எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 636 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 33

221 6 0
By SindhuMohan

நாலு நாளு தான் ஆச்சு, ஏனோ நான்கு யுகமாய் தோன்றியது மீராக்கு. வாழவேண்டும் என்ற கடமைக்கு வாழ்வது போல இருந்தது.

கௌசிக் கோட ஒவ்வொரு வார்த்தையும் நினைக்கும் போதே இதயத்தில் வலி ஏற்பட , தன் மேலயே கோபம் வந்தது அவளுக்கு.

அன்றும் அப்படித்தான், ஆபீஸில் system முன்னாடி வேலையை பார்க்க அமர்ந்திருந்தாலும், உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றிக் கொண்டு இருக்க , தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள்.

இன்று காலை தான், கொடுத்திருந்த வேலையை முடிக்காமல் இருந்ததற்கு மேனேஜர் இவளை கூப்பிட்டு திட்டியிருக்க ,இன்னும் இப்படியே இருந்தால் இந்த வேலையும் போய் விடும் , கௌசிக் சொன்னது போல ஏதோ ஒரு luck இல் வேலை கிடைத்துள்ளது அதை காப்பாற்றிக் கொள்ள வேணும் என்ற வலி நிறைந்த எண்ணத்தோடு மனதை கஷ்டப்பட்டு அடக்கி வேலையில் ஆழ்ந்தாள்.

மதியம் சாப்பிட்டுக் கொண்டிருக்க கால் வந்தது.

ஹலோ சித்தி...

மீரா... நாளைக்கு உனக்கு ஆபீஸ் leave தான?

ஆமா ,சித்தி...

அப்போ இன்னிக்கு கொஞ்சம் நேரமா வீட்டுக்கு வந்திடு...

இன்னிக்கு? கொஞ்சம் வேலை இருக்கு சித்தி..

பரவால்ல ,late ஆனா உன் சித்தப்பாவ வரசொல்ட்ரேன் , கிளம்பி வந்திடு ... சரியா...

தான் இருக்கும் நிலைமையில் வீட்டிற்க்கு செல்ல பிடிக்கவில்லை என்றாலும் , என்றும் ஏதும் சொல்லா சித்தியே கூப்பிடும் போது மறுக்க முடியவில்லை.

சரிங்க சித்தி...

ம்ம்.. சாப்டியா?

ம்ம்... ஆச்சுங்க..

சரி வெச்சிடறேன்... நேறங்காலத்தோட வர்ற வழிய பாரு.

ம்ம்..

எதுக்காக இவளோ அவசரமா வர சொல்றாங்க .... என்ன பிரச்சினை ன்னு தெரியலையே... என்ற எண்ணப்படி தன் தங்கை சிவா விர்க்கு கால் பண்ண... அவள் அதை attend செய்யவில்லை...என்ன பண்றா இவ ? என்று  மறுபடியும் இரண்டு தடவை கால் செய்தும் attend ஆகாததால்...ஒரு பெருமூச்சோடு வேலையில் ஆழ்ந்தாள்.

மாலை வீடு வந்தவள் ஊருக்கு செல்ல கிளம்பி வெளியே வந்தாள்... வேக வேகமாக கீழே படிகளில் இவள் இறங்க , எதிரே கௌசிக் படிகளில் ஏறிக் கொண்டு இருந்தான்.

இடையில் ஐந்து ஆறு படிகள் இருக்க , கடந்து செல்ல முடியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு கட்டுண்டு நின்றனர் .

முதலில் தெளிந்தது கௌசிக் தான்.

வெளிய போறயா?? ஏதோ கேட்க வேண்டுமே என்று கையில் bag கோடு நின்று கொண்டு இருந்தவளிடம் வினாவினான்.

அவனது குரலில் கலைந்தவள் கண்களில் நீர் மறைக்க அதை அவன் பார்த்துவிடக் கூடாதே என்று  கீழே குனிந்தவாறு பதிலளித்தாள்

ம்ம்... ஊருக்கு போறேன்..

Oh...okay....bye

என்று அவளைக் கடந்து மேலே படி ஏறினான்.

அன்றைய தினத்திற்கு பின்பு இன்று தான் அவனை பார்க்கிறாள்.

அவன் முகம் வாடி இருந்ததோ? இளைத்து இருந்தானோ? ஒரு வேலை அவனுக்கும் என்னை போல வருத்தம்... அவள் மனம் எண்ணி முடிக்கும் முன்பே ...

பைத்தியமே இன்னும் நீ திருந்தல இல்ல?  இப்படி தான் கண்டது எல்லாம் கற்பனை பண்ணி பண்ணி இந்த நிலைமையில் இருக்க... இன்னும் என்ன... கிளம்பு time ஆச்சு.. என்று மூளை திட்ட அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த கௌசிக் கின் கண்களில் நீர் கோர்த்தது.

இந்த நான்கு நாட்களில்லேயே அவள் காய்ந்த பூவாய் மாறி இருந்தாள். என்றும் சிரிக்கும் அவள் கண்கள் உயிரற்ற இருக்க... முகம் வெளிறி இருந்தது.

அவள், தன்னை கண்டு கொள்ளாமல்  அவளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்... காலை அவள் ஆபீஸ் வரை பின் தொடர்ந்து போவான்
..மாலை அவள் மொட்டை மாடியில் கழிக்கும் தருணங்களில் இவன் படிகளில் இருட்டில் அவளை பார்த்தபடி தவம் இருப்பான்.

I am sorry கண்ணம்மா.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ , நான் இங்கிருந்து போய்டுவேன்...உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடும். அகிலன்  நல்லவன் மீரா... அவன் உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பான். நீ சந்தோஷமா இருப்ப...

அப்போ நீ கௌசிக்?

மனம் கேட்டது...

மீரா வ மறக்க முடியுமா உன்னால?

நான் ஏன் மறக்கணும்? என்னைக்குமே நான் விரும்பின மீரா என் மனசில இருப்பா...

ஆனா கொஞ்ச நாள் ல அவள் அகிலனோட பொண்டாட்டி ஆகிடுவா. அதுக்கப்பறம் என்ன பண்ணுவ? அப்ப  மீரா வ நினைக்கரது தப்பு இல்லையா?

நான் என் மீரா வ, என்னை காதலிக்கும் மீரா வின் நினைவுகள் கூட  தான் வாழ போறேன்...அடுத்தவன் பொண்டாட்டி நினைவுகள்ல இல்லை..

அப்டின்னா உன்னால அவங்க கல்யாணத்துக்கு அப்பறம் மீரா வ காதல் இல்லாம பார்க்க முடியுமா...?

ஏன் அமைதியா இருக்க ...பதில் சொல்லு?

அதனால் தான்... அவங்க கல்யாணம் முன்னாடியே நான் foreign போறேன்...திரும்ப வரப்போறது இல்லை... அவங்க வாழ்க்கைல நான் இருக்கப்போறதும் இல்லை.

கௌசி... மீரானால உன்னை மறக்க முடியும்னு நினைக்கிறீ்யா?

அந்த கேள்விக்கு கௌசிக்கிடம் பதில் இல்லை... கள்ளம் கபடமற்ற ஒரு சிறு பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்த தன் மீதே வந்த ஆத்திரத்திலும், மீரா வை நினைத்து வருத்ததிலும் ஆழ்ந்து போனான்.

பொள்ளாச்சியில் தனது வீட்டிர்க்கு வந்த மீரா , வீட்டுக்குள் நுழைந்த அவளும் அதிர்ச்சியில் இருக்க, இவளை பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

மீரா அக்கா... என்றவாறு சிவா வும், தான்வி யும் அவள் அருகில் வர..

தான்வி... நீ இங்க ??

மீரா... உடம்புக்கு என்னாச்சு? நாங்க ஊருக்கு கிளம்பரப்போ கூட நல்லா தானே இருந்த, இப்போ என்ன இப்படி இளச்சு, கலச்சுப் போய் இருக்க...
என்று அம்பிகா பாட்டி பதட்டமாய் கேட்க

மீராவின் சித்தியான தேவி மீராவின் நெற்றியில் கை வெய்த்துப் பார்த்தார்.

காச்சலா பாப்பா? இல்லையே உடம்பு சுடலையே!!

இல்ல சித்தி, வேலை கொஞ்சம் அதிகம் ... அதான்...

Oh... என்று ஒப்புக் கொள்வதாக தலை ஆட்டினாலும் ,யாரும் அதை நம்பவில்லை... ஏதோ சரி இல்லை என்று ஒவ்வொருவர் மனமும் கணக்கிட்டது.

சரி சரி , வந்த புள்ளய வாசல்லியே ஏன் நிக்க வெய்கரீங்க? உள்ள வர விடுங்க என்று சரவணன் சொன்னா பிறகே எல்லாரும் மீராவை உள்ளே விட்டனர்.

Luggage ஐ சிவா வாங்கி வைக்க , அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

பாட்டி, தான்வி நீங்க இங்க எங்க வீட்ல??

ஹையோ மீரா அக்கா... நம்ம எல்லாரும் சொந்தகாரங்க... நெருங்கின சொந்தம் தெரியுமா ? என்று சிவா வின் தோலில் கையை போட்டுக்கொண்டு தான்வி சொல்ல...

ஆகப்போரோம் என்ற படி சிவா வும் தான்வியை  கட்டிக் கொண்டாள்.

எதும் புரியாமல் விழித்த மீரா வை கண்ட தன ரஞ்சனி, பெரிய மனுஷியாக அந்த இருவருக்கும் முன்னால் வந்து நின்றாள்.

அது ஒன்னும் இல்ல மீராக்கா... இவங்க நம்ம ஒன்னு விட்ட சொந்தம்... இப்போ தான் தெரிஞ்சிருக்கு.. அதான் வீட்டுக்கு வந்திருக்காங்க... அத தான் இவங்க ரெண்டு பேரும் சொல்றாங்க..

Oh... சரி சரி...

அப்பறம் மீராக்கா இந்த தடவ நான் தான் class first ... நீ சொன்ன மாதிரி first எடுத்தா sonata watch வாங்கிக் கொடுக்கரேண்ணு சொன்ன... வாங்கி கொடுப்பியா??? என்று அவள் வயதுக்கே உண்டான ஆர்வத்தோடு கேட்க...

அதானே என்ன டா, புள்ள இப்படி படிக்குதேண்ணு சந்தேகப்பட்டேன் , watch க்கு தானா... காரியவாதி... என்று சிவா சொல்ல...

உன் வேலை எதுவோ பார்த்துட்டுப் போ டி தடிமாடு...

யாரு டி தடிமாடு... நீ தான் டி அது... பாரு size ல கூட அப்படி தான் இருக்க ..

யாரு நான் குண்டா இருக்கனா... நீ தான் தின்னுட்டு தின்னுட்டு தூங்கி இப்படி பெருத்துக் கிடக்கர...

யாரு நானா? நீ தான் ...என்று  சிவா ஆரம்பிக்கும் போதே சமையல் கட்டில் இருந்து கையில்  காபி யோடு வந்த தேவியின் "ஏய் " என்ற அழுத்தமான குரலில் அக்கா தங்கை இருவரும் கப்சிப்..

சின்ன பாப்பா க்கு கொஞ்சம் வாயி ஜாஸ்தீங்க ... என்று சரவணன் அம்பிகா விடம் சொல்ல

அதை கேட்ட தனா கோவத்தில் சிவந்த முகத்தோடு தன் தந்தையை பார்த்து முறைத்தாள்.

எப்போ பார்த்தாலும் என்னையே சொல்லுங்க ... நான் மட்டும் தான் வாய் பேசிறேனா? அவ பேசலை??

ஆமா குப்பதொட்டில இருந்து எடுத்திட்டு வந்த நீ தான் வாயடி... அப்பா சொல்றதுல என்ன தப்பு?

உன்கிட்ட பேசினேனா??

நானும் உண்ட்ட பேசலை...

மறுபடியும் சண்டை ஆரம்பிக்க... தேவி நடுவில் வந்தார்.

அவ காலேஜ் முடிச்சிட்டு பேசிட்டு இருக்கா பாப்பா... உனக்கு இந்த வருஷம் public பரிட்சை இருக்கு ல... அவ கூட சண்டை கட்டிட்டு இருந்தா யாருக்கு நஷ்டம்... போ சாமி... போய் படி.. என்று தன் சின்ன மகளை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார் ..

இத பார்கரப்போ... எனக்கும் தான்வி யும் அகிலனும் சண்டை கட்டிக்கரது தான் நியாபாகம் வருது... இது எல்லாம் என்ன சண்டை... இவங்க ரெண்டு பேரும் அப்படி அடிச்சுக்குவாங்க..

அட நீங்க வேற அத்தை, இவங்களும் நீங்க ரெண்டு பேரும் இருக்கனால கொஞ்சம் மேம்போக்காக பேசிக் கிட்டாங்க... இல்லைனா... வீடு ரெண்டாய்டும்... என்று சரவணன் சொல்ல...

அங்கிருந்த அனைவரும் புன்னகைத்தனர்..

இருந்தும் மீரா வின் முகம் தெளியாததை கண்டவர், தன் மகளை refresh ஆகி வரும்படி அனுப்பிவிட்டு தன் மனைவியை பார்த்து கண் காட்ட, அவரும் அதை புரிந்தவாரு மீரா வின் பின்னே சென்றார்..

கைகால் முகம் கழுவிட்டு வந்த மீரா ,ரூம் மில் எதையோ யோசித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த தன் சித்தியை பார்த்தாள்.

என்ன சித்தி?

அது மீரா... இவங்கள தெரியும் தானே... என்று அம்பிகா மற்றும் தான்வி பற்றி கேட்க...

தெரியும் சித்தி, ரொம்ப நல்லவங்க...

ம்ம்... என்னன்னா .. அவங்க பேரனுக்கு உன்னை கேட்டு வந்திருக்காங்க... மொதல்லயே லலிதா அக்கா அந்த பையன பத்தி சொல்லிருந்தாங்க... உங்க சித்தப்பாவும் பாத்துட்டு பேசால்ம்னு தான் இருந்தோம்... இப்போ அவங்களே கேட்டு வந்திருக்காங்க...
அதான் நீ என்ன சொல்ற ? நீயும் அந்த பையனும் friends என்று சிவா கூட சொன்னா??

உனக்கு சம்மதம் தானே ... அவங்க கிட்ட சரி ன்னு சொல்லிடலாமா??

மீராவிடம் பேசிவிட்டு வெளியே வந்த தேவியை அனைவரும் ஆர்வமாய் ஏறிட!!!

அவளுக்கு சம்மதம் இல்லைனு சொல்லிட்டா என்று அவர் கூறியவுடன்

என்ன!!!! என்று அங்கிருந்த மூன்று பெண்களும் அதிர்ச்சியை வெளியிட்டனர்.

Aunty நீ...நீங்க கௌசிக் அண்ணா தான் மாப்பிள்ளைன்னு சொன்னீங்களா?

ம்ம்...

அப்படி இருக்கப்போ மீரா அக்கா ஏன் ஒத்துக்கலை? என்ற கேள்வியோடு மீரா இருந்த அறைக்கு சிவா செல்ல , பின்னாலயே தான்வியும் சென்றாள்.

அம்பிகா பட்டியோ என்ன ஆச்சு திடீரென்று இந்த பெண்ணிற்கு? என்ற கேள்வியோடு அவர்களை பின் தொடர்ந்தார் .

See you at next update friends...

Don't forget to vote and comment..




















Continue Reading

You'll Also Like

39.6K 2.2K 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உ...
329K 9.5K 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சம...
23.7K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...