எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.6K 635 242

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

எனக்காக 1

1.9K 26 3
By SindhuMohan

காலை 8 மணி ,சூரிய கதிர்களால் நனைந்து கொண்டிருந்த மும்பை மாநகரில் M.S Industries என்ற இரும்பு பைப்புகள் தயாரிக்கும் அந்த பெரிய தொழிற்சாலைக்குள் அங்கிருந்த காவலாளியின் சல்யூட்டோடு வண்டிகள் நிறுத்தும் இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு இறங்கினான் அவன்....

அவன் கௌஷிக்...ஆறடி உயரத்தில் கம்பீரமாய் இருப்பவன்...27 வயதில் மாநிறத்தில் பார்பவரை வசிகரிக்கும் முகமுடையவன்...

இவன் தொழிற்சாலைக்குள் உள்ளே செல்ல அவனை பார்த்து அங்கு மேனேஜர் விரைந்து வந்தவர் காலை வணக்கத்தை தெரிவிக்க இவனும் பதிலுக்கு தெரிவித்து அவரிடம் இன்னிக்கு அனுப்ப வேண்டிய ஆர்டர்க்கு எல்லாம் ரெடியா?என்று ஹிந்தியில் வினாவ( ithu mumbai la nadakarathala ellorum hindi la pesikaranga...so nan atha tamil ah sollren)

ரெடிங்க சார்,நீங்க ஒரு தடவ பார்த்துட்டா அனுப்பிடலாம் என்று சொல்ல அவருடன் சென்று எல்லாம் தரமாய் இருப்பதை சோதித்து திருப்தி அடைந்தவன் அந்த ஆர்டர் பண்ணிய இடத்துக்கு பொருட்களை மேனேஜரிடம் அனுப்ப சொல்லிவிட்டு அனைத்து இடங்களிலும் சென்று பார்த்துவிட்டு மேனேஜரின் அறைக்கு வந்தான்...

எழுந்து நின்ற மேனேஜரை அமர சொன்னவன் அவருக்கு எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்து பைல்களில் மூழ்கினான்...

ஒருமணிநேரம் சென்றிருக்க அனைத்து பைல்களையும் பார்த்து முடித்துவிட்டே நிமிர்ந்தான்....

மேனேஜர் சார் ,அந்த கவர்மென்ட் ஆர்டர்க்கு கொட்டேஷன் ரெடி பண்ண சொன்னேன் பண்ணியாச்சா?என்று வினாவ.

இன்னும் 2நாள்ல முடிஞ்சரும் சார்

சீக்கிரம் இன்னும் ரெண்டு நாள்ல கண்டிப்பாய் முடுஞ்சாகனும் என்று அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் குரலில் மட்டும் அழுத்தம் கொடுத்து சொல்ல வேலையில் கண்டிப்புடன் இருப்பவன் இந்த அளவு பொறுமையாய் சொன்னதே பெரிது என்று நினைத்த மேனேஜர் பலமாய் தலையாட்டினார்...

பின்னர் அங்கிருந்து மும்பையின் மையத்தில் இருந்த ஜவுளிக் கடலான K.R Textiles குள் நுழைந்தவன் அங்கு வரவு செலவு கணக்குகளையும்,கையிருப்புகளையும் பார்த்துவிட்டு மேனேஜருடன் அங்கிருந்த ஐந்து தளங்கலில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த வியாபாரத்தை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.அப்பொழுது தனது அலைபேசி அழைக்க பார்த்தவன் தனது அஸிஸ்டன்ட் அர்ஜுனின் பெயர் ஒளிர காதில் வைத்தவன்...

சொல்லு அர்ஜுன்.. என்றான்

ஸார்,12 மணிக்கு மீட்டிங் இருக்குங்க ஸார் என்று அர்ஜுன் சொல்ல

தனது கைகடிகாரத்தைப் பார்தவன் மணி 11:30ஐ காட்ட , yeah i remember that...i will be there in 15minutes என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

மும்பையின் போக்குவரத்தில் கலந்தவன் அடுத்த 10 நிமிடங்களில் சென்றது K.R Palace என்ற பெயருடன் உயர்ந்து நின்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்க்கே...

போர்ட்டிக்கோவில் அவன் காரை நிறுத்தியவுடன் ,அங்கிருந்த சேவகர் கார் கதவை திறக்க காரிலிருந்து தனது கோட்டை எடுத்தக்கொண்டவன் அந்த சேவகரின் மதிய வணக்கத்திற்கு பதில் வணக்கம் சொல்லிக்கொண்டே தனது காரை பார்க்கிங்கில் நிறுத்த சாவியை அளித்துவிட்டு,அங்கிருந்த காவளாளியின் சல்யூட்டை பெற்றுக்கொண்டு உள்ளே சென்றான்.

வெளியே உள்ள சூரிய வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் கூட இல்லாதவாறு அங்கிருந்த centralized AC தனது வேலையை சரி வர செய்து கொண்டிருந்தது...

உள்ளே சென்றவனை மெழுகு பொம்மையைப் போலிருந்த ரிசப்ஷனிஸ்ட்டின் இனிமையான குரலின் மதிய வணக்கமே வரவேற்றது...

சிறு தலையசைப்புடன் அவளுக்கு பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றவனை பார்த்து,ம்ம் இன்னிக்கும் இவன் நம்மை பார்க்கவே இல்லையே என்று அங்கு வேலைக்கு சேர்ந்த முதலாய் விட்டுக் கொண்டிருக்கும் பெருமூச்சை விட்டவள் தன் வேலையில் கவனத்தை திருப்பினாள்...

தனது அறைக்கு சென்ற கௌஷிக் இன்டர்காமில் அர்ஜுனை அழைக்க அடுத்த வினாடியின் தொடக்கத்தில் அவன் முன் நின்றான் அர்ஜுன்...

எல்லாம் ரெடி தானே ?என்ற கௌஷிக்கின் கேள்விக்கு

எஸ் ஸார்,எல்லாமே ரெடி சார்..நீங்க சொன்ன மாதிரி 12மணிக்கு மீட்டிங்க ஆரம்பிச்சிடலாம்...என்ற அர்ஜுன் 26 வயதானவன்...மூன்றுமாத பெண் குழந்தையின் தகப்பன்...மூன்று வருடங்களாக கௌஷிக்கின் அஸிஸ்ட்டன்ட்டாக இருப்பவன்...

வேலைக்கு சேர்ந்த புதியதில் கௌஷிக்கின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும்,வேலையை புரிந்துகொள்ள முடியாமலும் தடுமாறியவனை வேலையைவிட்டு தூக்காமல் அவனுக்கு அனைத்தையும் பொறுமையாய் கற்றுக்கொடுத்தவன் கௌஷிக்...

அது மட்டுமல்லாது கௌஷிக்கின் ஆளுமையும்,திறமையும் எல்லாம் சேர்ந்து அர்ஜுனின் ரோல்மாடலாக கௌஷிக் ஆகிவிட்டான் ...

கௌஷிக் தனது கோட்டை மாட்டிக் கொள்ள அர்ஜுன் தேவையான பைல்களை எடுத்துக் கொண்டு 4ஆம் புளோரில் இருக்கும் மீட்டிங் ஹாலுக்கு செல்ல அர்ஜுன் லிப்டில் நுழைய கௌஷிக்கோ மாடிப்படிகளில் ஏறினான்..

அர்ஜுனுக்கு கௌஷிக் பெரும்பான்மையாக லிப்ட்டை உபயோகிப்பதை தவிர்பவன் என்பதாலும்,தன்னைப்போலவே தன்னுடன் வருபவரும் மாடி ஏற வேண்டும் என்று நினைக்கமாட்டான் என்பதாலும் அர்ஜுன் லிப்டிலேயே சென்றான்...

மூன்று மணிநேரம் கழித்து மீட்டிங்ஹாலை விட்டு வெளியே வந்த அர்ஜுனின் முகம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது...

இருக்காதா பின்னே K.R.Industries உம் வெளிநாட்டு மோட்டார் கம்பெனி ஒன்றும் டையப் வைத்துக்கொள்ள வேண்டியே இந்த மீட்டிங்...

இது வெற்றி பெற்றதனால் k.R.Industries இனி வெளிநாட்டிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டலாம்...

இந்த வெற்றிக்கு முழு காரணமான கௌஷிக்கை அர்ஜுன் காண அங்கே விடைபெற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு சிறு புன்னகையுடன் கைகுளுக்கி விடைகொடுத்துக்கொண்டிருந்தான்....ஆனால் எப்பொழுதும் போல அவன் உதடுகள் மட்டுமே புன்னகைக்க அவன் கண்களில் எந்த சலனும் இல்லாதிருப்பதை கண்ட அர்ஜுனால் பெருமூச்சை மட்டுமே வெளிவிட முடிந்தது...

அனைவரும் சென்று விட தனது அறையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கௌஷிக்கை நெருங்கினான் அர்ஜுன்...

ஸார் என்று அர்ஜுனின் குரலில் நின்றான் கௌஷிக்...

சொல்லு அர்ஜுன்?

சார் உங்க லன்ச் எப்பையும் போல ஒன்னோ க்ளாக் கொண்டுவர வேண்டாம் மீட்டிங் முடுஞ்சுன்ன நானே சொல்ரேன் அப்ப கொண்டுவாங்கன்னு செர்வன்ட கிட்ட சொல்லிருந்தேன்...ஸோ இப்போ தான் சார் சொன்னேன்,  ஒரு 5 நிமிஷத்துல கொண்டுவந்துருவாங்க சார்...

ஓகே அர்ஜுன்...அன்ட் இந்த கான்ட்ராக்ட் பேப்பர்ஸ்ஸ கேசவன் சார்கிட்ட கொடுத்து MD கிட்ட சைன் வாங்க சொல்லிடுங்க...அதே மாதிரி கேசவன் சார் கிட்ட K.R Textiles வொர்க்கர்ஸ்கு சேலரி இன்க்கிரிமென்ட் பத்தி ஒரு சஜ்ஜஷன் கேட்டிருந்தேன்...அத பத்தியும் MD கிட்ட கேட்டு சொல்ல சொல்லுங்க...

ஓகே சார்...

அன்ட் நீங்க உங்களோட sister in law மேரேஜ்க்கு next one week லீவ் கேட்டு இருந்ததானே???

அ..அ..ஆமா சார்...

ஓகே உங்க லீவ சேன்க்ஷன் பண்ணிட்டேன்...

தேங்க்யூ சோமச் சார்...

இட்ஸ் ஓகே என்றவன் தன் அறையினுள் சென்றான் கௌஷிக்...

அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுன் 'இது தான் கௌஷிக் சார் ,நான் ஒரு மாசம் முன்னாடி லீவ் கேட்டப்ப ஏதோ பைல பார்த்துட்டே தலைய மட்டுந்தான் அசைச்சாரு...ஆனா எதுக்காக லீவ் கேட்டேண்ணு முதற்கொண்டு இப்ப சொல்றாரு...ம்ம்ம அதான் இவ்வளவு உயரத்துல அவர் இருக்கார் 'என்று நினைத்தவன் தன் அறைக்குச் சென்றான்...

தன் அறைக்குச் சென்ற கௌஷிக் அவன் அறையிலிருந்த அட்டாச்சுடு பாத்ருமில் முகம் கழுவிட்டு வெளியே வர அவனுக்காக ஹோட்டல் செர்வன்ட் மதிய உணவை பரிமாற ஆரம்பித்தார்...

உணவை எடுத்து வாயில் வைக்க சென்ற கௌஷிக்கை அவனுடைய அழைபேசி அழைக்க யார் அழைப்பது என்று பார்த்தவனின் நெற்றி சுருங்கியது...

பின்னர் அதை ஸ்வைப் பண்ணி காதில் வைத்தவன்

சொல்லுங்க என்றான் தமிழில்...

ஆங் நல்லா இருக்கேன்

.....

ஆமா மீட்டிங் இருந்தது

.....

இப்போ தான் முடுஞ்சுது

.....

இல்ல இப்பதான் சாப்பிட போறேன்

.....

எப்போ வரனும்?

....

இல்ல இப்போ வேலை இருக்குங்க...ஈவினிங் வரேன்...

....

அவ்ளோதானே வச்சிடறேன்

.....

ம்ம்ம்...மறக்கமாட்டேன்

தனது அழைப்பேசியை கீழே வைத்தவன் வேறு யோசனையோடு சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தான்....

கௌஷிக்கிடன் பேசிவிட்டு அழைபேசியை கீழே வைத்த அம்பிகா பாட்டி தளர்ந்துபோய் சோபாவில் அமர்ந்தார்

அடடே என் செல்லப்பாட்டிக்கு என்ன ஆச்ச? என்ற கேள்வியோடு அம்பிகா பாட்டியை கழுத்தோடு அணைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள் தான்வி....

தான்வி 21 வயது அழகிய மங்கை... பி.ஈ கடைசி வருடம் படித்துக்கொண்டிருப்பவள்....

தன்னைக் கட்டிக்கொண்ட பேத்தியை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டார் அம்பிகா....

சரி சொல்லு பாட்டி ஏன் சோகமா உட்கார்ந்திருந்த?

அதெல்லாம் ஒண்ணுமில்ல டா...கௌஷிக் கிட்ட பேசினேன் சாயந்திரம் வரேன்னு சொன்னான்,அதனால நீ என்னமோ சாயந்திரம் துணியெடுக்கணும்னு சொன்னையே நாளைக்கு எடுத்துக்கலாம் டா....

இட்ஸ் ஓகே பாட்டி...அப்பறம் கௌஷிக் அண்ணாட்ட இன்னிக்கு அந்த விஷயத்த சொல்லப்போறிங்களா???

ஆமா...என்றவர் முகம் சோகமாக ...

அட ஏன் பாட்டி இப்படி சோகமாய்டீங்க?நீங்க கேட்டா கௌஷிக் அண்ணா முடியாதுன்ன சொல்லப்போறாரு

ம்ம்ம் அப்படி முடியாதுன்னு என்மேல கோபப்பட்டுச் சொன்னாக் கூட பரவாயில்லையே ஆனா அவன் நம்ம சொல்றத அவனுக்கு பிடிக்குதா பிடிக்கலையானு கூட நமக்கு புரிஞ்சுக்க முடியாதளவு எந்த சலனமும் இல்லாமல் இருந்தே அந்த வேலையை செய்யறானே...அத நினைச்சா தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு...

விடுங்க பாட்டி அண்ணா எப்பையுமே இப்படித்தானே...

இல்ல தான்வி இப்பத்தான் கௌஷிக் இந்த மாதிரி இருக்கான்,ஆனா சின்ன வயசுல நல்லா கலகலனு இருப்பான்,பாட்டி பாட்டின்னு என்னை சுத்தி சுத்தி வருவான்

அப்படி சந்தோஷமா இருந்த புள்ள இப்படி எந்த சலனமும் காட்டாம இப்படி இருக்கறதுக்கு நானும் காரணம்னு நினைக்கறப்ப என் மேலேயே எனக்கு கோவமா வருது தான்வி என்று தன் சேலை முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொண்டார் அம்பிகா...

நம்ம கௌஷிக்கிற்கும் அம்பிகாவிற்கும் என்ன சம்பந்தம்?? எதனால் மகிழ்ச்சியா இருந்த கௌஷிக் இப்படி மாறினான்----அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்...

Hai my silent Readers.. nalla iruntha marakkaama oru vote pannidungappaa ....

Continue Reading

You'll Also Like

15.7K 549 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
338K 13.1K 63
சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....
53.7K 3.2K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...
49.8K 2.1K 16
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா...