எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 637 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 20

268 12 2
By SindhuMohan

நீ வெளியே வாடா செல்லம்... அப்பறம் இருக்கு உங்க அம்மாக்கு... நம்ம செய்கின்ற சேட்டையில் உங்க அம்மா அப்பா வீட்டுக்கு ஓடிடனும் ..

ஓடுவாங்க ஓடுவானக... குறும்பு செஞ்சா ரெண்டு பேரு வாலையும் நறுக்கி கட்டி வைச்சிடுவேனாக்கும்...

பாரு தங்கம் , உங்க அம்மா என்ன சொல்றாங்கன்னு... நீ ஒன்னும் கவலை படாதே உன் அத்தை இந்த மீரா இருக்கறப்ப உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை... நான் பார்த்துக்கறேன்...

பாரேன் மறுபடியும் உதைப்பதை... டேய் குட்டி , இவளை நம்பாத... அவ உன்னை பார்த்துக்க மாட்டா, நீ தான் அவளை பார்த்துக்கணும் .. அதனால் அம்மா சொல்ற பேச்சை கேளு...

என்று மீராவும் பானுவும்(ரகுராம் லலிதா தம்பதியரின் மகள்) பானுவின் வயிற்றில் நிறைமாதத்தில் இருந்த அவளது பிள்ளையிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.

சரி இரு உனக்கு காஃபி போடறேன்...

வேணாம் அக்கா ...  நான் இப்போ தான் எழுந்துன்ன  வீட்ல குடிச்சிட்டு வந்தேன்...

ஹே... எனக்கு ஹார்லிக்ஸ் கலக்க போறேன், உனக்கும் கொண்டு வரட்டா??

வேணாம் அக்கா... காஃபி ரெண்டு டம்பளர் குடுச்சேன்.. இனி ஸ்ட்ரைட்டா லஞ்ச் மட்டும் தான்...

அடியேய்... இப்படி பண்ணி உடம்பை கெடுத்துக்காத ...

இல்லக்கா லீவ் நாள் தானே , அப்பறம் ரொம்ப சோம்பலாக இருந்துச்சு அதான்..

என்னவோ... இப்போ தெரியாது... நல்ல சாப்பிடலைனா பின்னாடி கஷ்டப்படுவ .. ..

ஹ்ம்ம் ஹ்ம்ம்... இது கௌசிக் கின் டயலாக்... இன்னிக்கு அக்கா சொல்றாங்க.. என்று மனதில் நினைத்தாள் மீரா

சரி போ... எனக்கு பசிக்குது ... நான் போய் ஏதேனும் செய்யறேன் என்று எழுந்தாள்...

அக்கா நான் செய்யறேன் இருங்க...

தெய்வமே வேண்டாம்... நானே பாத்துக்கரேன்...

ஹ்ம்... என்னோட கையாள சாப்பிட உங்களுக்கு இன்னிக்கு கொடுத்து வைக்கவில்லை...

அது சரி.. என்று விட்டு சமையல் அறையில் பானு நுழைந்தாள்..

பானு அக்கா , ஆன்டி எப்போ வருவாங்க...?

தெரியலை டா.. சீக்கிரம் வந்தரேன்னு  சொல்லிட்டு போனாங்க...

இன்று என்ன விஷேசம் காலைலேயே கோவிலுக்கு போயிருக்காங்க?

இன்னிக்கு ஆவணி அவிட்டம் , என் பேர்ல பூஜைக்கு கொடுத்திருக்காங்க .. அதான் நேரமே கோவிலுக்கு போய்ட்டாங்க ..

ஹ்ம்ம்... Uncle எப்போ வருவாங்க?

காரியம் இன்னிக்கு தான்... அதனால் இன்னிக்கு சாயந்திரம் வந்திருவாங்கன்னு நினைக்கறேன்

கரூர் தானே அக்கா...

ஆமா..

ஹ்ம்ம். .. என்று விட்டு அங்கிருந்த புக்கை எடுத்து மீரா புரட்டிக் கொண்டிருக்க... பானு சமையல் கட்டில் அடுப்பில் பாலை வைத்திருந்தாள்..

இன்னும் டெலிவரிக்கு ஒரு வாரம் இருக்கின்ற காரணத்தினால் தான் பானுவை தைரியமாக வீட்டில் விட்டு விட்டு லலிதா கோவில் சென்றுவிட, ரகுராம் தனது சொந்தகாரர் ஒருவர் இறப்பிற்கு சென்றிருந்தார் .

ஆனால் பானுவிர்க்கோ காலையில் இருந்து அப்போ அப்போ மெலிதாக வந்து கொண்டிருந்த வலி, இப்போது அதிகம் ஆகியது ..

நிற்க முடியாமல் போக அடுப்பை அனைத்தவள் அப்படியே கீழே அமர்ந்தாள்...

ம்ம்... மீ... ரா...

பானுவின் அந்த வலி நிறைந்த குரல் கேட்டு அடித்துபிடித்து மீரா சமையல் அறையில் நுழைய... அங்கே பானு வயிறை பிடித்துகொண்டு கீழே துடித்துக்கொண்டு இருந்தாள்

அக்.. கா.. என்ன...ஆச்சு ....

மீரா ..... வ... லி.. ரொம்ப..... இருக்கு... அம்மாவை கூப்பிடு..

இதோ ... கால் பன்றேன் அக்கா...

அவளது மொபைல் எடுத்து லலிதாவிர்க்கு கால் பண்ண... நாட்ரீச்சபில் என்றே ஒலித்தது...

அக்கா கால் not reachable அக்கா...

அதற்கு பதில் அளிக்க கூட முடியாத நிலையில் பானு துடித்தாள்..

நான் ராகினி (எதிர்த்த வீடு .. அதாங்க கௌசிக்கை சைட் அடிச்ச மித்திலாவின் அம்மா)ஆண்டியை கூப்பிடறேன்... என்று வெளியே ஓடி வர , அந்த வீடும் பூட்டி இருந்தது...

இவங்களும்...இல்லையே....

மீராவிர்க்கு பதட்டத்தில் கை கால் எல்லாம் நடுக்கம் எடுத்தது...

கௌசிக்... கௌசிக்...
என்று அரற்றியவல் மொபைலில் கௌஸிகிர்க்கு கால் பண்ணினாள்...

ஹல்..

கௌசிக்...

மீராவின் குரலில் பதட்டத்தை உணர்ந்தவன்... என்னாச்சு ?

கௌசிக்...இன்..இங்க.. பானு அக்காக்கு வலி வந்திடுச்சு...

ஆன்டி இல்லையா??

கோவி... கோவில் போய்ருக்காங்க... நான் கால் பன்னேன்... ரீ...ச்சாகளை..

நான் வரேன்..

வேறு எதும் சொல்லாமல் கால்லை வைத்தவன் தன் கார் சாவியை எடுத்துகொண்டு வீட்டை பூட்டி விட்டு கீழே வந்தான்...

அவனுக்கு தெரியும் due date ஒரு வாரம் கழித்து தான் , அதான் ஊருக்கு போகிறேன் என்று , ரகு ராம் அவனிடம் வாக்கிங் போகும் போது சொல்லியிருந்தார்... அதனால் அவருக்கு கால் பண்ணுவது எதற்கும் உதவாது என்று எண்ணி கீழே வேகமாக ஓடி வருவதற்குள் என்ன செய்ய வேண்டும் என்று மனதில் குறித்து கொண்டான்..

வீட்டிற்குள்ளே வந்தவன் கண்களுக்கு பானு துடிப்பதும் மீரா அவரது கையை பிடித்துக்கொண்டு அவளும் நடுங்கிக் கொண்டிருப்பதும் பட்டது...

மீரா ...

கௌசிக்...

அவர்கள் அருகில் வந்தவன் "நீ முதலில் பதட்டப்பட்டு அவங்களை பதட்ட பட வைக்காத "என்று ஒரு சிம்பு சிம்பியவன்...

பைல்ஸ் எங்க இருக்கு ? பானுவிடம் வினாவ

டேபிள்... ல..

மீரா அதை  எடு..

ஹ்ம்ம்.. என்று விட்டு மீரா  அகன்றாள்..

அப்...டியே ... ட்ரெஸ்... அங்க... என்று கை காட்ட...

ஓகே என்று விட்டு கௌசிக் துணி முதலிய அடங்கிய கூடையை எடுத்துக்கொண்டான்...

மீரா... வெளிய போய் வாட்ச்மேன் uncle கிட்ட கேட் ஓபன் பண்ண சொல்லிட்டு , இந்தா கார் சாவி, பின்னாடி கதவை திறந்து வை ... குயிக்

ஹ்ம்ம்... என்று விட்டு அவள் வெளியே ஓடினாள்..

பானு உங்களால் நடக்க முடியுமா??என்று விட்டு அவளுக்கு கை குடுத்து தூக்கி விட...

லேசாக அசைந்தவளுக்கு இன்னும் வலி அதிகமாக...

என்னால முடியல...

ஓகே... Shall I lift you???

ஏதேனும் பண்ணி தொலை டா ... என்னால முடியல.... என்று வலியில் கேள்வியாய் கேட்ககிறானே என்ற கடுப்பில் கத்தினாள்...

ஒரு நிமிடம் அதிர்ந்தவன்... பின்பு சட்டென்று அவள் கழுத்திலும் கால் முட்டியிடமும் கை கொடுத்து அவளை தூக்கிக்கொண்டு காரிடம் வரவும் மீராவும்  வாட்ச்மேனிடம் சொல்லிட்டு வந்தவள் காரை திறந்து விட்டாள்...

உள்ளே பின் சீட்டில் பானுவை உட்கார வைத்து , மீராவை அமரசெய்து அவளது மடியில் பானுவை படுக்க வைத்தான்...
பின்பு பானுவின் வீட்டை பூட்டி விட்டு காரை கிளப்பினான்...அதற்குள் லலிதா மீராவிர்க்கு திரும்ப கால் பண்ண , விஷயத்தை தெரிவித்து , நேரே மருத்துவமனை வர சொல்லிவிட்டார்கள்..

போகும் வழயிலேயே மருத்துவமனைக்கு தகவல் சொல்லிவிட அங்கே சென்றவுடன் எல்லாம் தயாராக இருந்தது ... உள்ளே சென்ற மருத்துவர் பானுவை பரிசோதித்து விட்டு வந்தார்...
"No problem, எந்த காம்ப்பிளிகேஷன்சும் இல்லை , நார்மல் டெலிவரி ஆகிடும்" என்ற பிறகு தான் கௌசிக்கின் பதட்டமே குறைந்தது ..

மீராவை திரும்பி பார்க்க, அவளோ இன்னும் பதட்டம் குறையாமல் அங்கிருந்த சேரில் அமர்ந்து இருந்தாள்..

மீரா ...

ஹ்ம்ம்...என்று நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் கலங்கி இருக்க .. அதனை சகிக்க முடியாதவன் அவள் எதிரே முட்டிபோட்டு அமர்ந்து, அவள் கைகளை தன் கைக்குள் வைத்தான்..

மீரா..

ஹ்ம்ம்...

எந்த பிரச்சினையும் இல்லை, நார்மல் டெலிவரி தான் நடக்கபோகுதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க...

ஹ்ம்ம்....

கௌசிக்...

சொல்லு...

பாப்பாக்கும் அக்காவுக்கும் எதும் ஆகாது இல்ல...

எதும் ஆகாது...

ஹ்ம்ம்... ஒன்னும் ஆகாது...  விநாயகர் பார்துப்பார் ...

எஸ்...

ஹ்ம்ம்...
அவள் பயம் அவளின் சில்லென்ற இருந்த கைகளில் மூலமே அவனுக்கு தெரிந்தது...

அவள் கைகளை தேய்த்துவிட்டு கொண்டே ஏதேதோ சொல்லி அவளை சமாதானம் செய்து கொண்டு இருந்தான்...

அவள் முகம் லேசாக தெளிய ஆரம்பிக்க... அவளது முகத்தை அழுந்த தன் கைகளால் துடைத்தவன் ... அழுமூஞ்சி... என்று சிரிக்க..

நான் ஒன்னும் அழுமூஞ்சீ இல்லை... என்று முகத்தை கோபமாக வைத்தாள்...

அதை பார்த்து அவன் சிரிக்கும் போது லலிதா அவர்கள் அருகில் வந்து நின்றார்..

ஆன்டி... என்று மீரா வேகமாக எழுந்து அவர் அருகில் சென்றபடியே....

கவலைப்படாதீங்க... அக்காக்கு ஒன்னும் இல்லை... நார்மல் டெலிவரி தானாம்... டாக்டர் இப்போ தான் கௌசிக் கிட்ட சொல்லிருகாங்க ... நீங்க பதட்டபடாதீங்க ..
என்று சொல்ல

என்னை விட நீ தான் ரொம்ப பதட்டமாக இருக்க என்று லலிதா புன்னகைக்க ...

அதற்கு கௌசிக்கும் கிண்டலாக அவளை பார்த்து சிரிக்க... மீரா கோவமாக சேரில் சென்று அமர்ந்தாள்...

மீரா சொன்னதுதான்... இன்னும் கொஞ்ச நேரத்தில் டெலிவரி ஆகிடும்ன்னு சொன்னாங்க...

சரி பா.. அப்பறம் தம்பி ரொம்ப நன்றி, நீங்க எல்லாம் இல்லைனா என்ன ஆகியிருக்குமோ...

It's okay aunty...


டேய்... குட்டி பொண்ணே ... நான் தான் உங்க அத்தை ....  அட ... என்ன இப்படி பார்க்கற... அச்சோ என் செல்லமே... என்று மீரா பானுவின் பெண் குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருந்தாள் ... அதை பார்த்து பானு , லலிதா , கௌசிக் மூவரும் புன்னகைத்து கொண்டு இருந்தனர்.

கௌசிக் ...

பானுவின் அழைப்பில் கௌசிக் அவளை பார்த்தான்..

Thanks...

அவன்  ஒரு தலை ஆட்டலில் அதை ஏற்றுக்கொள்ள...

And சாரிங்க என்க ... கௌசிக்கும் பரவாயில்லை என்றான்..

சாரியா? என்று லலிதாவும் மீரா வும் கேட்க...

ஹ்ம்ம்... நான் அவரை கோபத்துல திட்டிடேன் என்று நடந்ததை சொல்ல ...

மீரா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்...

சும்மா இரு டி... என்று பானு மீரா வை முறைக்க...

நான் போய் லஞ்ச் வாங்கிட்டு வரேன் என்று கௌசிக் இங்கிருந்து கிளம்பினான்..

இரு நானும் வரேன் கௌசி...

நீ வேண்டாம் ... என்ற படியே அவன் செல்ல ஆரம்பிக்க...

சரி நான் சிரிக்க மாட்டேன் ... உண்மையா ... நின்னு... என்ற படியே வெளியே‌ அவன் பின்னால் மீரா  ஓட ஆரம்பித்தாள்...

என்னடா நடக்குது இங்கே ?என்பது போல பானுவும் லலிதாவும் பார்த்துக்கொண்டனர்...

அம்மா... எனக்கு என்னவோ கௌசிக்கை பார்த்தா தப்பா தோணலை...

ஹ்ம்ம்...

என்ன யோசிக்கற?

இல்ல நான் ஹாஸ்பிடல் வந்தப்போ அவங்க இருவரும் குலோஸா தான் இருந்தாங்க... தப்பு செய்கிறவனா இருந்த என்னை பார்த்தவுடன் பதட்ட பட்டிருப்பான் .. ஆனால் ரொம்ப நிதானமாக இருந்தான்... அதே போல இவளோ நேரமும் அவன் கூட பழகியதில் எந்த விதமான தப்பும் சொல்ல முடியாது...

அதான் அன்னிக்கே அப்பா சொன்னாரே... கௌசிக் அப்படி பட்டவன் இல்லைன்னு ...

ஹ்ம்ம்... என்னவோ...

ஏன் மா!!!

என்ன?

மீரா கௌசிக் ஜோடி நல்ல இருக்குல்ல?

அவர் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்தார்...

இவங்க என்ன யோசிக்கராங்கன்னு தெரியலையே!!!!

என்ன ப்ரெண்ட்ஸ் ... வியூஸ் இருக்கு பட் vote வரமாட்டேங்குது...  தயவு செஞ்சு vote பண்ணுங்கப்பா...










Continue Reading

You'll Also Like

248K 8.8K 41
💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.
338K 13.1K 63
சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....
15.8K 549 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
80.2K 3.8K 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா...