எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 637 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 29

280 10 0
By SindhuMohan

மீராக்கே புரியவில்லை, தான் கால் பதிய நடக்கிறோமா? அல்ல பறக்கிறோமா ? என்பது.

அவ்வளவு உற்சாகம், இன்று காலை  அவளது தங்கை சிவரஞ்சனி கூறிய விஷயத்தை கேட்டதிலிருந்து.

ஆபீஸ் க்கு கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் அவளது அலைபேசி பாட, எடுத்தாள்...

சொல்லு சிவா....

அக்க்.....கா.... என்று உரக்க கேட்ட குரலில் காதில் இருந்து அழைபெசியை   தொலைவில் வெய்த்தால்...

அடி கொஞ்சம் மெதுவா பேசு... என்றவாறு மீண்டும் காதில் பொருத்த...

எருமை... நான் சொல்றத கேளு... அப்பறம் நீயும் இப்படி தான் கத்துவ...

அப்டியா.... அப்படி என்னங்க விஷயம்..?

அப்பா ஊர்ல இருந்து வந்துட்டாங்க...

ம்ம், முந்தா நேத்தே வந்துட்டாங்கன்னு எனக்கு தெரியும் டி லூசு..

அக்கா... அக்கா... சரியான தத்தி கா நீ..!!

ஆமாண்டி , நீ ஒருத்தி தான் சொல்லலை ... நீயும் சொல்லு...

அச்சோ அக்கா... அப்பா வந்ததும் அம்மா எந்த விஷயத்தை பத்தி பேசுவாங்க..?

எந்த விஷயம் சிவா... என்றவாறே தன் பையில் லேப்டாப் பை திணித்து கொண்டிருந்தாள்...

ஆ... உன்னோட கல்யாண விஷயம் பத்தி...

அதுக்கு என்... ன...
மெதுவாய் சிவா சொல்லும் விஷயம் புரிபட.... கையில் இருந்த பையை நெஞ்சோடு வைத்துக்கொண்டு கீழே அமர்ந்தாள்..

ஹலோ அக்கா..

சி...சிவா... சி..சித்தப்பா...என்ன சொன்னாங்க...?

அ... து....வா... என்று வேண்டும் என்றே சொல்லாமல் இழுத்து சிவரஞ்சனி நிறுத்த ....

அவள் அமைதியாக இருக்கும் அந்த நொடிகள் மீராவின் இதயம் முரசு போல கொட்ட ஆரம்பித்தது...

சொல்லு டி...

அக்கா ... உனக்கு ஆபீஸ் க்கு நேரம் ஆச்சு பாரு ... நீ கிளம்பு ...நான் சாயங்காலம் பேசறேன் என்று மீராவின் பதட்டத்தை உணர்ந்தும் வேண்டும் என்றே அதை அதிகப் படுத்துமாறு சீண்டினாள்...

விளையாடாத சிவா... சொல்லு டா... என்ன சொன்னாங்க... ???

மீரா வின் குரலில் இருந்த பயம், ஏக்கம் , பதட்டம் எல்லாம் உரைக்க...

அக்கா...

ம்ம்...

கௌசிக்க லவ் பண்றியா?? என்று மெதுவாய் தன் சந்தேகத்தை  வினாவினாள்.

மீரா பேச்சிழந்து சிலையாய் சமைந்தாள்...

ஹலோ... அக்கா...

ம்ம்...

கௌசிக் மாமா வை பற்றி இன்னும் கொஞ்சம் விசாரிச்சிட்டு , நல்ல பையனா இருந்த ஜாதி மதம் பார்க்காம பேசி முடிசிரலாம்னு சொன்னாரு அக்கா அப்பா...

தன் தங்கையின் வார்த்தையில் கண்களில் இருந்து ஆனந்தத்தில் கண்ணீர் வந்தது ..

மனதில் அழுத்திகொண்டிருந்த பயம் ,இதோ இன்று சூரியனை கண்ட பனிப்புகையாய் விலகிவிட்டதாய் உணர்ந்தாள், தான் ஆசை பட்ட ஒன்று எந்த வித பிரட்சனையும் இன்றி தன் கையில் சேரப்போவதை எண்ணி மனம் கூத்தாடியது...

இங்கே இவள் ஒரு லோகத்தில் சஞ்சரிக்க... சிவ ரஞ்சனி ஒரு புன்னகையோடு ஃபோனை வைத்தாள்...

கடவுளே , அக்கா எப்பையுமே அவ சந்தோஷத்தை விட எங்க சந்தோஷத்தை தான் பார்ப்பா... அவளுக்கு என்று எதுமே அவ ஆசை பட்டது கிடையாது... முதல் முதலாக அவ ஒருத்தர் மேல ஆசை பட்டிருக்கா , அது நிறைவேறனும் ,எந்த தடங்கலும் இல்லாமல்... அவ என்னைக்குமே சந்தோஷமா இருக்கணும் என்ற வேண்டுதலை கடவுளிடம் வைத்தாள்..

ஆனால் பாவம் இருவரும் அறியவில்லை... இறைவன் எல்லார்க்கும் நல்லதை தான் செய்வார், ஆனால் அதற்கு நாம் சரியானவர் தானா? என்று நமக்கு அவர் வெய்க்கும் பரீட்சைகள் ஏராளம் ...  அதில்  தேறியவர்கே வேண்டுதல் நிறைவேற்றப் படும்...

மீரா இனி இறைவன் வெய்க்கப் போகும் பரீட்சையில் , விளையாட்டில் என்ன பாடு படப் போகிறாளோ... அதும் அவன் ஒருவனுக்கே தெரியும்...

கோவை விமான நிலையம் ,

மாலை 4:00 மணி.

கௌசிக் நெஞ்சில் வெறுமையோடு கையில் இருந்த ஃபோனில் இழக்கின்றி எதையோ பார்த்துக்கொண்டிருக்க... அதற்கு எதிர்மாறாக ,நெஞ்சில் ஒரு குதுகலத்தோடு ,"எப்போது இந்த மும்பை விமானம் தரை இறங்கும் , அவளை எப்பொழுது பார்ப்பேன்" என்று எதிர்பார்த்து காத்திருந்தான் விஷ்ணு.

சிறிது நேரத்திலேயே அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மும்பை விமானம் தரை இறங்கிய அறிவிப்பு வர...

குதிக்கின்ற இதயத்தோடு அவளுக்காக வழி மீது விழி வைத்து காத்திருந்தான்.

சில வினாடி காத்திருப்பிர்க்கு பின்... அவள் தோன்றினாள்...

ஆகாய வண்ண டாப்ஸ் மற்றும் அதே நிற பட்டியாலா மற்றும் கழுதொடு ஒட்டி போட்டிருந்த துப்பட்டாவோடும் , தனது உடைக்கு ஏற்றார் போன்று காதில் தோடும், கைகளில் வலையலுமாக தனது தூக்கிப் போட்டிருந்த குதிரை வால் கூந்தல் அவளது நடைக்கு ஏற்ப அசைய , அந்த நீல் வானமே தேவதை பெண்ணாய் நடந்து வருவது போல வந்தால் தான்வி..

ஐந்து வருடங்களாய் அவளை காணாத ஏக்கத்தை இந்த ஐந்து நொடிகளில் ஆசை தீர பார்த்து தீர்த்தான் விஷ்ணு...

நீண்ட ஐந்து வருடங்கள்...

விஷ்ணு கோவையில் டிப்ளமோ முடித்துவிட்டு அவன் தந்தையின் விருப்பத்தின் பேரில் மும்பையில் இருந்த பிரபலமான பொறியியல் கல்லூரியில் லேட்டரல் எண்டரி மூலம் இரண்டாம் வருடம் சென்று சேர்ந்தான்.

கொஞ்ச மாதங்கள் கழியும் போது விஷ்ணு , அகிலன், மற்றும் தருண், பிரகாஷ் என நால்வரும் நெருங்கிய தோழர்கள் ஆயினர்.

இவன்  கோவை என்பதால் ஒரு முறை அகிலன் வீட்டிற்கு அழைத்து செல்ல, அம்பிகா பாட்டிக்கு  விஷ்ணு வை மிகவும் பிடித்துவிட்டது ..

நம்ம பையன் ... நம்ம ஊரு என்று அவனிடம் என்றுமே தனி பிரியம் காமிப்பார்... அகிலனுக்கு மேல் நிலை முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்  தங்கை உண்டு என்று அறிந்திருந்த போதும் அதுவரை அவளை பார்த்திறக்கவில்லை அவன்... அன்றே அவளை காண்கிறான்...

அகிலனின் அறையில் நண்பர்கள் நால்வரும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துகொண்டு இருக்க... புயல் போல நுழைந்தால் தான்வி.

வந்த வேகத்தில் அங்கிருந்த தலையணையை எடுத்து அகிலனை மொத்த ஆரம்பித்தாள்...

தீடீரென்ற தாக்குதலில் அங்கிருந்த அனைவரும் சற்று ஸ்தம்பித்து போக... அகிலனின் குரல் அவர்களை அசைத்தது...

விடு டி ராட்சஸி... வலிக்குது ... என்ற வலி மிகுந்த அகிலனின் அலரளுக்கு காரணம் அவனது தலை முடியை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தாள்  தான்வி..

தான்வி விடு அவனை என்று தருண் பிரகாஷ் இருவரும் அவளது இருபுறமும் கைகையாய் பிடித்துகொண்டு அகிலனிடம் இருந்து பிரிக்க படாத பாடு பட்டுகொண்டு இருந்தனர்..

விடுங்க அண்ணா, இன்னிக்கு இவனை நான் என்ன பன்றேன் பாருங்க என்று அவர்களது கையில் இருந்து விடுபட திமிறிக்கொண்டு இருக்க... அகிலனோ வலிக்கும் தலையை தேய்த்து விட்டுக் கொண்டிருந்தான்..

இவர்கள் இப்படி இருக்க , அங்கே ஒருவன் பள்ளி சீருடையான பாவாடை சட்டையில்  கொழு கொழு கன்னங்கள்லோடு, சோடா புட்டி கண்ணாடியோடு , கோவத்தில் விரிந்த மூக்கோடு ,கண்டவுடன் தன் மனதில் ஆழமாய் பதிந்து விட்ட , தன் அண்ணனுடன் சண்டையிட்டு கொண்டிருந்த தான்வியை விழி அகல ஒரு ஆச்சிரியமான ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

என்ன ஆச்சு தான்வி...?

இவன் மறுபடியும் என் ஸ்கூட்டியை எடுத்திட்டு போய் ஸ்கிரட்ச் பண்ணி கொண்டு வந்திருக்கான் பிரகாஷ் அண்ணா...

ஏன் டா இவ ஸ்கூட்டியை தொட்ட...  இவ ஸ்கூட்டியை வேற யாராவது தொட்டலே அவளுக்கு பிடிக்காது என்று தெரியும் தானே...

டேய் , என் வண்டி பஞ்சர் ஆகிடுச்சு டா... அதனால் தான் எடுத்தேன்..

அதுக்கு என் வண்டியை என் பெர்மிஷன் இல்லாம எப்டி எடுப்ப?

போடி, பெரிய வண்டி...

அடிங்க... எத்தனை தடவை சொல்லிருக்கேன் 'டி ' போடதன்னு ... என்று மறுபடியும் அகிலனை அடிக்க போக ,

இந்த ஒரு தடவை விட்டுவிடு மா....

சும்மா இரு தருண் அண்ணா... இன்னிக்கு இவன் இருக்கணும் இல்ல நான் இருக்கணும் என்று மறுபடியும் சண்டையை ஆரம்பித்தாள்...

அவர்கள் சத்தம் கேட்டு அங்கு வந்த அம்பிகா ,தான்வியாய் அமைதி ஆக்கி, அகிலனை அவளிடம் மன்னிப்பு கேட்க வைத்து இருவரையும் சமாதானப் படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றார்.

இன்னொரு தடவ என் பைக்கை தொடு உன் கையை உடைக்கிறேன், என்று தன் அண்ணனை முறைத்து கொண்டே சொல்லியவள் விழி தன்னையே ஒரு குறுகுறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு வின் மேல்பதிந்தது...

இது யாரு?  என்று தன் கோவமான கண்களை அவனிடம் இருந்து விலக்காமல் கேட்க ,

இவனை பற்றிய விவரங்கள் அவளுக்கு எடுத்துரைக்கப் பட்டது ..

ஓ..  என்ற ஆராய்ச்சிப் பார்வையோடு அங்கிருந்து அகன்றாள்..

அதற்கு அடுத்து அவளை காண வேண்டும் என்ற ஆவலோடு நிறைய முறை அகிலன் வீட்டிற்க்கு விஷ்ணு சென்றாலும் எப்போதாவது ஒரு முறையே அவளை காண முடிந்தது...

முதலில் ஒரு ஆராயும் பார்வையோடு அவனை பார்த்தவள் ,அடுத்த அடுத்த சந்திப்புகளில் விஷ்ணு வின் கண்களில் தன்னை பார்க்கும் போது தெரியும்
ஆர்வம்  கண்டு  நெஞ்சில் ஏற்பட்ட குறுகுறுப்பால் அவளது பார்வையும் அவன் பால் ஆர்வமாய் படர ஆரம்பித்தது.

இப்படி பட்ட மூன்றாம் சந்திப்பில் தான்வி அவனை பார்த்து செல்ல அவள் போவதையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் விஷ்ணு...

விஷ்ணு...

அகிலனின் அழைப்பில் தன் நண்பனிடம் திரும்பியவன்...

சொல்லு மச்சா...

அட டா... என்ன ஒரு உரிமை... என்று பிரகாஷ் சிரித்துக் கொண்டே சொல்ல...

என்ன டா சொல்ற ... விஷ்ணு புரியாமல் விழித்தான்..

அதான் மச்சான் என்று சொன்னியே..

பகீரென்று இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு ,... இதுல என்னடா இருக்கு எப்பையுமே நான் அகிலனை அப்படி தானே கூப்பிடறேன்... ஏன் உங்களையும் அப்படி தானே கூப்பிடறேன்...

எங்களை கூப்பிடுவதை விடு..  ஆன அகிலனை கூப்பிடும் 'மச்சானில்
புதுசா ஒரு உரிமை தட்டுப்படுதே...

அ.. அத்... அது எல்லாம்... ஒன்னுமில்லை... என்று சமாளிக்க முயன்றான் விஷ்ணு ..

அப்டியா....என்று தருண் பிரகாஷ் இருவரும் கோரஸ் பாட...

விடுங்க டா அவனை... என்றவாறு விஷ்ணுவை தன் அருகில் அமர்த்தி விட்டு  அவனை பார்த்தான் அகிலன்...

விஷ்ணு... தான்வி இப்போதான் டா 11th படிக்கிறாள்.. சோடா புட்டி போட்டிருப்பதால் நல்ல படிப்பாளி என்று நினைக்காத... படிப்பு எல்லாம் சுமாரா தான் இருக்கும்...அதனால் இப்போது வேற விஷயங்கள் மனசுல நுழைந்தால் படிப்பு கெடும்... அப்புறமும் இன்னும் குழந்தை தனம் மாறாம இருக்கா... Maturity இல்லை அவளுக்கு... கொஞ்சம் வருஷம் போகட்டும் , அவள்
முடிவை அவளே எடுக்கும் அளவு
விவரம் வரட்டும்,  அதுக்கு அப்பரமும் உனக்கு இந்த 'மச்சான்' என்று கூப்பிட ஆசை இருந்தா அவளிடம் சொல்லு... எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அகிலன் மென்மையாய் விஷ்ணுவின் மனம் புண்படாமல் எடுத்துரைக்க , அதை புரிந்து கொண்ட விஷ்ணு அகிலனின் தோளை இறுக்கி அனைத்துக் கொண்டான்..

அன்றிலிருந்து அந்த வீட்டிற்கு செல்வதை மெதுவாக குறைத்துக் கொண்டவன் , பின்பு புராஜக்ட் அது எது என்று வேலை சரியாக இருக்க அகிலன் வீட்டிற்க்கு போவதை முழுவது தவிர்த்து விட்டான், பின்பு படிப்பு முடிந்து கோவையும் வந்துவிட்டான்...

தான்விக்கும் சில நாள் தன்னை விழுங்குவது போல பார்த்தவன் காணவில்லையே என்று ஒரு சில முறை நினைத்ததோடு அவளது படிப்பில் ஈடு பட அவர்களது முளைவிட்ட காதல் அதே அளவில் இன்றும் நின்றிருந்தது .

இதோ இந்த ஐந்து வருடங்கள் அவளை பார்க்க வில்லை என்றாலும் அவளின் நினைவுகள் விஷ்ணு வின் இதயத்தில் வேர்விட்டு வளர்ந்தே இருந்தது... அது அகிலன் 'தான்வி கோவை வருகிறாள்' என்று கூறியவுடன் பூ பூத்து குலுங்கிக் கொண்டிருக்கிறது...

எங்கே தன்னை எல்லாம் அவளுக்கு நியாபகம் இருக்குமா? என்ற எண்ணத்தின் தவிப்போடு அவளை அவன்  பார்த்துக்கொண்டிருக்க...

கௌசிக் கை தேடி கண்களை சுழட்டியவள், கூட்டத்தில் நின்றிருந்த கௌசிக் கை கண்டு பிடித்து விட, அவன் அருகிலேயே நின்றிருந்த விஷ்ணுவை கண்டவுடன் முகம் தாமரையாய் மலர்ந்தது .

அவன் பார்த்தபோது தோன்றிய ஈர்ப்பு, காலங்கள் செல்ல, விவரம் வர வர அவனை பற்றி யோசிக்கும் போது எல்லாம் தோன்றும் உணர்வு காதல் என்று அவள் உள் மனம் இடித்துறைத்தது...
இன்னும் அவனுக்கு தன் மேல் அன்று அவன் கண்ணில் கண்ட காதல் குறையாமல் இருக்குமா... இல்லை மறந்து விட்டிருப்பானா என்னை? என்று அவள் மனம் ஏங்காத நாள் இல்லை..

கோவையில் மீரா ,கௌசிக் கை பார்க்கும் ஆவலோடு ,விஷ்ணு வையும் பார்த்திட மாட்டோமா ?என்ற ஏக்கத்தோடு
வந்தவள் ...இதோ தன் முன்னால் அன்று அவன் கண்ணில் தெரிந்த தனக்கான காதல் குறைவில்லாமல் இன்றும் அதே போல தன்னை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் விஷ்ணுவை கண்டவுடன் அவள் மனம் நெகிழ்தது..

அதே போல தன் பார்வைக்கு குறைவில்லாமல் காதல் பார்வை வீசும் தான்வியின் கண்களை பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுவின் மனமும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து...

இத்தனை ஆண்டு காலம் நெஞ்சில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு அவளது ஒற்றை பார்வையில் பனிமலையாக மாறி நிற்கிறது... உலகங்கள் அத்தனையும் வென்று விட்ட ஒரு தித்திப்பு அவன் மனதில் தோன்றியது...

"இது போதும் எனக்கு இது போதுமே" என்ற பாடல் அவன் இதயம் பாடத் தொடங்க, கூடவே அவளது இதயமும் இணைந்தது .

Namma oru jodi epadi serapoguthu endru wait pannitu irunthaal , Thaanvi Vishnu jodi sernthutaangalae... Nalladhu thaan...
Meedhiyay adutha athiyayaththil paarkalam friends..

Bye...

Don't forget to vote and comment Dears ...

Continue Reading

You'll Also Like

15.8K 549 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
83.9K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...
12.7K 1.2K 33
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
367K 12.2K 54
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அ...