எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 636 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 49

239 10 6
By SindhuMohan

   தனது அறையில் போடப்பட்டிருந்த அந்த பெரிய ஈஸி சாரில் அமர்ந்தபடி ஏதோ ஒரு ஆங்கில நாவலை படித்துக் கொண்டிருந்தான் கௌஷிக்.

கண்கள் புத்தகத்தில் மேய்ந்தாலும் , மனதில் என்னவோ வேறு நினைவுகள் வாட்டி எடுத்தது... 

இதற்கு மேல் முடியாது என்ற பெருமூச்சோடு புத்தகத்தை மார்பில் கவிழ்த்தியவன் , நிமிர்ந்து கட்டிலின் தலைமாட்டு சுவற்றில் மாட்டி இருந்த அந்த ஆளுயர புகைப்படத்தை பார்த்தான்.

ஒரு முறை இவனும் , மீராவும் கோயம்பத்தூரில் இருக்கும் போது, விடுமுறை நாளில்  பக்கத்தில் இருந்த ஒரு முருகன் கோவிலுக்கு சென்றிருந்தனர். அங்கே ஒரு மயில் சிலை இருக்க ,அதன் கழுத்தை கட்டிப்பிடித்தவாறு புன்னகைத்துக் கொண்டிருத்த மீராவின் புகைப்படம் இது.

அந்த முகத்தில் தான் என்ன ஒரு ஆனந்தம் , எதோ உலகத்தையே  வென்றுவிட்ட மாதிரி... ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன விஷயத்திற்குகூட அவளின் இந்த உற்சாகம் அவனை அதிசயக்க வைக்கும்.

காலை எழுந்தவுடன் , மனம் சோர்வுறும் போது எல்லாம்,  இவளின் இந்த புன்னகையை பார்க்கும்போது,இவனுக்குமே ஒரு புத்துணர்ச்சி வரும்...ஆனால் இன்றோ வேதனையே மிஞ்சியது... 

இன்று எனது சிறு பார்வைக்காக , ஒரு வார்த்தைக்காக அவளின் வதனத்தில் தோன்றிய எதிர்ப்பார்ப்பை கண்டு கொண்டாலும் , அதை நிறைவேற்ற முடியாமல் , அவளது வாடிய முகத்தைக் கண்டு மனம் நொந்தது , இன்னும் அவனுக்கு வலித்தது.

ஏண்டி உன்னையும் வருத்தி , என்னையும் கொல்ற .... இப்போ கூட எங்கப்பாக்கு கொடுத்த வாக்கை கூட மீற தோணுது... எல்லாருக்கு முன்னாடியும் நின்னு மீரா என்னுடையவள், எனக்காக பிறந்தவள் ன்னு கத்தனும்ன்னு இருக்கு.... 

ஆனா அத நான் பண்ணினாலும், ஒரு வேலை கல்யாணமே ஆகிட்டாலும், ஒரு நாள் அல்லது ஒரு நிமிஷம்" ச்ச கூட்டுக் குடும்பமா இருக்க ஆசைப்பட்டோமே ... இப்படி ஒரு அனாதையை கல்யாணம் பண்ணிட்டோமேன்னு" நீ நினைச்சு கஷ்டப்பட்டா... நம்ம ரெண்டு பேர் வாழ்கையும் நரகம் ஆகிடுமே மீரா...

அதனால இப்போ கொஞ்ச நாள் கஷ்டப்பட்டுக்கோ... என் மேல உனக்கு தானா வெறுப்பு வந்திடும், அப்பறம் கல்யாணம் ஆகிடுச்சுன்னா என்னை சுத்தமாக மறந்திடுவ டா... 

என்று அந்த புகைப்படத்தை பார்த்து புலம்பிக்கொண்டிருந்தான்  நம் நாயகன்...

இவன் இப்படி இருக்க அங்கு நம் நாயகியோ ... தோட்டத்தில் ஊஞ்சலில் அமர்ந்தபடி இலக்கில்லாமல் வெறித்துக்கொண்டிருந்தாள்.

அதை வெளியே வந்த தான்வி பார்த்துவிட்டு , சிவா வை கூப்பிட்டு காமித்தாள்.

மாமா வந்திட்டு போனதிலிருந்தே இப்படி தான் இருக்கா... ஏன் தான் மாமா இப்படி இருக்காரோ... எனக்கு கோவம் கோவமா வருது... அவர் மட்டும் இப்போ முன்னாடி இருந்தா மூக்குலயே குத்திடுவேன்... என்று சிவா செய்கையோடு  பொரும...

அதைக்கண்ட தான்விக்கு சிரிப்பு வந்தது..

நான் கோவமா பேசினா சிரிப்பா இருக்கா... என்று இடுப்பில் கைவைத்து தான்வியை முறைத்துப் பார்த்தாள் சிவா..

ச்சேச்சே நீ பேசினதுக்கு சிரிப்பு வரலை டி... குத்துசண்டை வீராங்கனை போல நீ செஞ்ச செய்கையை பார்த்து தான் சிரிப்பு வந்துச்சு... என்று மீண்டும் வாயில் கைவைத்து தான்வி சிரித்தாள்.

அதை கண்ட சிவா விற்குமே மெல்லிய புன்னகை முகத்தில் படர்ந்து மீண்டும் மறைந்தது...

அடி போடி... எனக்கு அக்காவை பார்க்க பார்க்க கஷ்டமா இருக்கு... நேத்து கூட நைட் ஒன்னு அல்லது ரெண்டு மணி இருக்கும்... சுச்சூ போக எழரேன் , அவ தூங்காம கைல மொபைல் வெச்சிட்டு பார்த்திட்டு இருக்கா... கேட்டா தூக்கம் வரலை ன்னு சொல்றா... என்ன பன்றதுனே தெரியலை...

அப்புறம் தூங்கினாங்களா இல்லையா...?

தெரியலயே ... அதுக்குள்ள நான் தூங்கிட்டேன்... என்று அசடு வழிந்தாள்..

அவளை மேலும் கீழும் பார்த்த தான்வி... அண்ணா எப்போ நம்ம வழிக்கு வருவாருன்னு தெரியலை ...  ஆனா அண்ணியை இப்போ கூல்  பண்ண என் கிட்ட ஒரு வழி இருக்கு..

என்ன வழி???

வா சொல்றேன் ...என்றபடி ஷிவா வை உள்ளே இழுத்துச் சென்றாள் தான்வி.

ஊஞ்சலில் கால் ஆட்டியபடி  அமர்ந்திருந்த மீரா "பே" என்ற சத்தத்தில் பதறியடித்து நெஞ்சை கையில் பிடித்துக்கொண்டு  எழுந்து  திரும்பினாள்...

என்ன அக்கா பயந்திட்டியா ? என்ற சிரிப்போடு நின்றிருந்த ஷிவா வை பார்த்தவள் , அவள் காதை எட்டிப் பிடித்தது திருகினாள்..

எருமை எருமை ... பயந்துட்டேன் டி... இதயமே வெளிய வந்திடும் போல...

ஹி ஹி ஹி... சரி விடு காது வலிக்குது..

போடிங்க என்ற சலிப்போடு தங்கையின் காதை விட்டுவிட்டு மறுபடியும் ஊஞ்சலில் அமர்ந்தாள்.

சரி சரி... விளையாட்டு போதும்... கிளம்புங்க அண்ணி போலாம்...

போலாமா ? எங்க...

அவளது கேள்வியில் கள்ளப் பார்வை பார்த்துக்கொண்ட தோழிகள் ..

ஆயேயி சியாஹ் ஜாங்குய்
டேலம் நகொன் குன்
வாயே டூ ராப்டி கோஜா
மனம் சோ மஜோன்

ஜாமல் ஜமாலெக் ஜாமலோ ஜமல் குடு
ஜாமல் ஜமாலெக் ஜாமலோ ஜமல் குடு
ஜாமல் ஜமாலெக் ஜாமலோ ஜமல் குடு
ஜாமல் ஜமாலெக் ஜாமலோ ஜமல் குடு

(Abrar's entry song in animal movie
YouTube link is above👆)

என்று பாடியபடியே  அதற்கு ஆட்டமும் ஆட ஆரம்பிக்க , அதைக் கண்டு மீராவுக்கு சிரிப்பு அடக்க மாட்டாமல் வந்தது.

போதும் பா... எனக்கு வாயெல்லாம் சிரிச்சு வலிக்குது என்று இன்னும் ஆடிக்கொண்டிருந்த இருவரையும் பிடித்து நிறுத்தினாள்...

மூச்சு வாங்க அவர்களும் நின்று , சிரித்துகொண்டிருந்த மீரா வை ஆசையாய் பார்த்தனர் .

இவள் தான் எத்தனை அழகு ... அதும் சிரிக்கும் முகத்தில் தெரியும் குழந்தைத் தனம் , பார்க்க பார்க்க நம் மனதை அமைதி படுத்திவிடும் மந்திரம் ... இப்படியே இந்த சிரிப்பு அவள் உதட்டில் காலம் முழுவதும் உரைந்திருக்க வேண்டும் ஆண்டவா... என்று இருவரும் தங்களது மனதில் இறைவனிடம் கோரிக்கை வைத்தனர் ...

என்ன ரெண்டு பேரும் இப்படி என்னை பார்க்கரீங்க....??? என்று கேட்டபடி சிரித்ததால்  வலித்த தன் கன்னங்களை அமுத்தி விட்டுக்கொண்டாள்

ஒன்னும் இல்லை... கிளம்புக்கா போலாம்...

பப் க்கு தானே சொல்றீங்க...?

ஆமா... டான்ஸ் கூட ஆடிக்காட்டினோமே???

அச்சோ... பாட்டிக்கு தெரிஞ்சுது, அவ்ளோதான்...

பாட்டிக்கிட்ட எல்லாம் பெர்மிஷன் வாங்கியாச்சு அண்ணி... போக சொல்லிட்டாங்க...

உண்மையாவா... என்று கண்கள் விரிய நம்பாமல் பார்த்தாள் மீரா...

அட ஆமா அக்கா... வா முதல்ல... என்று அடுத்த வார்த்தை அவள் பேசும் முன் போட்டிகோவில் தயாராக நின்றிருந்த காரை நோக்கி இழுத்துச் சென்றாள் ஷிவா... பின்னால் தான்வியும்...

அங்கே காரின் சத்தம் கேட்டு வெளியே வந்த அம்பிகா பாட்டியும்... பார்த்து போய்ட்டு வாங்க... நேரங்காலத்தோட வீட்டுக்கு வரணும்... இப்போயே மணி ஆறு ஆகப்போகுது...

சரி பாட்டி... என்று விட்டு மீரா வை காரில் திணித்து தாண்வியும் சிவாவும் உள்ளே ஏறினர்.

அங்கே தான்வியின் முதன்மையான பாதுகாவலர் வர...

பார்த்துக்கோ காதிர்... ஜாக்கிரதை பொண்ணுங்க... என்று ஒரு முறைக்கு இருமுறை பாட்டி சொல்ல .. அவரும் அவருக்கு உறுதி அளித்துவிட்டு முன் சீட்டில் அமர்ந்தார் ..

இவர்கள் கார் கிளம்ப , பின்னால் புல்லட்டில் இருவர் பின் தொடர்ந்தனர் .

எனக்கு இன்னும் நம்ப முடியலை ... பாட்டி பப் க்கு போறதுக்கு ஓகே சொன்னதை... என்று கொஞ்ச நேரம் கழித்து மீரா தன் பாட்டிற்கு சொல்லிக்கொண்டாள்.

அதை கேட்டவுடன் ஷிவா வும் தான்வியும் திருட்டு முழி முழித்தனர்.

ஏய்... மரியாதையா சொல்லுங்க... என்ன சொன்னீங்க பாட்டி கிட்ட... உங்க முழியே சரி இல்ல....

அது ...நாங்க....

நீங்க...?

 பீச்சுக்கு போறதா சொல்லிட்டு வந்தோம்...

அட பாவிகளா... மொதல்ல காரை திருப்ப சொல்லுங்க... வீட்டுக்கு போலாம்... யாருக்கும் தெரியாம போறது ரொம்ப தப்பு...

அக்கா... சும்மா இருக்கா... பாதி தூரம் வந்துட்டோம்... சரி தான தாண்வி...

ஆமா அண்ணி... சீக்கிரமா வீட்டுக்கு போயிடலாம்... பிளீஸ்...

ஆமா அக்கா... பிளீஸ்..

என்று சிறு பெண்களாய் அவர்கள் அவள் முகத்தை பாவமாய் பார்க்க... மீராவிர்க்கு நெஞ்சம் படபடத்தது...

ஒரு முறை கௌஷிக்கிடன் பொய் சொல்லிட்டுப் போய், அந்த ராகுலிடம் மாட்டிக் கொண்டது தான் நினைவில் வந்து போனது...

வேண்டாம் டா.. அங்க ஏதேனும் பிரட்சனை என்றால் கஷ்டம்..

ஒன்னும் ஆகாது அண்ணி... எந்த பிரச்சனையும் வராது... இவங்களும் வர விட மாட்டாங்க... என்று காதிரை கை காட்ட...

மீரா வும் பாதுகாவலர்கள் இருக்கும் தைரியத்தில் அறைமனதாய் தலையாட்டினாள்...

இருந்தாலும் ... வீட்ல சொல்லிருக்கலாம்.

பாட்டிக்கு மட்டும் தான் அண்ணி தெரியாது... அண்ணா ரெண்டு பேருக்கும் இன்னும் சில நிமிஷங்கள்ல தகவல் போய்டும்...

எப்படி தானு , இவ்வளவு உறுதியா சொல்ற... என்று ஷிவா கேட்க...

பொறு என்று சைகை  செய்து விட்டு , டிரைவரை கூப்பிட்டாள் .

டிரைவர் பையா... பீச் நகி.... ம்ம்... *** பப் செல்லியே... என்று அவள் சொன்னவுடன் டிரைவர் காதிரை பார்க்க... அவன் திரும்பி தான்வியை பார்த்தான்.

அவள் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்க்க... அவன் எதும் சொல்லாமல் தன் மொபைலில் நோண்ட ஆரம்பித்தான்...

என்னடி... என்று தோளை இடித்த தோழியை 5 நிமிடம் பொறு என்று அமைத்திபடுத்தினாள் தான்வி...

5 நிமிடம் ஆவதற்கு முன்பே காதிரின் மொபைல் அழைத்தது...

புன்னகையோடு சொன்னாள் தான்வி...
கௌசிக் அண்ணா வோட கால் இது..என்று...

ஹலோ கௌசிக்  சார்.
.....
எஸ் சார்
.....
We will be careful sir...
.....
Sure sir... Bye .

எப்படி டி...

இரு ... என்று அவள் சொல்லிய போதே அவள் பர்ஸ்சில் பாட்டு சத்தத்தில் அவளது மொபைல் வெளியிட்டது ...

இது அகி... என்ற படியே உள்ளே இருந்து மொபைலின் டிஸ்ப்ளேவை  சகோதரிகளிடம் காட்ட... அது அகி என்ற பெயரில் ஒளிர்ந்தது.

குரங்கு... ரெண்டு நாள் முன்னாடி தானே எல்லாரும் சேர்ந்து போனோம் ... அதுக்குள்ள என்ன????

உங்க கூட எல்லாம் வந்து என்ஜாய் பண்ண முடியலை ... அதான்... நாங்களா போறோம்...

பொறு பாட்டிகிட்ட போட்டு விடுறேன்...

சொல்லிக்கோ போடா...

போடா???? மவளே வீட்டுக்கு வா... உனக்கு இன்னிக்கு சங்கு தான்...

சரி சரி ... டிஸ்டர்ப் பண்ணாத... Bye..

போய் தொல... But careful...

ஓகே ஓகே...

என்றபடி காலை கட் செய்தாள்..

எப்படி தான்வி இதெல்லாம்...?

இதெல்லாம் எனக்கு சகஜம் தான்... நீங்க சொன்னீங்களே அண்ணி... யாருக்கும் தெரியாம போரோம்ன்னு... இப்படி தான் ஃபர்ஸ்ட் டைம் நானும் ப்ரெண்ட்ஸ் கூட பாட்டிகிட்ட பொய் சொல்லிட்டு கிளம்பினேன்... இதே மாதிரி தான் நடந்துச்சு...

முதல்லயே போயிருக்கியா..? உன்னை ரொம்ப தங்கமான பொண்ணுன்னு நினச்சேனே!!!!! நீ என்னடான்னா இப்படி புளுகு மூட்டையாய் இருக்க...
என்று ஷிவா சட்டென்று சொல்லிவிட...

ஷிவா... வாயமூடு என்று அதட்டினாள் மீரா... எங்க இதை தான்வி தப்பாக எடுத்துகொள்ளுவாளோ என்ற பயத்தில்...

அப்பொழுது தான் தான் சொன்னது ஷிவா விர்க்கும் புரிய...

சாரி தானு... நான் சும்மா தான்...

விடுங்க அண்ணி...இதெல்லாம் ஒரு விஷயமா???  எப்பையுமே நல்ல பிள்ளையாக எல்லாம் இருந்த த்ரில் இருக்காது ஷிவா... ஆபத்தில்லாத ரூல்ஸ் ப்ரேக் எல்லாம் நான் பண்ணுவேன்... Adventures வயசுல த்ரில் இல்லைனா பியூட்டி யே இல்லை டி...

சரி தான்... நானும் இந்த மாதிரி எல்லாம் பண்ணிருக்கேன் .. என்று ஷிவா தன் அருமை பெருமைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்க... மீரா எல்லாவற்றையும் ஒரு சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்...

Meet you all at next update dears...

மறக்காம vote பண்ணுங்க பா... கமென்ட் பண்ணுங்க...

மறந்துடாதீங்க....


Continue Reading

You'll Also Like

328K 9.5K 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சம...
20.7K 861 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
39.6K 2.2K 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உ...
84K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...