எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 636 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 46

318 7 8
By SindhuMohan

தங்களது அறையின் ஜன்னலின் வழியே ,வெளியே தெரிந்த தோட்டத்தை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள் மீரா.

அப்பொழுது தான் அறைக்கு வந்த சிவா , தான் வந்ததை கூட உணராமல் மரமாய் நின்றிருந்த தன் அக்காவை வருத்தத்தோடு  பார்த்தாள்.

பார்ட்டியில் இருந்து வந்ததிலிருந்தே அவளது முகமே சரி இல்லாமல் இருந்தது. ஒரு வேலை அந்த அர்ஜுன் ,  வசுந்தரா மற்றும் மாமா பத்தி சொன்ன விஷயத்தை நினைச்சு கவலைபடுகிறாள் போலவே... என்று நினைத்தவள் 

அக்கா.....

  என்ற தன் தமக்கையை அழைத்தாள்.

சிவாவின் குரலில் திரும்பி பார்த்த மீராவின் கண்கள் மெலிதாக கலங்கி இருக்க , அதை கண்ட சிவா , மீரா வின் அருகில் சென்று அவளை பின்னால் இருந்து அணைத்து , மீராவின் தோள் வளைவில் முகம் புதைத்தாள்.

என்ன ஆச்சு சிவா ?ஏன் ஒரு மாதிரியா இருக்க?

இத தான் நான் கேட்கணும்ன்னு வந்தேன் கா... நீ தான் ஒரு மாதிரியா டல்லா இருக்க... அர்ஜுன் சொன்னதை பத்தி கவலைப்பட்ரியா ?

ம்ஹ்ம்ம் ...இல்லை ...என்றவாறு மீரா தலை அசைக்க ...

பின்ன என்ன அக்கா, அப்பறம் ஏன் சோகமா இருக்க?

சோகமா எல்லாம் ஒன்னும் இல்லை... யோசனையாக இருக்கேன்..

என்ன யோசனை ...?

அது.... நம்ம வந்து ஒருவாரம் ஆகிடுச்சு , நான் ஆபீஸ் போகணும்ல ... இல்லேன்னா வேலை போய்டும் டா... அதான் ஊருக்கு கிளம்பலாம்ன்னு பார்க்கறேன்...

தன் அக்காவை இழுத்துக் கொண்டுபோய் கட்டிலில் அமரவைய்த்தவள், லூசா மீராக்கா நீ, வேலையாம் பெரிய வேலை ... கௌஷிக் மாமா நினைச்சா உன்னோட கம்பெனி மாதிரி ரெண்டு மூணு  கம்பெனி கூட  ஆரம்பிக்கலாம் ...

கௌஷிக் ஆரம்பிக்கரதுக்கும் நான் வேலைக்கு போறதுக்கும் என்ன சம்பந்தம் சிவா...?

அட என் அறிவு கொழுந்தே ... கௌஷிக் மாமா ஆரம்பிச்சா ,அவரு பொண்டாட்டி  நீ தானே அந்த கம்பனிகளுக்கு  ஓனர் அம்மா.. அதனால  உன்னோட கம்பெனி நியாபகத்தை மூட்டை கட்டி வெச்சிட்டு கௌஷிக் மாமாவின்  லவ்வ வெளிய கொண்டு வர்ற வழியை பாரு....

லவ்... அவன் தான் என்னை லவ் பண்ணவே இல்லையே ... நானே அல்லவா அப்படி ஒரு மனக்கோட்டையை இவ்வளவு நாள் கட்டி இருக்கிறேன்... நான் மட்டும் அல்லாது இவர்கள் அனைவரின் மனதை கூட கலைத்து வைய்த்திருக்கிரேனே.... இவர்களை எல்லாம் என்ன சொல்லி புரிய வைப்பேன் நான்... என்ற மலைப்போடு தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிவா வை பார்த்து புன்னகைத்தாள்.

சிரிக்காத கா...

சரி சிரிக்கலை, மணிஆச்சு ,வா போய் தூங்கலாம் என்ற படி படிக்கையில்  போய் அமர்ந்தாள் மீரா.

ம்ம்ம்...

என்றபடி தன் அக்காவின் அருகில் அமர்ந்தவள் , சிறிய தயக்கத்தின் பின் மெதுவாக அவளது விஷயத்தை ஆரம்பித்தாள்.

மீரா க்கா...

மொபைலில் அலாரம் வைத்துக் கொண்டிருந்தவள் தன் தங்கையை பார்த்தாள்...

என்ன டி... என்ன ஏதேனும் சொல்லனுமா...?

ம்ம்ம்ம்....ஆமா ... ஆனா அதை நீ எப்படி எடுத்துப்பண்ணு கொஞ்சம் பயமா இருக்கு...

அடேயப்பா... என்னைய பார்த்து நீ பயப்படற? ...இத நான் நம்பனும் என்று கேலி சிரிப்போடு சிவா வை பார்க்க , அவள் முகத்தில் தெரிந்த தீவிர தன்மையில் , தன் சிரிப்பை கைவிட்டாள் மீரா..

சரி  சொல்லு ...என்ன விஷயம்?

அக்கா, நான் அகிலனை லவ் பண்றேன் கா...

எ..எ.. என்னடி சொல்ற...? இ..இ..ப்ப.டி.. எப்படி...'

எங்கே தன் தங்கையும் , ஒரு தலை காதலில் விழுந்து , நொடிக்கொரு முறை வலியில் உழன்று  கஷ்டப்பட நேரமோ என்ற பதட்டம் அவளை ஆட்கொண்டது.

இங்க பாரு சிவா ,  அகிலன் நல்ல பையன் தான் ...ஆனா அவருக்கு வேற ஏதேனும் லவ் அப்பையர்ஸ் இருக்கலாம்... இல்லேன்னா அவருக்கு வர போற பொண்ணு இப்படீல்லாம் இருக்கணும்னு ஏதேனும் ஆசை மனசுல இருக்கலாம்...

அண்ட்  ஒரு பையன் அழகா இருக்கப்ப அவனை பார்க்கறது , சைட் அடிக்கறது எல்லாம் இந்த வயசுல எல்லாரும் பன்றது தான்... ஆனா அதுக்கு மேல லவ் எல்லாம் வேண்டாம் டா... அது ரொம்ப கஷ்டம் தங்கம்... என்று தன் தங்கையின் நாடியை பிடித்துக் கெஞ்சினாள்....

அக்கா...அக்கா... எங்களோடது ஒன் சைடு லவ் இல்லை...

அப்பறம்...?

டபுள் சைடு... சொல்லப்போன அகிலன் தான் என்கிட்டே இன்னிக்கு மதியம் ப்ரோபோஸ் பண்ணினாரு... உனக்கே தெரியும் அகிலன் ரொம்ப நல்லவர்ன்னு ... ஏமாத்த எல்லாம் மாட்டாருன்னு .... இல்லையா?

ம்ம்ம்... என்று மீரா தலையாட்டினாள்

அதனால நானும் ஒகே சொல்லிட்டேன்.அதே மாதிரி அப்பா அம்மா கிட்ட கூட அவரே பேசி சம்மதம் வாங்கறதாகவும் சொல்லிட்டாரு... மொதல்ல உன் கல்யாணம் ... அப்பறம் தான்வி து... அடுத்து நாங்க பண்ணிக்க போறோம்...

அவளது வார்த்தைகள் யாவும் மீராவிற்கு அதிசயமாக பட்டது... விளையாட்டுப் பிள்ளையாய் , சிறு பிள்ளை என என் கண்களுக்கு இவ்வளவு நாளாய் தெரிந்த பெண்... இன்று தன் வாழ்க்கையை பற்றி அவளே முடிவெடுத்து, தைரியாமாக கலக்கமில்லாமல் , குழப்பமில்லாமல் என் முன் பேசுகிறாளே...    

என்னை போல சிவா முட்டாள் அல்ல என்பதை  நினைத்து நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. அதே சமயம் தன்னை நினைத்து சுயபட்ச்சாபதாபம் அவளுக்குள் பெருக்கெடுத்தது.

அதை விழுங்கியவள்... தன் தங்கையை கட்டிப்பிடித்து தன் வாழ்த்துக்களை தெரிவித்தாள்.

I am so happy for you சிவா... ரொம்ப ரொம்ப சந்தோஷம் ...

தேங்க்ஸ் கா... நீ என்ன சொல்லுவியோன்னு பயந்திட்டு , உன்னை எப்படி சமாளிக்கறதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன்.. ஹப்பா ... எனக்கு பெரிய பாரமே இறங்கிடுச்சு...

ஹாஹா ... வாலு... சரி தூங்கு நேரம் ஆச்சு... good night அகிலன் dreamz...

அஹான்... உங்களுக்கும் கௌஷிக் மாமா dreamz அக்கா...

கௌஷிக் என்ற பேரை கேட்டவுடன் இவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் வடிந்து விட சிவாவிற்கு ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு ,  தலையனையில் முகம் புதைத்தாள் , தொண்டையில் வெளிவர இருந்த தன் கேவலை அடக்கும் பொருட்டு.

அடுத்த நாள் காலை , காலை உணவிற்கு அனைவரும் அமர்ந்திருக்க , பாட்டி நாளைய தீபாவளி பண்டிகையை எப்படி கொண்டாட போகிறோம், மேலும் தனது காலத்து தீபாவளி நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருக்க , அதை கவனித்தாலும் , ஒரு ஓரத்தில் கண்களினாலயே பேசிக் கொண்டிருந்த அகிலனையும் ,சிவா வையும்  அவர்களது முக பாவங்களையும் கண்ட போது மீரா விற்கு சிரிப்பே வந்தது.

என்ன அண்ணி ... உங்களுக்கும் இவர்களை பார்க்கும் போது சிரிப்பு தான் வருதா...?

தன் காதருகே கேட்ட தான்வியின் இந்த கேள்வியில் , தூக்கிவாரி போட கண்களில் ஒரு பயத்தோடு அவளை பார்த்தாள்.

என்ன அண்ணி என்னைய ஒரு வில்லி ரேஞ்சுக்கு பார்க்கறீங்க...? 

அ..அது அவங்க...

ரெண்டும் லவ் பன்னுதுங்கன்னு சொல்லவறீங்க தானே...?

ம்ம்ம்...

இது எங்கண்ணா வந்த நாளில் இருந்தே எனக்கு தெரியும்...

அப்போ இருந்தா ? என்று மீரா வாயை பிளக்க...

ஆமா அண்ணி , அன்னிக்கே ரெண்டும் ஒருத்தர ஒருத்தர் முழுங்கற மாதிரி பார்த்தாங்க... அப்பியே இப்படி ஒரு நாள் வரும்ன்னு நினச்சேன்.. அதே மாதிரி நடந்திருச்சு...

ம்ம்ம்ம்...

உங்களுக்கு எப்போ தெரியும் ..'

நேத்து தான் சிவா சொன்னா... 

எங்கிட்ட ரெண்டு பேருமே சொல்லலை அண்ணி... பாருங்க இவங்களை என்ன பண்றேன்னு என்று பொருமியபடி தான்வி சாப்பிட ஆரம்பித்தாள்.

அன்றும் எப்பொழுதும் போல சுற்றி அடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பெண்களை பாட்டி அவர் அறைக்கு கூப்பிட மூவரும் சென்றனர்.

சென்றவர்களுக்கு ஒவ்வொருத்தர் கைகளிலும் ஒரு பேகையும் , ஒரு நகை பெட்டியையும் கொடுக்க , மீரா, சிவா என்ன இது என்பதாய் பாட்டியை பார்க்க ...அதற்குள் தான்வி தன் கையில் கொடுத்ததை பிரித்திருந்தாள். 

வாவ் பாட்டி சூப்பர் அஹ் இருக்கு...என்று தன் கையில் வைத்திருந்த புடவையை  விரித்து பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கு பிடித்த பிங்க் நிற பார்டரில் தங்க  நிற பட்டுப்புடவை கண்களை பறித்தது.

மீராவும் சிவாவும் தங்கள் பைகளை பிரிக்க அதில் தான்விக்கு எடுத்திருந்த புடவை போலவே, பார்டர் மட்டும் சிவாவிற்கு அவளுக்கு பிடித்த பச்சை நிறத்திலும், மீராவிற்கு அவளுக்கு பிடித்த சிவப்பு நிறத்திலும் இருந்தது.

அடுத்து நகைபெட்டியை திறக்க மூவருக்கும் ஒரே போல அந்த புடவைக்கு தேவையான நகை செட்டுகள் இருந்தது.

பாட்டி its simply beautiful ....i like it very much பாட்டி.... என்று தான்வி அவைகளை ஆசையாய் பார்க்க... மீராவும் ,சிவாவும் அமைதியாய் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தபடி அமைதியாய் நின்றனர்...

என்னடா உங்க ரெண்டு பேருக்கும் சேலை பிடிக்கலையா ...? வேற டிசைன் வேண்டும் என்றால் மாத்திக்கலாம் டா... நம்ம கடைல தான் எடுத்தேன்.... தயங்காம சொல்லுங்க...?

அந்த பட்டுப் புடவையை பார்த்தாலே அது மிகவும் விலை உயர்ந்தது என்று சொல்லிவிட முடியும் , மேலும் நகைகள் என்று பார்த்தால், லட்சக்கணக்கில் இருக்கும்.... இதை எண்ணியே சகோதரிகள் பேசாமல் நின்றிருந்தனர்.

என்ன டா சொல்லுங்க?

இது எல்லாம் எங்களுக்கு எதுக்கு பாட்டி, எங்களுக்கு வேண்டாம்...

நாளைக்கு  தீபாவளி, நோம்பிக்கு வீட்ல எல்லாருக்கும் துணி எடுக்க மாட்டோமா ...? அதான் எடுத்திட்டு வந்தேன்...இதுல வேண்டாம்னு சொல்லரதுக்கு என்ன இருக்கு ?

தான்விக்கு எடுத்தது சரி பாட்டி... எங்களுக்கு எதுக்கு.... அதும் இவ்வளவு காஸ்ட்லியா...'

இங்க பாருங்க டா... எனக்கு தான்வி எப்படியோ நீங்களும் அது போல தான்... அதனால எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காம இதை ஏத்துக்கோங்க... 

இல்ல பாட்டி... இது ரொம்ப ... விலை...

விலைய பார்க்காத மீரா அண்ணி, பாட்டியோட பாசத்தை பாருங்க... ஏத்துக்கோங்க... சிவா நீயாது அண்ணி கிட்ட சொல்லு...

என்ன சொல்வது என்று தெரியாமல் சிவா தன் அக்காவின் முகத்தை பார்த்தாள்...

வாங்கிக்கோடா... என்று பாட்டியும் முகத்தை சோகமாய் வைத்துக் கேட்க...

அப்டினா சேலை மட்டும் எடுத்துக்கறோம்... நகை எல்லாம் வேண்டாம் பாட்டி...

சரி வேண்டாம்... நாளைக்கு மட்டும் போட்டுக்கோங்க... அதுக்கப்றம் என்கிட்டே இருக்கட்டும் ... உங்க கல்யாணத்தப்போ இதையே உங்களுக்கு போட்டர்ரேன்.... அப்போ வந்து டிசைன் நல்லா இல்ல... ஓல்ட் மாடல்ன்னு  சொல்லக் கூடாது ... என்ன சரியா? என்று பாட்டி பொய்யாய் மிரட்ட ...

மீரா வும் ,  சிவா வும் புன்னகைத்தனர்.... அதில் மீராவினது வெற்றுப் புன்னகையாகவும், சிவாவினது வெட்கப் புன்னகையாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அச்சோ ... நைட்குள்ள  எப்படி ப்ளவுஸ் தெக்கறது... 'என்று சிவா கவலைப்பட...

இப்போ எல்லாம் யாருங்க மேடம் ப்ளவுஸ் எல்லாம் ஸ்டிச்பண்றா...? எல்லாமே ரெடிமேட்தான்... இன்னும் நேரம் இருக்கு ,மூணு பேரும் போறோம் மாட்சிங் ப்ளவுஸ் எடுக்கறோம் , அப்படியே  பியுட்டி பார்லர் போறோம் , நாளைக்கு மின்றோம்... என்றபடி தான்வி சிவா ,மீரா வை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல...

நேரத்தோட வீடு வரணும்...இல்லேன்னா சோறு போட மாட்டேன் என்ற பாட்டியின் குரல் காற்றோடு கரைந்தது...

ம்ம்ம்ம்....  ஷாப்பிங்ன்னு  ரெண்டு பொண்ணுங்களையும் என்ன பாடுபடுத்தப்போராளோ இந்த தான்வி... என்று சலித்தபடி தன் போனை எடுத்து கௌஷிக்கிர்க்கு கால் பண்ணினார்.

அவர் ஒன்று நினைத்து நாளை கௌஷிக்கை நோம்பிக்கு  அழைக்க , நாளை நடக்கபோவதோ வேறு ஒன்று... என்ன அது... ?அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

Sorry for the late update dears... 

Meet you all at next update guys... 

Dont forget to vote and comment friends... it means a lot to me...

Continue Reading

You'll Also Like

131K 4.7K 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வ...
23.7K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
328K 9.5K 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சம...
12.6K 1.2K 33
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...