தன் அருகில் அமர வைத்து அவளுக்கு ஊட்டி விட்டு அவனும் சிறிது பிரியாணியை வைத்துக் கொண்டான்.

தன் மனையாளின்  கை பக்குவம் தன் அத்தையின் கைப் பக்குவத்தை ஒத்து இருந்ததில் மனதில் ஏற்பட்ட நிம்மதியுடன் சாப்பிட்டு முடித்து சோபாவில் சென்று அமர்ந்தான்.

மணியை அழைத்தவன் அவன் பாதியில் விட்டு வந்த வேலைகளை எல்லாம் முடித்து விடுமாறு  கூற அவனும் சரி என கேட்டுக் கொண்டான்.

ஆனந்தி கையில் பௌலுடன் கூடத்தில் இருந்த சோபாவில்  அரவிந்தின் அருகே நெருங்கி அமர்ந்தாள்.

  பவுலின் இருந்த அல்வாவை ஸ்பூனில் எடுத்தவள் அரவிந்திற்கு ஊட்டி விட சென்றாள்.

அரவிந்த் ஆனந்தியை குறுகுறுவென பார்க்க,

" என்ன ஆச்சு மாமா? ஆ காட்டுங்க."என தயாராக இருக்க,

" இன்னிக்கி காலைல இருந்து பம்பரம் மாதிரி பின்னாடி சுத்துற. எனக்கு பிடிச்ச அல்வா வேற இதுவும் உங்க அம்மா சொன்னாங்களா?"  கேள்வியோடு அவளை பார்த்தான்.

"இது என் செல்ல புருஷனுக்காக இந்த பொண்டாட்டி அவ கையால செஞ்சது. இது யாரும் கொடுத்த ஐடியா இல்ல."

"அண்ணி அப்போ எனக்கெல்லாம் ஹல்வா இல்லையா?" என மணி சோகமாக கேட்டான்.

"நீ உன் பொண்டாட்டி கிட்ட போய் கேளு டா. என்கிட்ட கேக்காத. உனக்கெல்லாம் இல்லை." என மணியிடம் வம்பு செய்தாள்.

"அவ அல்லவா  சாப்பிட்டா நான் ஹாஸ்பிடல் தான் போகணும். போங்க அண்ணி. நீங்க எனக்கு தாங்க."

" இது என் புருஷனுக்கு மட்டும் தான். உனக்கு எல்லாம் கிடையாது." என பழிப்பு காட்டிவிட்டு அரவிந்தன் புறம் திரும்ப அரவிந்திற்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.

அதை காதில் வைத்த அரவிந்த்,

" சொல்லுங்க மாமா..." எனக் கூறிய உடன் ஆனந்தி திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்.

ஆனந்தனின் முழியை வைத்து புரிந்துகொண்ட அரவிந்த் மருதமுத்துவுடன் பேச ஆரம்பித்தான்.

"மாப்பிள  ராமுக்கும் காயத்ரிக்கும் துணி நகை எல்லாம் எடுக்க வேண்டி இருக்கு. அப்படியே உங்களுக்கும் ஆனந்திக்கும் எடுக்கணும். ஐயர் வேற தேதியை நெருக்கமா குறிச்சுட்டாரு.

நீங்களும் ஆனந்தியும் வந்தா எல்லாரும் ஒண்ணா போய் எடுத்துட்டு வந்துடலாம்." என கேட்டார் மருதமுத்து

"மாமா இப்போ எங்களால முடியாது...  ஆனந்தியை வெளிய கூட்டிட்டு போறது எனக்கு சரியா படல. இன்னும் நாலு நாள்ல கோர்ட்ல ஹியரிங் வருது. உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை. இந்த டைம்ல ஆனந்தி வெளியே இருக்கிறது அவளுக்கு ஆபத்து. அதனால இப்போதைக்கு ஆனந்தி வெளிய வர முடியாது."

"நீங்களும் ஆனந்தியும் இல்லாம எப்படி தம்பி?"

"மாமா அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல. நீங்க பாத்து உங்களுக்கு பிடிச்சதா எடுங்க  மாமா.

நான் ஆனந்தியும் எதுவும் நினைச்சிக்க மாட்டோம்."

ஆனந்தி அரவிந்தை முறைத்துக் கொண்டு இருந்தாள்.

அதை அரவிந்த் அறிந்தாலும் எதுவும் கண்டுகொள்ள வில்லை.

"அது இல்ல மாப்பிள்ள....."

"மாமா ப்ளீஸ்... இந்த மாதிரி என்கிட்ட கேட்காதீங்க. உங்க கிட்ட முடியாதுன்னு சொல்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்கு என் ஆனந்தி தான் முக்கியம்."என கூற அவரும் இதற்குமேல் அரவிந்திடம் பேசி பயனில்லை என புரிந்து கொண்டார்.

" சரிங்க மாப்பிள. நாங்க போய் எடுத்துட்டு வரோம். நீங்க ஆனந்தியை பாத்துக்கோங்க." என கூறி அழைப்பை அணைத்து விட்டார்.

அரவிந்த் மெதுவாக ஆனந்தியின் புறம் திரும்பி "இப்ப கொடு." என அரவிந்த் வாயை திறந்தான்.

ஆனந்தியோ ஸ்பூனிலிருந்த அல்வாவை மீண்டும் பவுலில் வைத்தாள்.

கொஞ்சமாவது எடுக்கப்பட்டு வெளிய கூட்டிட்டு போவாங்க பார்த்தா முடியாதுன்னு சொல்லிட்டேன் உனக்காக கஷ்டப்பட்டு காலையில மிட் நைட்ல எந்திரிச்சேன் பாரு எந்திரிச்சு உனக்கு டீசர் போட்டு விட்டேன் பாரு என்ன சொல்லணும் என மனதிற்குள் வந்தவள் வெளியில்

" தேவையில்லை. இப்போ உங்களுக்கு அல்வா ஒண்ணுதான் குறைச்சல். இப்போ தானே சாப்பிட்டிங்க. அதுக்குள்ள அல்வாவா?" என அவனுக்கு பழிப்பு காட்டினாள்.

"டேய் மணி, நீ உட்காரு." என அருகிலிருந்த நின்று கொண்டிருந்த மணியை இழுத்து அவள் அருகில் அமரவைத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.

மணியும் கிடைத்தவரை லாபம் என ஆனந்தி ஊட்டிவிட ஊட்டிவிட சாப்பிட அரவிந்த்க்கு  கோபம் வந்தது.

" நீ எனக்கு ன்னு சொல்லி தானே செஞ்ச, இப்போ அவனுக்கு ஊட்டி விடுற." என சிறு பிள்ளை போல் முதன்முதலாக ஆனந்திடம் சண்டையிட்டான்.

"உங்களுக்குன்னு செஞ்சா நீங்க தான் சாப்பிடணும் சட்டம் ஏதும் இருக்கா. உங்களுக்கு எதுவும் இல்ல. நைட்டு டின்னரும் கட்."

"ஏன்? நான் என்ன தப்பு பண்ணேன்."

"நீங்க என்ன பண்ணல. என்னை எதுக்கு இப்படி ஜெயில்ல மாதிரி புடிச்சு வெச்சிருக்கீங்க.  எனக்கு இருக்கிறதோ ஒரே ஒரு அண்ணன். அவனோட கல்யாணத்துக்கு கூட நான் ஷாப்பிங் போக கூடாதுன்னு சொன்னா எப்படி?"

"அந்த கேஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் நாம போலாம் மா."

"அதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சிடும்.எனக்காக ராமை மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கோன்னா சொல்ல முடியும்."

"ஆனந்திம்மா சொன்னா புரிஞ்சுக்கோ..."

"என்னால எதையும் புரிஞ்சுக்க முடியாது,ஆரு மாமா. ஒழுங்கா என்ன ஷாப்பிங் கூட்டிட்டு போங்க. இல்லடி நான் உங்க கூட பேச மாட்டேன்."என முகத்தை திருப்ப  அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன்,

"ஆனந்திமா, இன்னும் நாலு நாள்ல ஹியரிங் இருக்கு.  உனக்கு  சிதம்பரம் சித்தப்பா பத்தி நல்லா தெரியும்.

ஏற்கனவே மூணு பேர இழந்துருக்கேன். உன்னையும் இழக்க விரும்பல.

நீதான் இப்ப அவங்களுக்கு ரொம்ப முக்கியம். நீ மேஜர் ஆயிட்டா உன் பேர்ல இருக்கிற சொத்துக்களை எல்லாம் அவர் அடைய நினைக்குறாரு. அதனால உனக்கு எந்த ஆபத்தும் வரலாம்.

கொஞ்சம் பொறுத்துக்கோடா. இன்னும் நாலே நாலு நாள் தான். நமக்கு சாதகமா தான் தீர்ப்பு வரும்." அவளுக்கு புரியுமாறு எடுத்துக் கூறினான்.

ஆனால் ஆனந்தி புரிந்தும் புரியாமல் பவுலை மணியின் கையில் திணித்துவிட்டு அரவிந்தின் புறம் திரும்பியவள் அவன் கன்னத்தை அவள் கைகளில் ஏந்தினாள்.

"ஆரு மாமா, நீ இருக்கிறவரை அந்த சிதம்பரம் இல்ல, அந்த கடவுளே நினைச்சாலும் எனக்கு எதுவும் ஆகாது.

நீ எதுக்கும் பயப்படாதே ஆரு மாமா. உங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ. எனக்கு இருக்கு.  ப்ளீஸ் மாமா என் ஆசையை நிறைவேத்தி வைங்களேன்." கண்ணோடு கண் நோக்கி கேட்க பாவம் அரவிந்தால் தான் மறுக்க முடியவில்லை.

சரி என தலை அசைக்க மகிழ்ச்சியுடன் திரும்பிய ஆனந்தி அழுக ஆரம்பித்தாள்.

"என்னாச்சும்மா நான் தான் சரின்னு சொல்லிட்டேன்ல. அப்புறம் ஏன் அழுகுற?" என  பதட்டமாக கேட்டான்.

"லூசு முண்டம், எதுக்குடா பௌல்ல இருந்த அல்வாவை சாப்பிட்ட" என மணியிடம் சண்டை இட்டாள்.

" பாரு மாமா உனக்காக ஆசை ஆசையாய் செஞ்ச அல்வா. எல்லாத்தையும் சாப்பிட்டு காலி பண்ணிட்டான்."

கையிலிருந்த பவுலை காட்ட அது காலியாக இருந்தது‌.

அவனிடமிருந்து வேகமாக பௌல்லை ஆனந்தி பிடுங்க, மணியோ "நீங்கதானே குடுத்தீங்க."என்றான்.

"நான் கொடுத்தால் உனக்கு எங்கடா போச்சு மூளை.  நான் தான் ஆரு மாமாக்காக செஞ்சேன்னு சொன்னேன்ல.கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் எதுக்குடா சாப்பிட்ட." என மணியிடம் மல்லுக்கட்டிக் கொண்டு நின்றாள்.

"இங்க பாருங்க அண்ணா, அண்ணி தானே குடுத்தாங்க. இப்போ என்கிட்ட சண்டைக்கு வராங்க. நீங்களே நியாயத்தை சொல்லுங்க." அவனிடம் நியாயம் கேட்டு நிற்க,  இருவரில் யார் பக்கம் பேச என தெரியாமல் முழித்தான்.

அரவிந்த் ஆனந்திடம் சென்று " எனக்காக செஞ்ச அல்வா எங்கே?" என கேட்க,

" இந்த மணி தான் எல்லா...." என பேச ஆரம்பிக்கும் போது இடையில் கைகொண்டு நிறுத்தியவன்,

"எனக்கு கதை எல்லாம் வேண்டாம். எனக்காக நீ  செஞ்ச அல்வாவை கொண்டு வா.அப்ப தான் நான் ஷாப்பிங் கூட்டிட்டுப் போவேன்."

"ஆனால் அல்வா தீர்ந்துருச்சு."

"அதெல்லாம் எனக்கு தெரியாது. அந்த ரூம்ல வெயிட் பண்றேன்.எடுத்துட்டு வா." என அங்கிருந்து நகர்ந்தான் அரவிந்த்.

  அருகிலிருந்த மணியை முறைத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள் ஆனந்தி.

சிறிது நேரத்தில் ஆனந்தி அல்வாவுடன் அறைக்கு வர அரவிந்த் கட்டிலில் சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

அவன் அருகில் அமர்ந்தவாறு அல்வாவை எடுத்து ஊட்டி விட அவன் அதை வாங்கிக் கொண்டு ஆனந்தியை பார்த்திருந்தான்.

"என்னாச்சு மாமா. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க. என் மேல கோவமா? ரொம்ப அடம் பிடிக்கிறானா?.. நாம்ம வேணா வீட்டிலேயே இருப்போம்."

"அப்படி எல்லாம் இல்ல.  என்னோட ஆனந்திமா சந்தோஷத்துக்காக முன்னாடி எதுவா இருந்தாலும் நான் பேஸ் பண்ணுவேன்.

நீ எதுக்கும் கவலைப் படாத."

" அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க. சொல்லுங்க."

ஆனந்தியைநெருங்கி வந்தவன் அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்தான்.

" என்னன்னு தெரியலம்மா ஒரு மாதிரி இருக்கு. ஏதோ தப்பு நடக்க போறது மாதிரி தோணுது.  நீ என்னை விட்டு எங்கேயும் போகக்கூடாது என் பக்கத்திலேயே இருக்கனும். சரியா?"

" எனக்கு எதுவும் ஆகாது. நீங்க பயப்படாதீங்க." என கூற ஆனந்தியின் முன்னால் தலையை ஆட்டினாலும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது.

Continue Reading

You'll Also Like

78.6K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
46.2K 1.5K 35
உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்...
61.3K 4.1K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
51.5K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...