எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 637 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 26

248 8 0
By SindhuMohan

முகுந்த் அனுப்பிய இடம் வந்திருக்க.. காரை விட்டு இறங்கிய கௌசிக்கின் கண்கள் தனியாய் நின்றிருந்த அந்த வீட்டில் பதிந்தது.

கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழையும் போதே ராஜும் வீரும் அங்கு ஃபக் கில்  வந்து சேர்ந்தனர்.

சார்... Any problem?

அவர்களைப் பார்த்து ஆமாம் என்பது போல தலை அசைத்தவன் ,உள்ளே சென்றான்.

முதலில் அவன் பார்வையில் பட்டது மீராவின் வண்டி தான்.. வீட்டில் இருந்து பாட்டின் ஒலியும் கூடுதல் சத்தத்தோடு வெளியே கேட்க , இந்த வீடு தான் என்பதை உறுதிபடுத்தியவன், காலிங் பெல்லை தொடர்ந்து அமுக்கினான்..

அரை நொடியில் கதவு ராகுலால் திறக்கப் பட்டது. அவனைக் கண்டவுடன் கௌசிக் அதிர்ந்து தான் போனான்...

இவன் வீட்டிர்க்கா மீரா வந்திருக்கிறாள்..?

ஹலோ யாருங்க ...யாரு... என்று ராகுல் தனது  வார்த்தைகளை முடிக்கும் முன்பே மூக்கில் குத்துவாங்கி கீழே  விழுந்தான்.

விழுந்தவனை கழுத்தைப் பிடித்து தூக்கி சுவரில் பதித்த கௌசிக்..

மீரா எங்க டா?

என்று பல்லைகடித்துக் கொண்டு கோவத்தை உள்ளடக்கிய குரலில் கேட்ட நொடி ... ஏய் அவனை விடுடா ... யாரு டா நீ? என்றவாறு இன்னொருவன் வந்து கௌசிக்கை தடுக்க ,ராகுல் லை விட்டுவிட்டு அவனின் வயிற்றில் கௌசிக் விட்ட ஒரு குத்தில் அங்கேயே மடங்கி சரிந்தான்...

எங்க டா மீரா?? என்று மீண்டும் ராகுலிடம் வர... பேச முடியாமல் அங்கே என்று ஒரு அறையை  கைகாட்டினான்..

கௌசிக் அந்த அறையை நோக்கி செல்ல , அந்த அறையில் இருந்து இருவர் வெளியே வந்தனர்.

எவனோ ஒருவன் தங்களை நோக்கி வருவதும்,பின்னால் தன் நண்பர்கள் கீழே விழுந்து கிடப்பதும்  ,அவர்களை ஆஜானுபாகுவான இருவர் இழுத்து கொண்டுபோய் நடு ஹாலில் போடுவதையும் பார்த்தவர்கள் , ஒருவர் முகத்தை ஒருவர் பயத்தோடும் குழப்பத்தோடு பார்த்துக்கொண்டனர்.

ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து அவர்கள் வெளியே தப்பிக்க பார்க்க , ராஜூ வும் வீர் ரும் அவர்களை பிடித்து வெளுக்க ஆரம்பித்தனர்.

அதற்குள் அந்த அறையின் வாசலை நெருங்கி இருந்த கௌசிக் கின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

உள்ளே நுழைந்தான் கண்டது கையையும் காலையும் கட்டிலோடு கட்டப்பட்டு அதில் துடித்துக் கொண்டிருந்த மீராவை தான்...

மீரா... என்ற வெளிவாரா குரலோடு அவளை நெருங்கவும் , அவனைக் கண்ட அவளது கண்கள்  முதலில் பயத்திலும், பின்பு சந்தோஷத்திலும் விரிந்தது..
அவளது துடிப்பும் அடங்கி கொஞ்சம் சாந்தமானாள் .

அவளது கை கட்டையும் கால் கட்டையும் அவன் வேகமாய் அவிழ்த்து விட,

அடுத்த நொடி கட்டிலில் இருந்து இறங்கி அவனை இறுக அணைத்து கொண்டாள்...

அவளது உடலில் நடுக்கத்தை கண்டவன் ...

ஷ் ஷ...மீரா ஒன்னும் இல்லை... இங்க பாரு ஒன்னும் இல்லை... நான் வந்துட்டேன் இல்லையா... உட்காரு என்று கட்டிலில் அவளை அமரவைத்து.. அவளது வாயில் இருந்த கட்டை அவிழ்த்து விட்டு முகத்தில் இருந்த முடியை ஒதுக்கிவிட்டான்..

அப்பொழுது தான் தெரிந்தது அவளது வீங்கிய முகமும், அதில் தெரிந்த கைத் தடமும்... அதை கண்டவனது கோபம் எல்லை மீற... கைமுட்டியை மூடி அதை அடக்கியவன் அவளது உடலை ஆராய கைகளிலும் கால்களிலும் கயிற்றினால் கட்டப்பட்டு இருந்த இடங்கள் கந்தி கிடக்க, அவள் இழுத்ததால் அங்கங்கே தோல் உரிந்திருந்தது, சற்று நேரம் இருந்திருந்தால் இரத்தம் வந்திருக்கும்..

அந்த நொடிகளில் அவளது சுய உணர்வு திரும்பியிருக்க , அவளது கைகள் அவளது கிழிந்த உடையை சரி பண்ண முனைந்தது...

தோள்பட்டை கை இடுப்பு என்று அந்த சுடிதாரின் நிறைய பக்கங்கள் கிழிந்து அந்த வெறினாய்களின் வெறிச்செயலை வெளிப்படுத்தியது...

தான் போட்டிருந்த ட்டிஷர்ட் டை கழட்டி..

இத போட்டுக்கோ...

என்று அவளிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்..

அங்கே கீழே உட்கார்ந்திருந்த அவர்கள் நான்கு பேர்களையும் கண்டவுடன் அவனது அடிக்கி வைய்க்கப்பட்ட கோவம் பல மடங்கு பெருக அவர்களை நோக்கி நடந்தான்..

சட்டை இல்லாமல் வெறும் வெஸ்ட் மட்டும் அணிந்திருந்ததால் வெளிப்பட்டுக் கொண்டிருந்த அவனது வலிமையான புஜங்களும், சிவந்திருந்த அவனது கண்களையும் கண்டவர்கள் அவன் தங்களை நெருங்கி வர வர பயத்தில் நடுங்க ஆரம்பித்ததனர்...

சார் சார்... தெரியாம பண்ணிட்டோம் சார்... எங்களை விட்டுடுங்க சார்... என்று கை எடுத்து கும்பிட்டனர்...

கௌசிக் கின் கோவம் இதற்கு எல்லாம் அடங்குவதா என்ன?

அவர்களை  அவன் அடிக்க ஆரம்பிக்க, அவர்கள் வலியால் கத்த ஆரம்பித்தார்கள்...

ஆனால் போக போக கௌசிக் கின் வெறி அதிகம் தான் ஆகியதே தவிர குறையவில்லை...

அதற்கு வெளிப்பாடாய் ஒவ்வொருவரும் இரத்தத்தில் குளித்திரிந்தனர்... ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் ஒவ்வொருவரும் மயங்க ஆரம்பிக்க, கௌசிக் கோ மயங்கும்  நிலையில்  இருந்த ராகுல் லை மேலும்  அடிக்க ஆரம்பித்தான்..

சார் போதும் சார், அவன் இதுக்கு மேல தாங்க மாட்டான்... என்று வீர் மற்றும் ராஜ் சொன்னது கௌசிக் கின் காதிலேயே விழவில்லை.. அவன் மேலும் அந்த ராகுல் லை முகத்தில் குத்திக் கொண்டு இருந்தான்.

கௌசிக் கின் ட்டிசர்ட்டை மாட்டிக்கொண்டு வெளியே வந்தவள் கௌசிக் கின் செயலை பார்த்து அதிர்ந்து போய் நின்றாள்.. ராஜ் வீர் இருவரின் குரல் கேட்ட பின்பே உணர்வு பெற்றவள் , வேகமாய் போய் கௌசிக் கை தடுத்தாள்...

கௌசிக்... என்று அவன் தோள் தொட்டும் , அவன் அதை கண்டுகொள்ளவே இல்லை...
பின்பு , போதும் கௌசிக் அவனை விடு
என்று அவனை தன் பலம் கொண்ட மட்டும் இழுக்கவும்,

ஏன்... என்ற கத்தலோடு கௌசிக் திரும்ப , அதில் பயந்து அவனை விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்...

இது கௌசிக் அல்ல,....இதுநாள் வரை அவள் பார்த்த கௌசிக் , எந்த விஷயத்திலும் உணர்ச்சி வயப்பட்டதில்லை, என்றும் அவன் குரல் கோவத்தில் அழுத்தமாய் இருக்கும், அதுவே மற்றவரை சில்லிட்டுப் போக வைய்குமே அன்றி இப்படி சத்தமாய் அவன் கத்தி அவள் பார்த்ததில்லை... என்றும் சலனமற்று இருக்கும் அவன் முகம் இன்று உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் இருந்தது...

மீரா விர்க்கு மட்டும் அல்லாது வீர் மற்றும் ராஜ் இருவருக்குமே இந்த கௌசிக் புதிதாய் தெரிந்தான். என்றுமே கூலாக இருக்கும் தங்கள் பாஸ் இன்று இப்படி கோவப்படுவது அவர்களை ஆச்சிரியப்பாடுத்தியது ..

ஏன் மீரா...

இன்னும் அவன் நல்லவன் தான்னு சொல்றியா?? இல்ல அவன் பண்ண இருந்த காரியம் உனக்கு தாப்பா தெரியலையா???

ஹ்ம்ம்.... சொல்லு... என்று அவளை பார்த்து கத்த, அவள் உறைந்து நின்றிருந்தாள்.

சார்.. ராஜின் குரலுக்கு கோபத்தோடு அவனிடம் பார்வையை திருப்பினான் கௌசிக்.

சார்... நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க .. இனி நாங்க எல்லாம் பார்த்துக்கரோம்...

திரும்பி கீழே கிடந்தவர்களை பார்த்தவன் விடு விடு என்று  அதே கோபத்தோடு அங்கிருந்து வெளியேறினான்...

இன்னும் திக் பிரம்மையில் இருந்து வெளி வாராத மீராவை , மேம் உங்க பேக்... என்று அவளது கைப்பை மற்றும் மொபைலை  முன் நீட்டி அவளை கலைத்தான்  வீர்.

அதை பெற்று கொண்டவள் ..

தேங்க்ஸ் அண்ணா...

இருக்கட்டும் மேம்... போலாமா?

ம்ம்... என்று இருவரும் வெளியே வந்தனர் ..

மீரா தன் ஸ்கூட்டியை நோக்கி போக ,

மேம்... நீங்க சார் கூட போங்க... ஃபக் கை நாங்க எடுத்திட்டு வந்திடரோம்...

ஹ்ம்ம்... அன்றவாரு அவள் வெளியே வர ,கௌசிக் காரை ஆக்சிலரேட் பண்ணிக்கொண்டு இருந்தான்..

அவள் பின்னல் வந்த வீர் அவளுக்கு முன் பக்க கார் கதவை திறந்து விட, அதில் ஏறி அமர்ந்தாள்.

அவள் அமர்ந்தவுடன் வண்டி சீறிப் பாய தொடங்கியது. சீட் பெல்ட்டை போட்டுக் கொண்டு கௌசிக் கை பார்க்க, அவனோ அவளை திரும்பி கூட பார்க்காது வண்டியை அதி வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான்.

அந்த வேகத்தால் எழுந்த பயம் அவளை நடுங்க வைய்க்க , காரின் கதவோடு ஒண்டி கண்களை இறுக மூடினாள்.
எவ்வளவு கட்டுபடுத்தியும் முடியாது அவளது அழுகையின்  கேவல் வெளிப்பட்டது,

காரின் வேகம் கம்மியாக , அதை உணர்ந்து கண் திறந்தவள் கண்டது,
ஸ்டீயரிங் கை அழுத்திப் பிடித்தபடி இருந்த கௌசிக்கை தான்..

அந்த அழுத்தத்தில் அவனது மொத்த ஆத்திரமும் வெளிப்பட , அவனது மணிகட்டுகள் அந்த அழுத்தத்தால் வெளிரியிருந்தது.

அவளது பார்வையை அவன் உணர்ந்தும் திரும்பி பார்த்தான் இல்லை.

அவனை இந்த நிலையில் கூப்பிட்டு பேசவும் பயமாக இருக்க, ஊமையாய்  கண்ணீர் விட மட்டுமே அவளால் முடிந்தது.

சிறிது நேரத்திலேயே அன்றைய அதிர்ச்சி, அழுகை எல்லாம் சேர்ந்து அவளை சோர்வுற செய்ய அதில் ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் சிக்கினாள்.

தூக்கம் கலைய லேசான உறுமல் சத்தமும் , மெல்லிய குளிரும் உணர , எங்கே இருக்கிறோம் என்று பதறி விழித்தாள்.

எங்கே இருக்கிறோம் என்பது புரிந்தது அங்கே எரிந்து கொண்டிருந்த விடிவிளக்கின் வெளிச்சத்தில்.

கௌசிக் கின் அறை!!!

அந்த உறுமல் சத்தம் ,மற்றும் குளிர் ஏ.சி யின் உபயம்.

கண்களை சுழட்ட  தனக்கு அருகில் சேரில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கௌசிக் பார்வையில் விழுந்தான்.

மார்பின் மீது ஏதோ ஒரு புத்தகம் சாய்ந்து கிடந்தது , அவன் அவனது வெள்ளை நிறக் குர்தாவிர்க்கு மாறி இருந்தான். லேசாக வாய் பிளந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அவன் அந்த விடிவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் காந்தர்வனாய்  அவள் கண்களுக்கு தெரிந்தான்.

கௌசிக் என்று அவளது உதடுகள் மெலிதாய் முணுமுணுக்க , அதை உணர்ந்தவனாய் அவனிடம் சலனம் ஏற்பட்டது..

அவளோ சத்தமாகவா கூப்பிட்டு விட்டேன்? என்ற ஐயத்தோடு கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

கொஞ்ச நிமிடம் கழித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை உணர்ந்து கண்களை திறந்தாள்..

அவன் வேறு புறம் தலையை திருப்பி தூங்கிக் கொண்டு இருந்தான்..

ஆமாம் , நான் எப்படி இங்கே வந்தேன், காரில் தூங்கியது நினைவில் வர... கௌசிக் தான் இங்கே தன்னை தூக்கி... தூக்கியா..? இல்லை அவனுடைய தோழர்கள் உதவியோடு இங்கே என்னை அழைத்து வந்திருப்பானா?

என்னை மன்னித்து விடு கௌசி.. என்னால் தானே உனக்கு இவ்வளவு தொல்லை, நீ மட்டும் அங்கே வராமல் இருந்திருந்தால்... கடவுளே!!! நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது ...  கௌசிக் சொல்லியும் கேட்காமல் தான் சென்றது எவ்வளவு பெரிய முட்டாள் தனம், அதும் கௌசிக்கிடமே பொய் சொல்லிவிட்டு...தனது முட்டாள் தனத்தை எண்ணி கோபம் தான் வந்தது... இனி அவன் முகத்தில் எப்படி விழிப்பேன்... அவன் கோவத்தில் கேட்ட கேள்விகள்!! அவன் எவ்வளவு புண்ணாகி இருந்தால் அந்த வார்த்தைகல் அவன் வாயில் இருந்து வந்திருக்கும்... இனி அவனுக்கு என் மேல் இருக்கும் கோவம் குறையுமா???

இதே கேள்வியோடு நாமும் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

Please vote and comment dears.









Continue Reading

You'll Also Like

248K 8.8K 41
💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.
20.9K 861 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
39.6K 2.2K 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உ...
134K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...