செந்தூரா (காதல் செய்வோம்)

By StaRain08

12.7K 571 247

"ஹஹஹா ஷாரு உன்னால என்னை love பண்ணவே முடியாது.." "ஏண்டா??" "என்னது டா வா?" "ஆமா டா.. நான் அப்படிதான்டா சொல்லுவ... More

செந்தூரா(காதல் செய்வோம்) - 2
செந்தூரா(காதல் செய்வோம்) - 3
செந்தூரா(காதல் செய்வோம்) - 4
செந்தூரா(காதல் செய்வோம்) - 5
MESSAGE FOR READERS

செந்தூரா (காதல் செய்வோம்)

3.8K 105 42
By StaRain08


ஷர்மினி அழகு தேவதை... கொஞ்சம் குறும்பும்.. கொட்டிக் கிடக்கும் அழகும் ... பார்ப்பவரை திரும்பி பார்க்க தோணும் தேவதை..

வருண் ஷக்தி... சாப்ட்வேர் கம்பனியில் வேலை செய்யும் நவீன வாலிபன்.. பார்ப்பவர்களை செம ஹேண்ட்சம் என்று கண்டிப்பாய் சொல்ல வைப்பவன்.. ஆணழகன் பேரழகன் ஆண்மை மிக்கவன் என்று எனக்கு  சொல்ல ஆசை இருந்தாலும்.. ரொம்ப ஓவரா போக கூடாது என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

1.ஷர்மினி

"மினி பைரவா மூவி ரிலீஸ் ஆயிட்டு நாம எப்ப பார்க்க போகலாம்"

"ஏய் என்ன பெரிய சிட்டில இருக்குற நினைப்போ.. அடிங்க உன்ன பெத்தவளையும் என்னைய பெத்தவளையும்  ஏமாத்திட்டு போறது அவ்ளோ ஈசியான ஜோலின்னு நினைச்சீகலோ"

"என்னடி இப்படி பண்ணுற.. ஏற்கனவே ஒரு வாரம் ஓடி போய்டுச்சிடி"

"சரி சரி டேக் it easy... யாமிருக்க பயமேன்.. இந்த ஷர்மினி இருக்க பயமேன்"

தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தில் நடந்த உரையாடலே இது.

ஷர்மினி.. அவளின் தோழி வானதி.. கம்பியூட்டர் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவிகள்.கிராமத்தில் இருந்து தினமும் பஸ் பிடித்து டவுனுக்கு சென்று படித்து வருபவர்கள்.

தங்கள் கிராமத்திலேயே கல்லூரி வரை சென்ற பிள்ளைகள் என்ற பெருமையான பெயரோடு உலா வருபவர்கள்.

கல்லூரி முடிந்து திரும்ப வீட்டிற்கு வரும்போது பைரவா படத்தை பற்றி பேசிக் கொண்டு வந்தவர்கள் ஊர் வந்ததும் இறங்கினர். ஷர்மினி அவ்வூர் பெரியவர் ராஜலிங்கத்தின் மகள்.. அதனால் இளவட்டங்கள் யாரும் அவளை நெருங்க மாட்டார்கள்.

ஆனால் வானதி அப்படியில்லையே.. ஷர்மினியின் வீட்டில் வேலை பார்க்கும் கனகத்தின் மகள்.ஷர்மினியின் உதவியால் கல்லூரி வரை வந்து இருக்கிறாள்.

பஸ்ஸில்இருந்து  இறங்கியதும் பஸ் ஸ்டாப் எதிரே வானதிக்காக காத்திருந்த வசந்த் இவர்களின் அருகில் வந்தான்.

"டேய் அவன் வரான்டி..."

என்று தலை நிமிராமல் ஷர்மினி பாவாடையை ஒற்றை விரலால் இழுத்து முணுமுணுத்தாள்.

"அவனுக்கு அந்த அளவுக்குலாம் கெத்து இல்லையே..."என்று திரும்பி பார்த்த ஷர்மினி அவன் நிஜமாவே இவர்கள் அருகே வரவும்

"அட ஆமாடி... ஒரு வழியா நம்ம அய்யனாருக்கும் தகிரியம் வந்துடுச்சி போல.."

"மினி வளாடாதேடி எனக்கு இங்க கொலையே நடுங்குது.."

"அட சும்மா கேடங்குறேன்.. ஹ்ம்ம் நான் இம்புட்டு அழகா இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்.. கழுத வயசு ஆயிடுச்சி இது வரைக்கும் ஒருத்தன் எனக்கு லவ் லெட்டர் கொடுத்து இருப்பானா??

இந்த மாதிரிலாம் லைப்ல கொஞ்சம் கிளுகிளுப்பு இருக்கணும் வானதி அப்பத்தான் வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமா போவும்.."

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இவர்களை நெருங்கி இருந்த வசந்த் வானதி பயத்தில் உடல் நடுங்க ஷர்மினி கையை அழுத்தி பிடிக்க .. ஷர்மினி ஒரு எதிர்ப்பார்ப்புடன் அவனை பார்க்க.. 

இவர்களை தாண்டி பின்னால் இருந்த ஒருவனுடன்  பேச  சென்றான்.

அவன் தங்களை தாண்டி போனதும் "ச்சே.."என்று கையை உதறிய ஷர்மினி..

"அதானே உன் ஆளுக்காவது தகிரியம் வரதாவது.. உன்ன பார்த்தே ரெண்டு ரெண்டரை வருஷத்தை ஒட்டிட்டான். இன்னும் இருக்க போறது  ஆறு மாசம்.. படிப்பு முடிஞ்சி உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுவாக இதுல இவன் கதை அந்தரங்கத்தில தொங்க வேண்டியதுதான்..."

என்று சலித்துக் கொண்டு வானதியை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

தோழியின் பின்னால் நின்றுக் கொண்டு மெதுவாய் திரும்பி பார்த்த வானதி அங்கே வசந்த் 

"love சொல்லலாம் தகிரியம் இல்லாம இல்லடா.. பாவம் படிக்கிற பிள்ள கெடுக்க வேணாமே சும்மா இருக்கமாக்கும்.. அவ கழுத்துல நான் இல்லாம வேற யாரு தாலி கட்டிடுவா அதையும்தான் பார்ப்போமே.." என்று அருகில் இருந்த நண்பனிடம் இவர்கள் காதில் விழுமாறு வேகமாய் சொல்ல...

பட்டென திரும்பி ஷர்மினியுடன் ஒன்றிக் கொண்டு வேகமாய் நடந்து போனாள் வானதி.

வீட்டில் நுழைந்த நிமிடம் வானதி பின்னால் கொல்லைக்கு போய் முகம் கை கால் கழுவி கொண்டு கனகம் வைத்திருந்த காபியை எடுத்து வீட்டில் இருந்த ஷர்மினியின் தந்தை ராஜலிங்கம் தாய் சௌபாக்கியவதி..  பாட்டி குருவம்மா... சித்தப்பா வைத்தீஸ்வரன்... சின்னம்மா புவனேஸ்வரி... ஷர்மினியின் தம்பி கார்த்திக் என எல்லோருக்கும் கொடுத்தாள்.

கூடத்தில் கட்டி இருந்த பிரம்பு தொட்டிலுக்கு கீழே கால் நீட்டி அமர்ந்திருந்த குருவம்மா ராஜலிங்கத்திடம்..

"லிங்கம் இந்த பாரு வானதிய இவ பொண்ணு படிச்சி முடிச்சோமா வந்தோமான்னு வீட்டு சோலிய பார்க்க ஆரம்பிச்சிட்டா.. எங்க உன்ர மவ வந்ததுமே எங்க விழுந்து கிடக்குதோ முகம் கை கால் கூட கழுவி இருக்காது.." என்று நொடிக்க

"அட நீ வேற வையாத ஆச்சி.. வேற வீட்டுக்கு போற வரைக்கும் நம்ம வீட்டுல நிம்மதியாதான் இருக்கட்டுமே.."என்று ராஜலிங்கம் பரிந்து பேச

"இரு ஆச்சி நீ.. நான் போய் அவளை இழுத்துட்டு வரேன்.."என்றான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஷர்மினியின் சித்தப்பா மகன் கார்த்திக்.

அவர்களின் சத்தத்தை கேட்டே மாடியில் தன் அறையில் படுத்து இருந்த ஷர்மினி கீழே இறங்கி வந்தாள்.

"அட சிறுக்கி காதுல விழுந்துடுச்சி போலையே..."என்று குருவம்மா தலையை குனிந்துக் கொள்ள..

"என்ன பஞ்சாயத்து..?? அட என்ன பஞ்சாயதுங்குறேன்.. அதான் ஒண்டுக்கு ஒண்டி பேசட்டும்னு வந்துட்டேன்ல.. எதா இருந்தாலும் மூஞ்சிக்கு நேரா பேசணும்.."

என்று பொரிய..

"உனக்கு இது தேவையா?? என்று முணுமுணுத்தார் ராஜலிங்கம்.

"நேத்து டவுன்லேந்து வீட்டுல யாருக்கும் தெரியாம லட்டு வாங்கிட்டு வர நான் வேணும்.. முந்தாநேத்து  வெத்தலை வாங்கிட்டு வர நான் வேணும்.. போன வாரம் திருநெல்வேலி அல்வா வாங்கிட்டு வர நான் வேனும் அப்பலாம்  இந்த வேலை வெட்டி இல்லாத பேத்தி தேவைப்பட்டா.. 

இப்ப என்ன வெட்டி முறிக்கிறான்னு கேக்குரீகளோ??"என்று வைய

"அட கொப்புரானே போட்டுக் கொடுத்துட்டாளே"என்று ஆச்சி என்று அழைக்கப்பட்ட குருவம்மா பம்மிக் கொண்டு வீட்டில் இருந்த எல்லோரையும் பார்க்க

"இந்த கதை வேற நடக்குதா??"என்று முறைத்தனர் அனைவரும்.

"ஹீஹீஹீ.. சும்மா..." என்றவர் அவர்களின் பார்வை சுட்டரிக்கும் சூரியனாய் மாறுமுன் இடத்தை விட்டு நழுவினார்.

"அது அந்த பயம் இருக்கட்டும்"என்று அப்பாவை ஒட்டிக் கொண்டு அமர்ந்த ஷர்மினி..

"வானதி மைலோ"என்று கத்தினாள்.

"கல்யாணம் கட்டிக் கொடுக்குற வயசு ஆயாச்சி இன்னும் அப்பாவை என்ன இடிச்சிட்டு உட்காருறது.."என்று சொல்ல வந்த சௌபாக்கியவதி... அருகில் இருந்த புவனேஸ்வரி...

"அக்கா சும்மா இருங்க அடுத்து உங்களுக்கு வேட்டு வச்சிட போறா.. நேத்து உங்க அண்ணா வீட்டுக்கு போனதுக்கு வேற அவகிட்ட உதவி கேட்டு வச்சி இருக்கீங்க"என்றதும் 

அண்ணன் குடும்பத்தோடு இருந்த மனஸ்தாபத்தில் இந்த ஒரு வருடமாய் அவர்கள் வீட்டு பக்கம் செல்ல கூடாது என்று தடை போட்டு வச்சிருந்த கணவரையும் மீறி ஷர்மினியின் உதவியோடு போய் வந்த மடத்தனத்தை நொந்தபடி..

"என்ன பண்ணி தொலைய ஈஸ்வரி... இந்த கழுதைக்குதான் எல்லா தில்லுமுல்லும் செய்ய தெரிஞ்சி கெடக்கு.. பண்ற எல்லா வேலையையும் பண்ணிபுட்டு எப்படி நல்ல புள்ளையாட்டம் அவர் மேல சாஞ்சிட்டு கெடக்குறதை பாரு.." என்று நொடித்துக் கொண்டார்.

"ஆமா ஆமா அக்கா ஆனா ஒன்னு போற இடத்துல நல்லா பொழைச்சிப்பா கவலையே படாதீங்க..."என்றார் பெருமையாய்.

"அதுசரி இவளுக்கு அடங்குரவனா வந்தா சரி.. இவளையே அடக்குரவனா வந்தா இந்த மாரியாத்தாளை எப்படி சமாளிப்பான்"

அவர்களின் வருங்கால மருமகனை பற்றி கவலைப்பட...

"ஹே ஒன் மோர் ஸ்காட்ச் ப்ளீஸ்..."என்று அங்கே கவிழ்ந்து கிடந்தான் வருண் என்று எல்லோராலும் அழைக்கப்படும் வருண் ஷக்தி.

(இரண்டாம் பாகத்தில் காதல் செய்வோம்)

Continue Reading

You'll Also Like

195K 8.7K 41
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தா...
316K 12.3K 55
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
57.7K 2.3K 53
வார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன் மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வா...
62.1K 3K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...