எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 636 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 40

290 7 9
By SindhuMohan

பாட்டி சமைத்துக் கொண்டிருக்க சித்ரா அவருக்கு உதவிக் கொண்டிருந்தார். பசியில் சமையல் அறையில் சுற்றிக் கொண்டிருந்த யுவதிகளுக்கு ,சத்துமாவு கஞ்சியை பாட்டி கொடுத்து விட , சமையல் கட்டிலேயே  உட்கார்ந்து வம்பளந்து கொண்டிருந்தனர்.

கௌசிக் கின் BMW போர்ட்டிகோவில் வந்து நின்ற சத்தத்தில் மூவரும் வேகமாக ஹாலுக்கு ஓடினர்...

வாசல் வரை சென்று அகிலன் கௌஷிக்கை வரவேற்றான்.

ஹாய் அண்ணா... என்றவாறு அணைத்துக் கொள்ள , கௌசிக் கும் அவனை அணைத்துக் கொண்டான்...

Miss this brotherly hug அண்ணா... என்று சிணுங்கியவனிடம் தன்னின் அளவான  டிரேட் மார்க் புன்னகையை  அளித்தபடி தன் தம்பியை பார்த்தான்.

சாகும் தருவாயில் அகிலனின் தந்தை சிவராமன் "எல்லாரையும் உன்னை நம்பி தான் தைரியமாக விட்டுட்டு போறேன் டா கௌசிக்" என்று சொன்னது இன்றும் நினைவலைகளில் நிழலாடியது.

பாட்டி, அகிலன், தான்வி. என மூவரிடமும் உரிமையோடும்,பாசத்தோடும் உறவாடவில்லை என்றாலும், மூவரின் ஒவ்வொரு செயல்களையும்  கவனித்து, தேவையானவற்றை அவர்கள் கேளாமல் செய்து கொடுத்து, ஒரு சிறு தீங்கும் அவர்களை நெருங்காதவாரு பாதுகாத்தும் வருகிறான்.

தன் கண்முன் சிறுவனாய் சென்று இன்று ஆண் மகனாய் திரும்பி வந்து நின்று கொண்டிருக்கும் தன் தம்பியை கண்டு பெருமையாய் இருந்தது.  தன் கடமைகள் முடிந்தது... இனி எல்லா பொறுப்புகளையும் இவன் ஏற்றுக் கொள்வான் என்ற நிம்மதி மனதில் பிறந்தது.

ஆனால் .......... மீரா????

வீட்டின் உள் நுழைந்தவுடன்
ஹாய் அண்ணா! என்று  அணைப்புடன் வரவேற்ற தான்விக்கும், வாங்க மாமா! என்று குஷியுடன் வரவேற்ற சிவா விர்க்கும் ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்தவன் கண்கள் , மூன்றாவதாக மலர்ந்த முகத்துடன் நின்றிருந்த அவளிடம் ஒரு கணம் தங்கி மீண்டது.

இந்த கண நேரத்திற்கு தானே இவன்  இங்கே வந்தது . மீராவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இத்தனை நாட்கள் கஷ்ட்டப்பட்டு அடக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

இன்று இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தவுடன் மனம் சந்தோஷத்தில் மிதந்தது.இருந்தாலும் "காரியமாக தான் செல்கிறேன், அவளை பார்க்க அல்ல" என்று அவனுக்கு அவனே சமாளித்துக் கொண்டான்.

ஆனால் வீட்டிற்க்கு வந்து அகிலனை பார்த்தவுடன் மனம் சுணங்கியது. மீரா என்னவள் இல்லையே என்ற எண்ணம் வலித்தது.அந்த கணப் பார்வை போதும் என்ற நிறைவில் அவளிடம் எதும் பேசாது சென்றான்.

என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா....ஆ..

என்று  சிவா மீராவை ஒட்டி நின்று கொண்டு மெதுவாய் ராகம் இழுக்க...

போடி எரும என்ற படி மீரா அங்கிருந்து முகம் சிவக்க ஓடிவிட்டாள்.

வெட்கப்படாதீங்க அண்ணி என்று தான்வியும் மீரா வை பின்தொடர்ந்து சென்றுவிட, அவர்களை தொடர நகர்ந்த சிவா வை அகிலன் குரல் நிறுத்தியது.

இனி தயவு செஞ்சு என்னைக்கும் பாடீராத மா... கேக்க முடியலை....

அவனின் கிண்டலில் தோன்றிய கோபத்தை அடக்கியபடி உதட்டை சிரிப்பது போல வைத்துக் கொண்டவள் " thanks for your advice sir" என்றுவிட்டு நகர முனைந்தாள் .

Sir ahh???? என்று பின்னால் அவனது கேள்வி காதில் விழுந்தும் கண்டுக்காதவளாக அங்கிருந்து நடந்தாள்.

பதில் சொல்ட்ராலானு பாரு... உன்ன அப்பறம் வெச்சுக்கரேன் டி என் நாட்டுக் கோழியே ... என்று மனதில் நினைத்து சிரித்தபடி அகிலனும் தன் அண்ணனை நோக்கி நடந்தான்.
.
.
.
பாட்டியிடமும் வந்திருந்தவர்களிடமும் நல விசாரிப்பு முடிந்த போது ,  vegetable soup வந்தது... அதை அவர்கள் எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தனர்.

மீரா , சிவா , தான்வி மூவரும் அந்த பெரிய ஹாலில் ஆண்களை விட்டு தள்ளி போட்டிருந்த சோஃபாவில் அமர்ந்து  கொண்டு கையில் newspaper , அல்லது மொபைல்  என்று எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும், அவர்கள் காது என்னவோ " என்ன பேசிக் கொள்கிறார்கள்"  என்று  கவனிக்க ஆரம்பித்தது..

என்ன பிரச்சினை என்பது பாட்டி சொல்லி இருந்தார் ....

படேலின் company ல இருந்து தான் ரொம்ப வருடங்களாய் தங்கள் ஸ்டீல் companyக்கு தேவையான raw materials வாங்கிகொண்டிருந்தனர் . ஆனால் திடீரென்று materials quality சரியில்லை என்று அவர்களிடம் இருந்து கொள்முதலை கௌசிக் கேன்சல் பண்ணிவிட்டான்.  அதை பற்றி கேட்க தான் படேல் வந்திருந்தார். மேலும் அவர் இம்மாநிலத்து முதலமைச்சரின் மச்சான்... அவருடைய கட்சியின் MP தான் இந்த lal Dutta...

ஆபீசில் கௌசிக் கை பார்க்க முடியவில்லை என்ற காரணத்தில் MP யோடு வீட்டுக்கு வந்துள்ளார் படேல். மேலும் கௌசிக் சமாதானப் படுத்த பாட்டியின் உதவியை நாடியும் தான்.

அண்ணனின் ஆளுமையை மேலும் பார்க்க ஆவலுடன் தான்வியும், இவளோ பெரிய இடத்துக்காரர்கள் கூட ஏன் பகைத்துக் கொள்கிறான் என்ற பதட்டத்தில் மீராவும் அமர்ந்திருந்தனர். சிவா வோ அங்கிருந்த அனைவரின் முக பாவனைகளையும் சுவாரசியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தாள்.
.
.
.
முதலில் Lal dutta பேச்சை ஆரம்பித்தார்.

ரொம்ப வருடமா ரெண்டு கம்பனியும் சேர்ந்து இருந்திருக்கீங்க .. சோ தப்பு நடந்தது நடந்திருச்சு, ஒரு chance கொடுக்கலாமே...
இது CM ஓட ஒரு கோரிக்கையும் கூட...

Mr. Lal Dutta உங்களுக்காக தான் வந்திருக்கேன்... But இந்த dealing பத்தி பேச இனி எதுமே இல்லை... It's already over. So...

கௌசிக் சாப் அப்படி சொல்லக் கூடாது...  உங்க tie up எங்க கூட இல்லைன்னு நீங்க அறிவிச்சவுடனே எங்க shares ஃபுல்லா இறங்கிடுச்சு... எங்களோட மேஜர் investment உங்களோடது தான்... நீங்க இப்படி பண்ணக்கூடாது...

Mr.Patel... நான் ஒன்னும் சும்மா உங்க deal அஹ் cancel பண்ணலை... உங்க materials quality வர வர சரியில்லைன்னு என்கிட்ட proof இருக்கு...

அது உண்மை என்பது படேல் க்கும் தெரிந்தே இருந்தது.

இன்னும் ஒரு chance கொடுங்க கௌசிக்... இந்த மாதிரி நடக்காமா நான் பார்த்துக்கறேன்...

I already gave 3 chances Mr.Patel... இன்னும் கூட கொடுத்திருப்பேன் ...but உங்க son , இதை பத்தி பேசப்போன என்னோட company staff கிட்ட இனியும் இப்படி தான் கொடுப்பேன் என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கன்னு சொல்லிருக்கார்... நான் என்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டேன்.. தட்ஸ் ஆல்...

தன் மகனிடம் company பொறுப்புகளை ஒப்படைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று  மூன்று நாட்களில் முன்னூறு தடவை மேல் நொந்து கொண்டவர்... கம்பெனியை மேன் மேலும் முன்னேத்துவான் என்று பார்த்தால், இப்படி அதள பாதாளத்தில் தள்ளி விட்டு விட்டான் என்று இப்பொழுதும் அதை நினைத்து வருந்தினார் .

கௌசிக்... நீங்க first டே இத பத்தி என்னிடம் சொல்லிருக்கலாம்.

That's none of my business Mr.Patel... அந்த கம்பனி MD கிட்ட தான் எங்களோட பேச்சுவார்த்தை.

கௌசிக் சாப்... இந்த பிரட்சனை வந்த உடனேயே என் பையனை கம்பனி விட்டு விளக்கிட்டேன்... இனி எந்த தப்பும் நடக்காது...ப்ளீஸ் ..என் பொறுப்பு... என்று படேலின் வார்த்தைகள் ஒத்துக்கொள்ளேன் என்ற தவிப்போடு வெளிவந்தது.

Mr. Koushik... Just give him a last chance... என்று lal Dutta வும் கேட்டுக் கொண்டார்.

ரெண்டு நிமிடம் யோசித்த கௌசிக்,
படேல் கம்பனியின் பொறுப்பில் இருந்த வரை எந்த ஒரு தப்பும் நடந்தது இல்லை... அவரின் மகனின் வரவிர்க்கு பின்பு தான் எல்லா குளறுபடிகளும்.. சோ....மறுபடியும் படேல் பொறுப்பேற்று கொள்கிறேன் என்று சொல்வதால் ,இவன் வேண்டாம் என்று சொல்ல மனம் வரவில்லை... ஆதலால் அர்ஜுனுக்கு கால் பண்ணினான்.

அர்ஜுன்... அந்த சர்வேஷ் கம்பனி deal எந்த லெவல்ல இருக்கு?

நம்ம okay சொன்னா போதும் சார்.

சரி , இனி அதை proceed பண்ண வேண்டாம்.

ஆனா... சார்...

Mr.Patel கம்பனி deal ah ஓகே பண்ணிடுங்க.

ஓ... ஓகே சார்...

கௌசிக் கின் பேச்சிலேயே அவர்கள் வேறு கம்பனி கூட deal பேசியுள்ளனர் என்பது புரிந்தது படேலுக்கு... இன்னும் கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் நம் கதை முடிந்திருக்கும் என்பது புரிய எல்லா கடவுளுக்கும் நன்றிகளை சொன்னார்.

Thank you சார்... Thank you so much... என்று நா தழு தழுக்க அவர் சொல்ல...

I don't need thanks Mr.Patel... என்னோட நம்பிக்கையை இனி பொய்யாக்காம பார்த்துக்கோங்க...

Sure சார்... Sure...

நடந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் பெரும்பாலும்  ஆங்கிலத்தில் இருக்க மீரா ,சிவா இருவருக்குமே நன்றாக புரிந்தது.

கௌசிக் மாமா ...CM சொன்ன பின்னாடியும் உடனே ஒத்துக்காமா ,அவருக்கு சரின்னு பட்ட பின்னாடி தானே ஒத்துக்கராரு...செம்ம கெத்து ...என்று சிவா பெருமையோடு சொன்னாள்.

இது டிரெய்லர் தான் மா... எங்க அண்ணா வோட talent la ரொம்ப சின்ன part ஆ தான் பார்த்திருக்க... பெரிய பெரிய deal ஆகட்டும் , பிரச்சினை ஆகட்டும் cool ah முடிச்சிடுவாரு... தெரியுமா?

என்று தன் அண்ணனின் பெருமைyயை தான்வி தன் பங்குக்கு புகழ்ந்தாள்.

பேச்சுவார்த்தை முடிந்தவுடன் பாட்டி அனைவரையும் சாப்பிட அழைத்தார்.

வந்த வேலை நல்ல படியாய் முடிந்த மகிழ்ச்சியில் lal Dutta வும், படேலும் சிரித்த முகத்துடன் சாப்பிட அமர்ந்தனர்.

அனைவரும் அமர்ந்தவுடன் பாட்டியும் ,சித்ராவும் பரிமாற ஆரம்பித்தனர். தட்டில் இருந்த பதார்த்தங்களை கண்டவுடன் அகிலன் தன் பாட்டியை பார்த்து முறைத்தான்.

இருக்காதா பின்ன... அவன் வந்தவுடன் உனக்கு பிடிச்சது எல்லாம் செய்யரேண்ணு சொன்னவர்கள் , கௌசிக் வருகிறான் என்றவுடன் அவனது விருப்ப பதார்த்தங்களே அங்கு காணப்பட்டது.

அவனது முறைப்புக்கான காரணம் தெரிந்த பாட்டி அவனை பார்த்து அசடு வழிய சிரித்து வெய்த்தார்... Lunch உனக்கு பிடிச்சது தான் என்று சைகை செய்யவும் மறக்கவில்லை.

ஆண்கள் அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட, சிவா , தான்வி இருவரும் கௌசிக் கின் பெருமைகளை மெதுவாய் பேசிக்கொண்டு இருந்தனர். பாட்டி பரிமாறுதலில் மூழ்கி இருந்தார்.

மீரா தட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்... முகம் வெளுத்துப் போயிருந்தது .
நிமிர்ந்து பார்த்தாள்.... Maroon நிற ஷர்ட் டும், கருப்பு நிற பேண்ட்டும்
அணிந்து டக் செய்திருந்தான். அடர்த்தியான தலை முடி நெற்றியில் புரள, அதை அவ்வப்போது இடது கையால் கோதி விட்டுக் கொண்டான். ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் , மீசையும் அவனுக்கு கூடுதல் ஈர்ப்பை வழங்கியது.

முன்னொரு சமயத்தில் அவனது அழகை, ஆண்மையை ரசிக்கும் போது மீராவின் மனதில் இவன் என்னகானவன் என்ற கர்வம் வரும்.. ஆனால் இன்று அவனது ஆண்மையோடு சேர்ந்த  ஆளுமையை கண்டு மனசு பயந்தது.

நான் கௌசிக்கிற்க்கு கண்டிப்பாக பொருந்த மாட்டேன்...  கூட வேலை செய்பவர்களி்டமே பேச தயங்கும் நான் எங்க... பெரிய பெரிய மனிதர்களிடம் கூட ஆளுமையாய் பேசும் கௌசிக் எங்கே???

இவ்வளவு நாள்,  கௌசிக் கை கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவள் , நான் அவனுக்கு பொருத்தமற்றவள் என்று எண்ண ஆரம்பித்தாள்.

எங்க போய் முடியப் போகுதோ..???

Meet you at next update friends.

Don't forget to vote and comment dears.















Continue Reading

You'll Also Like

248K 8.8K 41
💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.
75.7K 3.6K 81
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்க...
338K 13.1K 63
சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....