எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 636 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 30

244 8 0
By SindhuMohan

பார்வையிலேயே விஷ்ணுவும் தான்வியும் தங்கள் மனதை பரிமாறிக் கொண்டிருக்க...

"விஷ்ணு" என்ற கௌசிக் கின் கண்டிப்பான குரலில் கலைந்தான் நம் காதல் மன்னன்.

அதிர்ந்து திரும்பி பார்க்க கண்களில் கண்டிப்புடன் நின்றிருந்தான் கௌசிக்..

அண்ணா... ஆ... அவங்க வந்துட்டாங்க... அதான் ... நான்...

என்று விஷ்ணு ஏதேதோ சொல்லி சாமாளித்து கொண்டிருக்க... அவனை முறைத்துவிட்டு  அவனை தாண்டி வந்துகொண்டிருந்த அம்பிகா பாட்டியை நெருங்கினான் கௌசிக்...

வாங்க என்றவாறு அவரின் ட்டிராலியை தன் கையில் வாங்கினான்..

கௌசி, நல்ல இருக்கியா ??? மூன்று மாதங்கள் மேல் பார்க்காமல் இருந்த பாசத்தோடு தன் பேரனை கேட்டார் அம்பிகா...

ம்ம்... நல்லா இருக்கேன்...
என்று எப்பொழுதும் போல ஒற்றை வார்த்தையில் அவனது பதிலை முடித்துக்கொண்ட தன் பேரன் அவருக்கு புதிதாய் தெரிந்தான்... என்று மீராவுடன் சேர்ந்து சிரித்து கொண்டிருக்கும் கௌஸிக்கை பார்த்தாரோ அன்றிலிருந்தே அவன் வேறு மாதிரிதான் இவர் கண்களுக்கு தெரிகிறான்.

அவன் முகத்தில் அந்த சிரிப்பை பார்க்க எத்தனை நாள் முயன்றிருப்பார்... ஆனால் ஒரு சிறு பெண் இவனை மாற்றி விட்டாளே... எல்லாம் அந்த அம்மனின் மகிமை... இந்த முறையும் நான் வந்திருக்க விஷயம் நல்ல விதமாக முடியனும் அம்மா... என்று மனதில் தன் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டார் .

ஹலோ பாட்டி , என்ற விஷ்ணு வை கண்டவர்...

அட விஷ்ணு.... எப்படி இருக்க... நல்லா பெரிய மனுஷன் ஆகிட்ட போலயே...

ஹாஹா ... ஆமா பாட்டி.. எப்படி இருக்கீங்க..?

நல்லா இருக்கேன் கண்ணா.. நீ எப்டி இருக்க, வீட்ல எல்லாரும் சௌகியமா?

எல்லாரும் நல்லா இருக்காங்க பாட்டி... அம்மா அப்பா இன்னிக்கு ஒரு நெருங்கின சொந்தக்காரங்க கல்யாணம் ,அதற்கு போய்ட்டாங்க... உங்களை கூப்பிட வராமல் போனதுக்கு ரொம்ப வருத்தப்பட்டாங்க...

அதனால் என்ன கண்ணா...

அதான் உங்களை நாளைக்கு நேர்ல வந்து வீட்டுக்கு கூட்டிட்டு  வரணும்னு சொல்லிட்டு இருந்தாங்க...

கண்டிப்பா வரோம் கண்ணா.... என்று அவன் தலையை தடவிக் கொடுத்தார்.

விஷ்ணு வின் பார்வை இப்போது தான்வியின் பக்கம் திரும்பியது..

ஹாய்... தான்வி... எப்டி இருக்க?

ம்ம் ... நல்லா இருக்கேன் ... என்றவாறு அவனை பார்த்தாள்...

பாட்டி சொன்னது சரி தான் .... அப்பொழுதெல்லாம் ஒட்டடை குட்சியாய் இருந்தவன்... இன்று ஆணழகனாக இருக்கிறான்... அவனது ஈற்கும் விழிகளும், புன்னகையும் இன்னும் வசீகரம் ஆனதாய் உணர்ந்தாள்..

அவளது அளவிடும் பார்வை கண்டவன் வெக்கம் கொண்டு புன்னகைக்க ... அதை கண்ட அவளுக்கு சிரிப்பு வந்தது...

அவர்களது இந்நிலை கெடுக்கும் விதமாய் ,

லக் கேஜ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்ட தானே தான்வி? என்ற கௌசிக் கின் குரல் அவளை நோக்கி கேட்டது..

எஸ் அண்ணா... எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டேன்..

ம்ம்... போலாமா ?

சரி... என்ற அவள் பதிலோடு அனைவரும்  விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர் ..

ஒரு வாரம் ஆச்சு கௌசி  உன்னை பார்த்து... அன்னிக்கு கிஸ் பண்ண போது தான் பார்த்துகிட்டது... அதுக்கப்பறம் பார்க்கவே முடியலை .. ச்ச்சே...

எப்போ ஃபோன் பண்ணினாலும்... கொஞ்சம் நேரம் பேசிட்டு வேலை இருக்கு மீரா ன்னு வைத்து விடுகிறாய்...

ஏன் இப்படி பண்ற என்று கண்ணாடி முன்னால் நின்று கௌசிக்கிடம் பேசுவதாக  கற்பனையில் அவனை திட்டிக் கொண்டிருந்தாள் மீரா.

ஒரு வேளை அவனுக்கு உன்னை பிடிக்காம ,உன்னை அவாய்ட் பன்றானோ என்னமோ? என்று மனம் அவளை பயமுறுத்த...

அவன் கண்ணுல அன்னிக்கு எவ்ளோ லவ் இருந்துச்சு பார்த்த இல்ல... அதை பார்த்தும் உனக்கு இப்படி சந்தேகம் வரலாமா? அது மட்டும் இல்லாம... அவன் முன்னாடியே ரொம்ப பிஸி ஆக தானே இருந்தான்...அந்த வேலை இன்னும் முடியாமல் இருந்திருக்கலாம்... அதான் இப்படி ... அதனால் நீ பேசாம இரு...என்று தன்னிடம் வாயடிய மனதை கொட்டு வைத்து அடக்கினாள்...

என்னதான் தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டாலும் , அவனை பார்க்காமல் இருக்க முடியாது தவித்தாள்.

எப்போ கௌசிக் வருவ?... கண்டிப்பா இன்னிக்கு உன்னை பார்த்து, நம்ம கல்யாணத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை அப்டின்ற சந்தோஷமான விஷயத்தை சொல்லணும் ... அப்போ உன்னோட முகத்தில தெரியப் போகிற ஆனந்தத்தை பார்க்கணும் என்றவாறு அவனின் முகபாவத்தை கற்பனையில் காண ஆரம்பித்தாள்.

மாலை வீடு வரும் போதே தலை வலி கொன்றது...

கடவுளே !  ஏன் தான் இந்த தலை வலி வருதோ... போய் மொதலில் தூங்கனும்... ம்ம்...இந்நேரம் கௌசிக் இருந்திருந்தா கண்டிப்பா இஞ்சி டீ போட்டு கொடுப்பார்...அதை குடிச்சவுடன்  தலை வலி அப்படியே போய்டும் ... கௌசிக் கின் கை பக்குவம் அப்படி என்று தனக்கு தானே புன்னகைத்தவள்...  ம்ம்... ஆனா அவனை பார்த்தே  எவ்ளோ நாள் ஆச்சு... என்று வலியும் சோகமும் மிக மெதுவாய் படியேறி வந்தால் மீரா...

என்றும் போல கௌசிக் கின் வீட்டை ஒரு பார்வை பாவமாய் பார்த்துவிட்டு திரும்ப... அவள் மூளைக்கு அந்த செய்தி சட்டென்று பட்டது...

கௌசிக் வீட்டு கதவு பூட்டவில்லை...
அப்படினா கௌசிக் வீட்ல இருக்காரு... என்று புரிந்த நொடி அவள் கால்கள் அவனின் வீட்டை நோக்கி விரைந்தது...

எப்பொழுதும் போல ரெண்டு தட்டு கதவை தட்டி விட்டு கதவை வேகமாய் ஆவலாய் படீரென்று திறந்து கொண்டு உள்ளே போனவள் அதிர்ந்து நின்றாள்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டவுடன், இந்நேரம் வருவது மீரா என்று கௌசிக் புரிந்து கொண்டு 'கதவிடம்  போகாதே' என்று கதவை திறக்க போகும் விஷ்ணுவை தடுபதற்குள் நடந்து முடிந்து விட்டது.

வேகமாக திடீரென திறக்கப்பட்ட கதவினால் மூக்கும்,தலையும் அடிபட
அம்மா என்ற முணங்களோடு சுவற்றில் மூக்கை பிடித்துக் கொண்டு சாய்ந்தான் விஷ்ணு.

அதே நேரம் , அங்கு நடந்த காரியத்தை எதிர்பாராத பாட்டியும், பேத்தியும் விஷ்ணு என்ற கூவலோடு அவனை நெருங்கினர். இப்படி தான் நடக்கும் என்று தெரிந்த கௌசிக் , உள்ளே 'கௌசி 'என்ற குஷியோடு நுழைந்த மீராவை நோக்கினான் .

வேற எதும் பேசும் முன் தனக்கு பக்கத்தில் கேட்ட குரல்களில் திரும்பி பார்த்தவள் , அங்கே மூன்று பேர் இருப்பதும் , அதில் ஒருவன் வலியால் துடிப்பதையும் பார்த்து அதிர்ந்தாள்.

விஷ்ணுவை பக்கத்தில் இருந்த சோஃபாவில் அமர வைத்து அவனின் கையை  எடுத்து விட்டு மூக்கை பார்த்தார் அம்பிகா..

அடி பலம் இல்லாததால் ,இரத்தம் எதும் வரவில்லை.. மூக்கு அடிப்பட்டதால் நன்கு சிவந்து மட்டுமே இருந்தது , அப்படியே முன்னந்தலையும்.

ஒன்னும் இல்லை விஷ்ணு, லேசா சிவந்து தான் இருக்கு... பிரச்சனை இல்லை, கொஞ்ச நேரத்தில் சரி ஆகிடும் என்று பாட்டி அவனுக்கு ஆறுதல் படுத்தினார்.

இவ்வளவு நேரம் விஷ்ணு வை கவலையோடு அவன் கையை பிடித்து கொண்டு பார்த்திருந்த தான்வி, பாட்டி ஒன்றும் இல்லை என்றவுடன் மனசு சமாதானம் ஆக ,அப்போது தான் சிவந்து போய் தெரிந்த மூக்கும் , அவன் அடிபடும் போது அவன் கத்திக் கொண்டே சுவற்றில் சாய்ந்த நிகழ்வுக் காட்சி வர , கூடவே சிரிப்பும் வந்தது.

ஹாஹா... என்று அவள் அவனை பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள்.

தான்வி... என்று பாட்டி அவளை கோபத்தோடு பார்த்தும் , விஷ்ணு நம்பமுடியாமல் அவளை பார்த்த போதும் அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

I am sorry விஷ்ணு... ஆனா ....ஹாஹா ... என்னால நீ ... ஹாஹா... அடி பட்டது.... ஹாஹா... அப்பறம் உன்னோட இந்த மூஞ்சி இது ... ஹாஹா... எல்லாம் பார்கறப்போ எனக்கு சிரிப்பா வருது... ஹாஹா....

ராட்சசி என்று விஷ்ணு பல்லை கடித்தும் , அவள் சிரிப்பை நிறுத்தவில்லை.

அதற்குள் கௌசிக் ஐஸ் கட்டிகளை துணியில் சுற்றி கொண்டுவந்து நீட்ட ,விஷ்ணு அதை வாங்கி மூக்கில் வைத்தான்.

அதற்கு பின்பே பாட்டி ,மீராவை கவனித்தார்.

உள்ள வா டா... என்ற அவர் அழைத்த பின்பே அனைவரும் மீரா வை கண்டனர், அவளும் அதிர்ச்சியில் இருந்து மீண்டாள்.

வாராத சிரிப்பை காமிக்க உதட்டை இழுத்து புன்னகைத்தவள் , 'அவனுக்கு என்ன ஆச்சு' என்ற கேள்வியோடு அருகில் நின்ற கௌசிக் கை பார்க்க, 'கதவை திறக்க வந்தான், அதற்குள்ள நீ' ... என்றவாறு கையை விரிக்க...

அய்யய்யோ... என்று விஷ்ணு வின் அருகில் சென்றாள்.

என்னை மன்னிச்சிடுங்க.... நான் எப்பையும் போல கதவை தட்டியவுடன் திறந்திடுவேன்... நீங்க திறக்க வருவீங்கனு நான்... அது எனக்கு தெரியலை...
என்று பதட்டத்தோடு சொல்ல...

விஷ்ணு பதில் சொல்லும் முன் ,தான்வி முந்திக் கொண்டு....

கவலை படாதீங்க அண்... ம்ம்... அக்கா.. அவருக்கு ஒன்னும் ஆகவில்லை... என்றவாறு சிரிப்போடு மீராவின் கையை அருகில் வந்து பற்றிக் கொண்டாள்.

மீரா வோ தன்னிடம் வந்து பேசும் தான்வி யை ஆச்சரியமாய் பார்த்தாள் ..
தான் கதையில் மட்டும் படித்த தேவதை பெண் என்ற வார்த்தைக்கு பொருத்தமாய் , அத்தனை அழகோடு சிரித்த முகமாய் தன் அருகில் நிற்பவளை காண காண தான் கனவில் நிற்கிறோமா? என்று கூட தோன்றியது.

எதும் சொல்லாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் மீராவை கண்ட தான்வி...
சட்டென்று நியபாகம் வந்தவலாக... ஒஹ்... பாருங்க என்ன பத்தி சொல்லாமயே பேசிட்டு இருக்கேன்..

நான் தான்வி, கௌசிக் அண்ணா வின் தங்கச்சி, இது எங்க பாட்டி... என்று சோஃபாவில் லேசான சரிகை வைத்த பட்டுப் புடவையில் கம்பீரமாய் , தன்னை பார்த்து புன்னகைக்கும் அம்பிகாவை காட்டினாள்..அப்பறம் இது விஷ்ணு, எங்க ஃபேமிலி ப்ரெண்ட்.

நா... நான் மீரா... கௌசிக்கோட ப்ரெண்ட்... எதிர்த்த வீட்ல தான் இருக்கேன்...

ஓஹ்... சூப்பர் அக்கா... சரி வாங்க உட்கார்ந்து பேசுவோம் ... என்றவாறு மீரா வின் கையை விடாமல் அங்கிருந்த சோஃபாவில் அவளும் அமர்ந்து மீராவையும் அமரவெய்த்தாள் தான்வி..

அப்போது தான் மீரா அங்கிருந்த ஷோ கேஸ் கண்ணாடியில் தன் உருவத்தை கண்டவுடன் தான் தன் கோலம் புரிந்து.

வண்டியை நிறுத்திவிட்டு  முகத்தை பார்த்த போது , காலையில் தலையில் போட்டிருந்த எண்ணெய் முகத்தில் வழிய, ஹெல்மெட் போட்டிருந்த தலை கலைந்து இருக்க, சாந்துப் பொட்டு வேர்வையால்  பாதி அழிந்தும் அழியாமல்  தெரிய, கருவலயமும் , முகத்தில் அங்கங்கு தோன்றியிருக்கும் முகபருக்களும், போட்டிருந்த சிவப்பு டாப்பும் ,லேசாக சாயம் போய் இருந்த கருப்பு பாண்டும், துப்பட்டாவும் மாக தமது கோலம் நினைவில் வர மானசீகமாக தலையில் குட்டிக் கொண்டாள்.

இப்படி தான் கௌசிக்கோட பாட்டி முன்னாடி நிற்க வேண்டுமா? கௌசிக் இவங்க இன்னிக்கு வராங்க என்று சொல்லி இருந்தால் கொஞ்சம் நல்லாவாது வந்திருப்பேன்... இப்போ பாரு மூஞ்சி கூட கழுவாமல்... ச்சே... அவங்களுக்கு என்னை பிடிக்காம போய்டுமோ?? என்ன பண்றது? என்று தனக்குள்ளேயே புலம்பி புலம்பி, இருந்த தலை வலி அதிகம் ஆகியது.

மீரா வந்தது முதல் ,இப்பொழுது வரை அவள் முகத்தை பார்திருந்தவன், அவளது வலது கண் சிவந்து இருப்பதும்,  அடிக்கடி பல்லை கடிப்பதும் கண்டவுடன் கௌசிக் கிற்கு புரிந்தது , மீரா விற்கு தலைவலி என்பது... அதுதான் அவளது செய்கைகள் அவனுக்கு அத்துப்படி ஆயிற்றே, அதனால் அவள் செய்கைகளை கண்டவுடன் தெரிந்து கொண்டான்.

ஒரு மனம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் இஞ்சி டீயைப் போட்டு கொண்டு வந்து அவளிடம் நீட்டினான்.

அவளை பற்றி தெரிந்திருந்தாலும் , அவளிடம் பேசுவதற்காக,அவளை தங்களிடம் தயக்கம் இல்லாமல் பேச வெய்பதற்காக மீராவை பற்றி பாட்டி கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் ,  கௌசிக் டீயைப் கொண்டு வந்து மீராவின் முன் நீட்டினான்.

அதை கண்டவுடன் , அவள் கண்கள் விரிந்தது...

தேங்க்ஸ் கௌசி... Thank you so much... என்றவாறு டம்ளரை வாங்கிக் கொண்டாள்..

அண்... அது... அக்கா... ஒரு டீ க்கு இவளோ நன்றி யா?

எனக்கு மதியத்தில இருந்தே தலை வலி ...அதான்... டீ குடிச்சா சரி ஆகிடும்ல..

அப்போ ஆபீஸ்ல யே குடிச்சிருக்கலாம் இல்ல?

அங்கையும் குடிச்சேன்... ஆனா சரி ஆகலை, ஆன எப்படியுமே தலை வலி என்றால் கௌசிக் போட்டுக் கொடுக்கும் டீ குடிச்சா எனக்கு தலை வலி சட்டுனு விட்டுடும் ...

மொபைலை நோண்டிக் கொண்டிருந்த  கௌசிக் கையும், ரசித்து டீயை குடிக்கும்  மீரா வையும் தவிர மூவரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்.

வந்ததிலிருந்து தனக்கு தலைவலி என்று மீரா செய்கையால் கூட கௌஸிக்கிடம்  சொல்லவில்லை என்பது அவளை கவனித்துக் கொண்டிருந்த மூவருக்கும் உறுதி. அப்படி இருக்க , அவள் முக குறிப்பை வெய்த்தே அவளுக்கு தலை வலி என்று டீ போட்டுக் கொண்டு வந்து கௌசிக் கொடுத்தது... இருவருக்கும் இருக்கும் புரிதலை எடுத்துரைத்தது அவர்களுக்கு.

டீயை குடித்து விட்டு நிம்மதியோடு நிமிர்ந்த மீராவை புன்னகையோடு கண்டார் பாட்டி.

சரி டா ,நீ போய் முகம் கைகால் கழுவிட்டு ரெஸ்ட் எடு...இங்க தான் இருப்போம் ,நாளைக்கு கூட பேசலாம் என்று மீராவை அனுப்பி வைக்க..

சரிங்க பாட்டி என்று கிளம்பியா மீரா வோடு... அக்கா நானும் வரட்டா? என்று தலை சாய்த்து ஆசையாய் கேட்ட தான்வியையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு கிளம்பினாள்  மீரா, தான் சொல்லவந்த விஷயத்தை கௌஸிக்கிடன் சொல்லாமலேயே... இப்பொழுதே சொல்லி இருந்தால் இனி அவள் படப்போகும் துயரத்தை தடுத்திருக்கலாமோ என்னவோ?

பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்.

Don't forget to vote and comment dears















Continue Reading

You'll Also Like

83.8K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...
80.2K 3.8K 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா...
20.7K 861 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
134K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...