காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)

By riyasundar

19K 1.1K 94

Highest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல்... More

Popular Choice Awards Voting
குடும்பமெனும் கூடுவிட்டு
முதற் பார்வையிலேயே வீழ்ந்துவிட்டேன்
மீழ வழியில்லை ❤
எண்ணமெல்லாம் உன் வசமே
வார்த்தைகள் மழையாவது உன்னிடத்தில்🌧⛈
பேதை இவள் காதலிலே..🤦‍♀️
என்னை அறியாயோ கண்மணி..❣
சுயத்தை தொலைக்கிறேன் உன்னில்...
உன்னிடத்தில் என் இடம் இதுவோ கண்மணி?
காதலை சொல்லாமல் இதயத்தை கொல்லாதே
விலகி செல்ல துடிக்கிறேன்🚶‍♂️...
விதியாடும் சதி ஆட்டம்....
காதல் எனும் விந்தை
புதிய உறவுகள் மலருகின்றதே
உனக்காக காத்திருக்கிறேன் 🧡
கண்மணி உன்னை கண்டுகொண்டேன்💖
கண்ணம்மா உன்னோடு விளையாட ஆசை...
நான் முழுமை அடைவது உன்னில் (இறுதி அத்தியாயம்) 😍
A/N
New story update
ஆனந்த கண்ணீரில் நான்

இயற்கையின் தாய்மடியில்💐

2.2K 82 6
By riyasundar

சலவை செய்த துணியைப் போன்ற தூய்மையான வானம். இளங்காற்று சூழ்ந்த இனிமையான மாலைப் பொழுது. புதிய நடனம்  பழகும் மரங்கள் என ஊட்டியே  பிரமிப்பூட்டும் அழகோடு தோன்றியது ஸ்மிதாவிற்கு. ஸ்மிதா,  ஊட்டியில் தன் பெற்றோருடன் சுகமாய் வாழும் 19 வயது நிரம்பிய இரண்டாம் ஆண்டு இளங்கலை  உயிரி தொழில்நுட்பவியல் மாணவி.

இயற்கைக்கு உகந்ததாய் கட்டப்பட்ட அவ்வீட்டின் அழகுப் பதுமை. ஆம் அழகுப் பதுமை தான். ஆனால், கண்ணைக் கவர்ந்திழுக்கும் அழகுப் பதுமை அல்ல; விழிகளுக்கு இதமூட்டும் அழகுப் பதுமை. ஆர்பரிக்கும் அழகில்லை. சாந்தமான அழகு. இயற்கையின் தீவிர ரசிகை. தோழிகளெல்லாம் வெளியில் உலா செல்ல தான் மட்டும் சன்னல் அருகே அமர்ந்து மழைத் துளிகளை ரசிக்கும் வினோத பிறவி. அப்படி இருக்கையில் அவளுக்கு  நேரம் தெரியாது. உணவு அறியாது. அந்த உணர்வுகளில் லயித்திருப்பாள். எல்லோரிடமும் அளவோடு பேசுபவள். ஆனால், பிடித்தவர்களுடம் மிகவும் கலகலப்பானவள். தீர்க்கமான முடிவுகளை எடுப்பாள்.

அழகான குடும்பம். அன்பான பெற்றோர்கள். நிம்மதியான சூழல். அந்த இன்பமான மாலைப் பொழுதில் காற்றின் தாளத்திற்கேற்ப அசையும் மரங்களை பார்த்துக் கொணடிருந்தாள் ஸ்மிதா.

"எத்தகைய அழகு உன்னில்

பருகிட துடிக்கிறேன் பறவையாய்  

 அணைத்திட துடிக்கிறேன்
                                              இறைவனாய்

தீண்டிட துடிக்கிறேன் காற்றாய்

ஏனோ இன்பம் தரவில்லை வெறும்      
                                               மனிதனாய்! "

மனதில் தோன்றிய நேரம் செல்பேசி சினுங்கியது. உயிர் தோழி ஆர்த்தி அழைத்திருக்க எடுத்து காதுக்கு கொடுத்தாள்.

"ஹலோ "

"ஹலோ.  எவ்ளோ நேரமா உன்ன கூப்பிட்றது மகாராணி எடுக்க மாட்டிங்களோ?"

"ஹே அப்டிலாம்  இல்லடி. சும்மா உட்காந்திருந்தேன்"

"அப்றம் மேடம்கு என்ன வெட்டிவேல இருக்க போகுது"

"என்ன கலாய்க்கத்தான் கூப்டியா"

"ஆமா அதிருக்கட்டும் நாளைக்கு டூருக்கு போறதுக்கு வீட்ல பெர்மிசன் வாங்கிட்டியா. இல்ல அசமந்தம் மாறி சன்னல் கிட்ட உட்காந்திருக்கியா"

"2nd option க்ளிக் பண்ணிடலாம்"

"அடிபாவி.  உன்னலாம் என்ன செய்றதுன்னே தெரில.  பேசாத"

  "ஹே. சாரிடி.  கோவப்படாத.  சொல்லிட்டேன்.  யோசிக்றேனு சொன்னாங்க"

"ஏன்டி காலேஜ் பொண்ணு மாரியா பேசுற ஏதோ எழுவது வயசு கிழவி மாதிரி பேசுற. உன்ன எப்பிடி Gang ல சேர்த்தேனோ.  எல்லாம் என் நேரம்"

"இப்போ எதுக்கு இப்டி திட்ற"

"வேணாம். எதாச்சும் வந்துற போது. அம்மா அப்பா கிட்ட நான் பேசிட்டேன்.  ஒழுங்கா கிளம்புற வழிய பாரு"

" எப்போடி பேசுன"

"அம்மா தாயே. அந்த கதைய விட்டுட்டு  போய் பேக் பண்ணு. 7 நாள் டூர். தயவு செஞ்சு நல்ல சுடிதாரா எடுத்துவை. எப்ப பார்தாலும் பஞ்சத்துல அடிபட்ட மாறியே டிரஸ் பண்றது"

"ஐயோ சரி சரி ஆரம்பிக்காத. செய்றேன். இப்போ குட்நைட்"

" ஏய். இது சாய்ங்காலம்டி"

"அப்போ  குட்ஈவ்னிங்"

"இறைவா!  இவகூடலாம் எப்டி ஃபிரண்டா இருக்கேனோ. பைபை.......... "
என ஆர்த்தி  கோபத்துடன் அழைப்பை துண்டிக்க மெல்லிய புன்னகையுடன் டூருக்கு தேவயானவற்றை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
——————————————————
Hiiiiii சகாக்களே.... இது என்னோட முதல் கதை. ரொம்ப புதுசான கருத்தோ இல்ல பெரிய லாஜிக்கோ இதுல  இல்ல. ஆனா படிக்க போர் அடிக்காது.  முதல் பகுதி கொஞ்சம் சின்னதாவே முடிச்சாச்சு. So, உங்க கருத்தகளுக்காக ஆவலோடு காத்திருக்கேன். தவறுகள் இருந்தா சொல்லுங்க திருத்திக்கிறேன்..  ☺☺
😄😄

Continue Reading

You'll Also Like

8.8K 920 25
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
267K 5.9K 46
விழிகள் அவளாக மொழிகள் நானாக காதல் நாமானோம் "கண்ட நாள் முதலாய்"
4.8K 180 17
அந்த அறையே அதிரும்படி கையை பலமாக தட்டியவன் கண்கள் முழுதும் ரத்த நிறம் ஏறியிருந்தது, "வாவ்... வாட் எ ப்ளடி சாக்ரிபைய்ஸ்" கண் மண் தெரியாத அவன் கோவத்தில...
183K 8.3K 81
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ...