எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 636 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 52

454 15 14
By SindhuMohan

55 கிலோக்கும் மேலே இருந்த மீராவின் கணம் கௌஸிக்கிற்கு ஏனோ மயிலிறகின் கணம் போல தெரிந்ததோ என்னவோ...

மெலிதான புன்னகை அவன் இதழ்களில் தவழ அவளை தூக்கிக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தான்.

நேற்று அவளை அலங்காரத்தில் பார்த்ததில் இருந்தே தடுமாறிக்கொண்டிருந்தது  அவன் மனது.

இன்று மீராவை தூக்கும் போது அவளது tunic top விலக, அவனது  விரல்கள் அவள் இடையில் பதிந்த போது,
சில்லென்று பட்டுப்போல இருந்த அவள் இடை அவன் உடம்பை சூடேற்றியது என்ன அதிசயமோ?

கைகளை வேகமாக விலக்கி துணியின் மேல் பிடித்துக் கொண்டாலும் ஏனோ அந்த ஸ்பரிசத்தின் சுகம் அவன் கைகளை விட்டு விலகவில்லை.

காரின் அருகில் வரும்போதே ரிமோட்டால் காரை unlock செய்ய , அவனது ஒரு பாதுகாவலர்  கதவை திறந்து விட்டார்.

மீராவை முன் சீட்டில் அமரவைத்து சீட் பெல்ட்டை போட்டு விட்டான்.

அதற்குள் தான்வி ஷிவா வந்துவிட அவர்களும்  பின்னால் காரில் ஏறி அமர்ந்தனர்.

சரி அண்ணா... நான் அப்படியே கிளம்பறேன்... நீங்க பார்த்துப் போங்க என்று அகிலன் சொல்ல, கௌசிக் தலையசைத்து விட்டு  டிரைவர்  சீட்டிக்கு சென்று காரை கிளப்பினான்.

அதை இதை பண்றேன்னு ரெண்டு பேரும் எதையாது பண்ணி இருக்கறதையும் கெடுத்துவிடாம அமைதியா வாலை சுருட்டிட்டு நாளைக்கு வரை இருக்கணும் ... என்ன புரியுதா ? என்று பின் சீட்டு ஜன்னலில் குனிந்து தன் தங்கையிடமும் காதலியிடமும் மெல்லிய குரலில் மிரட்டினான்.

அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ வெளியே போடா என்று அவன் தலையில் ஒரு கொட்டை வைத்து வெளியே தள்ளினாள் தான்வி...

இராட்சசி... என்று வலித்த தலையை தடவிய படியே அகிலன் அவர்களை பார்க்க , காரும் கிளம்பியது , தான்வி மற்றும் ஷிவாவின் கையசைப்போடு....

சிறிது நேரத்தில் கார் ஒரு பெரிய துணிக்கடை முன் நின்றது.

பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு , இவர்களை பார்த்து திரும்பியவன் ...

நீங்க ரெண்டு பேரும் போய், change பண்ணிக்க துணி எடுத்துக்கோங்க.. அப்படியே மீராக்கும்  எடுத்துக்கோங்க...

ஓகே அண்ணா... Okay மாமா...

என்ற படி இருவரும் கீழே இறங்க போக...

ஒரு நிமிஷம் என்றவன், தன் வாலெட் டை திறந்து கார்டை எடுத்து நீட்டினான்.

வேண்டாம் அண்ணா, என் கிட்ட கார்டு இருக்கு,

அக்கா கார்டு  எங்கிட்ட இருக்கு மாமா...

என்று பெண்கள் இருவரும் மறுக்க,
இருக்கட்டும் , இதை வாங்கிக்கோங்க என்று அவன் இன்னும் கைகளை நீட்டிக்கொண்டே இருக்க...
ஷிவா அதை தயக்கத்தோடு வாங்கினாள்.

அதே நேரம் அவளது குறும்புத்தனம் தலை தூக்க...

மாமா.... அப்போ எத்தனை டிரஸ் எடுத்தாலும் உங்களுக்கு பிரச்சனை இல்லையே ? என்று தலை சாய்த்து ஒரு சிரிப்புடன் வினாவினாள்..

தான்வி யும் எஸ் எஸ் என்று தலை அசைக்க...

No problem ... But 15 minutes தான் உங்களுக்கான நேரம்...

Oh... அது போதும் மாமா... இதோ இப்பையே கிளம்பிட்டோம்... என்றபடி வேகமாக அங்கிருந்து நகர்ந்தனர் பெண்கள் இருவரும்.

அவர்கள் சென்றவுடன் பக்கத்தில் இருந்த மீராவை பார்த்தான்...

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் போலும் , உதட்டில் உறைந்த புன்னகையோடு அவனைப் பார்த்து திரும்பி படுத்திருந்தாள்.

மெதுவாய் அருகில் சென்றவன், அவள் முகத்தில் விழுந்திருந்த கலைந்த கூந்தலை ஒதுக்கிவிட்டான்...

அவள் மேல் மதுவின் மணம் அதிகமாய் அடித்தது... இருந்தும் அவனது நாசி அவளது இயற்கை மணத்தை சுவாசித்தது...

அவளை முத்தமிட்ட போது, அவளை நெருக்கங்களில் சந்திக்கும் போது அவனை அவன் வசம் இழக்க செய்யும் அவள் மணம் இன்றும் அவனை தன் வசம் இழக்க வைத்தது...

மெதுவாய் அவள் இதழ் நோக்கி அவன் நகர, அதே நேரம் பார்க்கிங்கில் உள்ளே ஒரு கார் வருவதற்கான ஹாரன் ஒலி கேட்டது...

அதில் சுதாரித்து கொண்டு , அவளை விட்டு தள்ளி அமர்ந்தான்...

Dangerous Meera... என்று நெஞ்சில் கை வெய்த்துகொண்டவன்... அவளை பார்க்க , இதெல்லாம் உணராமல் அவள் பாட்டுக்கு தூங்கிக் கொண்டிருந்தாள்.

இனி அவள் அருகில் இருப்பது மிக ஆபத்து என்று உணர்ந்தவன் , கதைவை திறந்து கொண்டு வெளியே வந்து காரின் மேல் சாய்ந்து நின்றான்.

கால் மணி நேரம் என்பது அரைமணி நேரம் ஆகிய போது கைகளில் பைகளோடு ஷிவாவும் , தான்வியும் வந்து சேர்ந்தனர் .

செம்ம விலை ல தான்வி...

ஆமா ... அதனால் தான் கூட்டத்தையே காணோம் பார்த்தியா?

ஆமா... மனசாட்சியே இல்லாம விக்கறாங்க...

உண்மை தான்... அதனால் தான் நம்ம  கடைல அவ்ளோ கூட்டமா இருக்கும்... விலை சரியா இருக்கும்ன்னு நம்ம கடை மேல எல்லாருக்கும் அவ்ளோ நம்பிக்கை... எல்லாம் கௌசிக் அண்ணனால் ...

ஹ்ம்ம்... பேசாம நம்ம கடைக்கே மாமா கூட்டிட்டு போயிருக்கலாமே...

ஆன வர்ற வழில நம்ம கடை இல்லை ஷிவா...

Oh...

பேசிக்கொண்டே அவர்கள் காரின் பக்கம் வந்து விட, கௌசிக் அவர்களை பார்த்து முறைத்தான்..

சாரி மாமா... கலெக்சன் எல்லாம் நால்லாவே இல்லையா... அதான் தேடி தேடி எடுக்க நேரம் ஆகிடுச்சு...
ஹி ஹி...

எதும் பேசாமல் ...வண்டில ஏறுங்க... என்பதாய் தலை அசைத்தான், தானும் காரில் ஏறி அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் அந்த பெரிய கம்பொண்ட் கேட்டிர்க்கு முன் கார் நின்றது..

வாட்ச்மென் கதவை திறந்து விட .. கார் உள்ளே சென்று போர்ட்டிக்கோவில் நின்றது.

இறங்கிய ஷிவா ... வீட்டை கண்களால் அளந்தாள்...

அகிலன் வீடு போல பெரிய வீடு அல்ல... ஆனால் சிறிய மாளிகை... ஆடம்பரம் பெரிதாய் இல்லாமல் சுற்றிலும் தோட்டங்களும், மரங்களும் இருக்க நடுவில் மூன்றடுக்கில் அழகாய் நின்றிருந்தது.

காரின் ஏசியில் இருந்து வெளியே வந்தபோதும், மும்பையின் வெக்கை தாக்காதது போல, சுற்றிலும் இருந்த மரங்களால் சில்லென்று காற்று உடலை தழுவிச்சென்றது.

மாமா ... வீடு சூப்பர் அஹ் இருக்கு ... என்று ஷிவா கௌஸிக்கிடம் மனமார சொல்ல...

Thank you .. என்றதோடு மீராவை மீண்டும் தூக்கிக்கொண்டு நடந்து வீட்டிற்குள் சென்றான்.

உள்ளேயும் ஆடம்பரம் இல்லாது , வேண்டிய பொருட்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டு அழகாக இருந்தது.

மேலே ஒரு அறையில் மீராவை படுக்க வைத்தான் கௌசிக்.

அந்த அறைக்கு எதிர் அறையில் ஷிவா வையும் தான்வியையும் எடுத்துகொள்ள சொல்லிவிட்டு அவனும் ஃப்ரெஷ் ஆக பக்கத்தில் இருந்த தன் அறைக்கு சென்றான்.

கொஞ்ச நேரத்தில் ஆர்டர் பண்ணிய உணவுகள் வந்து விட மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

பெண்கள் இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டு சாப்பிட , கௌசிக் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டே சாப்பிட்டுகொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்து பெண்கள் இருவரும் இவனுக்கு குட்நைட் சொல்லிவிட்டு படுக்க சென்றுவிட, இவன் தனது லேப்டாப்பில் மூழ்கினான்.

வேலைகள் முடிந்து நிமிரும் போது மணி 10 ஐ காமிக்க,  லேப்டாப்பை மூடி வைத்தான்.

தன் அறைக்கு பக்கத்தில் இருந்த மீரா வின் அறைக்குள் சென்றவன் , அங்கு பெரிய கட்டிலின் நடுவில் , night light வெளிச்சத்தில், ஷிவா தான்வி வாங்கி வந்த அந்த பிங்க் நிற நைட் டிரஸில் ரோஜா பூவாய் ஒருக்களித்து படுத்திருந்த மீராவின் அருகில் சென்றான்.

ஏசி குறைவாக இருப்பது போல இருக்க, அதை அதிகப்படுத்தி விட்டு பெட்ஷீட்டை அவள் தோள் வரை போர்த்திவிட்டான்.

சுகமாய் இருந்தது போல , மீரா அந்த போர்வையை தன் நெஞ்சோடு அழுத்தி கொண்டு தன்னை சுருக்கிக் கொள்ள, அதை கண்டவன் முகம் புன்னகை பூத்தது...

அவள் நெற்றியில் குனிந்து முத்தமிட்டவன், good night கண்ணம்மா... என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அடுத்தநாள்  காலை ....

கீச் கீச் என்று பறவைகளின் சத்தம் தூக்கத்தை விடுவிக்க

ம்ம்.... என்ற முணங்களோடு கட்டிலில் புரண்டாள் மீரா .

கண்களை பிரிக்க முடியாமல் இமைகள் மேல் பாரமாய் இருக்க , கூடவே தலையும் வலித்து அவளுக்கு...

எழுந்து அமர்ந்தவள் ,தலையின் இருபக்கமும் கைகளை வைத்து அழுத்தினாள்..

ஆஹ்.... தலை ஏன் இப்படி வலிக்குது....
என்று நினைக்கும் போது தான் நேற்று நடந்தது நியாபாகம் வந்தது...

பார்ட்டிக்கு போனோம்... அவங்க டான்ஸ் ஆடினாங்க... நான் எதையோ குடிச்சேன்... அப்பறம் .... அப்பறம் ....

அடுத்து ஒன்னும் நியாபகம் வராமல் , அகிலன் எதோ திட்டுவது போல, கௌசிக் அவளை தூக்குவது போல எல்லாம் தோன சட்டென்று கண்களை முழித்தாள்.

விநாயகா... என்ன எனக்கு என்ன என்னவோ தோணுது .. எதும் தெளிவா நியாபகம் வரமாட்டேங்குதே...

என்றபடி புலம்பியவள்... அப்பொழுதுதான் தான் இருக்கும் அறையை சுற்றிப்பார்த்தாள்.

இது யாரு ரூம்????

நான் எப்படி இங்க வந்தேன்... ஒருவேளை வீட்டுக்கு வந்துட்டு வேற ரூம்ல படுத்திட்டேன்னோ?

தான்வி ஷிவா எல்லாம் எங்க... பாட்டி????

ஒன்றும் புரியாமல் கீழே இறங்கியவள்  ,தன் துணிகள் மாறி இருப்பதை உணர்ந்தாள்.

டிரஸ் ... என்னோட டிரஸ் ...  இது எப்படி மாறுச்சு... யார் மாத்தினா... இந்த கேள்விகளில் பயமும் , பதட்டமும் தலை வலியும் அதிகமாக,
கதவை திறந்து  வெளியே எட்டிப் பார்த்தாள்...

இது பாட்டி வீடு அல்ல... வேற யாரோ வீடு... அடியேய் மீரா... என்னடி பண்ணித்தொலச்ச நீ...

ஷி... ஷி...வா... மெதுவாய் அழைத்தாள்...

ம்ம் ஹ்ம், ஷிவா வின் பதில் குரல் கேட்கவில்லை,  ஆனால் கீழே ஏதோ சத்தம் கேட்டது .

மெதுவாய் படி இறங்கி வந்தாள்.. சுற்றியும் பார்க்க..

அங்கே ஹாலில் பெரிய புகைப்படம் மாட்டியிருக்க , அதில் ஒரு ஆணும் பெண்ணும் அழகாய் அவளை பார்த்து சிரித்தபடி இருந்தனர்..

அந்த பெண்ணை எங்கோ பார்த்து போல தோன்ற , அவளை ஊன்றி கவனித்தாள் .. யார் இந்த பெண்???

They are my parents....

திடீரென தன் பின்னால் கேட்ட குரலில் தூக்கிவாரிப் போட திரும்பினாள்.

Track சூட்டும், மெல்லிய கிரே நிற  பனியணிலும் கௌசிக் நின்றிருந்தான்.

கௌசி...

நா...நான்.... இத...இது உங்க வீடா???

ஆமாம் என்ற வகையில் தலை அசைத்தான்...

எதோ இவ்வளவு நேரம் இருந்த பயம் சட்டென்று இறங்க ஒரு பெருமூச்சை வெளியிட்டாள்...

இந்த விளக்கம் போதும் என்ற எண்ணத்தில் கௌசிக் சமையல் அறையில் நுழைய, மீரா பின்னால் தயங்கிபடி சென்றாள்..

உங்கம்மா ரொம்ப அழகா இருக்காங்க...

எஸ்... She is a beautiful lady...

ம்ம்... அடுத்து என்ன சொல்வது, என்ன கேட்பது என்பது தெரியாமல் அவள் நிற்க...

சரி , புது brush ரெஸ்ட் ரூம்ல வெச்சிருக்கேன், பல் துலக்கிட்டு வா... டீ போடறேன்...

ம்ம்... ஷிவா எல்லாம்...

தன் கையை திருப்பி கடிகாரத்தை பார்த்தவன்...  இன்னும் அவங்க எழலை போல... மணி 7 தானே ஆகுது...இன்னும்  கொஞ்ச நேரம் தூங்கட்டும் ...

Oh... சரி... அவர்களும் இங்கு தான் இருக்கிறார்கள் என்பது புரிய... அவர்கள் எழுந்த பின் என்ன நடந்தது என்பதை கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தபடி தான் இருந்த அறையை நோக்கி நடந்தாள்...

அடுத்த அத்தியாயம் ரொம்ப கஷ்டமாக இருக்கும்... இதுலயே சேர்கலாம்னு பார்த்தேன்... ஆனா அது தனியா எழுதினா தான் நல்லா இருக்கும்...so meet you all at next update dears ..

Don't forget to vote and Comment dears ..

Continue Reading

You'll Also Like

21.8K 636 58
ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
75.7K 3.6K 81
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்க...
328K 9.5K 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சம...
80.1K 3.8K 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா...