காட்டிற்குள் ஒரு பயணம் (Avail...

By abiramiisekar

22.7K 806 265

காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம்... More

பயணம் 1
பயணம் - 5
பயணம் -7
பயணம் 13
பயணம் 24
Friendly update
பயணம் 26
பயணம் 29

பயணம் 19

1.4K 82 31
By abiramiisekar

அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் அங்கும் இங்குமாய் சிதறிக்கிடந்தது, அதனை பார்த்த ராஜா இங்கே என்ன நடந்திருக்கும் என குழம்பினான், பின் கதவை தாழிட திரும்பினான், கதவில் அச்சிறுவனின் உருவம் சாய்ந்து நின்றிருக்க, ராஜாவிற்கு பயத்தில் கை, கால் நடுங்கியது, வேகமாக குளியலரை  நோக்கி ஓடி கதவை தாழிட்டுக்கொண்டான்.

சற்று நேரத்தில், கதவை தட்டும் சப்தம் கேட்டது, ராஜாவின் கை கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது. "ராஜா  உள்ள என்ன பண்ற இவ்வளவு நேரம்??, சீக்கிரம் வா வெளிய " என குரல் கேட்க, அது ராணி தான் என அறிந்துக்கொண்டான்.

சட்டென கதவை திறந்தவன், ராணியின் கையை பிடித்து வேகமாக அவளை இழுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

"ஏன்டா இப்படி இழுத்துட்டு போற, என்ன பிரச்சனை " என ராணி பயத்தோடு அவனை பார்த்து கேட்க, ராணியின் பயத்தை உணர்ந்தவன் அவளிடம் நடந்ததை கூறாமல், அவளின் முகத்தைப் பார்த்து கண்ணடித்தான்.

"லூசு, என்ன பிரச்சனை அதை சொல்லு முதல்ல" என ராணி கேட்க,  அவளை நெருங்கியவன் அவளின் முகத்தை தன் இரு கரங்களால் பிடித்தான், பின் அவள் இதழோடு தன் இதழ் பதித்தான்.

வெட்கத்தில் அவனை தள்ளி விட்டு ராணி ஓட, அவளை அழைத்தபடி அவளின் பின்னே இவனும் ஓடினான்.

இதனை பார்த்த ராதிகா, ராணியின் கல்லூரி படிப்பு முடிந்ததும் இவர்களின் காதலை இருவீட்டிலும் கூறி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மனதில் எண்ணினாள்.

ராணி ஓடிச்சென்று ஹோட்டல் பின்புரம் இருந்த ஒரு சிறு பாறையில் ஏறி உச்சியில் நிற்க, ராஜாவும் ஏற முயற்சித்தான், அச்சிறுவனின் உருவம் அவனின் கால்களை தட்டிவிட, சற்று தடுமாறியவன் சமாளித்து கீழே அமர்ந்துக்கொண்டான்.

"என்ன ராஜா கால் வலிக்குதா?? இந்த சின்ன பாறை மேல உன்னால ஏற முடியல?? " என ராணி பாறை மேலிருந்து நக்கலடிக்க, கடுப்பேறினான் ராஜா.

"பேசுவ நீ பேசுவ... உன் பின்னால வந்தாலே அந்த குட்டி பிசாசு என்ன டார்ச்சர் பண்ணுது, நீ என்னனா இந்த சின்ன பாறைய ஏற முடியலையானு கிண்டல் பண்ற எல்லாம் என் நேரம்" என தன் மனதிற்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தான்.

அடுத்த ஜந்து நிமிடத்தில் கீழே வந்த ராணி அவனை மீண்டும் கலாய்க்க, கடுப்பில் முகம் சுருங்கியவனாய் நின்றான் ராஜா.

"சரி சரி, இப்படி முகத்தை வச்சிக்காத, பார்க்க சகிக்கல, கூல் பேபி...என சாமாதானம் செய்த ராணியை ஆச்சர்யத்துடன் பார்த்தான் ராஜா.

"ஓய்... என்ன அப்படி பாக்குற" என ராணி கேட்க, அவளை நெருக்கி வந்து " என்ன மேடம் இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கிங்க போல" என கேட்க, வேட்கத்தில் அவனை தள்ளிவிட்டு ஹோட்டலுக்குள் ஓடினாள் ராணி.

"ஏய் ராணி, என்ன இங்க கூட்டிட்டு வந்துட்டு, டீல்ல விட்டுட்டு நீ நல்ல ரொமேன்ஸ் பண்ண கிளம்பிடற, என்ன பத்தி ஒரு நிமிசமாச்சும் யோசி டி, ஐ எம் பாவம்" என அப்பாவி முகத்துடன் ராணியை பார்த்து கேட்டாள் ராகினி.

"சாரி ராகினி " என அசடு வழிந்தவளாய் ராகினியிடம் மன்னிப்பு கேட்டாள் ராணி.

"சாரி எல்லாம் வேண்டாம், எனக்கு ஒரு ஆசை, அங்கே எதிரே தெரியும் மலைக்கு மேல ஒரு அருவி இருக்குனு வாட்ச்மேன் சொன்னாரு, ஆனா அங்க போக சரியான பாதை இல்லையாம், குழந்தைங்க எல்லாம் ஏற முடியாதுனு சொன்னாங்க, எனக்கு அந்த அருவிய பார்க்கனும்" என்றாள் ராகினி.

அவ்வளவு தானே, நான் ராதிகா அக்காகிட்ட கேட்கிறேன், நீ நான் ராஜா போகலாம் என கூறி அங்கிருந்து ராதிகாவின் அறையை நோக்கி நடந்தாள் ராணி.

கட்டிலில் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருக்க அவர்களின் அருகில் அமர்ந்து கதை புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள் ராதிகா.

"அக்கா,வரலாமா??" என கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள் ராணி.

"வாமா, என்ன முக்கியமான விசயமா?" ராதிகாவின் குரலில் சற்று கடினத்தை உணர்ந்தாள் ராணி. இருந்தாலும் தான் கேட்க வந்ததும் அவசியமான ஒன்று என்பதால் பேச துவங்கினாள்.

ராகினியின் அசையை கூறி முடிப்பதற்குள் அதற்கு ராதிகா மறுப்பு தெரிவிக்க சற்று நேரம் போராடி பின் சம்மதம் வாங்கினாள் ராணி.

"சாயங்காலம் 6 மணிக்குள்ள ஹோட்டல் வந்துடனும் புரியுதா" என ராணியிடம் ராதிகா கேட்க, "கரெக்டா வந்து விடுரோம் அக்கா" என கூறிவிட்டு கிளம்பினாள் ராணி.

"ராஜா... எங்க இருக்க, சீக்கிரம் வா" என்ற ராணியின் குரலை கேட்க ராஜா , மின்னல் வேகத்தில் வந்து அவள் முன் தொன்றினான்.

ராணியின் முகத்தையே பார்த்தவன் சட்டென கண்ணடிக்க,

காதல் நாயகன் கண்ணடிக்க,
கார்மேகம் சூழ்ந்த வானத்தைப்போல
தன் முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டாள்.

அவளின் கைகளை விலக்கியவன், "என்ன மேடம் ஏன் இந்த அடிமையை அழைத்தீர்கள்" என நக்கலடித்தான்.

"அதுவா எனக்கு கால் வலி, என்ன என் ரூம் வர தூக்கிட்டு போய் விடு" என அவனை கலாய்த்தால் ராணி.

சற்றும் தயங்காமல் அவளை தூக்கினான் ராஜா. பயத்தில் மிரண்ட ராணி, " லூசு என்ன கீழ விடு, நான் சும்மா சொன்னேன், ப்ளீஸ் ராஜா விடு" என கெஞ்சினாள் .

Continue Reading

You'll Also Like

1.9K 124 16
புனர்ஜென்மம் எடுத்து ரகசியத்தை காப்பாற்ற கிளம்பினான் இளவரசன்... முடியுமா அவனால்... சொல்கிறேன்.. 🙂
9.2K 643 30
தேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)
4.2K 125 9
என்னுடைய மூன்றாவது கிறுக்கல்.... படித்துப் பார்த்து நிறை குறை இருப்பின் தங்களுடைய பொன்னான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்திடுங்கள்... நன்றி நண்பர்களே...
10.7K 876 31
வாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய...