எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 636 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 45

569 6 12
By SindhuMohan

போன அத்தியாயத்தில் பார்த்த அதே  பார்ட்டி நடக்கும் இடம்... 

விஷ்ணு மற்றும் தான்வியின் பாடலும் ஆடலும் முடிந்த பின்பு சற்று நேரம் கழித்து.

சரி சொல்லு அகி , நீயும் விஷ்ணுவும் சண்டை  போடறத  பார்த்தோம், என்னமோ ஏதோன்னு நாங்க பயந்து போய்ட்டோம் .ஆனா மறுபடியும் கொஞ்ச நேரத்துல இப்படி டான்ஸ் எல்லாம்...   

எதுக்காக சண்டை அப்பறம் எப்படி சேர்ந்தீங்க என்று தன் மனதில் இவ்வளவு நேரம் அரித்துக் கொண்டிருந்த  கேள்வியை தான்வி தன் அண்ணனை பார்த்துக் கேட்டாள்.

என்னடா சொல்லட்டா? என்று ஒரு நமட்டு சிரிப்போடு தான்வியின் அருகில் சோபாவில் அமர்ந்து ஸ்வீட்டை வாயில் வைக்கப் போன விஷ்ணுவை பார்த்து அகிலன் கேட்க, விஷ்ணு பதறினான்.

அதைக் கண்டு அங்கு அமர்ந்திருந்த கௌஷிக் புன்னகையோடு நிறுத்திக் கொள்ள, தருணும் பிரகாஷும் கொல்லென்று சிரித்துவிட்டனர். கூடவே அர்ஜுன்னும்.

அவர்களது சிரிப்புக்கு அர்த்தம் புரியாது பெண்கள் மூவரும் குழப்பத்துடன் அவர்களை பார்த்தனர்.

சொல்லிட்டு சிரிங்க பிசாசுகளா என்று தான்வி கடுப்புடன் கத்தினாள்.

அது ஒண்ணுமில்லை தாணு குட்டி , ட்ரிங்க்ஸ் பண்ணி ஏண்டா உடம்ப கெடுத்துக்கரீங்கன்னு கேட்டேன்.. அதுக்கு கோவப்பட்டு திட்டிட்டானுங்க... நல்லதுக்கு காலமே இல்லை பாரேன்.... என்று விஷ்ணு வேகவேகமாய் கூறிவிட்டு... வா டா நம்ம போய் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடலாம்  என்றபடி தான்வி கையை பிடித்து தூக்கினான்.

இதெல்லாம் நம்ப அவ என்ன குழந்தையா விஷ்ணு சார்...நீங்கள் அமருங்கள் என்று அகிலன் விஷ்ணுவை பிடித்து தன்பக்கம் இழுத்து அமர்த்தினான்.

அதே போல விஷ்ணுவின் வார்த்தைகளை அங்கிருந்தவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தான்.

அதை கேட்டவுடன் தருணும் பிரகாஷும் விஷ்ணுவை குத்த ஆரம்பித்தனர் .

ஒரு பாட்டில் பீர்ர ஒரே மூச்சுல குடிக்கற குடிகாரன் நீ... நீ எங்களை குடிக்க வேண்டாம்னு சொன்னியா ... மவனே ...

தான்வி , இவன் வந்து அகிகிட்ட என்ன கேட்டான் தெரியுமா...? உன்ன இவன் லவ் பண்றதா உன்கிட்ட  சொல்லி, உன் சம்மதத்தை வாங்கி கொடுக்க சொன்னான்... அதான், நீயே சொல்லு டா என்று நாங்க சொன்னதுக்கு ,லவ்க்கு கூட ஹெல்ப் பண்ணாத நீங்க எல்லாம் ஒரு நண்பர்கலான்னு? சார் கோவிச்சிட்டு போனாரு.

அடப்பாவி என்று தான்வி விஷ்ணுவை பார்த்து முறைக்க , அவளைப் பார்த்து அசட்டுச் சிரிப்பொன்றை பதிலளித்தான் விஷ்ணு.

இவன் கல்யாணத்துக்கு  அங்கிள் ,ஆன்ட்டி , நம்ம பாட்டி, கௌஷிக் அண்ணா, அகி, நாங்கன்னு எல்லாரும் ஹெல்ப் பண்ணிட்டோம், ஆனா  சார் லவ் ப்ரோபோசல் கூட பண்ண மாட்டாராமா...

அப்போ... இன்னிக்கு ... அகி... அந்த மாப்பிள்ளை... தான்வி புரிந்தும் புரியாமலும் வினவ..

இவன் தான்... உனக்கு surprise கொடுக்கராறாம... வந்து நின்னுட்டு உன்னிடம் பேசவே பயந்து செத்தான். எப்படியோ தைரியம் கொடுத்து ப்ரோபோஸ் பண்ண வெச்சோம்... ஒரு அண்ணனா சொல்றேன் இவன் உனக்கு கண்டிப்பா வேணுமான்னு... ?ஒரு தடவைக்கு  பல தடவை யோசிச்சுக்கோ....

டேய் பாவி... வாயமூடுடா... என்று விஷ்ணு அலற 

அகி சொன்னதுல என்ன தப்பு... surprise கொடுக்கற முகரகட்டைய பாரு... நான் எவ்ளோ பயத்துல இருந்தேன் தெரியுமா? ... என்றபடி விஷ்ணுவின் முடியை பிடித்து ஆட்ட ஆரம்பிக்க , விஷ்ணு  வலியில் கத்த , அங்கு அதைக்கண்டு அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

அதே நேரம் சிரிப்போடு  மீரா கௌஷிக்கை நோக்க  அவனும் கண்சிமிட்டாமல் இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது அந்த பார்வையில் அவள் முகம் சிவந்தது. அதே நேரம் மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரமும் விலகியது.

கௌஷிக் என்னை தான் விரும்புகிறான். அர்ஜுன் ஏதோ தெரியாமல் ,புரியாமல் பேசிவிட்டார். என் கௌஷிக் மனது எனக்கு தெரியாதா... அதை உணர்ந்தும்  மனதை குழப்பிக் கொண்டேனே... பைத்தியம் தான் நான்... என்று மனத்தில் தன்னையே திட்டிக் கொண்டாள்.

ஆனால் பார்வை மட்டும் , வேறுபுறம் தான் பார்த்தவுடன் திரும்பி விட்ட கௌஷிக் மீதே நிலைத்து நின்றிருந்தது. 

பேபி நம்ம இங்க இருக்க வேண்டாம் .... கொஞ்ச நேரத்துல உன்னை கொலைகாரி ஆக்கிடுவானுங்க ... வா எதுவா இருந்தாலும் தனியா போய் பேசிக்கலாம் என்றபடி தன்னை அடித்துக்கொண்டிருந்த  தான்வியை  இழுத்துக்கொண்டு டான்ஸ் ஆடுபவர்கள் இடையே சென்றான்.

தப்பிச்சுட்டான் டா ... என்று அங்கிருந்தவர்கள் சோகமாகினர்.

சரி இருந்த ஒரு என்டேர்டைன்மேன்ட்டும் டான்ஸ் பண்ண போய்டுச்சு...நாமளும் போய் ஜோதில கலந்துக்கலாம் என்றபடி அர்ஜுன் எந்திரிக்க...

பாருடா மனுஷன் பொண்டாட்டி கூட இல்லைன்றனால என்னம்மா குஷியா இருக்காரு என்று கலாய்த்தபடியே  சகோதரிகளையும் இழுத்துக் கொண்டு நண்பர்கள் கூட்டம் பார்ட்டிக்குள் கலந்தது.

கௌஷிக் மட்டும் அமைதியாய் அமர்ந்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் சிவா இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஆடிக் கொண்டிருந்த மீரா ,தான்வி இவர்களுடன் சேர்ந்தவுடன் ,சிவாவையும் தான்வியையும் விட்டு  விட்டு இவள் அங்கிருந்து கழண்டு கொண்டாள்.

ஒரு chairரை பார்த்து அமர்ந்தவள் கண்கள் கௌஷிக்கை தேடி அலைந்தது .

ஒரு இடத்தில் அவனை கண்டுவிடவும் பார்வை அவனிடம் நிலைத்து நின்றது.   அவன் வசுந்தராவுடன் ஏதோ மும்மரமாக பேசிக்கொண்டிருந்தான்.

முதல் முறை பார்க்கும் போது அவள் நெஞ்சில் இருந்த வலி இப்பொழுது ஏற்படவில்லை. கண்களில் காதல் மட்டுமே கசிய மெய்மறந்து அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

எதர்ச்சியாய் திரும்பிய கௌஷிக்கின் கண்களும் இவளை சந்தித்தது.அனால் இவளது பார்வையை கண்டவுடன் அவ்வளவு நேரம் மலர்ந்திருந்த அவனது முகம் கடுகடுப்புக்கு சென்றது. சட்டென்று பார்வையை வசுந்தராவிடம் திருப்பினான்.

ஆனால் காதல் கொண்ட மீராவின் கண்களுக்கு அவனது இறுகிய முகம் மூளைக்கு உரைக்கவில்லை. அதற்குள் ஆடிக்கொண்டிருந்தவர்கள் மீராக்கும் , கௌஷிக்கிர்க்கும் இடையில் வர , இவளது பார்வை தவம் கலைந்தது.

அங்கு ஆடிக்கொண்டு இருந்தவர்களை பெப்சியை சிப்பிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தவள் அருகில் ஒருவன் வந்து நின்றான்.

ஜீன்ஸ் ஷர்ட்டும் பேண்ட்டும் அணிந்திருந்தான் .... சர்ட்டின் பட்டன்களில் கடைசி ஒன்று மட்டும் போட்டிருக்க... அவனது வெளிறிய மார்பில் ஒரு பெரிய size எழும்புக்கூடு டாலரோடு கூடிய ஒரு செயின் தொங்கிக் கொண்டிருந்தது.

அவனை நிமிர்ந்து பார்க்க அவனும் அவளது அருகில் அமர்ந்தான்..

Why are you sitting here babes...? அவனது குழரலான கேள்வியிலேயே அவன் நன்கு குடித்திருக்கிறான் என்பது மீராக்கு தெரிந்தது... இருந்தும் ... அவனது கேள்விக்கு சட்டென்று ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியாமல் திணறியவள்... 

ஒருவாறு சமாளித்து...  I dont டான்ஸ் அஹ்ஹ்ஹ ?இல்ல i cant டான்ஸ் அஹ்ஹ்ஹ?... என்று மறுபடியும் குழம்பி பின்பு ... no i am resting ...you go and dance.. என்று சொல்லிமுடித்தாள்.

அவளது உடைந்த ஆங்கிலத்தை கேட்டவன் , அவளது முகத்தில் தெரிந்த அப்பாவித்தனத்தை கண்டவன், ஒரு கோணல் சிரிப்போடு அவளது இடக்  கையை பிடித்தான்.

அவனது அந்த செயலில் மிரண்டு போன மீரா வலக்  கையில் இருந்த டம்ப்ளரை கீழே வைய்த்துவிட்டு அவனது விரல்களை தன் கைகளிலில் இருந்து விலக்க முன்றாள்...இருந்தும் அவனது முரட்டுப்பிடியில் இருந்து விடுபட முடியவில்லை அவளால்.

கண்களை உயர்த்தி யாரிடமேன்னும்  உதவி கேட்கலாம் என்று பார்த்தால் ,எல்லோரும் அவர் அவர்  கொண்டாட்டத்தில் ஆழ்ந்து இருந்தனர். என்ன செய்வது என்ற ஒரு வித பதட்டத்தில் கையை விடுவிக்கும் முயற்ச்சியில் இருந்தபோது, அவனது கைகளே தளர ஆரம்பித்தது.

சட்டென்று இவள் மேல் இருந்த கையை விலக்கி விட்டு அவளுக்கு பின்னால்  பதட்டமாக பார்த்தபடி அவன் செல்ல,  திரும்பி பார்த்தாள்.

வேற யாரு ... நம்ம ஹீரோ தான்.

கௌஷிக் , திரும்பித் திரும்பி பார்த்தபடி  கூட்டத்தில் கலக்கும் வரை  அவனை கோபப்பார்வை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன் ,  அவன் காணமல் போன பின்பு மீராவை பார்த்து நடந்து வந்தான்.

அவனை பார்த்தவுடன் மலர்ந்த முகத்தை மறைக்காமல் அவனை பார்த்து புன்னகைத்தாள்.

அவனது முகத்தில் அதற்கான எந்த ஒரு பாவமும் ஏற்படவில்லை என்றாலும் , அதை கண்டுகொள்ளவில்லை  அவள். தன் அருகில் இருந்த சேரில் கௌஷிக் வந்து அமர டேபிளில் இருந்த கூல் ட்ரிங்கை எடுத்து உறுஞ்சினாள்.

வேணுமா ?என்ற தினுசில் டம்ப்ளரை அவனை நோக்கி நீட்ட , அவன் தலையை மறுப்பாய் அசைத்தான்.

மறுபடியும் இன்னொரு தடவை உறுஞ்ச.. அவளை பார்த்து கௌஷிக் கேட்டான்....

என்ன இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுதே ?... என்ன விஷயம்?

அதுவா... ரொம்ப நாலா மனசுல ஒரு குழப்பம் இருந்தது... அது இன்னிக்கு விலகிடுச்சு அதான்...  ஆனா என்ன குழப்பம்னு கேட்காத ... நான் சொல்லமாட்டேன்...

ஒஹ்ஹ்ஹ... உன்னோட குழப்பம் தீர்ந்திடுச்சு ... பட் என்னோடது இன்னும் தீரலை...

உன்னக்கு குழப்பமா கௌஷிக்..? என்னன்னு சொல்லு நான் முடுஞ்சா தெளியவைக்கரேன்... என்று  அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.

எஸ்...உன் ஒருத்தினால தான் அதை தீர்த்து வைக்க முடியும்...

அப்படியா... என்ன அது ?என்று கேட்டு விட்டாலும் எங்கே "என் மனசு ஏன் உன்னிடம் சரணடைந்தது கண்மணி? "என்று கேட்டு விடுவானோ என்ற எண்ணத்தில்  அவளது இதயம் முரசாய் ஒலித்தது. என்னிடம் ப்ரோபோஸ் பண்ண  நல்ல இடமே கிடைக்கலையா கௌஷிக்?...  என்று அவன் தன் சந்தேகத்தை கேட்கும் முன்பே இவளது மூளை வாயு வேகத்தில் எண்ணங்களை உலாவவிட்டது.

அந்த வசுந்தரா  பொண்ண பார்த்தேல்ல...

ஹ்ம்ம்....
அவளைப் பற்றி இப்பொழுது என்ன சொல்லவருகிறான்..?

அவளைப் பற்றி இங்க எல்லாரும் சொல்லிருப்பாங்க ..இல்லையா?

ஆமா...

அவளைப்பற்றி நீ என்ன நினைக்கற?

ம்ம்ம்... ரொம்ப அழகான பொண்ணு, அறிவாளி, திறமைசாலி, பணக்கார family ய சேர்ந்தவங்க அதுமட்டும் இல்லாம நல்ல பொண்ணா தெரியுது... ஏன் கௌஷிக்..?

ஹ்ம்ம்.. அப்படி பட்ட பொண்ணே,  நான் என்ன சொல்லுவேனோன்னு தயக்கத்துல   ரெண்டு வருஷம் டைம் எடுத்து ,தன்னோட அப்பா அம்மா மூலமாக என்னை விரும்பறதா சொன்னா...

ஆனா நீ... அவளை விட ஒரு விஷயத்துல கூட சிறந்தவள் இல்லை... ஏன் அவள் அருகில் கூட இல்லை... அப்படி இருந்தும் எந்த தைரியத்தில் என்னை விரும்பறதாக சொன்னாய்...? எனக்கு நீ எந்த விதத்தில் பொருத்தமாக இருப்பீன்னு உனக்கு தோனுச்சு...? ப்ளீஸ் என்னோட இந்த சந்தேகத்தை மட்டும் தீர்த்து வைய்யேன்... என்றபடி அவள் முகத்தை பார்த்தான்.

அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் மனதில் கட்டியிர்ந்த காதல் கோட்டையை நொருக்குவாதாய் இருக்க , மூளை சிந்திக்கும் திறனற்று உறைந்து போய்விட , கண்கள் மட்டும்  தன் முன்னால் அமர்ந்திருந்த கௌஷிக்கையே பார்த்தபடி  இருந்தது.

இவ்வளவு நேரம் முகத்தில் குடியிருந்த புன்னகை விலக , வெளிறிப்போய்  தன்னை வெறித்து பார்த்தபடி உறைந்து அமர்ந்திருந்த அவளின் வலி அவனுக்கும் புரிந்தது...  

என்னதான் அவளை விட்டு விலக நினைத்தாலும் , அவளை காணும்போது மனம் என்னமோ அவளிடம் சாய்ந்துதான் விடுகிறது அவனுக்கு... இன்றும் அது போல தான் வசுந்தராவுடன் தான் பேசிய போது வாடி போனது மீராவின் முகம்...

சரி ,இதுவும் நல்லது தான். அவள் தன்னை தவறாக நினைத்து விழக இது உதவும் என்று தோன்ற வசுந்தராவுடன் நெருக்கமாகவே தன்னை இணைத்துக்கொண்டான். அதே போல அர்ஜுன் இவர்களிடம் தங்களை காட்டி ஏதோ சொல்ல, அதை கேட்ட மீராவின் முகத்தில் அதிர்ச்சியை கண்டவன், தன்னையும் வசுந்தராவைப் பற்றியும் பரவும் பேச்சுக்களை தான் அவன் சொல்லிருக்கிறான் என்பது புரிந்தாலும் , அதை அவர்களுக்கு தெளிவுபடுத்த கௌஷிக் விரும்பவில்லை, மீரா தன்னை மறந்தால் சரி என்ற எண்ணத்தில். 

ஆனால், தான்வியும் விஷ்ணுவும் சண்டையிடும் போது , சிரித்துக் கொண்டிருந்த அவளிடம் இருந்து பார்வையை விலக்க முடியாமல் பார்த்து வைக்க, அதை மீராவும் கண்டது தான் தவறாக போனது.

அவ்வளவு நேரம் அவள் முகத்தில் இருந்த குழப்பங்கள், கவலைகள் விலகி  முகம் மலர்ந்தது. ஆனால் தானே மீரா தன்னை விலக இருந்த சந்தர்ப்பத்தை கெடுத்து விட்ட முட்டாள் தனத்தை எண்ணி நொந்து போனான்.

அதை எப்படியேன்னும் சரி செய்து விடும் நோக்கத்தோடு , மீராவிடம்  வெறுப்பை ஏற்படுத்த பேசியதே அந்த வார்த்தைகள். என்னதான் அவளுக்கு அது கஷ்டத்தை கொடுக்கும் என்று தெரிந்து பேசி இருந்தாலும் ,  ஏனோ அவளது முகத்தில் தெரிந்த வேதனையை பொறுத்துக் கொள்ள அவனால் முடியவில்லை.

மீரா.... நா... என்று ஏதோ சொல்ல போனவன்....

அக்காஆஆ... இங்க எங்க உட்கார்ந்திருக்க ... வா வா... என்றபடி மீராவை சிவா இழுத்துச் செல்ல  , பொம்மையாய் அவளது இழுப்புக்கு போய்க் கொண்டிருந்த மீராவை‌ பார்த்து சொன்னான்.

I AM SO SORRY டா... 

Meet you all at the next update friends

Don't forget to vote and comment dears..

Continue Reading

You'll Also Like

75.7K 3.6K 81
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்க...
328K 9.5K 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சம...
134K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
39.6K 2.2K 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உ...