எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.9K 637 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 37

242 8 2
By SindhuMohan

அண்ணா உள்ள வரலை... Drop பண்ணிட்டு அப்படியே கிளம்பிட்டார்.

Oh...

சரி நீ பேக்கிங் எல்லாம் முடுச்சிட்டியா? என்று அகிலனுடன் லேப்டாப்பில் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்தாள் தான்வி.

இன்னும் இல்லை ,நாளைக்கு தான் ஆரம்பிக்கனும்...

டேய்... இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு flight க்கு... இங்க வர்ற idea இருக்கா,இல்ல அங்கேயே செட்டில் ஆக போறியா brother?

ஏன் நான் அங்க வர்லைனா சந்தோஷமா இருக்கலாம்னு பார்கரியா ... விடமாட்டேன் பிசாசே.இன்னும் மூணு நாள்ல அங்க வந்து வாழ்நாள் முழுக்க உன்னை torture பண்ணலை நான் அகிலன் கிடையாது.

போடா கருங்கொரங்கு... யாரு யாரு கிட்ட மாட்டிக்க போரங்கன்னு பாரு ...
என்று அண்ணன் தங்கை சண்டை போட்டுக் கொண்டிருக்க , கொஞ்சம் தள்ளி, கொண்டுவந்திருந்த தங்களது துணிகளை wardrobe இல் அடுக்கிக் கொண்டிருந்த மீரா க்கு அதை கேட்டு சிரிப்பு வந்தது.

அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு என்று இந்த அறையை கொடுத்து விட்டனர். இந்த ஒரு அறையே தங்களது பாதி விட்டின் அளவை ஒத்திருந்தது. வீட்டை தான்வி சுற்றிக் காமிக்க சிவா மீரா இருவரும் பிரமித்து போயினர்.

படங்களில் மட்டுமே இந்த மாதிரி வீட்டை பார்த்திருந்தனர்... இன்று நேரில் பார்க்க பார்க்க அவர்களுக்கு அதிசயமாய் பட்டது.
அந்த வீட்டின் உள்ளே பண்ணி இருக்கும் interior decoration க்கு மட்டுமே கோடிக் கணக்கில் செலவாகி இருக்கும் என்பது புரிந்தது.

ஒவ்வொரு இடத்திலும் அவர்களது பண செழுமை தெரிந்தது. ஆனால் அந்த வீட்டை விட இவர்களுக்கு ஆச்சிரியமாய் இருந்தது , அந்த வீட்டினரின் குணம் தான். பணக்காரர்கள் என்ற துளி கூட கர்வம் இல்லாமல் பழகும் விதம்.

அங்கே வேலை செய்பவர்களிடம் கூட தன்மையாய் தான் பாட்டி மற்றும் பேத்தி பழகினர்.

இது எல்லாமே சிவா மீரா இருவர் மனதிலும் ,கௌசிக்கின் மெசேஜ் பார்த்த பின்பும் லேசாக ஒட்டியிருந்த மிரட்சியையும் போக்கியது.

இரவு சாப்பிட்டு விட்டு மீரா வுடன் தான்வியும் மீராவின் அறைக்கு வந்துவிட்டாள். சிவா சிறிது நேரம் காலாற நடந்துட்டு வரேன் என்றவாறு கீழே லானில் நடக்க போய்விட்டாள்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த தான்விக்கு அன்று முழுதும் தன் தமையனுடன் பேசவில்லை என்பது நியாபகம் வர அவனை அழைத்தாள்.

நேரம் மாறுமே தான்வி ...இப்போ அவங்களுக்கு நைட் 2 மணிக்கு மேல இருக்குமே என்று மீரா சொல்லியும்..

ஆமா அண்ணி, ஆனா அவன் கூட பேசாம என்னால தூங்க முடியாதே என்ற படி அவனது ஃபோன் க்கு கால் பண்ணினாள்.

அதை அவன் அட்டென்ட் செய்தவுடன் வீடியோ கால் பண்ணி பேச ஆரம்பித்தனர் . மீரா வும் அகிலனுடன் சம்பிரதாயமாக பேசிவிட்டு நகர்ந்து கொள்ள , அகி யும் , தான்வி யும் பேசிக் கொண்டிருந்தனர்.

தூக்கத்தில் இருந்து எழுந்தாலும் , அதன் காரணமாய் சிறு எரிச்சலை கூட தன் சின்ன தங்கையிடம் காட்டாது பேசிக் கொண்டிருக்கும் அகிலனையும் மீராக்கு பிடித்தது. அவர்கள் மூவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு புரிந்தது.

அரைக் கதவு தட்டப்பட மீரா போய் திறந்தாள். அங்கே வேலை செய்யும் பெண்மணி நின்றிருந்தார்.

தான்வி பாப்பா வ பாட்டி வர சொன்னாங்க... Book ஏதோ காணமாம் ...

அச்சோ நான் அத எங்க வெச்சேன்னு தெரியலையே... சரி சித்ரா அக்கா .. நீங்க போய் தூங்குங்க நான் போய் பார்க்கறேன் என்று தான்வி சொல்லி விட சித்ரா அங்கே இருந்து நகர்ந்தார்.

அகி line லையே இருடா... நான் போய் பாட்டிக்கு book எடுத்துக் கொடுத்திட்டு டக்குண்ணு வந்தரேன்.

சரி ...

வரதுக்குள்ள தூங்கிடாத டா..

தூங்க மாட்டேன் கொரங்கே போ மொதல்ல ...

என்று தான்வியை அனுப்பி வைக்க...

இரு தான்வி, நானும் வர்றேன் என்று மீரா வும் அவளுடன் நகர்ந்தாள். ரூமில் இருந்தால் அகிலனோடு பேச வேண்டி வரும் என்பதே அவள் அங்கிருந்து நகர்ந்த காரணம், இதை அகி யும் உணர புன்னகையோடு கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான் வீடியோ காலில் இருந்து கொண்டே.

ஒரு நிமிடம் கழிந்திருக்க ரூம் கதவு திறந்தது. பேசும் சத்தம் கேட்டு அதற்குள் தான்வி வந்து விட்டாளா? என்று திரையை பார்த்தவன் கண்களில் அவள் விழுந்தாள்.

லேப்டாப் பை பேசிக்கொண்டே ஸ்டடி டேபிள் மேல் வைத்துவிட்டு தான்விக வெளியே சென்றிருந்ததால் அந்த ரூமின் பாதி அளவு வரை தெளிவாய் தெரிந்தது.அதனால் தான் அவள் கண்ணில் பட்டாள்.

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளை இன்று தான் முதல் முறையாக பார்க்கிறான்.

ராயல் ப்ளூ பனியனும், அதில் மிக்கி mouse படமும், கீழே சந்தன நிற பட்டியால பாண்ட்டும் அணிந்திருந்தாள். Chinese கொண்டை போட்டு இருந்தபோதும் சிலும்பிய முடிகள் காதோரமாய் தொங்கி அவளுக்கு அழகு சேர்த்தது. இவள் சிவா வாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தவன்,

ஃபோனில் பேசிக் கொண்டே லேப்டாப் இருக்கும் பக்கம் அவள் திரும்ப எத்தனிக்க... Hai என்று கையை ஆட்டினான். ஆனால் அவள் பார்வையோ லேப்டாப்பில் விழவே இல்லை... அவனது குரலும் அவளுக்கு கேட்கவில்லை.

அங்கிருந்த கட்டிலின் குறுக்கால் பேசிய படியே படுத்தாள். அவளது தலைபாகம் அவனது லேப்டாப் திசை பக்கம் இருக்க , அவனால் அவளது முகத்தை பார்க்க முடியவில்லை.

சரி இதற்கு மேஇல், தான் அவள் அறியாமல் பார்ப்பது தவறு என்று பட காலை கட் பண்ண போனான்.

செம பணக்காரங்க அப்பா இவங்க... வீடு மட்டுமே கோடிக் கணக்கில் போகும்... என்ற அவள் வார்த்தைய கேட்ட உடன் அகிலனின் மனதில் சுருக் கென்றது.

என்ன இவள் இப்படி பேசுகிறாள்?? ஒருவேளை இவர்கள் தவரானவர்களாக இருப்பார்களோ? காசுக்காக தான் கௌசிக் அண்ணாவை திருமண செய்ய பார்க்கிறார்களா? நாங்கள் எமாந்து விட்டோமா? என்ற சரமாரியான சந்தேகங்கள் வர , காலை கட் பண்ணாமல் அவள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தான்.

ஆமா அப்பா... நம்ம பக்கத்து தெரு பெரிய வீட்டு அம்சா அக்கா வீடு இருக்குல்ல, அந்த மாதிரி எழெட்டு மடங்கு பெருசு ...

ம்ம்... அப்போ அவங்க கிட்ட வேலை செய்யர , அதாவது பாட்டி சொன்ன மாதிரி கௌசிக் மாமா இவங்க கம்பனில பெரிய போஸ்ட்ல இருக்கார் என்றால் அவரும் நல்ல சம்பாரிப்பாருண்ணு தானே அர்த்தம்.

அதனால் உங்களுக்கு சந்தேகம் எல்லாம் வேண்டாம். காசுக்காக மீரா அக்காவ கல்யாணம் பண்ணிக்க பார்தாங்கன்னு நினைக்க வேண்டாம்.

ஏன்னா மாமாட்ட BMW காரே இருக்கு .. அது மீரா அக்கா அபார்ட்மெண்ட் வாங்குன காசுல பாதி காசு இருக்கும்.

ஆமா பா... கண்டிப்பா இவங்க எல்லாம் தப்பாணவங்களா இருக்க வாய்ப்பே இல்லை... ரொம்ப நல்லவங்க...

இது எல்லாம் கேட்ட அகிலனுக்கு தலை சுற்றியது... தான் அவளை கெட்டவள் என்று நினைக்க இவர்கள் குடும்பமே தங்களை தவரானவர்கள் என்று சந்தேகப் பட்டிருகின்றனரே..

மாமா அக்கா கல்யாணம் நடந்துச்சு நம்ம life ஃபும் settle ஆகிடும் என்று அவள் சொல்ல மறுபடியும் அகி யின் காதுகள் கூர்மை ஆகின..

இல்ல பா... அக்கா இங்க வந்து settle ஆகிடுச்சு ன்னு வெச்சு கோங்க, நானும் மாமா கிட்ட சொல்லி அவரு ஆபீஸ் ல வேலைக்கு சேர்ந்திடுவேன்...

சரிப்பா,அவரு கிட்ட இல்லைனாலும் மாமா வ guide பண்ண சொல்லி வேற நல்ல கம்பனி ல ஜாயின் பண்ணிப்பேன். எப்படியும் 30thousand எல்லாம் கிடைக்கும். அக்கா இங்க இருக்கனால நீங்களும் தைரியமா இங்க இருக்க விடுவீங்க... அப்பரம் காசு சேர்ந்துன்ன இங்க ஒரு வீடு வாங்கி நம்ம எல்லாம் இங்கேயே வந்திடலாம் ... என்ன சொல்றீங்க?

அகிலனுக்கு ஏதோ பாரம் நீங்கியதாய் உணர்ந்தான்.முதல் பார்வையிலேயே தன் கவனத்தை ஈர்த்தவள் எங்கே பொய்யானவளோ என்று பயந்ததுக்கு பொருள் இல்லாமல் போனது.

உழைத்து சம்பாரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எப்படி தவறானவர்கள் ஆவார்கள்? இவள் நல்லவள் .

நான் எங்கப்பா அம்மா வ தான் வர சொன்னேன் ... உன்ன இல்லை...

....

ஏய் போடி, காட்டெருமை... நான் கண்டிப்பா வேலை வாங்கி காட்டுறேன் டி...
......
நீ இன்னும் காலேஜ் போகல... நான் கையில degree வெச்சிருக்கேன்...
.....
நீ போடி ... என் வீட்டுக்குள்ள கால வெச்ச கால வெட்டிடுவேன்.
....
மொதல்ல 12 முடி ... அதுக்கப்பறம் நீ வீடு வாங்கரத பார்க்கலாம்...
.....
போடி.
....

இல்ல மா... அவ தான் அப்பா ட்ட நான் பேச பேச ஃபோன் ஆ பிடிங்கி பேசினா

ம்ம்... சாப்டேன்...

அக்கா கீழே பாட்டி கூட இருக்கா...

சரி சரி மா... அடக்க ஒடுக்க மா இருக்கேன்.. வாய அடக்கி வாசிக்கரேன்...

அந்த பையன் மூணு நாள் கழிச்சு தான் வருவாங்க...

ம்ம்... சரி ... 10 அடியே அந்த பையனை விட்டு தள்ளி நிக்கரேன் என்ற படியே எழுந்து நின்றாள்.

தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்பது புரிய ... நான் உனக்கு பையனா டி... வந்து வெச்சுக்கரேன் உன்னை... என்று மனதில் நினைத்துக் கொண்டான் அகிலன்.

லேப்டாப்பிர்க்கு எதிரே நின்றவள் , காதில் போனை வைத்து கழுத்தின் வளைவில் அதை கீழே விழாமல் பிடித்துக் கொண்டாள்.

பேசிக்கொண்டே தன் இரு கைகளையும் பின்னால் கொண்டு சென்று ஏதோ பண்ண... என்ன இந்நேரம் stretching பண்றாளா என்ன? என்றவாறு அகி சிவாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

தூங்க போகனும் மா...
என்றவள், பின்னால் இருந்த கைகளை முன்னால் கொண்டுவந்து தனது வலது புற கையின் வழி பனியனுள் இடது கையை விட்டு தோள் பட்டை யில் இருந்து strap பை பிடித்து வெளியே இழுக்க...

அப்பொழுது தான் அவள் பண்ண போகும் காரியம் அகிலனுக்கு உரைத்தது...

Hey... Stop stop என்று கத்திவிட்டான்.

தன் தாய் ஏதோ சொல்ல அதை கேட்டுக் கொண்டிருந்தவள் காதில் யாரோ கத்தும் சத்தம் வர, தான் பண்ணிகொண்டிருந்த காரியத்தை நிறுத்தி, தான் கேட்டது உண்மை தானா? என்பதாய் காதை கூர்மை படுத்தினாள்.

Hello.... இங்க பாரு... என்ற குரல் வந்த திசையில் நேரே பார்த்தவள் கண்கள் விரிந்தது.

லேப்டாப்பில் ஒருவன் கையாட்டிக் கொண்டிருக்க, அதிர்ச்சியில் அவள் கழுத்தின் வளைவில் இருந்த ஃபோன் கீழே போட்டிருந்த கார்பெட்டில் விழுந்தது.

ஏ.... ஏய்... யா.... யார் நீ? என்றவள் கையை strap பில் இருந்து எடுக்க , அது அவளது தோளை அடித்தது..
வலியில் தோலை தேய்த்துக் கொண்டவள் , மறுபடியும் அவனைப் பார்த்தாள்.

இவன் சிவா வின் அண்ணன் தானே ... காலையில் ஃபோட்டோ வில் கூட பார்த்தோமே...என்று நினைத்தவள் அவனை பார்க்க , அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.தான் பண்ண இருந்த காரியமும் உரைக்க சட்டென்று கட்டிலின் மறைவில் கீழே உட்கார்ந்து கொண்டாள்.

என்றும் தூங்க செல்லும் முன் பண்ணும் காரியம் தான்... ஆனால் இவன் இப்படி பார்த்துக் கொண்டிருப்பான் என்று கனவில் கூட அவள் நினைக்கவில்லயே..

Hello... மேடம்...

என்று அவனது அழைப்பு காதில் விழ...

தப்பு அவன் பேருல... நான் ஏன் ஒழியனும் என்ற எண்ணம் எழ எழுந்து நின்றாள்.

சீ... என்னங்க நீங்க... பொண்ணுங்க இருக்க ரூம் ல திருட்டு தனமாக camara மூலியமா watch பண்றீங்க? படிச்சிருக்கீங்க தானே... இந்த மாதிரி நல்ல வீட்டுப் பையன் பண்ற வேலையா இது? ..இத பாட்டி கிட்ட எல்லாம் சொன்ன என்ன நினைப்பாங்க... என்று அவள் பாட்டுக்கு பேசிட்டே போக...

Excuse me... இது வீடியோ கால்... நீங்க வரதுக்கு முன்னாடி இருந்தே நான் line ல தான் இருக்கேன்... தான்வி கூட பேசிட்டு இருந்தேன்.. வெயிட் பண்ண சொல்லிட்டு அவ வெளிய போய்ருக்கா
... நீங்க வந்துன்ன நான் கூப்பிட்டேன்... நீங்க கவனிக்கலை.

சரி கட் பண்ணிடலாம்னு நினைக்கரப்போ தான் உங்க பேச்சு என்னை கவர்ந்துச்சு ... நீ பேச மட்டும் தான் செய்வீங்கன்னு பார்த்தேன்... பட்டுன்னு நீ... இப்படி உள்ள இருக்கறத....

அவன் சொல்லி முடிக்கும் முன் அவள் கத்தினாள்..

போதும்... ஒட்டுக் கேட்டுட்டு... அதை பெருமையா சொல்றத பாரு... என்று அவன் காது கேட்கும் படியே சொன்னவள் அவனை முறைத்து விட்டு வெளியே செல்ல கதவிடம் போக...

அதே நேரம் தான்வியும் வந்து சேர்ந்தாள்..

சாரி அகி லேட் ஆகிடுச்சு...

பரவலை ... எனக்கு நல்லா time பாஸ் ஆச்சு என்று சிவா வை பார்த்துக் கூற...

Oh... சிவா கூட பேசிட்டு இருந்தியா... Comedy யா பேசினாள் தானே? She is so sweet ல என்று நடந்தது தெரியாமல் தான்வி கூற..

எஸ்.. ரொம்ப ஸ்வீட் என்று சொன்ன அகிலனை சிவா முறைத்தாள்.

சரி அண்ணா... நீ போய் தூங்கு... நாளைக்கு கூப்பிடரேன்.

தூக்கமா? ம்ம்...இனி எங்க வரப் போகுது... பாதிலேயே எல்லாம் நிக்குதே... என்று சலிப்பு போல சிவா வை பார்த்து அவன் சொல்ல ,

பொறுக்கி... என்ற வாயசைப்பை புரிந்து கொண்டவன் தன் உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

எது டா பாதில நிக்குது என்று அறியாமல் கேட்ட தன் தங்கையிடம் கையில் இருந்த புத்தகத்தை காமித்தவன் ... அவளுக்கு good night சொல்லிவிட்டு கால்லை கட் செய்தான்.

Adutha pair ah!!!!
Sari namma aduththa update la meet pannalam.. Bye dears..

Don't forget to vote and comment dears..


















Continue Reading

You'll Also Like

23.7K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
84.2K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
15.8K 549 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
75.8K 3.6K 81
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்க...