எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.9K 637 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 48

889 21 15
By SindhuMohan

கௌஷிக் வீட்டிற்க்குள் நுழைய ,"அவன் வருவானா ? வராமல் எப்பொழுதும் போல ஏதேனும் காரணம் சொல்லி வராமல் இருந்து விடுவானோ?" என்ற பதட்டத்தில் இருந்த பாட்டியின் முகம் தெளிந்தது.

அதே நேரம் தன் romance சை முடித்துவிட்டு அகிலனும் படி இறங்கினான்.

ஹாய் அண்ணா... என்று விஷ்ணு வும் , அகிலனும் கௌஷிக்கை கட்டிக்கொண்டு வாழ்த்து சொல்ல , கௌஷிக்கும் வாழ்த்தினான். அதேபோல் தான்வி, மற்றும் பாட்டியின் வாழ்த்துக்களும் கௌஷிக்குடன் பரிமாறப்பட்டது.

"சரி உட்காரு கண்ணா ,உனக்கு பிடிச்ச பாதாம் அல்வா பண்ணீருக்கேன் ...கொண்டு வர்ரேன் "என்று சின்ன பிள்ளை போல பாட்டி அடுப்படிக்கு விரைந்தார்.

அதே விரைவில் அவனுக்கு தட்டில் அல்வாவை கொண்டு வந்து நீட்ட,அதை பார்த்த விஷ்ணு தன் கையில் இருந்த காலி தட்டை பார்த்தான்.

வந்ததிலிருந்து அது சாப்பிடுப்பா, அதை சாப்பிடுப்பா என்று மாற்றி மாற்றி தட்டில் வைத்து தன்னை விழுந்து விழுந்து கவனித்த பாட்டி, அவன் போலி நல்ல இருக்கு பாட்டி இன்னொன்னு கிடைக்குமா? என்று கேட்க... 

இதோ கொண்டு வர்ரேன் என்று நகர  போனவர் , கௌஷிக்கை கண்டவுடன் , அங்கு இவன் ஒருவன் இருப்பதையோ , இவன் கேட்டதையோ மறந்து,கௌஷிக்கை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

அவனது முக பாவனைகளை வைத்தே, அவன் எண்ணங்களை அகிலனும், தான்வியும் புரிந்து கொண்டு ,ஒரு கேலி சிரிப்போடு அவனை பார்த்தனர்.

மச்சா... என்ன பார்க்குற ?, இவ்வளவு நேரம் நம்மளை கவனுச்சவங்க ,இப்போ கண்டுக்கவே இல்லைனா...?

ஆமா டா...!!!!

பாட்டிக்கு கௌஷிக் அண்ணாவ கண்டுட்டா, நம்ம யாரும் கண்ணுக்கு தெரியமாட்டோம்.... உனக்கு இது தான் முதல் தடவைன்றனால இப்படி இருக்கு, எங்களுக்கு இது எல்லாம் பழகிடுச்சு...

அப்போ எனக்கு போலி...?

அட என் தீனிப்பண்டாரமே !!!என்பது போல அகிலன் விஷ்ணுவை  பார்க்க  , தான்வி அவன் தோளை இடித்தாள்.

அதான் உன் பக்கத்துல தானே உன் வருங்கால மனைவி இருக்கா... அவ கிட்ட கேளு மச்சான்...

அகிலனின் வார்த்தைகளால் , ஆவலாய் விஷ்ணு தான்வியை  பார்க்க... "உன் பக்கத்துல தான், உன்னோட பெஸ்ட் friend இருக்கான்... அவனை எடுத்திட்டு வர சொல்லு ,இல்லேன்னா காலு எல்லாம் நல்லா தான இருக்கு , நீ போய் எடுத்து சாப்பிடு "என்று அவனை முறைத்து விட்டு தன் மொபைலை கையில்  எடுத்தாள்  அவள் .

கேட்டியா  மச்சி , உன் தங்கச்சி சொல்றத....? என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு அகிலனை விஷ்ணு கேட்க

எல்லாம் உன் தலைவிதி மச்சான்... எங்கயும் தப்பிக்க முடியாது என்று தன் நண்பனின் காதில் மெதுவாய் கிசுகிசுத்தான் அகிலன்.

மேலே ரூமில் மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்த சிவாவிற்கு மெசேஜ் வந்தது.

koushik anna arrived ...come quickly... என்று தான்வி அனுப்பியிருந்தாள்...

அக்கா வா..கீழ போலாம்... கௌஷிக் மாமா வந்துட்டாங்க... இன்னிக்கு பெரிய சம்பவம் இருக்கு....

நீ..நீ முன்னாடி போ... நா..நான் வர்றேன்...

தன் தமக்கையை ஆழ்ந்து நோக்கியவள்... சரி சரி  ... சீக்கரம் வா...  என்று கூறிவிட்டு அங்கிருந்து விரைந்தாள்.

வருகிறேன் என்று சொல்லிவிட்டாலும், கௌஷிக் முன்பு இப்படி அலங்காரமாய் நிற்பதற்கு தயக்கமாக இருந்தது... 

இருந்தும்," இவர்கள் சொல்வது போல ஏதேனும் அதிசயம் நடந்து கௌஷிக் என்னை பார்க்க மாட்டானா ?" என்ற நற்ப்பாசையும் கூடவே எழுந்தது.

மெதுவாய் கீழே இறங்கி சென்றாள்.

ஹாய் மாமா , என்ற குரலில் விஷ்ணுவோடு பேசிக்கொண்டிருந்த கௌஷிக் நிமிர்ந்து பார்த்தான்... 

தனக்கு முன்னால் முகம் முழுக்க சிரிப்போடு நின்று கொண்டிருந்த சிவா வை பார்த்தவன் மெலிதாய் புன்னகைத்தான்.

ஹாய்... ஹாப்பி தீபாவளி... 

ஒஹ்ஹ..... ரொம்ப ரொம்ப ஹாப்பி தீபாவளி மாமா....

என்ன சிவா, உங்க மாமாக்கு  மட்டும் தான் வாழ்த்துக்களா...- எனக்கு இல்லையா..._

என் செல்ல அண்ணன் உங்களுக்கு இல்லாமையா.... _தீபாவளி வாழ்த்துக்கள் விஷ்ணு அண்ணா...

நன்றி நன்றி .... என் அழகு தங்கைக்கும்  என்னோட தீபாவளி வாழ்த்துக்கள்...

எப்போடா ரெண்டு பெரும் பாசமலரா மாறுனீங்க என்ற கேள்வியை அகிலன் முன்வைக்க... அதானே!!  என்று தான்வி அதை பின்பற்றி கேள்வியோடு புதிய பாசமலர்களை பார்த்தாள்.

எப்போ நீ விஷ்ணு அண்ணாக்கு ஒகே சொன்னியோ அப்போவே... இல்லைணா...?

ஆமா ஆமா... என்று விஷ்ணுவும் தலையாட்டினான்...

இப்படி இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க , அதை சிறு புன்னகையோடு சோபாவில் அமர்ந்து மொபைல்  பார்த்தபடி கௌஷிக் ரசித்துக் கொண்டிருந்தான். 

நொடிகள் கரைந்திருக்க...

அட , நம்ம மீரா வா அது....? வியப்பில் விஷ்ணு கேட்க..

 அந்த வார்த்தைகளில் கௌஷிக் நிமிர்ந்தான். 

அவர்களது பார்வை வந்த திசையை பார்த்தவன் , அழகு தேவதையாய் ஒரு வித தயக்கத்தோடு கீழே பார்த்தபடி படி இறங்கிக் கொண்டிருந்த மீராவை பார்த்து திகைத்தான்.

கோவை போனதிலிருந்து மீராவை பார்த்துக்கொண்டிருக்கிறான்.

முதல் முறை பைக்கில் அதிர்ந்த முகமாய் அவளை அருகில் பார்த்ததிலிருந்தே , அவள் அழகில் தன்னை தொலைத்திருந்தான்.

அப்பொழுது அது புரியவில்லை என்றாலும், போக போக தன்னை அவளிடம் தொலைத்ததை புரிந்து கொண்டது வேறு கதை...

அவள் சிரித்து பார்த்திருக்கிறான், கோவம் கொண்டு, அழுது என்று வெவ்வேறு பரிமாணங்களில் கண்டுள்ளான். அதுமட்டுமா...? 

ஆபீஸ் கிளம்பும் போது வெறும் பவுடர் பூச்சில் அன்றலர்ந்த மலராய் புன்னகைக்கும் மீரா.....வீட்டிற்கு வரும் போது வேர்த்துக்கொட்டி வாடி வதங்கி வரும் மீரா, 

காலை தூங்கி எழுந்தவுடன் முகம் கழுவாது ..வாயில் வடிந்த எச்சில் காய்ந்து போய், தலை கலைந்து தூக்கக் கலக்கத்தில் தலையை சொறிந்துகொண்டு காபிக்காக சமையல் அறையில் வந்து நிற்கும் மீரா....

வியப்பில் கண்கள் விரிக்கும் மீரா, குறும்பில் கண்கள் குறுக்கும் மீரா...  

என்று அவளது அனைத்துமே அவனுக்கு அழகு தான்... ஆனால் இன்று வானில் இருந்து இறங்கி வந்த தேவதையாய் இருப்பவளை பார்க்க பார்க்க அவன் மெய்  மறந்தான்... அதில் அவனது கையில் இருந்த IPHONE  கீழே விழுந்தது.

அந்த சில நொடிப்பொழுதில் சிறு அளவிலான மின்சாரம்  அவன் மனதில் தோன்றி உடம்பில் நரம்புகள் வழியே பாய்ந்தோடி இருந்தது.

ஆனால் அந்த போன் கீழே விழுந்த மெல்லிய சத்தில் நினைவுலகம் வந்தான்.

அந்த ஒலிக்கு ,மீரா முதற்கொண்டு...மீராவை பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணு,அகிலன் மற்றும் தான்வி  அவனிடம் திரும்பினர்...  அவன் மனதில் அவர்கள் எதிர்பார்த்த எண்ணங்கள் ஓடிக்கொண்டிருப்பதை அறியாமல்.

அவனும் அதை காட்டவில்லை... எப்பொழுதும் போல தன் உணர்வுகளை நொடிப்பொழுதில் அடக்கியவன், மொபைலை எடுத்துக்கொண்டு அதில் கண்களை ஓட்டினான்.

ஆனால் கொஷிக்கையே கண்கள் அகலாமல் பார்த்துக்கொண்டிருந்த சிவா,அவன் கண்களில் தோன்றி சட்டென்று அவன் மறைத்துவிட்ட மீராவிர்க்கான காதலை கண்டாள்.

மனதில் இருந்த பாரங்கள் இறங்க , மறுபடியும் கௌஷிக்கை பார்த்தாள்... இப்பொழுது அவன்  முகம் உணர்சிகள் அற்று இருந்தது...

இவர் ஏன் இப்படி இருக்காரு...? இன்னிக்கு வாயை பிடுங்கி எப்படியேனும் இவரோட மனசை வெளிய கொண்டு வரனும் என்று தோன்ற , மனதில் பிளான் உண்டாக ஆரம்பித்தது.

அதற்கு ஏற்றபடி... கௌஷிக் முன்னால் வந்து நின்றவள் ...

மாமா...

ம்ம்ம்...?

சரி சொல்லுங்க நான் எப்படிருக்கேன் சேரில...?

குட்

அவ்ளோதானா... ?

இது என்னடா தொல்லை என்பது போல கௌஷிக் பார்த்து வைக்க...

சிவா போடும் sketch தான்விக்கும் புரிந்துவிட அவளும் கௌஷிக் முன்வந்து நின்றாள்...

எனக்கும் சொல்லுங்க அண்ணா ... நான் எப்படி இருக்கேன் ...? என்று கேட்டவாறு ... உன் பிளான் புரிஞ்சிடுச்சு என்றவிதத்தில் சிவா வை பார்த்து கண்ணடித்தாள்...

 அவன் ஏதும் பேசாமல் இருக்க...

சொல்லுங்க அண்ணா... ?

குட்

அவனது பதிலுக்கு இரு பெண்களும் அவ்ளோதான என்று கத்த... !!!!!

ஒகே ஒகே...கூல்...ம்ம்ம்.. you both are looking beautiful ...ம்ம்ம்..  great... என்று தோள் குலுக்கினான்.

ஹே... என்று பெண்கள் இருவரும் குதிக்க ... கௌஷிக் உட்பட அனைவர் முகத்திலும் புன்னகை வந்தது....

இது தான் நேரம் என்று தோன்ற சிவா மீராவை கௌஷிக் முன்னாள் இழுத்து நிற்க வைத்தாள் .

சரி மாமா... உங்க friend எப்படி இருக்காங்க ?, அதையும் சொல்லிடுங்க என்று சந்தடி சாக்கில் விஷயத்திற்கு வந்துவிட ... அதே நேரம் பாட்டியும் ..வாங்க பிள்ளைங்களா சாப்பிடலாம் என்ற படி வந்தார்.

அதுதான் சாக்கு என்ற வாக்கில் கௌஷிக் பதில் சொல்லாமல் எழுந்து நடந்து போக ஆரம்பித்தான், சிவா ஒரு பக்கம் அவன் கையை பிடித்துவிட , இன்னொரு பக்கம் தான்வி பிடித்து தடுத்தாள்.

சொல்லிட்டு தான் போகணும் நீங்க...

இதுக விடாதுக போலயே என்று எண்ணியவன் மீராவை பார்த்தான்.

சரி சொல்றேன்... என்றவுடன் இருவரும் கையை விட்டனர்...

உதட்டை கடித்துக்கொண்டு ஒருவித தயக்கம் கலந்த ஆர்வத்தோடு அவனை பார்த்துக்கொண்டிருந்த மீரா , அவன் அவளை பார்த்தவுடன் தலை கவிழ்ந்தாள்.

எப்பயும் போல தான் இருக்கா... பட் makeup மட்டும் ரொம்ப ஜாஸ்த்தியா இருக்கு... என்று கூறியவன் அங்கிருந்து நகர்ந்தான்..

அவன் என்ன சொல்ல போகிறானோ ?என்று ஆர்வத்தோடு நின்று கொண்டிருந்த அனைவரின் முகமும் சட்டென்று சோகமானது... பாவமாய் மீராவை பார்த்தனர்..

அச்சோ... அவரு பொய் சொல்லிட்டு போறாரு... அக்கா வந்தவுடன் அவர் முகத்தை பார்த்தேன்... அப்படியே ரசிச்சு பார்த்தாரு... ஆனா சட்டுன்னு முகத்தை மாத்தீட்டாறு... 

உண்மையாகவா... ?

ஆமா பா... இதுல யாரவது பொய் சொல்லுவாங்களா... ?

கண்டிப்பாக இதை நான் நம்பறேன் என்றார் பாட்டி...

அனைவரும் கேள்வியோடு அவரை பார்க்க...

சேலை கட்டினாலே ,அது பெண்களுக்கு ஒரு வித அழகை கொடுக்கும்... அதும் தான் காதலிக்கும் பெண்ணை சேலைல பார்த்து, அந்த நொடில  மயங்காத காதலன் யாரும் இருக்க மாட்டாங்க...

ஒஹ்ஹ... அதனால தான் எங்களுக்கு சேலை எடுத்தீங்களா...?

முக்கியமா மீராக்காக , உங்களுக்கு grand ah  frock எடுக்கலாம்ன்னு இருந்தேன் ... அப்பறம் மனசை மாத்தீட்டு,அவளுக்கு எடுக்கறப்போ உங்களுக்கும் சேர்த்து சேலையே எடுத்திட்டேன் ...

கிரேட்பாட்டி.... என்று தான்வி, சிவா பாட்டியை கட்டிபிடிக்க..

very dangerous பாட்டி... நம்ம ஜாக்கிரதையா இருக்கணும் என்று விஷ்ணு அகிலன் காதை கடிக்க... அகிலனும் தலையாட்டினான். 

இன்னமும் முகம் தெளியாது சோகத்தோடு நின்ற தன் அக்காவை தோளோடு சேர்த்து அணைத்தவள் ... கவலை படாத அக்கா... மாமா கூடிய சீக்கிரமே உன்கிட்ட வந்து ... "நீ பாதி நான் பாதி கண்ணே" என்று பாட்டு பாடுவாறு பாரு என்று ராகம் இழுத்தாள்  சிவா .

தனக்காக கவலைப்பட்டு நிற்கும் இவர்களை மேலும் ஏதேனும் சொல்லி கஷ்டப்பட வைக்க விரும்பாமல்... ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக உதட்டில் தவழவிட்டாள்  மீரா.

அதற்க்கு பின்பு சாப்பிட்டு முடித்து அவன் கிளம்பும் வரை அவன் முன்பே தான் இருந்தும் , அவன் பார்வை ஒரு முறை கூட தன் மேல் விழவில்லை என்பதை உணர்ந்தாள்.

அதை மெய்பிக்கும் வகையில் சிவா மற்றும் தான்வியும் பொருமிக்கொண்டிருந்தனர்.

பயபுள்ள நம்ம கண்டுபிடுச்சிருவோம்னு ஒரு தடவை கூட அக்காவை பார்க்கலை பாரேன்.. 

உண்மைதான் சிவா ... அவசர அவசரமா சாபிட்டுட்டு வேலை இருக்குன்னு ஓடிட்டாரு என்று தான்வியும் புலம்பினாள்...

என்ன தான் தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற என்னை அவன் விலக்கினாலும், மனதில் ஆசை கொஞ்சமேனும் இருந்தால் என்னை இப்படி உதாசினப்படுத்த முடியுமா...? இல்லை என்னை இப்படி கேவலப்படுத்த முடியுமா...?

வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் மனதை ரணமாக்குகிறதே... அதை அவன் உணரவில்லையா...? இப்படி கூட ஒரு மனிதன் தன் மனதை மறைத்து ,என்னை கீழாக எண்ணி இருந்தும் நல்ல விதமாய் பழக முடியுமா...?

ஏன் இப்படி பண்ற கௌஷிக்.....? எதுக்காக என் lifeல  வந்த ...?எதுக்காக என்கிட்டே அவ்வளவு நெருங்கி பழகுன ...?என்னை  உயிரோடு சாகடிக்கவா...? என்னால முடியலை டா... நான் இங்கிருந்து கண்காணமல் ஓடிப்போக நினைத்தாலும், இதோ இவர்களை , இவர்கள் ஆசையை ஏமாற்றிவிட்டு போக முடியவில்லையே..!!!!

உன்மேல் இவ்வளவு நம்பிக்கையோடு இருக்கும் இவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறாய்... ?உன்னால் நானும் அல்லவா நெருப்பின் மேல் நிற்பது போல நிற்கிறேன்... என்று தன் முன் சிரித்து விளையாடிக்கொண்டிருந்த இரண்டு ஜோடிகளையும், அதை ரசித்துக் கொண்டிருந்த அம்பிகா பாட்டியையும் பார்த்தாள் மீரா.

தன் மனதின் வலியை போக்க வாய்விட்டு கூட அழமுடியாமல் இருக்கும் சூழ்நிலையில் கடவுள் தன்னை வைத்திருப்பதை எண்ணி நொந்தவள்...

ப்ளீஸ் விநாயகா  ... ஏதேனும் பண்ணேன்... என்னால முடியலை.. என்று மனதிற்குள்ளேயே ஆண்டவனிடம் குமுறினாள்.

போன அத்தியாயத்திற்கு நீங்க எல்லாரும் கொடுத்த சப்போர்ட் க்கு ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்... என்னால நம்பவே முடியலை இவ்வளவு பேரு என் கதையை விரும்பி படிக்கறாங்கன்னு...

keep on supporting me dears... 

இந்த தடவையும் மறக்காம vote பண்ணுங்க பா...

Meet you all at next update friends...

Continue Reading

You'll Also Like

338K 13.1K 63
சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....
84.2K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
49.8K 2.1K 16
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா...
39.6K 2.2K 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உ...