தோழனா என் காதலனா

By priyadharshini12

101K 5.2K 4.6K

titleh solludhe vaanga ulla povom More

promo
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
new story

20

2K 116 288
By priyadharshini12

அந்த இரண்டு நாட்களும் ஜான்விக்கு ரணக்கொடூரமாய் சென்றது என்று தான் கூற வேண்டும் .ஒவ்வொரு முறையும் அவளை பார்க்கும் பொழுதெல்லாம் அபியின் புராணத்தை பாடியே அவள் காதுகளில் ரத்தம் வர வைத்தார் அவளின் அத்தை .

எப்பொழுதடா அந்த இரண்டு நாள் முடியும் என்றிருந்தது அவளிற்கு .ஆதியோ இதை கண்டு கொண்டிருந்தாலும் எதுவும் செய்ய முடியாத சூழலில் இருந்தான்.அவனை ஜானு தான் அடக்கி வைத்திருந்தாள் வந்த இடத்தில் பிரச்னை செய்யாதே என்று .கௌதமிற்கு இந்த இரண்டு நாட்களும் ஏனோ நகருவேனா என்றிருந்தது .எப்பொழுதும் போல் எழுகிறான் வேலைக்கு செல்கிறான் வருகிறான் படிக்கிறான் எனில் என்னவோ ஒன்று வாழ்வில் குறைவதை போலவே உணர்ந்தான் .அன்றும் அவன் வேலை முடித்து அவன் வீடு இருக்கும் சந்திற்குள் வந்து கொண்டிருக்க ஒரு hydrogen பலூன் அவன் வண்டி முன்னே பறந்து வர அதை துரத்தியபடி ஓடி வந்தாள் ஒரு பதினான்கு வயது சிறுமி .

சட்டென்று பிரேக் போட்டவன் திட்டுவதற்காக திரும்ப அவளோ அந்த ஹைட்ரஜன் பலூனை பிடித்ததை ஏதோ பெரிய சாதனை போல் நினைத்து சிரித்துக்கொண்டிருந்தாள்.அவள் பின்னோடு ஓடி வந்தாள் அவளின் அக்கா "ஐயோ பாப்பு இத்தனை வயசுல ஹைட்ரஜன் பல்லூன் வாங்கி தானு உசுர வாங்கிட்ட வாங்குனதை பத்தரமாவாச்சும் பிடிச்சியா ?இப்படியா ரோட்டுல ஓடி வரது?"என்று அவளை அதட்ட

அவளோ "ஈஈ பறந்திருருச்சு ரியா அக்கா "என்று அவளை செல்லம் கொஞ்ச இருவரையும் கையை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தான் கௌதம் .அவனிற்கு அந்த சிறுமியின் முகத்தில் இருந்த குறும்பு அவனின் ஜானுவை நினைவு கூற புன்னகையுடன் அவளை பார்க்க அப்பொழுதே அக்கா தங்கை இருவரும் ஒருவனின் வண்டியை மறித்து தாங்கள் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தனர் .

இருவரும் ஒரே நேரத்தில் அசடு வழிய கௌதமோ இருவரையும் ஒற்றை விரலால் இங்கு அழைத்தான் .பிரியா "பாப்பு பாக்கவே terror பீஸ் மாறி இருக்கான் போகணுமா ?"என்க

அவளோ "ஹீஹீ சிக்கிட்டோம் தப்பவா முடியும் முன்னாடி போ "என்று அவளை தள்ளி விட்டாள் .

அவர்கள் விழித்தபடி அவன் அருகில் வர கௌதமோ கஷ்டப்பட்டு முகத்தை கடுமையாக்கியவன் "இதென்ன உங்க தாத்தா வீட்டு roadaa இஷ்டத்துக்கு குறுக்கால வந்து ஆடிக்கிட்டு இருக்கீங்க ?"என்க

இருவரும் திருதிருவென்று விழித்தனர் .தீரா வாய்க்குள்ளேயே "தாத்தா வீடு roadnaa நாங்க இவ்ளோ அடக்கமாவா விளையாடுவோம் "என்று முனங்க

ப்ரியாவோ அவளை முறைத்தாள் "கொஞ்ச நேரம் சும்மா இரேன் டி" என்று

அவனிற்கு அவளின் முனங்கல் தெளிவாய் கேட்டுவிட சிரித்தவன் "உன் பெரு என்ன ?"என்க

அவளோ ப்ரியாவை ஒரு முறை பார்த்தவள் பின்"தீரா, தீரதி"என்க

அவனோ "ஸ்வீட் நேம் இனிமே இப்டி விளையாடாத பாப்பா "என்க

அவளோ முகத்தை தூக்கியவள் "நா ஒன்னும் பாப்பா இல்ல "என்று முகத்தை வெட்ட அவளின் சிறு சிறு அசைவுகளும் அவனிற்கு அவனின் ஜானுவின் குறும்புத்தனத்தை நினைவுப்படுத்தி மனம் அவளை பார்க்க வேண்டுமென்று சண்டித்தனம் செய்ய துவங்கியது .

பின் சிரித்தவன் "அப்டியே என் ஜானுவோட xerox .என்றவன் ஓகே பெரியமனுஷி வழிய விட்டா நா போய்டுவேன் "என்க

இருவரும் வழிவிட்டு நிற்க அவனும் கிளம்பினான் .அவன் சென்றதும் பிரியா பெருமூச்சு விட்டு தீராவை முறைக்க அவளோ ஏதோ யோசனையில் இருந்தாள்.அவள் தோளை தோட்ட பிரியா "என்னாச்சு பாப்பு என்ன யோசனை ?"என்க

அவளோ "இல்லக்கா இந்த அண்ணா என் ஜானுனு சொன்னாரே ஒருவேளை அவரோட loveraa இருக்குமோ ?"என்க

ப்ரியாவோ தலையில் அடித்துக்கொண்டவள் "ரொம்ப முக்கியம் வா வீட்டுக்கு போகலாம் இந்த authorjiகே அது தெரியுமோ என்னவோ என்ன கேக்குறா "(என்னடி சைடு gapula என்ன கலாய்ச்சுடீங்க?)என்றவள் தன் தங்கையை அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு சென்று விட்டாள் ,.

கௌதமோ இன்று அந்த சிறுமியின் செயல்கள் ஜானுவின் நினைவுகளின் தாக்கத்தை அதிகரித்திருக்க அழைக்கலாமா வேண்டாமா அழைக்கலாமா வேண்டாமா என்று மனதினுள் ஒரு பட்டிமன்றமே நடத்தியவன் பின் இதற்கு மேல் தாங்காதென்று அவளிற்கு அழைத்துவிட்டான் .

ஜான்வியோ அப்பொழுது கடும் சின்னத்தில் அந்த வீட்டில் இருந்த பின் கட்டில் அமர்ந்திருந்தாள்.அவளின் அத்தை செய்த அழிச்சாட்டியங்கள் அப்படி .காலையிலிருந்து வேண்டுமென்றே அனைவரும் சாப்பிடும் வரை அவளையும் அபியையும் உண்ண விடாது அவர்களை மட்டும் தனிமையில் உண்ண விடுவது ,அவர்கள் சொந்தக்காரர்கள் முன் வேண்டுமென்றே மருமகளே என்று அழைக்க அவர்கள் இவள் காதுப்படவே "அபிக்கு பாத்துருக்கீங்களா ?"என்று கேட்பது என்று கடும் கோபத்தில் இருந்தாள் .

அவளின் அன்னையிடம் கூறினாலோ அவர் "கண்டும் காணாமல் சென்று விடு என்று "கூறிக்கொண்டிருந்தார் "முடிந்தால் உன் மனதை மாற்ற பார்" என்று அறிவுரை வேறு .

அவள் மனம் தாறுமாறாய் கோபத்தில் இருக்க அவளின் கைபேசி சிணுங்கியது .சலிப்புடன் எடுத்தவள் அதில் கௌதமின் என்னை பார்த்ததும் மனதில் எங்கிருந்து தான் அத்தனை மலர்ச்சி வந்ததோ .சுற்றி முற்றி யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அதை எடுத்து காதில் வைத்தவள் "ஹே கௌதம்"என்க

அவனோ அவளின் அத்து என்ற அழைப்பை எதிர்பார்த்து இருந்தவன் வழக்கம் போல் கௌதம் எனவும் சற்று ஏமாற்றமடைந்து பின் தானும் பேசினான் "என்ன மேடம் ரொம்ப பிஸி போல "என்க

அவளோ "அப்டிலாம் இல்லடா என்ன திடீர்னு கால்? "என்க

அவனோ "வழியில ஒரு பொண்ண பார்த்தேன் .செம cute தெரியுமா "என்க

அவளோ முகமறியாத அந்த பெண்ணின் மேல் சிறிது பொறாமை எட்டிப்பார்க்க சுருதி குறைந்து "ம்ம் "என்றாள்

அவனோ "திடீர்னு hydrogen balloona பிடிக்குறேன்னு வண்டிக்கு முன்னாடி வந்துட்டா ."என்க

அவளோ வெறும் "ம்ம் "என்றாள் .

அவளின் குரலின் மாற்றத்தை உணராமல் அவனோ"உன்ன மாதிரியே behave பண்ணா உன் ஞாபகம் அதிகமா வந்துருச்சு .ஆனா என்ன அவளுக்காச்சு பதினாலு வயசு தான் இருக்கும் நீ இருபத்தி ஒரு வயசாகியும் அப்டி தான் இருக்க "என்க

அவளோ அந்த பதினான்கு வயது என்பதிலேயே முகம் மலர்ந்தவள் "ஓஹ் சின்ன பொண்ணா ?"என்க

அவனோ குழப்பமாய் "ஆமா நீ என்ன நெனச்ச ?"என்க

அவளோ அசடு வழிந்தவள் "ஹீஹீ ஒண்ணுமில்லடா "என்க

அதிலேயே உணர்ந்துகொண்டான் அவளின் என்ன ஓட்டத்தை மெல்லிதாய் சிரித்தவன் "ஏய் கேடி நீ என்ன நெனச்சுருப்பனு எனக்கு தெரியும் அதெல்லாம் என் காலேஜ் சீனியர் ஜெனிஃபர் அக்காவை சைட் அடுச்சதோட நிப்பாட்டிட்டேன் "என்க

அவளோ மனதில் " ஜெனிபர்ஆ!! எத்தனை பேருடா " என்று நினைத்தவள் அமைதியாய் இருக்க

அவனே தொடர்ந்தான்"அப்பறம் எப்படி போகுது ஊருல நாட்கள்லாம் ?"என்க

அவளோ சலிப்பாய் "ஏன் டா நீ வேற இங்க இருந்து எப்போ டா எஸ்கேப் அவோம்னு இருக்கு "என்க

அவனோ அவளின் குரலின் மாறுபாட்டை உணர்ந்தவன் சற்று தீவிரத்துடன் "என்னாச்சு ஜானுமா?"என்க

அவளோ இங்கு வந்ததில் இருந்து அவளின் அத்தை நடந்து கொண்ட விதம் ஒன்றுவிடாமல் சொல்ல அப்புறம் கேட்டுக்கொண்டிருந்த கௌதமிற்கோ கைகள் கொஞ்சம் கொஞ்சமாய் இறுகி கோபம் கண்களை சிகப்பாய் மாற்றி இருந்தது .அவள் பேசி முடித்து ஒரு நிமிடம் கழித்தும் அவன் பதில் பேசாமல் இருக்க அவள் "ஹலோ "என்க

அவனிற்கு கோபம் இவள் புறம் திரும்பியது "அவங்க அப்டி சொன்ன நீ ஒடனே செய்வியா ?அதான் பிடிக்கலேல ஒதுங்கி போக வேண்டி தான இல்லேன்னா புடிக்கலைனு மூஞ்சிக்கு நேரா சொல்ல வேண்டி தான "என்று கத்த

அவளோ அவன் கத்தலில் மிரண்டவள் சற்று கலங்கிய குரலில் "என்ன ஏன் கத்துற ?நா ஏற்கனவே எனக்கு விருப்பமில்லன்னு சொல்லிட்டேன் மறுபடி மறுபடி இப்டி behave பண்ணா நா என்ன பண்ண ?"என்று கேட்க

அவனோ அவள் குணமறிந்தும் அவளிடம் கத்திவிட்டோமே என்று வருந்தியவன் தன் முடியை அழுத்தி கோதி தன்னை சமன் படுத்தினான் .பின் சற்று இளகிய குரலில் "அது இல்ல ஜானு அப்பா அம்மா கிட்டயாச்சு சொல்லலாம்ல "என்க

அவளோ "அம்மா கிட்ட சொன்னேன் அம்மா பெருசா எடுத்துக்காத முடுஞ்சா மனச மாத்திக்க ட்ரை பண்ணுனு சொல்றாங்க .தம்பிகிட்ட சொன்னா வினையே வேணாம் அவன் கண்ட மேனிக்கு பேசிடுவான் பெரிய பிரச்னையாயிடும் "என்க

கௌதமோ சற்று பதட்டமான மனநிலையில் "ஜானு ....உனக்கு அப்டி ஏதாச்சு ஐடியா இருக்கா ?"என்றான் .கேட்கையிலேயே மனதில் பதற்றம் தொற்றிக்கொள்ள balcony கம்பியை கெட்டியாய் பிடித்திருந்தான் இல்லை என்று சொல்ல வேண்டும் என்று மனம் கிடந்து அடித்துக்கொண்டது

அவளோ "நீ என்ன லூசா ?அப்டி எண்ணம் இருந்தா நா எதுக்கு இப்டி உன்கிட்ட பொலம்பிட்டு இருக்க போறேன் "என்க

அப்பொழுதே அவனிற்கு மூச்சு சீராக வந்தது .கௌதம் "சரி அம்மா சொன்ன மாதிரி கண்டுக்காத எப்படியும் நாளைக்கு கிளம்ப போறீங்க "என்று கூற

அவளோ ஏதோ நினைவு வந்தவளாய் "ஹே கௌதம் நீ கோவேர்ந்மேன்ட் எக்ஸாம் எழுதணும்னு சொன்னேல அப்ளை பண்ணிட்டியா ?"என்க

அப்பொழுதே நாட்காட்டியில் கவனித்தான் நாளை அரசு தேர்வுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி நாள் என்று தன் தலையிலேயே தட்டிக்கொண்டவன் "ஷீட் மறந்துட்டேண்டி இன்னைக்கு பண்ணனும் "என்க

அவளோ "லூசு இப்படியா மறப்ப? போய் அதை பண்ணு முதல்ல வைக்கவா"என்க

அவனோ கடைசி வரை அத்து என்று கூப்பிடவே இல்லையே என்று நினைத்தவன் பின் சற்று ஏமாற்றத்துடன் "ஓகே "என்று கூற

அவன் குரலில் என்ன உணர்ந்தாலோ "ஓகே பை அத்து. நல்லா படி எக்ஸாம்க்கு நா ஊருக்கு வந்துட்டு freeyaa பேசுறேன் "என்க

அவளின் அத்து என்ற அழைப்பில் முகம் பொலிவுற "ok ஜானு "என்றவன் விண்ணப்பிக்க வேண்டி தனது மடிக்கணினியை திறந்தான் .அதில் தேர்வு எங்கே எழுதவேண்டுமென்று ஊரின் தேர்வை கேட்க கௌதமோ என்னவோ நினைத்தவன் சென்னையை விடுத்து கோயம்பத்தூர் என்று விண்ணப்பித்தான் .மனதில் "சகாயம்பத்தூர் சுத்தி பார்க்க நல்லாருந்துச்சு போய் ஒரு நாள் சுத்தி பாத்துட்டு ஒரு நாள் பரீட்சை எழுதலாம் "என்று நினைத்து அவன் விண்ணப்பிக்க

மனசாட்சியோ"டேய்ய் டேய்ய் என்கிட்டயே நடிக்காதடா ஜானுவை பாக்க போறேன்னு சொல்லிட்டே போ. கேட்டா லவ் இல்லனு சொல்லுவான் "என்க

அவனோ அதை முறைத்தவன் "உன்கிட்ட இப்போ கேட்டேனா ?"என்று கூறியவன் அதை அடக்கி விட்டு அமர அவன் போனில் தொடுதிரையில் மின்னிய அவனும் அவளும் எடுத்த புகைப்படத்தில் அவளின் சிரிப்பு நிறைந்த கண்களை கண்டவன் "அவளையும் தான் பாக்கணும் "என்று நினைத்துவிட்டு அவள் பழக்கப்படுத்திய பாடல் கேட்கும் பழக்கத்தில் இன்றும் பாடலை ஓடவிட அந்த பாடலில் வந்த வரிகள் அவனின் இதழில் சிரிப்பை விசாலப்படுத்தியது

இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிட வேண்டும்

அவள் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும்

நட்சத்திர மண்டலத்தில் ஓரிடம் வேண்டும்

நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்

கண்ணசைவில் மின்னல் விழ புன்னகையில் பூக்கள் விழ

கையசைவில் வானம் விழ பென்னசைவில் நானும் விழவே

காதல் வந்ததே காதல் வந்ததே காதல் வந்ததே காதல் வந்ததே"என்று ஆனால் கடைசியாய் வந்த வரிகளை மட்டும் அவன் மூளை mute செய்து விட்டது (உன்ன எல்லாம் ஹீரோவா எடுத்ததுக்கு நல்லா அனுபவிக்குறேன்டா )

Continue Reading

You'll Also Like

451K 15.1K 50
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படிய...
26.4K 1.1K 94
ஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம்...
94.8K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...