தோழனா என் காதலனா

By priyadharshini12

101K 5.2K 4.6K

titleh solludhe vaanga ulla povom More

promo
1
2
3
4
5
6
7
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
new story

8

2K 130 56
By priyadharshini12

அடுத்த நாள் காலையில் ஜீவிதா நன்றாக அசந்து உறங்கிக்கொண்டிருந்தவள் கனவில் விஜய் தேவரக்கொண்டா உடன் டூயட் பாட அவள் முகத்தில் மட்டும் பன்னீர் தெளித்தது போல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் என்ன ஓவரா பன்னீர் தெளிக்குறாங்க என்று நினைத்தவள் கண்ணை திறக்க ஜான்வியோ தண்ணீர் தெளித்து தெளித்து சோர்ந்தவள் பக்கெட்டில் தண்ணீருடன் நின்றிருந்தாள் அவள் மேல் ஊத்துவதற்கு.

ஜீவிதாவோ அலறி அடித்து எழுந்தவள் "அடியே அரை அடி ஏன் டி என்ன எழுப்பி விட்ட ?"என்க

மணியை பார்க்க அதுவோ எட்டு என்று காட்டியது. நேற்று உறங்க இரண்டு மணி ஆனதால் அசதியோடு உறங்கிக்கொண்டிருந்தவள் மீண்டும் இவள் எட்டு மணிக்கு எழுப்பவும் கொலைவெறியோடு அவளை முறைக்க ஜான்வியோ தன் முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி சிரித்தவள் "ஜீவி கொஞ்சம் போய் ரெடி ஆகிட்டு வாயேன் "என்க

ஜீவிதாவோ அவள் தலையிலேயே கொட்டியவள் "எரும எரும எதுக்கு டி பதினோரு மணி ஷிப்ட்டுக்கு இப்போவே நா ரெடி ஆகணும் "என்க

ஜான்வியோ பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு "அது... இல்லடி அவரை பாக்க போகேல நா மட்டும் போனா கண்டு புடுச்சுருவாருல்ல அதான் "என்க

ஜீவிதாவோ இவளை கொன்றுவிடலாமா என்று முறைத்தாள் அவள் கழுத்தருகில் கையை கொண்டு சென்றவள் பின் விலக்கிக்கொண்டு "உன் போதைக்கு நா ஊறுகாயா டி."என்க

ஜான்வியோ அவளின் தாடையை பிடித்து கொஞ்சியவள் "என் பட்டுக்குட்டில புஜ்ஜுக்குட்டில போய் ரெடி ஆகுடி செல்லம்"என்று

கூற

ஜீவிதாவோ அவள் கையை விலக்கியவள் "வந்து தொலையுறேன் ஆனா இப்டி அசிங்கமா கொஞ்சாத "என்று விட்டு குளிக்க உள்ளே செல்ல

ஜான்வியோ " ஈஈ லவ் யு டி செல்லம்" என்று கூறியபடி தயாராகினாள் .இருவரும் பிரவீனிடம் வாய்க்கு வந்த காரணத்தை சொல்லி விட்டு கிளம்பி சென்றனர் .

சரியாய் அந்த பாலத்தின் முன் இருந்த escalator அருகில் இவர்கள் வருகையில் கௌதமும் வந்திருந்தான் .ஜான்வியோ ஜீவிதாவின் தோளில் இடித்தவள் "ஹே முன்னாடி போடி எதேர்ச்சியா அவன் கண்ணுல படுற மாறி "என்க

அவளோ தலையில் அடித்துக்கொண்டவள் "இந்த குட்டிச்சாத்தான வச்சுக்கிட்டு நா படுற பாடிருக்கே இறைவா என்ன காப்பாத்து "என்று வேண்டியவள் வேறு வழியில்லாமல் அவள் கூறியதை போல் வேக எட்டுக்களுடன் கௌதமின் அருகில் சென்றால்

.அவன் escalatoril கால் வைப்பதற்கும் இருவரும் அவன் கண்ணில் படுவதற்கும் சரியாய் இருந்தது .கெளதம் அவர்களை பார்த்து புன்னகைக்க ஜீவிதாவோ அப்பொழுது தான் பார்ப்பதை போல் புன்னகைத்தவள் "ஹாய் ப்ரோ என்ன இங்க?"என்க

கௌதமோ "இங்க இருக்குற siteயும் சேர்த்து superwise பண்ண சொல்லிட்டாங்க அதான் போய்கிட்டு இருக்கேன் "என்க ஜான்வி அவன் கண்களை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்

.கௌதம்"ஆமா நீங்க என்ன இங்க ?நேத்து ஏதோ இனிமே 11 டு 8 shiftனு சொன்னீங்க "என்க

ஜான்வி மௌனமாய் இருக்க ஜீவிதாவே தேடி பிடித்து காரணத்தை கூறினாள் "அது.. வந்து... ப்ரோ... ஹான் இங்க ஏதோ லைப்ரரி இருக்காம் ஜான்வி அங்க போய் கொஞ்ச நேரம் புக்ஸ் படிக்கலாம்னு சொன்னா அதான் வந்தோம் "என்க

அவனோ "ஓஹ் அப்டியா சரிமா "என்க

ஜான்வி அவள் தோளை இடிக்க ஜீவிதா "என்னடி "என்று அவளிற்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்க

ஜான்வி "டெய்லி வருவானானு கேளு "என்க

ஜீவிதாவோ விட்டால் அழுதுருவேன் போன்று முகத்தை வைத்தவள் வேறு வழியின்றி அவனிடம் கேட்டாள் "டெய்லி வரணுமா ப்ரோ ?"என்று கேட்க

அவனோ "ஆமா monday அண்ட் tuesday 9 :30 கு வருவேன் மத்த நாள்ல எப்போ வருவேன்னு சொல்ல முடியாது இட் depends "என்க ஜான்வி அவள் மனதில் அனைத்தையும் குறித்து வைத்துக்கொண்டாள் .கண்கள் அவன் கண்களிலேயே நிலைகுத்தி நிற்க அவன் கேட்கும் கேள்விகளுக்கு ஜீவிதா தான் பதிலளித்தபடி வந்துகொண்டிருந்தாள் .

கௌதம் ஜான்வியின் புறம் திரும்பியவன் "ஹே நீ நல்லா வாயடிப்பனு எனக்கு நல்லா தெரியும் ஆனா ஏன் என்கிட்டே மட்டும் பேச மாட்டேங்குற ?"என்க

ஜான்வியோ "ஆங் அது அது ..."என்று தடுமாற அதற்குள் subwayil அவர்கள் பிரியும் இடமும் வந்திருந்தது .

கௌதமோ "ஓகே பை பாக்கலாம் "என்று இடதுபுறப்பிளவில் சென்று விட

ஜான்வியோ "அப்பாடா "என்று அப்பொழுது தான் மூச்சே விட்டாள்.

அவள் பெருமூச்சுவிட்டு திரும்ப ஜீவிதாவோ அவளை எரித்து விடுவது போல் முறைத்துக் கொண்டிருந்தாள் அவளை பார்த்து ஈஈ என்று இளித்தவள் "விடு விடு ஜீவிதா உனக்கு falooda வாங்கி தரேன் "என்க

அது வரை கோபமாய் நின்றிருந்தவள் falooda வாங்கி தரேன் என்று கூறியதும் சிரித்தவள் "என்ன என்ன குழந்தைனு நெனச்சியாடி கோவப்பட்ட சாப்பாடு வாங்கி சமாதானப்படுத்த "என்க

ஜான்வியோ திருதிருவென்று விழித்தாள் அவள் விழிப்பதில் அவளின் கோபம் அனைத்தும் பறந்து விட அவளை தோளோடு பிடித்தபடி நடந்தாள் ஜீவிதா .அங்கே அருகிலேயே பதினோரு மணி வரை சுற்றிவிட்டு அலுவலகத்திற்கு சென்று வேலை பார்த்தனர் தோழிகள் இருவரும் .

பிரவீனிற்கும் அதே ஷிப்ட் தான் அவனும் வந்து சேர்ந்து விட மூவரும் வழக்கம் போல் லூட்டி அடித்தபடி ஷிப்ட் முடித்தனர் .திவ்யாவிடம் ஏனோ முன்பு போல் ஜான்வியால் ஒட்டி இருக்க முடியவில்லை .

அவள் அவனை காதலித்தால் என்று கூறியது தான் கண்முன் வந்து வந்து போனது .இப்படியே ஒருவாறு ஷிப்ட் முடிய மூவரும் நடந்து வந்துகொண்டிருந்தனர் .பிரவீன் முகத்தில் இத்தனை நாட்களாய் இருந்த சந்தோஷம் குறைந்து எதையோ இழந்ததை போல் தோன்றியது ஜான்விக்கு ஜீவிதாவிற்கும் .

அவன் ஏதோ யோசனையிலேயே வர அவ்வப்பொழுது கண்ணில் வந்து போன வலியை இருவரும் கவனிக்க தவறவில்லை ஜான்வி அவன் தோளில் கை வைத்தவள் "பிரவீன் "என்க

அவனோ ஏதோ தூக்கத்திலிருந்து விழிப்பதை போல் விழித்தவன் "என்ன?" என்றான் .

ஜீவிதா "என்ன டா ஆச்சு உனக்கு ரொம்ப நேரமா ஏதோ யோசனைலயே இருக்க "என்க

அவனோ "ஒ.... ஒன்னும் இல்லடி "என்க

அவர்களோ அவனை அங்கிருந்த ஒரு பார்க்கிற்கு அழைத்து சென்றவர்கள் அவனை அமர வைக்க அவனோ வெடித்து அழ ஆரம்பித்து விட்டான் .

அவன் அழுவதை கண்டு பதறிய இருவரும் அவன் அருகில் அமர அவனோ ஜீவிதாவின் தோளில் சாய்ந்துகொண்டவன் "போய்ட்டா டி மொத்தமா போய்ட்டா இன்னொருத்தனுக்கு சொந்தமா ஆயிட்டா டி"என்று அவன் போனினை காட்ட அதிலோ ரேஷ்மியின் எங்கேஜ்மெண்ட் புகைப்படம் இருந்தது .

முகம் முழுக்க சிரிப்புடன் இன்னொருவனின் கை அணைப்பில் அவர்கள் இருந்த புகைப்படம் .ரேஷ்மி தான் இவனிற்கு அனுப்பி வைத்திருந்தாள் i am not yours என்று கீழே எழுதி இருந்தாள்.ஜான்விக்கும் ஜீவிதாவிற்கும் எப்படி அவனை சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை .

அவனே மேலும் பேசினான் "அவளுக்கு அப்போவே என் மேல எந்த எண்ணமும் இல்லேன்னா அப்போவே சொல்லிருக்கலாமே டி ஏண்டி இப்டி என் உணர்வுகளோடு வெளையாண்டுட்டு என்ன உயிரோட கொன்னுட்டு போனா ?நா அவளை மனசார காதலிச்சது தவிர்த்து எந்த தப்பும் பண்ணலையே ஏன் இப்டி பண்ணா ?தான் நேசிச்ச பொண்ண இன்னொருத்தனுக்கு சொந்தமா பாக்குறத வோட ஒரு கொடுமை எதுவுமே இல்ல டி ...அது நடக்க போகுதுனு தெரிஞ்சும் நா ஒதுங்கி தான போனேன் .ஏன் இப்டி அதை ஞாபகப்படுத்துற மாறி pictures அனுப்பி என்ன கொல்லுறா ?நா செத்தா தான் ஓய்வாளா இவ?"என்று ஜீவ்தாவை பிடித்துக்கொண்டு அழ ஜீவிதாவும் அவனை அந்த நிமிடம் என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்று தெரியாமல் கண்ணில் நீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள் .கைகள் மட்டும் அவன் சிகையை கோதிக்கொண்டிருந்தது .

அங்கே இரவாகி விட்டதால் ஒன்றிரண்டு பேர் தான் இருட்னஹானர் அவர்களும் இவர்களை கண்டு கொண்டதாய் தெரியவில்லை .ஜாங்வியோ அவனை அடித்தவள் "பைத்தியமே நீ எதுக்கு டா சாகனும் ?நீ எதுக்கு சாகனும்? உன்ன இப்டி ஏமாத்துன அவளே இன்னொருத்தனோட எந்த வித உறுத்தலும் இல்லாம சந்தோஷமா இருக்கேல நீ எதுக்கு சாகனும்? அவ முன்னாடி வாழ்ந்து காட்டுடா "என்க

ப்ரவீனோ விரக்தியாய் புன்னகைத்தவன் "உனக்கு அந்த வலி எல்லாம் சொன்னா புரியாது ஜான்வி அனுபவிச்சா தான் புரியும் .சொல்லிட்டு போகிறது சுலபம் தான் ஆனா ஒரு காதல் தோல்வியா கடந்து வரதுங்குறது ரொம்பவும் கஷ்டமான விஷயம் .கேப்பீங்க இவ்ளோ நாள் வளர்த்த அம்மா அப்பாவை விட இப்போ வந்தவ அவ்ளோ முக்கியமான்னு ?அப்டி இல்ல அம்மா அப்பா நமக்கு உயிர் குடுத்தவங்க ஆனா காதலிச்சவங்கள நம்ம உயிரா பாப்போம் .உயிர் உடம்ப விட்டு போனா மிச்சம் இருக்குறது கூடு தான் ஜான்வி "என்று கூறியவன் அதன் பின் தன் முகத்தை அழுத்தி துடைத்தவன் நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க நா கொஞ்ச நேரம் தனியா இருக்கனும் என்று கூற

அவர்கள் தயங்க

அவனோ "ப்ளீஸ்....."என்று கூற இருவரும் விடை பெற்றனர் ஜீவிதா செல்லும் முன் அவன் கைகளில் ஒரு அழுத்தம் கொடுத்தாள் அவன் அவளை நிமிர்ந்து பார்த்தவன் என்ன நினைத்தானோ சிறிதாய் முறுவலித்தவன் அவளை லேசாய் அணைத்து விடுவித்தான் " போ நா பாத்துக்குறேன் "என்று .

அவளும் சரி என்று தலை ஆடியவள் ஜான்வியின் பின் சென்றாள் அவர்கள் சென்ற பின் அந்த புகைப்படத்தை பார்த்தவன் அதை அழித்துவிட்டு அவளிற்கு வாழ்த்துக்கள் என்று அனுப்பி வைத்துவிட்டு பிளாக் செய்து விட்டான் .வானத்தை பார்த்து அமர்ந்தவன் அங்கிருந்த நட்சத்திரங்களை எத்தனை நேரம் வெறித்தானோ பின் அங்கிருந்து எழுந்து தனது அறையை நோக்கி சென்றான் .

சென்று உடை மாற்றியவன் கதவில் யாரோ தட்ட யாரென்று திறந்து பார்த்தான் .அங்கே அவனுடன் வேலை பார்க்கும் கிஷோர் நின்றிருந்தான் .அவன் குழப்பமாய் இவன் என்ன இங்கே என்று பார்க்க கிஷோர் அவன் கையில் ஒரு கவரை கொடுத்தவன் "சப்பாத்தி இருக்கு சாப்பிடு ஜீவிதா குடுக்க சொன்னா "என்று கூற

அவனோ யோசனையோடு அதை வாங்கியவன் உள்ளே சென்று அதை ஓரத்தில் வைக்க அவனின் செல்போனில் notification வந்திருந்தது .

ஜீவிதா தான் அனுப்பி இருந்தாள் "மவனே ஒழுங்கா சாப்டுட்டு படு தேவதாஸ் மாறி feel பண்ணிக்கிட்டு சாப்பிடாம இருந்த வந்து மிதிப்பேன் "என்றிருக்க அதை பார்த்து சிரித்தவன் பின் அங்கிருந்த கவரை பார்த்தான் .என்ன தோன்றியதோ "சரிடி குரங்கு "என்று அவளிற்கு பதில் அனுப்பியவன் அதை பிரித்து உன்ன துவங்கினான் .அதை பார்த்து சிரித்த ஜீவிதா உறங்க செல்ல ஜான்வியோ வெகு நேரமாய் பிரவீன் கூறிய வார்த்தைகளையே உருபோட்டுக்கொண்டிருந்தவள் எப்பொழுது தூங்கினோம் என்று தெரியாமல் உறங்கி போனாள்.

Continue Reading

You'll Also Like

204K 8.2K 42
General Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 ...
156K 6K 26
சின்ன சின்ன சீன்ஸ் of romance:-) கொஞ்சோண்டு கற்பனை:-) எதார்த்தமா இயல்பா ஒரு கதை. Photo credits: Sarika Gangwal
26.4K 1.1K 94
ஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம்...