எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.5K 635 242

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 43

286 7 6
By SindhuMohan

மச்சி .... இங்க வாடா...

என்ன டா... இப்படியா பச்ச புள்ள மாதிரி குடிக்கரது...

ஆமா டா... இவன் பிஎச்டி வாங்கிருக்கான்... குடிக்கரதுல...

அந்த சரக்க சொல்லு மச்சி...

என்று அந்த club பில் அகிலன் மற்றும் அவனது உற்ற நண்பர்களான தருண் , பிரகாஷுடன்  இன்னும் சில நண்பர்களும், கூடவே அர்ஜுன்(koushik's PA) என்று கூட்டமே ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசிக்கொண்டும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்  கொண்டும் இருந்தனர் .

அங்கு சத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்த ஹிந்தி பாடலும் ,அதற்கு ஏற்றார் போல ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்த இளைஞர், இளைஞிகள் பட்டாளமும் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லாமல் இருந்தது.

இதை எல்லாம் 'ஆ' என்று பிளந்த வாயோடு சிவா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க , அங்கே உம்மென்று தன் அணைந்திருந்த மொபைலையே பார்த்துக் கொண்டிருந்த தான்வியை கவலையோடு பார்த்தாள் மீரா.

எப்பையும் சந்தோஷமாக இருப்பவள், இன்று முகம் வாடி ,ஒரு இறுக்கத்தோடு இருப்பது மீராவிர்க்கு பொறுக்கவில்லை.

தான்வி நீ விஷ்ணு க்கு கால் பண்ணு... விஷயத்தை சொல்லு....

அது சரி வராது அண்ணி...

ஏண்டா?

அவன் என்னை லவ் பன்றானானே கன்பார்மா தெரியாது அண்ணி, எதோ பார்த்தான் , பேசினான்... அதை வெச்சு நானே முடிவு பண்ணிட்டேன்... நானே ஆசைய வளர்த்துக்கிட்டேன்... அப்படி இருக்கப்ப , நான் என்னன்னு அவனிடம் பேசறது.

ம்ம்... நீயே... நோ நோ... அது சரி வராது...

ஆமா அண்ணி, நானே என் காதலை சொல்றது சரி வராது... ஏன்னா அகியோட best friend விஷ்ணு. அவனுக்கு இந்த மாதிரி எண்ணம் இல்லாம நான் சொல்லி அவன் வேண்டாம்னு சொல்லிட்டா, அப்பறம் பார்க்கும் போது எல்லாம் ரெண்டு பேருக்கும் சங்கடம் தானே...

ம்ம்...என்றவாறு , அடுத்தது என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியானாள் மீரா.

இவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது பாட்டி சொல்லியது மனதில் ஓடியது.

தான்வி... உனக்கு ஒரு சம்பந்தம் வந்திருக்கு, அவங்க வீட்ல இருந்தே கூப்பிட்டு பேசினாங்க... எனக்கு , அகிக்கு, கௌசிக்கு எல்லாருக்குமே பையனை பிடிச்சிருக்கு, பையனுக்கும் உன்னை பிடிச்சிருக்காம்...இன்னிக்கு ஹோட்டல்ல உன்னை மீட் பண்ண வரான் ... பார்த்து பேசிட்டு உன் முடிவை சொல்லு...

பா...பாட்டி... என்ன சொல்றீங்க???யார கேட்டு இந்த மாதிரி.... மீட்டிங்... first of all.. எனக்கு இப்போ கல்யாணத்துல எல்லாம் இஷ்டம் இல்லை... சோ பிளீஸ் ... இந்த பேச்சை இதோட விடுங்க...

அவங்க குடும்பம் நல்ல இடம் டா... நம்மளா தேடினா கூட இந்த மாதிரி தங்கமான பையன் கிடைக்க மாட்டான்... அதான் ...உனக்கு பிடிச்சா தான் ஏதுமே... ஆனா எங்க எல்லாருக்குமே இந்த பையனை பிடிச்சிருக்கு ... சோ "இப்போ கல்யாணம் வேண்டாம் "அப்படின்னு ஒரு எண்ணத்தோடு  இல்லாமா உனக்கு அவனை பிடிச்சிருக்கா ன்னு  முடிவு பண்ணு ... சரியா..?

ம்ம்... என்று உள் போன குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள் தான்வி.

எங்கே இந்த கௌசிக் ? அவன் வந்தவுடன் தான்வியின் பிரட்ச்சனையை அவனிடம் சொல்லி  விஷ்ணு விடம் பேச சொல்ல வேண்டும் என்று முடிவோடு கௌசிக்கின் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள் மீரா.

அவளை ரொம்ப நேரம் காக்க வெய்க்காது அவனும் வந்து சேர்ந்தான்.

க்ரே கலர் tshirt , அதற்கு மேல பிரவுன் கலரில் கோட், கிரீம் கலர் pant என்று blazzerரில் வந்தவனை கண்டவள் கண்கள் வேறு எங்கும் அகலவில்லை.

இவள் அவனை முதன் முதலாக blazzer ரில் பார்க்கிறாள், அந்த ஸ்லிம் ஃபிட் blazzer அவனது உடற்கட்டை எடுத்துக் காமித்தது... coolers சை அவனது ட்ஷிர்ட் டில் கழுத்துப் பகுதியில் சொருகியிருந்தான்.

அவனது 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் பிளாக் வாட்ச் கட்டியிருந்த இடது கையை pant பாக்கெட்டில் விட்டபடி அர்ஜூனுடன் பேசியபடி நின்றிருந்தாலும் கண்கள் எதையோ தேடியபடி இருந்தது.அது  இவளை கண்டவுடன் அவளிடம் நொடி நேரம் பதிந்து அர்ஜூனிடம் திரும்பியது.

என்ன அண்ணி sighting ஆ? என்று தன் துன்பத்தை மறைத்தபடி தான்வி மீராவை கலாய்த்தாள்.

ச்சு... சும்மா இரு டா...

ம்ம்... இவ்ளோ hot ஆஹ் மாமா இருந்த அக்கா என்ன தான் பண்ணுவாங்க... வேண்டாம்னு நினைச்சாலும் கண்ணு அவரிடம் தான் போகும்... சரி தான அக்கா...??

அது எல்லாம் ஒன்னும் இல்லை, ரெண்டு பேரும் சும்மா இருங்க , அவங்க எல்லாம் இங்க தான் வர்றாங்க .

மீரா காட்டியபடியே , அகி , தருண் , பிரகாஷ் , அர்ஜுன் , கௌசிக் என்று ஐவரும் பெண்கள் இருந்த இடத்திற்கு வந்து அமர்ந்தனர் .

அர்ஜுன்  நீங்க  உங்க விட்டுக்காரம்மாவையும் கூட்டிட்டு வருவீங்கன்னு நினைச்சேன்...

ஏன் அகி உனக்கு இப்படி ஒரு எண்ணம்... அவ கூட வந்த குடிக்க விடமாட்டா... அதான் பாப்பா வை பார்க்கனும்னு சொன்ன உடனே ... சரி டா பாருன்னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்...

பாருங்க நான் சொல்லிக் கொடுக்கறேன் அண்ணிகிட்ட ... என்று தருண் அர்ஜுனை மிரட்டினான்.

போடா போடா ... எப்படி சமாளிக்கணும்ன்னு எனக்கு தெரியும் ....

அதானே years of experience இல்ல அர்ஜுன் ...

Ofcourse அகி...

ஹாஹா... என்று ஒரு சிரிப்பலை பரவியது...

இவர்கள் பேசுவதை கேட்டபடி தள்ளியிருந்த சோஃபாவில் அமர்ந்து லேசான ஒரு புன்னகையோடு தன் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான் கௌசிக்... அவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.

அதே போல ரகசிய பார்வைகளை அகிலனும் சிவா வும் பகிர்ந்து கொண்டனர்...

டேய் மச்சி, வசுந்தரா டா...
பிரகாஷ் குரலால் அங்கு அவன் காட்டிய பெண்ணை அனைவரும் நோக்கினர்.

நவநாகரீக மங்கையாய் அவளது தோழர் தோழிகள் படை சூழ ஒலித்துக் கொண்டிருந்த இங்கிலீஷ் பாடலுக்கு நளினமாய் ஆடிக் கொண்டிருந்தாள்.

தொடை வரை நீண்டு ,உடலோடு ஒட்டியபடி இருந்த இறுக்கமான ரெட் கலர் ஸ்லீவ்லெஸ் டாப்பை அணிந்து இருந்தாள்... அவளது சந்தன நிறத்திற்கு அந்த உடை வெகு பொருத்தமாய் இருந்தது.
உதட்டில் பூசியிருந்த இரத்த நிற உதட்டு சாயம் அவள் முக அழகை எடுத்துக் காட்டியது... தேவதை பெண் போல அவ்வளவு அழகு...

மீரா சிவா இருவரின் கண்களும் அவளை விட்டு விலகவில்லை..

யாரு தான்வி இந்த பொண்ணு... இவளோ அழகா இருக்கா???

ராதை குரூப் of கம்பனிஸ் ஓனர் பொண்ணு...

சேர்மன் பொண்ணு இல்ல தான்வி, now she is the Managing director...
அந்த கம்பனிய அவங்க அப்பாக்கு ஓடம்பு சரியில்லாத நாலுல இருந்து இவங்க தான் பார்த்துக்கராங்க... அன்று அகிலன், வசுந்தரா வை பற்றிய  extra தகவலை  கூறினான்.

அதுமட்டும் இல்லை, maybe கூடிய சீக்கரம் உங்க அண்ணியா கூட மாற வாய்ப்பிருக்கு என்று கிசு கிசு குரலில் அர்ஜுன் ஒரு குண்டை சர்வ சாதாரணமாக அவர்கள் தலையில் வைத்தான்.

Whaa....t???

உண்மையா தான் சொல்றேன்... அங்க பாரு ... என்று சொல்ல...

அந்த பெண் இவர்களை நோக்கி வந்தாள், ஆனால் அவளது கண்கள் முழுக்க கௌசிக் மேல் இருந்தது...

நம்ம ஆளு அதுக்கு எல்லாம் மயங்கரவரா என்ன ?? என்று ஒரு நம்பிக்கையோடு கௌசிக்கை பார்க்க அவன் விரிந்த புன்னகையோடு தன்னை அணைத்துக் கொண்ட வசுந்தராவை அணைத்து விலகினான்.

கண்கள் தெறித்து விழும் அளவு அவர்களை பார்த்துக் கொண்டிருந்த அறுவரையும் பார்த்து சிரித்தாள் அந்த பெண்...

கௌசிக் அந்த பெண்ணை அணைத்தது வியப்பல்ல, ஏனெனில் அங்கு அது அனைவரும் கடைபிடிக்கும் ஒரு செய்கையே.... ஆனால் அவளை பார்த்தவுடன் கௌஸிக்கின் கண்களில்  தோன்றிய இணக்கம் ... அதுவே அவர்களை குழப்பியது.

ஹாய் guys

ஹாய்....

இது வசுந்தரா.... ராதை குரூப் of கம்பனிஸ் MD.. and this is அகிலன் , அர்ஜுன்.... என்று பரஸ்பர அறிமுகத்தை அவர்களுக்கு கௌசிக் கொடுத்தான்.

ஒரு வசீகரிக்கும் புன்னகையை அவர்களுக்கு அளித்து விட்டு கௌஸிக்குடன் பக்கத்து சோஃபாவில் அமர்ந்தாள்.

மீரா முகம் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்க, தான்வியும் சிவாவும் பதட்டமாக அகிலனை பார்த்தனர்.

அவனுக்குமே குழப்பமாக தான் இருந்தது... அதை அர்ஜுனின் வார்த்தைகள் மேலும் அதிகமாக்கியது.

பார்த்தீங்களா? எண்ணிக்காது  சார் இப்படி யாரிடமாவது புன்னகையோடு பேசி பார்த்திருக்கீங்களா?
First first ஒரு மீட்டிங் ல தான் இந்த பொண்ணை பார்த்தாரு, அந்த மீட்டிங் முடுஞ்சுன்ன அந்த பொண்ணை பார்த்தபடி கௌசிக் சார் சொன்ன வார்த்தை  "Brilliant" தான்...

அதுக்கப்பறம் நம்ம ஹோட்டல் புராஜக்ட் ஒன்னு எந்த கம்பனிக்கு கொடுக்கரதுண்ணு மீட்டிங் நடந்துச்சு, அதுல ராதை குரூப்சும் quotation கொடுத்திருந்தாங்க... நம்ம பெரிய தலைக எல்லாம் பெரிய பெரிய கம்பனிச suggest பண்ணப்போ, கௌசிக் சார் ராதை குரூப்புக்கு தான் கொடுக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

சின்ன பொண்ணு, அதும் ஒரு கத்துக்குட்டிய நம்பி இவ்வளவு பெரிய புராஜக்ட் கொடுக்க யாருக்குமே மனசு இல்லை, பட் கௌசிக் அண்ணா உறுதியா இருந்தனால அவங்க கைக்கு போச்சு.

ஆனா சொல்லக்கூடாது, புராஜக்ட்ட சிறப்பா செஞ்சு முடுச்சா அந்த பொண்ணு ... பட் யாருக்கும் தெரியாமல் கௌசிக் சார் சில அத்தியாவசிய ஹெல்ப் பண்ணதான் செஞ்சாரு, கூடவே support டும் கொடுத்தாரு... இருந்தாலும் முழு உழைப்பு எல்லாம் போட்டு successfull ல இந்த பொண்ணு தான் முடுச்சுது ...

அதுல இருந்தும் ரெண்டு பேரும் இன்னுமே கொஞ்சம் க்ளோஸ் தான்... அங்க இங்க அரைகுறையாக இருவரை பற்றி நிறைய பேர் பேசத்தான் செய்யறாங்க... நீங்க கூட சீக்கரம் திருமண வேலைல இறங்கனும்ன்னு நினைக்கறேன்...
என்று அர்ஜுன் சொல்லி முடித்தான்.

அதே நேரம் "come on koushik, one dance "என்று தன் கொஞ்சல் மொழியில் கௌஸிக்கின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள் அந்த பெண், அவனும் அதற்கு மேல் மறுக்காமல் அவளை பின் தொடர்ந்து அங்கே ஆடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நுழைந்தான்.

"நீ ஒரு முட்டாள் , you are a looser Meera... உன் status என்ன? என் status என்ன? Love? ஹாஹா..."

அன்று கௌசிக் கூறிய  வார்த்தைகள் மீரா வின் மனதில் வந்து போனது...

எங்க இன்னும் அந்த இடத்தில் இருந்தால் கண்களில் தேங்கிருக்கும் கண்ணீர் கீழே விழுந்து தொலைத்து விடுமோ என்ற பயத்தில் "நான் restroom போய்ட்டு வரேன்" என்று யாரையும் பார்க்காமல் சொல்லிவிட்டு வேகமாய் அங்கிருந்து அகன்றாள்.

Restroom இந்த பக்கம் சிஸ்டர் என்ற தருணின் வார்த்தைகள் அவளை எட்டவே இல்லை .

அவளது மன நிலை புரிந்த சிவா, தான்வி,அகிலன் மூவரும் கவலையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

நான் போய் பார்க்கிறேன் என்று தான்வி எழ ,சிவாவும் கூடவே மீராவை தேட சென்றாள்.

Meet you All at next update friends...

Don't forget to vote and comment dears...




Continue Reading

You'll Also Like

15.7K 549 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
23.7K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
20.5K 856 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
39.6K 2.2K 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உ...