எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 636 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 31

235 6 0
By SindhuMohan

மீராவுடன் தான்வி அங்கிருந்து அகல... விஷ்ணு பாட்டியை பார்த்தான்.

இவ்வளவு நேரமாக தன் உள்ளத்தில் அழுத்திக்கொண்டு இருந்ததை அவரிடம் கேட்டு விட முடிவு பண்ணினான்.

பாட்டி...

சொல்லு கண்ணா...

இந்த பொண்ணு தான் அண்ணா.... அதாவது அகிலனுக்கு பார்த்திருக்கீங்களா?

ஆமா...

ம்ம்...

என்னாச்சு பா... சுரத்தே இல்லாம ம்ம் கொட்டுற...

அது என்னன்னா... இந்த பொண்ணு எப்படி அகி க்கு செட் ஆவா? You know... அகி வந்து... What to say... Hmm... அதாவது, அகி மும்பைலேயே படிச்சு வளர்ந்தவன், மேலும் அவன் foreign கூட போய்ட்டு வரான்... And his status , அவனோட environment எல்லாமே உயர்ந்தவை.

But just look at that girl பாட்டி, she is ... mmm...she is not a match for him..எல்லா விதத்திலும்...then why she??? என்று கௌசிக் கை நினைத்துக் கொண்டு அகிக்காக கேட்பது போல கேட்டான்..

விஷ்ணு ,கௌசிக் கை ஒரு ஹீரோ வா தான் பார்த்திட்டு இருக்கான்... எல்லா விதத்திலும் விஷ்ணு விற்க்கு கௌசிக் ஒரு ரோல் மாடெல் ஆகவே மாறி இருந்தான்... காலேஜ் டேஸ் ல இருந்து,கௌசிக் பத்தி அகிலன் சொல்லும் போதே அவனின் மீது ஏற்பட்டிருந்த மதிப்பு, கௌசிக் கம்பனி பொறுப்பேற்று அதை இவ்ளோ தூரம் உயர்த்தியதில் இருந்து , இதோ இங்க வந்து தன்னோடு இருந்த வரைக்கும் அவன் கண்ட கௌசிக்கின் திறமைகள் பார்த்து எத்தனையோ முறை வியந்திருக்கிறான்.

அது மட்டும் அல்லாது கௌசிக்கின் கம்பீரம்..அவனின் ஆளுமை ... அவனின் அழகு எல்லாமே விஷ்ணு ரசிக்கும் ஒன்று.

ஆனால் அப்படி பட்டவன் பக்கத்தில் மீரா வை நிறுத்தி பார்க்க கூட விஷ்ணு வின் மனம் ஒப்பவில்லை... மீரா வை முதல் பார்வையிலேயே கௌசிக் கானவல் என்று நினைக்க தோன்றாமல் போனது.. அதை தான் இப்படி வாய் விட்டு தன் ஆதங்கத்தை பாட்டியிடம் சொன்னான்.

அவனது கேள்விக்கு பாட்டி பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே, விஷ்ணு வின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கௌசிக், தான் பார்த்துக் கொண்டிருந்த file ஐ கீழே கோபமாக வைத்து விட்டு விஷ்ணு விடம் திரும்பினான்.

You know விஷ்ணு, Don't judge a book by it's cover ன்னு உன்னை மாதிரி ஆளுக்காக தான் சொல்லி இருக்காங்கன்னு நினைக்கறேன்.
ஒருத்தரோட தோற்றமும், அவங்க போட்டு இருக்க துணியும் அந்த நேரத்துல அவங்க இருக்க சூழ்நிலையை பொறுத்தது. அதை எந்த நேரத்துல ,எந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறும் மாத்திக்களாம். But character... That's what we should look for..

அந்த மாதிரி பார்கரப்போ மீரா is a pure soul... அவளோட மனசு ரொம்ப அழகானது, தூய்மையானது... So... அகி... அகிலனுக்கு மீரா எல்லா விதத்திலும் பொருத்தமானவளாக இருப்பா...

என்று அழுத்தமாய் பேசியவன் , கடைசி வாக்கியங்களில் தொண்டை கமர ,அங்கிருந்த இருவரையும் பார்த்து விட்டு அகன்றான்...

கௌசிக்கின் பேச்சில் சிலையாய் அமர்ந்திருந்த விஷ்ணு வை , பாட்டி ஒரு புன்னகையோடு கலைத்தார் .

விஷ்ணு...

பாட்டி ... தப்பா சொல்லிட்டேன் ல...

இல்ல கண்ணா...நீ உன் மனசுல பட்டத தான் சொன்ன...

ஆனா கௌசிக் அண்ணா சொன்னது தானே கரெக்ட் .

ம்ம்...உண்மை தான் .. கௌசிக் மனுஷங்களை எடைபோட தெரிஞ்சவன், நிறைய விஷயங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க கூடியவன்... அதான் தெளிவா இருக்கான்... நீ இன்னும் நிறைய கத்துக்கணும் ..

ம்ம்... உண்மை தான் .. என்று ஒத்துக்கொள்ள... அவன் தலையை தடவியவரின் உள்ளம் மகிழ்ந்து இருந்தது ,கௌசிக் கிற்க்கு மீரா வின் மேல் இருக்கும் புரிதலை கண்டு ..

ஆனால் புத்திசாலி, தெளிவானவன் என்று அவர் நினைக்கும் கௌசிக் எடுக்கப்போகும் முட்டாள் தனமான முடிவை கண்டு அவர் அதிர்ந்து போகப்போவது உறுதி.

இந்த மூன்று நாட்கள் மீரா விற்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது... காலையில் ஆபீஸ் சென்று விடுபவள், சாயந்திரம் வந்தவுடன் தான்வி யுடன் சேர்ந்து கொண்டு பக்கத்தில் கோவில் முதல் பேல் பூரி கடைவரை அனைத்தையும் சுத்திப்பார்ப்பது தான் வேலையே...

அத்தனை அழகாக இருந்தாலும் தான் அழகி என்ற எந்த வித அலட்டலும் இல்லாமல் இருப்பது, அவள் போட்டிருக்கும் துணி மற்றும் அவளது நகைகளே அவளது பணக்கார தன்மையை எடுத்துரைத்தாலும் ,அதைக் காட்டிக்கொள்ளாமல் மீராவுடன் ரோட்டுக் கடைகளில் கூட நின்று சேர்ந்து சாப்பிட்ட தான்வியின் எளிமை மீரா வை மிகவும் கவர்ந்தது...

முதலில் inferiority complex ஒடு தான்வி யுடன் பழக தயங்கினாலும் அவளது இந்த குணங்களால் கவரப்பட்டு அவளோடு இயல்பாக பழக ஆரம்பித்தாள் மீரா.

மூன்று நாட்களாக தான் ஆபீஸ் போனவுடன் பாட்டியும் தான்வியும் இங்கே உள்ள சொந்தங்கள் வீட்டுக்கு செல்வது ,purchase என்று இருந்தவர்கள் இன்று காலை அம்பிகா பாட்டியின் மகள் வீட்டுக்கு பொள்ளாச்சி செல்ல கிளம்பி விட்டனர்... எப்படியும் திரும்பி வர ஒரு வாரம் ஆகும் என்று சொல்லிவிட மீரா விர்க்கு தான் தனித்து விட பட்டது போல ஆனது.

இந்த மூன்று நாளாய் கௌசிக்கை பார்த்தாலும் பேச முடியாமல் இருந்தது...
ஆனால் இனியும் முடியாது... அவனிடம் எப்படியாவது இந்த நல்ல விஷயத்தை சொல்லி அவங்க பாட்டி எல்லாம் இருக்கப்பவே சித்தி சித்தப்பா க்ஷட்ட பொண்ணு கேக்க சொல்லணும் என்று நினைப்போடு வெளியே எட்டிப் பார்த்தாள்.

இன்னும் கௌஷிக் வரவில்லை என்பது அவன் வீட்டுக் கதவின் பூட்டு சொல்லியது...

எப்போ வருவான்னு கேப்போம் என்றவாறு அவனுக்கு கால் பண்ணினாள்.

ஹலோ

ஆங் கௌசி... எங்க இருக்க?

On the way Meera.. இன்னும் ஒரு 10min ல வந்துடுவேன்.

Oh... சரி வா...

ம்ம்...

கடவுளே இன்னிக்காது அவனிடம் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பா... என்று விநாயகருக்கு ஒரு கும்பிடு போட்டவள் கௌசிக் கிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

வீட்டிற்க்கு வந்தவன் ரெப்பிரஷ் ஆகிவிட்டு வெளியே வர மீரா வீடு சாத்திருந்தது... அப்படி என்றால் அவள் இந்நேரம் மொட்டை மாடியில் தான் இருப்பாள் என்று தெரியும் ஆதலால் அங்கே சென்றான்..

கீழே உட்கார்ந்து முழங்காலை கட்டிக்கொண்டு வானத்தை பார்த்துக் கொண்டிருந்த மீராவை கண்டவன் அவள் அருகில் சென்றான்.

மீரா...

கௌசி.. வந்துட்டியா.. நான் மாடில இருக்கேன்னு சொல்லலாம்னு நினைச்சேன்... நீயே வந்துட்ட... என்றவாறு எழுந்து அவன் கையோடு தன் கையை கோர்த்து நின்றாள்.

மௌனமாய் சில நிமிடங்கள் செல்ல,

கௌசி...

ஹ்ம்ம்...

நிலா னாலே அழகு தான் ல... அதும் இன்னிக்கு பௌர்ணமி , பார்க்க பார்க்க மனசு எல்லாம் நிம்மதியா இருக்கில்ல...?

அவன் சொல்லப் போகும் விஷயத்திற்கு மீரா எப்படி ரியாக்ட் செய்வாலோ என்ற எண்ணத்தில் உழன்று கொண்டு இருந்தவனுக்கு நிலவை ரசிக்க முடியவில்லை.ஆனால் அவள் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக

ஆமா... என்றதொடு நிறுத்தினான்.

கௌசி... என்ன ஆச்சு...? என்று அவனது முகத்தை திரும்பிப் பார்த்தாள்

எப்போதுமே அவளது ரசிப்பையும் புன்னகையும் தொடர்ந்து அவன் முகத்தில் அதே உணர்வுகள் வரும்... ஆனால் இன்று அவனது முகத்தில் முதன் முதலில் அவனை கண்ட போது இருந்த வெறுமை , படர்ந்திருந்தது.

ஒன்னுமில்லை ... Tired ஆக இருக்கு...

ம்ம்... கௌசி...

ஹ்ம்ம்..

இப்போ நான் சொல்ல போறதா கேட்டா உன்னோட tired எல்லாம் ஓடிபோய் பிரிஸ்க் ஆகிடுவாய்.. என்று அவன் முகம் பார்க்க..

ஒற்றை புருவம் ஏற்றி என்ன என்பது போல பார்த்தான்...

அதுவா... என்று சிவக்கத்துடங்கிய முகத்தை மறைக்க அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றவள்...

நம்ம லலிதா ஆன்டி இருகாங்கில்ல, அவங்க எங்க சித்தி கிட்ட எனக்காக மாப்பிள்ளை ஒருத்தங்களை பார்த்து சொல்லிருக்காங்க.. என்றவாறு திரும்பி அவனைப் பார்த்தாள் குறும்பு புன்னகையோடு ...

அவனோ அவளுக்கு எந்த வித பதிலும் அளிக்காது கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிகொண்டு நிலவை பார்த்து நின்றான்..

அவன் கோவத்தில் இருப்பான்,பொறாமையில் பொங்குவான் என்று எல்லாம் எண்ணி திரும்பின மீரா விக்கு சப்பென்று ஆகிவிட்டது...

இதுல என்ன இருக்கு, ஒரு பொண்ணு கல்யாண வயசுல இருந்தா மாப்பிள்ளை பார்க்க தான் செய்வாங்க ... இதுல என்ன இருக்கு .... என்றான் திரும்பாமல்.

ஆமா ல... என்னன்னா எங்க வீட்ல கூட அந்த மாப்பிள்ளைக்கு okay சொல்லிட்டாங்க... என்று அவள் சொல்லியவுடன் கௌசிக் சட்டென்று அவள் புறம் திரும்பினான்...

இது என்ன புது பிரச்சனை , அகிலனுக்கு மீராவை பேசி முடிக்க தானே இத்தனை நாள் தான் கஷ்டப்பட்டது... இதில் வேற எவனுக்கோ அவங்க வீட்ல okay சொல்லிட்டாங்க என்று இவ்வளவு சாவகாசமாக சொல்கிறாள் இவள்..

அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி , கோவம் , குழப்பம் என்ற மாறுபாடுகளை கண்ட மீரா விர்க்கு திருப்பதியாய் இருந்தது... அவள் எதிர்பார்த்தது இதை தானே ..

ஆனால் அவன் எதும் கூறாமல் அவளையே உருத்துப் பார்க்க...

அந்த பையன் யாருன்னு சொல்லட்டுமா???

அந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் பார்வையை மாத்தாமல் அவள் முகத்திலேயே அவன் கண்கள் பதிந்திருந்தது..

சரி சரி... சொல்றேன்...அது யாருன்னா????
அது....நீ தான் என்பது போல கையை அவனை நோக்கி சுட்டிக் காட்டினாள்.

அதை புரிந்து கொண்டவன் மனம் ஒருவாறு நிம்மதியை அடைந்தது...
மெதுவாய் தன்னையே குறு குறு என்று பார்த்துக் கொண்டிருக்கும் அவளை காண முடியாது திரும்பி நின்றான்.

என்ன இவன் , நான் சொல்லியது இவனுக்கு புரியவில்லையா...?

கௌசி... நான் சொன்னது புரிந்தது தானே.?

ஹ்ம்ம்...

அவனது இந்த மகிழ்ச்சி இல்லா தன்மை மனதில் ஒரு திகிலை உண்டாக்க....

அதுக்கு எதும் நீ சொல்லலையே...?

என்ன சொல்லணும்? முன்னாடி சொன்னது தான்... ஒரு பொண்ணுக்கு ஒரு பையனை பார்த்து சொல்லிருக்காங்க அவ்ளோ தானே.

அவ்ளோ தானே வா... கௌசி இன்னும் உனக்கு புரியலை... எங்க வீட்ல உனக்கு okay வே சொல்லிட்டாங்க...

அப்டின்னா என்ன அர்த்தம் ... உனக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை... எல்லாரோட சம்மதத்தோடையும் ,யாரும் சங்கடப்படாம நம்ம கல்யாணம் நடக்கும்
என்று சொல்லிவிட்டு அவனை ஆர்வமாய் பார்த்தாள்...

ஆனால் திரும்பி அவன் கேட்ட கேள்வி, அவள் இதயத்தில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது...

கல்யாணமா? உனக்கும் எனக்குமா? இது என்ன பைத்தியக்காரத் தனமான பேச்சு மீரா... I didn't expect this from you... என்றான் கௌசிக் குழப்பத்தை குரலில் காட்டி.

Paavam Meera, innum koushik sollapovathai kaetkum podhu aval enna Panna pogiraalo... Paarpom adhuththa athiyayaththil...

Bye ...

Don't forget to vote and comment dears...

And my silent readers... Padichittu vote pannunga pa... Kadhai epdi irukkunaadhu sollunga ... Views varuthu aana vote mattum varalai😪😪😪😪

Meet you all at the next update .


Continue Reading

You'll Also Like

53.8K 3.2K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...
15.8K 549 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
49.8K 2.1K 16
தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா...
338K 13.1K 63
சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....